வழக்கமாய் என்னைப்படிப்பவர்களுக்காக அல்ல இது.இதையும் படிப்பவர் கணக்குகளைச் சரிபார்க்கத்தான்...மீண்டும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
புத்தகம் எழுது என்று மூன்று பதிப்பகங்கள் காத்திருந்தும், எழுது என்று ஒரு வலைத்தளம் சொல்லியும் எழுதாமல் சாக்குகள் சொல்லிக்கொண்டிருக்கும் நான் எதற்கு வலைப்பதிவில் எழுதுகிறேன்.
இங்கே இது எனக்குச் சுவையாக இருக்கிறது, சௌகரியமாக இருக்கிறது.
அநாமதேயங்கள் கூட என்னை இங்கே தூண்டிவிடுகின்றன, அன்பு காட்டவும் இத்தனை பேரா என்ற பிரமிப்பும் தூண்டுகின்றது.
என்ன தோன்றுகிறதோ அதையே எழுதுகிறேன். எத்தனை பேர் பார்த்தார்கள் என்று இந்தப் பதிவில் தெரிவது உண்மையல்ல..நானே நிறைய முறை உள்நுழைந்து அச்சுப்பிழைகளைச் சரிசெய்ய முயல்வதாலேயே இத்தனை பேர்.
இப்பதிவு படிக்க அல்ல ஒரு விஷயத்தைப் பரிசோதிக்க.
டமிலிஷ் தளம், தமிழ்மணம் தளம் ஆகிய இரண்டில் தான் என் இடுகைகளைச்சேர்க்கிறேன். இம்முறை அதிலொன்று இதிலொன்று என்றும் சேர்க்கப்போகிறேன்.
எதற்கு?
எல்லாம் நான் மனத்துள் போட்டிருக்கும் கணக்குகளைச் சரிபார்க்கத்தான்.
என்னமோ எழுதியிருக்கிறானே என்று இதையும் படித்தவர் கணக்குகளைச் சரிபார்க்கத்தான்...மீண்டும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
15 டிசம்பர் முதல் வழக்கம் போல் எழுதப்பார்க்கிறேன்.
maladies of the mind..
9 years ago
9 comments:
ok You can count my visit. viewer's nick name kuppan_yahoo
One question doctor, in certain weeks you have been writing more than 10 to 15 posts, in certain week you do not write at all. How come you control your blog writing desires, or feeling
டாக்டர் ருத்ரன் அவர்களே !
எழுதுவதே பத்து பேர் படிக்கத்தான். நாம பார்த்துக்க இல்லே. அக்ரகேட்டர்ஸ் என்றால் படிக்க வைக்கனும். நானும் மாஞ்சுமாஞ்சு எல்லா திரட்டிகளிலும் இணைப்பேன். தமிழ் மணத்தில் மட்டும் இணைத்தாலும், அனைத்து திரட்டிகளில் இணைத்தாலும் ஒரே இழவு தான். மேலும் நீங்கள் பதிப்பகங்களுக்காக , வார , மாத இதழ்களுக்கு எழுதுவதை விட வலைப்பூவிலேயே எழுதுங்கள். பிறகு வேண்டுமானால் பதிப்பித்துக்கொள்ளச்சொல்லுங்கள். யாரோ ஒரு மேதாவி வலைப்பூக்களில் வரும் எழுத்துக்கள் எல்லாம் நான் சென்ஸ் என்றதாக கேள்விப்பட்டேன். இங்கு எழுதுவது நண்பர்களுடன் ஒரு கூடத்தில் பேசுவது போல் இயற்கையாக இருக்கும். இந்த பாணியிலான எழுத்துதான் அச்சு ஊடக வாசகர்களையும் கவரும் என்பது கருத்து .வைஸ் மேன் திங்க் அலைக்.
( நானும் இதே முறையை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளேன்)
:)) வலைப்பூவிலே எழுதும் வசதி வேற எதில கிடைக்கும், டாக்டர் நடத்துங்க... நடத்துங்க. கவுண்டர் மேலே ஏன் உங்களுக்கு இவ்வளவு கோவம். இன்னொன்னு இதில இருக்கு, சில கவுண்டர்கள் உங்களுடைய ப்ரவுசர் ஹிட்களை மட்டும் ignore பண்ணிவிடும். அது மாதிரியான ஒரு எண்ணுவான் பார்த்து சொருகி விடுங்களேன்...
வரவும் செலவும், கணக்கில் கொள்ளலாம் - பணமாய் இருக்கும் வரை.
அன்பின் வரவையும் அறிவின் வரவையும் மனதின் எண்ண செலவையும் எப்படி கணக்கிட போகிறீர்கள்? கணக்கு எப்பொழுதும் எண்களில் கூட்டும் களித்தலும் மட்டுமா என்று. ஒரு பெண்ணை கூட ஒருவன் கணக்கு பண்ணுகிறான் என்றால் என்ன அர்த்தம்? உங்கள் எழுத்துக்கு இருக்கும் வரவை கணக்கு பார்க்காதீர்கள். கணக்கும் உங்கள் எழுத்தின் சுவையும் ஒன்றல்ல.
உங்கள் பதிவுகள் மூலம் நீங்கள் நினைத்த போது எங்களையெல்லாம் சந்திக்கலாம், பேசலாம்.
அதையே விரும்புகிறோம்.
தொடர்ந்து எழுதுங்கள் டாக்டர்.
அய்யா - வணக்கம்
எழுத்துக்கள் என்னை கண்டெடுத்து மிகக் குறுகிய காலங்களே ஆகின்றன, வலைப் பூக்களை நுகர ஆரம்பித்து இரண்டு நாட்களே ஆகின்றன.
ஆணால் தினம் இனி இங்கு உங்கள் பூ பறிக்க வருவதாக நேர்ந்து கொண்டு விட்டேன்
எப்போ நம் மனதில் கணக்கு வழக்குகள் நுழைகின்றதோ ,வரவு செலவு நுழைகின்றதோ...அங்கே நாம் நம் இயல்புகளை இழந்து விடுகிறோம்....உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை!
கணக்கில் ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.
நன்றி.
Post a Comment