முந்தைய பதிவில் போவதா வேண்டாமா
என்று பகிரங்கமாக யோசித்துவிட்டு, போ என்பவர்களும்
போகாதே என்பவர்களும் என்ன சொன்னார்கள் என்பதை நினைவில் கொண்டு, பகல் முழுக்க யோசித்து, மாலை கார் ஒட்டிப்போனேன்!
அவர் இருக்க மாட்டார் என்று
நினைத்தேன். போனது அவர் மீதுள்ள மரியாதையினால்தான். போய், நான் பேசப்போவதில்லை என்றும் சொல்லிவிடலாம்
என்றுதான் போனேன். போனால் அவர் அமர்ந்திருந்தார்.
பழைய வாஞ்சையுடன் வா என்று
அருகில் உட்காரச்சொன்னார். மேடையிலும் பக்கத்தில் உட்கார் என்றார். நான் பேசுவதற்குள், 9 மணி ஆகிவிட்டது. மூன்று நிமிடங்களில் முடித்துக்கொண்டு, அவரது ஏற்புரைக்கு வழிவிட்டால், இரண்டு நிமிடங்களில்
அவரும் பேசி முடித்து விட்டார்.
திரும்பி வந்து இரவெல்லாம்
ஏன் போனேன் என்று யோசித்தால் ஒரே உண்மையான விடை, அவர் மீது எனக்குள்ள அன்பு மட்டுமே! கலைமாமணி பட்டம் கிடைக்கும்
என்று அந்தக்கூட்டதில் போய் நிற்கவில்லை, ஒரு கலைஞன் தன் வாழ்நாளில்
பாராட்டப்படுவதை மனதார மகிழ்ந்து பார்க்கவே போனேன். அதுவும் எனக்கு நெருக்கமாக உள்ள
நான் மிகவும் நேசிக்கும் ஒருவரின் திறமை கொண்டாடப்படுவதைப் பார்க்கவே போனேன். நிறைய
புதிய, இளம் எழுத்தாளர்களையும் சந்திக்கலாம் என்றும் போனேன்.
ந.முத்துக்குமார் தவிர தமிழ் ஆர்வமுள்ள எந்த இளைஞரையும், இளைய
எழுத்தாளர்களையும் அங்கே காணவில்லை!
அவர் என்னையும் அங்கீகரிக்க
“என்ன தவம் செய்தனை” என்று என் மனம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான துறைகள் மனநல மருத்துவம் மற்றும் ஓவியம்.
எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன
பகிர்ந்துகொள்ள முகவரி-
dr.rudhran@gmail.com