Saturday, December 12, 2009

மணியம்செல்வனின் ஓவியக்கண்காட்சி




மகிழ்ச்சியும் இனிமையும் நிறைந்த ஒரு மாலையைப்பற்றி ஒரு பகிர்வு. 
மணியம்செல்வனின் ஓவியக்கண்காட்சி, நேற்று 11/12/09, சென்னையில் துவங்கியது. 
கண்காட்சியின் முக்கிய அம்சம், அவரது தந்தை மணியனின் ஓவியங்களும் அதில் இடம்பெற்றிருப்பது தான். கண்காட்சி துவக்கவிழாவிற்கு நிறைய ஓவியர்கள் வந்திருந்தார்கள், கோபுலு தன் தள்ளாமையிலும் வந்திருந்தார். அதிகம் வெளியே வராத ம.செ, முகத்தில் மிகுந்த பூரிப்புடன் காணப்பட்டார். அவரது மகள்களின் ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

விழா வந்திருந்த ஓவியர், கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி,என்னிடம் மணியனின் ஓவியங்களில் பயன்படுத்தப்பட்ட temperaவிற்கும் இப்போது பயன்படுத்தப்படும் temperaவிற்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கிக் கொண்டிருந்ததைப்போல், பல ஓவியர்கள் ஓவிய நுணுக்கங்களைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தனர். ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 26 வரை நடக்கும் இந்த கண்காட்சியை பாருங்கள். இடம் பார்வதி ஆர்ட் காலரி, எல்டாம்ஸ் சாலை, சென்னை.CP ART CENTRE எதிர்புறம் உள்ளது. பல பதிவர்களுக்குப் புரிகிற வகையில் கிழக்கு பதிப்பகத்தின் எதிர்புறம். இத்தனை காலம் கழிந்தும் அந்த ஓவியங்களில் மிளிரும் வண்ணத்தெளிவு வியக்க வைக்கும். ம.செ. பற்றிய அறிமுகம் எல்லாம் தேவையில்லை. 
ஆனால் அவர் அன்போடும் அக்கறையோடும் தன் தந்தையின் ஓவியங்களைப் பாதுகாத்து நம்மிடம்  பகிர்ந்துகொண்டது மிகவும் பாராட்டிப் போற்றப்படவேண்டிய ஒன்று.

5 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கலைப் பிரியர்களுக்கு அற்புதமான செய்தி..
ம.செ.வைச் சந்திப்பது என் நீண்டநாள் விருப்பங்களில் ஒன்று.

வந்து பார்த்து மகிழ முடியாத சூழலில் இருக்கிறேன்..

சில எளிய ஸ்ட்ரோக்குகளில் கூட ம.செ.யின் படங்களில் தென்படும் பாவம் என்னை வியக்க வைப்பது.

ஏனோ மணியத்தின் நுணுக்கப் படங்களைக் காட்டிலும் மைந்தரின் பாவம் மிளிரும் படங்கள்தான் என்னைக் கவர்ந்தவை..

நல்ல செய்தி!

குப்பன்.யாஹூ said...

thanks doctor for sharing such an useful information.
informative post.

Chitra said...

Mr.Ma.Se. is blessed not only with an awesome talent but also, with wonderful children, who carry out his legacy. Surely, I miss being there for the show. Thank you for sharing few paintings with us through your blog.

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு ந‌ன்றி

பூங்குன்றன்.வே said...

நல்ல நிகழ்வை பற்றிய அருமையான பதிவு.உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதில் மிக்க கர்வமடைகிறேன் ஸார்.

Post a Comment