Sunday, April 25, 2010

நேற்று, 24 ஏப்ரல்

நேற்று 24 ஏப்ரல், மாலை நண்பர்கள் ஜெயகாந்தனின் பிறந்தநாளைக் கொண்டாடியதில் சில படங்கள். இணையத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள.


 
 இந்த நிகழ்வில் ஜெயகாந்தனின் நண்பர்கள் 50 பேர் வந்திருந்தனர். இதற்கு ஏற்பாடு செய்தவர் அவரது நண்பர் கே.எஸ்.சுப்ரமணியம்.


இன்னும் நல்ல படங்களை நல்ல காமெராவில் பலர் எடுத்திருந்தனர்.

19 comments:

AkashSankar said...

கொடுத்துவைத்தவர்... நீங்கள்...

Ahamed irshad said...

Nice Sharing sir....

Ashok D said...

:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பகிர்வுக்கு நன்றி சார்...

ராஜ நடராஜன் said...

Doctor!Thanks for photo sharing.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி எங்களுடன் share பண்ணிக் கொண்டதிற்கு!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என் எழுத்துலக ஆசானுக்கு இந்த ‘சக ஹிருதயனின்’ பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவிப்பீர்களா திரு ருத்ரன்?

? said...

பிறந்த நாளை ஒரு மனிதன் ஏன் கொண்டாட வேண்டும் டாக்டர்

malarvizhi said...

படங்கள் நன்றாக உள்ளது.பகிர்வுக்கு நன்றி.

Dr.Rudhran said...

கொண்டாடியது நண்பர்கள். ஒன்று கூடவும் நினைவுகளை அசைபோடவும்,சந்திக்கவும் இது ஒரு காரணம்.
என்னைப் பொருத்தவரை பிறந்தநாளை ஒருவன் தானே கொண்டாடி மற்றவர்கள் கொண்டாட வற்புறுத்தி வாழ்வது தான் கேவலம். இங்கே இந்த் கூட்டத்தைக் கூட்டியவரும் ஒரு நண்பர், கூடியவர்களெல்லாம் நண்பர்கள். இந்த கூட்டம் எப்போது எங்கே கூடினாலும் ஜேகே தான் நாயகனாக இருப்பார், இதுவே இங்கும் நடந்தது.

? said...

ஒரு மனிதன் பிறக்கிறான். இந்த அறிவியல் விளை பொருளுக்காக விளைபொருள் மையமாக்கப்பட்டு யாரால் கொண்டாடப்பட்டாலும் அதற்கு என்ன மதிப்பு இருக்க முடியும். பிறந்த்தே சாதனைதான் என்று சிலர் கருதி கொண்டாடுகிறார்கள். தாங்கள் அப்படி செய்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அப்பிறந்த நாளை கொண்டாட தான் என்னசாதித்தோம் என்று பார்க்க வேண்டும் என்று கூட வாதிடலாம். ஆனால் தான் ஏன் பிறந்தோம் பூமிக்கு பாரமாக என்று இந்த நாட்டின் கோடிக்கணக்கான ம்க்கள் தமது வாழ்நிலைமையில் இருந்து நினைக்க முன்வருகையில் ஒரு பிறந்த நாளில் கலந்து கொள்வது கூட கொஞ்சம் அநாகரீகம்தான் எனக்கருதுகிறேன். பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என தனது சிஷ்யர்களுக்கு சொல்ல மறந்த தெய்வத்தை என்ன சொல்ல•.

Dr.Rudhran said...

பிறந்தவர் என்ன யாருக்குச் செய்தார் என்றே அவரது "அவதாரம்" கொண்டாடப்படுகிறது. ராமனும் பிள்ளையாரும் கற்பனை என்றாலும் காந்தியும் அம்பேத்கரும் நிஜங்கள்தானே.பிறந்தநாள் என்பது இனிய நினைவுகளின் நன்றி கூறல். எது இனியது என்பது அவரவர் முடிவு செய்து கொள்ள வேண்டியது.
வறுமையில் வாடுவோர் செய்ய முசியாத எதையும் நானும் செய்ய மாட்டேன் என்றால், இங்கே கணினி முன் தட்டச்சிட்டுக் கொண்டிருக்கமாட்டேன்.
அப்புறம், தெய்வம் என்று எதைச் சொல்லியிருக்கிறது? பக்தர்கள் தான் பறபறக்கிறார்கள்- எல்லா விட தெய்வங்களுக்காகவும். பெரியாரும் மார்க்ஸும் கூட தேவநிகர்நிலையில் வைத்துக் கொண்டாடப்படவில்லையா?

என்னை நியாயப்படுத்திக் கொள்ள மட்டுமில்லை, எல்லா நியாயங்களையும் பிற்றி சிந்திக்கவே இதை எழுதுகிறேன்.

? said...

பிறந்த நாளுக்காக கண்டறியும் இனிய தருணங்களை முடிவு செய்வது தனிநபரின் சுதந்திரம் என்ற பிறகு தொடர்ந்து விவாதிக்க முடியவில்லை. நாயகர்களின் சமூக பாத்திரம்தான் முன் நிற்கும் என கருதுகிறேன். சாமான்யர்கள் செய்ய முடிந்ந்தை மாத்திரம்தான் தாங்களும் செய்ய வேண்டும் என ஒரு நியாயத்தை கூட நான் சொல்லவில்லை. மார்க்சு எப்போது தேவநிகர் வைக்கப்பட்டார் என சொன்னாலும் உதவும் எனக்கு ..

Dr.Rudhran said...
This comment has been removed by the author.
Dr.Rudhran said...

நிறைய தட்டச்சுப் பிழைகளால் மீண்டும்-

பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டோ சிறப்பு பெற்றோ உள்ளவர்களின் உருவங்கள் வழிபடுமளவு இல்லாவிட்டாலும் வணங்குமளவு இருப்பது அவர்களுக்கு ஒரு தேவ நிகர் நிலை உருவாக்குவதாக நான் நினைக்கிறேன்.
தேவ நிகர் என்பது முப்பத்துமுக்கோடி கணக்கில் அல்ல.
நாம் நம்பிக்கை வைத்து, போற்றும் ஒரு நபர் இறந்தபின் தான் ஒளிவட்டம் சூட்ட வேண்டும் என்றில்லை. அந்த ஒளிவட்டத்தை நிராகரிக்கும் அறிவை மீறி உணர்வு பூர்வமான ஒரு நெருக்கம் யாரிடமாவது யாருக்காகவாவது உருவானால் மரியாதைக்குரியவர் தொழப்பட வேண்டும் என்றில்லை, தோழமை உணர்வுடன் கூட நம்முடன் சமன்மபடுத்திக் கொள்ள இயலாத நிலைமையைத் தான் தேவ-நிகர் என்று குறிப்பிட்டேன்.
வாதத்திற்காக அல்ல, விளங்கிக்கொள்ளத்தான்.

Murali said...

வாழ்கையே திருவிழா.

கொண்டாட ஒரு காரணம் வேண்டும் என்றால், பிறந்த நாளும் மகத்துவம் வாய்ந்தது.

? said...

வாழும் காலத்திலேயே நம்மை விட தகுதி நிலையில் உயர்ந்தவர் ஒருவர் எப்போதும் நமக்கு தேவைப்படுகிறார் என்று புரிந்து கொள்ளட்டுமா...

போராட்டம் said...

பகிர்வுக்கு நன்றி டாக்டர். நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தமிழ் இலக்கியத்தின் மறுக்க முடியாத ஆளுமை ஜெயகாந்தன். அவரது துவக்க கால அரசியல் கருத்துக்களானாலும் சரி, அல்லது அவர் தனது எழுத்தை நிறுத்திய பின்பான சமீபகால அரசியல் கருத்துக்களானாலும் சரி, அவற்றில் நிறையவே மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால், அவரது சிறுகதைகளும், குறுநாவல்களும், நாவல்களும் தமிழ் படைப்பிலக்கியத்திற்கான அரிச்சுவடி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. தாகூர், பிரேம்சந்த்,மகாஸ்வேதா தேவி போன்ற இந்தியாவின் மாபெரும் படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் ஜெயகாந்தன்.

'அக்கினிப் பிரவேசத்திலிருந்து', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' தோன்றிய வரலாற்றைக் எண்ணும் வேளைகளில், எனக்கு தோன்றுவதுண்டு. இப்படியொரு இலக்கிய ஆளுமை, நிலவும் சமூக மதிப்பீடுகளை நேருக்கு நேராக நின்று எட்டி உதைத்ததும், அடி வாங்கிய சமூகம் புலம்புவதைத் தாண்டி எதிர்கொள்ள முடியாத அளவிற்கு விஞ்சி நின்ற படைப்பாளி உலகில் எங்காவது உண்டா? ஆனால், அத்தகைய படைப்பாளியால் பெரியாரின் வரலாற்று முக்கியத்துவத்தை எதிர்மறையாக மட்டுமே அணுக முடிந்தது என்பது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றாக இருந்தாலும் என்ன செய்வது... சூரியனின் கரும்புள்ளிகளை யார் அழிப்பது? அவரது எல்லா நாவல்களை விடவும், நேசனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட அவரது சிறுகதைத் தொகுப்பை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. குருபீடமாக இருக்கட்டும், நான் ஏன் இருக்கிறேனாக இருக்கட்டும், பாவ மன்னிப்பாக இருக்கட்டும்... ஒவ்வொரு கதையையும் பற்றி தனி நூல் எழுதலாம். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பழைய நண்பர்களை அவ்வப்போது நிழலாடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கடந்த உயிர்மை இதழில் அம்ஷன் குமார் ஜெயகாந்தனின் சினிமா பங்களிப்புகளை, அவரது குறைந்த ஆனால் தமிழ் சினிமா வரலாற்றில் மறுக்க முடியாத படைப்புகளைக் குறித்து குறிப்பிடத்தக்க கட்டுரையை. எழுதியிருந்தார். தாங்கள் ஒரு வேளை படித்திருக்கலாம். மற்றொரு முறை அவரை சந்திக்கும் பொழுது சொல்லுங்கள், ஒரு மாபெரும் எழுத்தாளனின் மெளனம் அவருக்கு எப்படியோ, வாசகர்களுக்கு மாபெரும் இழப்பு.

Anonymous said...

what to say.

i dont know.

but i feel comfort to read your blog.

thank you.

surya

Post a Comment