Thursday, March 26, 2009

தேர்தல் வரும்போதாவது தோன்றுபவை


மிகவும் சிரமத்துடனும், மிகுந்த கோபத்துடனும் எப்படியாவது எழுதித்தான் ஆக வேண்டுமென்று தீர்மானித்து, எழுதுகிறேன், அச்சுப்பிழைகள் இருக்கும், மன்னிக்க வேண்டுகிறேன்.

அப்படி என்ன தலை போகிற அவசரம்?

தலை இருந்தும் பிரயோஜனமில்லையே என்ற வெறுப்பு, வெறி,வயிற்றெரிச்சல் தான். தலை என்பதை மேலிருக்கும் மயிராக மட்டும் பார்க்காமல், உள்Liருக்கும் மூளையாகவும் கருதுவதால் தான் இப்படி ஒரு (வெற்றாக இருந்துவிட்டாலும்) முயற்சி.

வெட்டிப்பேச்சும், வசதியாக உட்காrந்து காலாட்டிக்கொண்டு பேசுவதும் எனக்கும் பிடிக்கும். ஆனால், வரப் போகிறது ஒரு தேர்தல்!

தேர்தல் என்றால் தேர்வு செய்யும் உரிமை இருக்க வேண்டும்!

இருக்கிறதா?

யார் நிற்கிறார்கள்? எதற்காக அவர்களுக்கு என் வாக்கு? போடலாமா வேண்டாமா?எல்லாம் யோசித்து விட்டு, போடாவிட்டால் என்றும் தோன்றும்‍ போடாவிட்டால்?

அன்புமணியும் கனிமொழியும் அடுத்து 'பாராளுமன்றப் பிரதிநிதிகளாக' ஆகாமல் போய் விடுவார்களா?

தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுngகளேன்‍ எனக்கும், எல்லோர்க்கும்.

Tuesday, March 17, 2009

பழைய காகிதக்கற்றைகளிலிருந்து

*http://rudhran.wordpress.com/2009/03/17/பழைய-காகிதக்கற்றைகளிலிர/

Monday, March 16, 2009

சில நேரத்து வார்த்தைகள்

ஸ்பரிஸம் மந்திரம்
சரியான உச்சரிப்பில்
சகல சக்தியும் ஜ்வாலித்தெழும்
உள் அதிரும்
இமை நடுவில் பிரிந்தலறும்
வான் வயிற்றில் விரிந்து
உடலெங்கும் மேகம் படரும்
காதுகளில் நட்சத்திர கோஷம் எழும்

அந்தக் கணச்சிலிர்ப்பில்
உயிர் உதறி வெடித்துச்சிதறி
மனதில் மனது மூழ்கியெழ‌
இந்தப் படகுக்கு-
கடலே தலையணையாகும்
கடலும் தளர்ந்து படரும்
விழிப்பில் உலகம்
கண்படும்
உண்மை ஒப்பனைக்குத் தயாராகும்.



இது 1986ல் எழுதியது! வார்த்தைகளில் எத்தனை வித்தியாசங்கள்!இது என் சவலைப்பதிவின் ஆரம்பக்கட்டம் என்பதால் பழையனவற்றை தட்டச்சு செய்து பழகிக்கொள்கிறேன். ஒரு (ஓர் என்றுதான் இருக்கவேண்டும், ஆனால் a /an என்பதற்கும் one என்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை நினைத்துப்பார்த்துவிட்டு ஒரு என்றே விட்டுவிட்டு) உண்மையான கவிஞன் சொன்னது போல், இது கவிதையல்ல என்றாலும் அப்படி ஆக்கிக்கொள்ளலாம்.
இங்கே வலைப்பதிவு என்று அடிக்கும் போது அது சவலைப்பதிவு என்று ஆனது யதேச்சை!‍ சில நேரங்களில் சில வார்த்தைகள் எழுதப்படுவதில்லை!

Sunday, March 15, 2009

முன்பு எழுதியது தான்..

புதிய கலாச்சாரம் இதழுக்காக 2008ல் எழுதியது. மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு குறித்து இப்படி ஓர் அலசல் எழுதாமல் இருக்கவே விரும்புகிறேன், ஆனால், தேர்தல் நெருங்குவதால் இதை மீண்டும் நினைத்துப்பார்க்கிறேன்.
இக்கட்டுரைக்கான சுட்டி:
http://tamilarangam.blogspot.com/2008/03/blog-post_29.html

உள்

நான் தேடும் நான்
என்னைத் தேடி என்னுள்ளேயே
கணக்குமிழி சிதறலில்
வட்டங்கள்
கணக்கில் சேரும் பூஜ்யங்கள்


written in 1976, retrieved from a tattered diary in 2009.

Thursday, March 5, 2009

என் வலையொலிப்பதிவு

ருத்ரனின் பார்வை என்று இங்கே ஒரு பெயர் தேர்வு செய்தபின் தட்டச்சு செய்வதன் சிரமங்கள் கருதி ஒரு வலையொலிப்பதிவு முயல்கிறேன். இணைப்பு:http://snapvine.com/rudhran