Thursday, October 6, 2011

சும்மா நூறு வார்த்தைகள்..



ஏதுமிலா வெறுமையின் பின், வெறுமையின் வெற்றிடங்கள் அறிமுகமானபின், கோர்த்த வார்த்தைகள் சிதறியபின், படித்தவையும் அனுபவித்தவையும் முரண்மீறி ஒன்றானபின்..முன்னிகழ்வுக்கும் பின்விளைவுக்கும் இடையே ZEN என்று எதை வேண்டுமானாலும் எழுத (தானே தனக்குத் தந்துகொண்ட சலுகையில்) தோன்றியது- zen என்பது, என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்பதல்ல, எழுதுவதில் எல்லாமும் அடங்க ஆரம்பித்து, எழுதுவதும் அடங்குவதே.

சூன்யத்தின் ப்ரம்மாண்டத்தில் தொலைவதல்ல சூட்சுமம், ஐக்கியமாவதே சூட்சுமம். இதற்கென சூத்திரங்களோ சாத்திரங்களோ இல்லை, இருக்காது..இது கண நேர வாழ்வு.

இது குறித்து வாதம் வீம்பு, விவாதம் கல்வி, மௌனம் புரிதல். இதன் மௌனம் நிர்ப்பந்தம் அல்ல, இயல்பான நிகழ்வு. இது மொழிகளுக்கப்பால் என்றாலும் வார்த்தைகள் மொழி சார்ந்தவை என்பதால்-
No leaves swerve
No dust rises
Looking through the glass doors of the closed windows
The still warmth of succinct existence
Switches on its own breeze to
Sustain existence