Sunday, December 19, 2010

சுளுக்கெடுத்தல் சுகம்!


நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என்  கழுத்தைச் சுளுக்க,
திரும்பிப்பார்க்கிறேன், இன்னும் நேராகவும் திமிராகவும் மீதி பாதை பயணிக்க.
என் முன் வருபவர்க்கும் நிற்பவர்க்கும் என் விழியின் மேல்நோக்கிய கூர்மை வியப்பையும் ரசிப்பையும் உருவாக்கக்கூடும் என்றாலும், அது பின்னாலிருக்கும் வாசனையிலிருந்து வேகமாய் வெளியேறி வான்புகும் ஆசைதான்.
Small Memories by Jose Saramago படித்ததால் வந்த பதிவு இது!

கோடம்பாகம் நெடுஞ்சாலை..இப்போது அதுதான் எம்.ஜி.ஆர் சாலை என்று நினக்கிறேன். நாற்பத்தைந்து காலம் அதே சாலையில் அடையாளம் காணப்பட்டவன் நான். பிறந்தது முதல், வேறு விலாசம் மாறும் வரை. 

நான் பிறந்ததென்னவோ எழும்பூரில் என்றாலும் வாழ்ந்த்தும் வளர்ந்ததும் இதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில்தான்! எழும்பூர் ஒன்றும் மூதாதையர் வாழிடம் இல்லை- அங்கேதான் அரசு மகப்பேறு மருத்துவமனை- என் மயக்கநிலையில் நான் சொல்லத்துணியும் என் அவதாரஸ்தலம். 
தொட்டிலிடப்பட்ட்தும், கொஞ்சி வளர்க்கப்பட்டதும், கல்விச்சாலை சென்றதும், படித்ததும், திரிந்ததும், திமிருடன் இருந்ததும், உழைத்ததும்.. உயர்ந்ததும் இதே சாலையில்தான்.

அதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில் வெவ்வேறு இலக்கங்கள் என் விலாசமாயின. 1/10, 2/6, 163...பிறகு 43, கடைசியில் 73!

இன்று நின்று யோசித்தால் அந்த நெடுஞ்சாலை அன்று மிகமிக வேறாய் இருந்தது தெரிகிறது. இன்றைய வார்த்தைகள் அன்றைய ஞாபகங்களை மீட்க முயலும் போது..சில மிகையாகும், சில பிறழ்வாகும், சில பிழையாகவும் மாறும். வயதுகள் மட்டுமல்ல, வார்த்தைகள் வளர்ந்ததும் அந்த இடத்தில்தான்.

முதல் ஐந்து வருடங்கள் ரொம்பவும் மங்கலாகவே இருக்கின்றன. என் அப்பாவின் நண்பரின் மோட்டார்பைக்கில் வரும் பெட்ரோல் நெடி, வீட்டைக் கடந்து செக்யுலராகப் போகும் குட்டித்தேர் மாதா ஊர்வலம், ஹஸெந்ஹுஸென் என்று ஏதோ சொல்லிக்கொண்டு கை போல ஒரு விஷயத்தை ஊர்வலம் கொண்டு போகும் (எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட) அல்லாசாமியின் ஊர்வலம், அப்புறம் அந்த இடத்தில் இருந்த தெருவீதி (திருவீதியாகவும் இருக்கலாம்) அம்மன் விழாவின் கரகம், அலங்கார ஊர்வலம், அப்புறம் தாத்தா எனும் மறையும் பழுப்பாய் ஓர் உருவம், மூன்று சாவுகள், ஒருமுறை எதற்கென்று தெரியாமல் எங்கள் வீட்டில் நடந்த குருபூஜை 
(இந்த குரு பற்றி யாரும் எதுவும் அதன் பிறகு என்னிடம் சொன்னதில்லை, பதினெட்டு வயதில் பழைய காகிதங்களை மேயும்போதுதான் தெரியும் அவர் பெயர் சாங்குசித்தசிவலிங்க நாயனார்இவரைப்பற்றி, கல்கி/ஜக்கி/ரவிஷங்கர் மாதிரி இல்லையென்றால் அன்புடன் எனக்குத் தகவல் சொல்லுங்கள்), வீட்டின் பின்னிருந்த கொய்யா, வேப்பமரங்கள், ஞாயிற்றுக்கிழமைகளுக்கே உரித்தான ஒரு அசைவ-நறுமணம்....
இன்னும் நிறைய, சின்னச்சின்ன ஞாபக மினுமினுப்புகள்...

இதையெல்லாம் இப்போது மீள்பரீசீலித்தாலும் பதிவிட முயன்றாலும் முன்னம் அப்படியே வந்து விடாது. இது ப்ளுமேட்/ பேக்ப்ரொஜெக்‌ஷன் சமாச்சாராம் இல்லை...... திரும்பவும் ரசிக்கவோ, ஐயையோ விட்டுட்டோமா என்று பதைத்தும், உண்மையில் என்னதான் நடந்த்து எனும் ஆர்வமோ முயலும் rewind தான்.

நான் போகிறேன் மேலே மேலே, பூலோகமே காலின்கீழே எனும் கனவில் மூழ்காதவரை இப்படியான பழங்கதை பேசுதல் உத்வேகமும் தரலாம்.

12 comments:

Rajan said...

//"சுளுக்கெடுத்தல் சுகம்!"//


வழியெல்லாம் மொழிந்து கொண்டுதான் உள்ளேன்!

uthamanarayanan said...

நன்று .சுகம்தான் யோசித்தால்

Unknown said...

நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்தல் என்பது சுகமான நிகழ்வு தானே...

வலிகளை சுலபமாக மறந்து விட்டு, ஆரோக்கியமானதை மட்டுமே நினைக்க பழகி இருப்பதால்...

M. Md. Hushain said...

Saangu siddha Sivalinga Nayanar was born at Bringasailam(St. Thomas Mount) in the nineteenth century and right from childhood he was interested in spiritual realization. He sought a Guru in Kaazhi Siva Kannudaiya Vallal(Enlightened person at that time and a descendant of ThiruGnanaSambandar) and by the Grace of His Guru he attained enlightenment. By profession He was employed as a cook under Mr. Simpson, the managing director of Benny and Co. Despite his profession he was a master in his own right and he helped the way for several genuine seekers and did the alchemy of converting several of his disciples to realized souls. He was an adept in several siddhis and performed many miracles. He constructed a Madam for Thirugnanasambandar at Guindy and held daily satsang there. His chief disciple is Nirathisaianandar whose Samadhi is Located in Gajapathy Lala Street, Triplicane.

Saangu Siddha Sivalinga Nayanar attained Jeeva Samadhi on Aani month, Paurnami(that comes on the Full moon day of June Month), 1900 at Thirugnanasambandar madam, Maankulam, MKN Road, Guindy. His disciple Kollapuri Swamigal has also attained Samadhi beside His Master and the Samadhi of Kollapuri Swamigal is located on the left side of the Samadhi shrine of Saangu Siddha Sivalinga Nayanar.

Dr.Rudhran said...

நன்றி.. பின்னர் தொடர்பு கொள்ளலாமா?

Ashok D said...

:)

Hushian :)

Unknown said...

ஆமாங்க..

சி.பி.செந்தில்குமார் said...

குட் பாஸ்ட் சார்

hemikrish said...

இன்றைய நிகழ்வுகள் நாளைய கவிதைகள் !...
உங்களின் சிறு சிறு நிகழ்வுகளை அழகாய் கோர்த்து அனுபவமாய் கொடுத்து இருக்கிறீர்கள்..நாங்களும் ரசித்தோம்..

Unknown said...

சாங்கு சித்த சிவலிங்க சுவாமிகள் பற்றிய தகவல் அருமை நன்றி. ஸ்ரீ ஸ்ரீ/ ஜக்கி பற்றி ஏன் வம்பு. அவர்களை பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள். சாமியார் இங்கிலீஷ் பேசினால்/ hifi ஆக இருந்தால் என்ன. கேட்டால் corporate சாமியார் என்பீர்கள். நீங்கள் உங்கள் hospital குருகுல வைத்திய சாலை போன்று நடத்து கிறீர்களா என்ன

Dr.Rudhran said...

kalpana/ அனந்த-
அவன்களிடம் (எழுத்துப்பிழை இல்லை) எனக்கு தொழில் போட்டி இல்லை. எனக்கு சுரணாஇயுடன் சமூக அக்கறையும் உண்டு.
ஜே.க்ருஷ்ணமூர்த்தியை விட எவனும் ஆஙிலம் பேசுவதுமில்லை, சொந்தமாய்ப் பேசுவதுமில்லை.
நான் குரு என்று எப்போது கேவலமாக ஏமாற்றிப் பிழைக்க முடிவெடுக்கிறேனோ அன்று குருகுலம் மாதிரி, நன்கொடைகூட வாங்காமல் வைத்தியம் செய்வேன்....

Unknown said...

Sir, absouletely right "REMEMBER IS A GOOD THING" but your story with knife sharp... I like it your presentation.....

Post a Comment