Sunday, February 14, 2010

பதின் வயது, தொடர்

விழுந்தால் பொறுக்கிக் கொள்ளலாம், உடைந்தால் ஒட்டிக்கொள்ளலாம், தொலைத்தால் வேறு பார்த்துக்கொள்ளலாம் என்று ஓடிய வயதுகளைப் பற்றி, எதையும் சிந்திவிடாமல், இருப்பதைக் கெடுத்துவிடாமல் என்ற பத்திர உணர்வோடு வேகத்தைக் குறைத்துக்கொண்ட வயதில் நினைத்துப் பார்ப்பது, இனிய அனுபவமாகத்தான் இருக்கிறது. பின்னோக்கிப்பார்த்தால், அன்று வலித்தவை இன்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றன; அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன.

என்னவெல்லாம் நடந்தது என்று ஒரு பட்டியல் போட ஆரம்பித்தாலேயே அது நீளமாக இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது! செயிண்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆரம்பித்த பதின்வயதுகள், சென்னை மருத்துவக்கல்லூரியில் முடிந்த அந்த ஏழு ஆண்டுகள் தான் வாழ்க்கையின் ஆரம்பம்!

என் பதின்வயதில்தான் கீழ்வெண்மணி நிகழ்ந்தது. அந்த ஆண்டுதான் சென்னை மாநிலம் தமிழ்நாடு என்றும் பெயர்சூட்டிக்கொண்டது.


இன்று இதை நினைவுகூறும் நான், அன்று எந்த அரசியல்-சமூகத் தாக்கமும் உள்புகாதவாறு படிப்பு மட்டுமே குறியாகக் கொண்ட ஒரு சாதாரண பள்ளி மாணவன். ஆனால் என் பள்ளி சாதாரணமானது அல்ல. ஆண்டுதோறும் குத்துச்சண்டை தான் பள்ளியின் முக்கிய நிகழ்வு- நான் கலந்து கொள்ளாவிட்டாலும்! திமுக அரசு இருந்தாலும் தமிழ் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, ஆங்கிலம் தான் எல்லாமும். தமிழ் வகுப்பிலும் ஆங்கிலம் மூலமாய்த்தான் விளக்குவார்கள்! அன்று லகுவாகத் தெரிந்தது இன்று வேடிக்கையாக விமர்சிக்கப்படுகிறது!

Daffodils, Ozymandias, Lady of Shallot எல்லாம் அப்போது தான் அறிமுகம்! Wren and Martin தலைகீழ் பாடம்! எதற்காகவென்று தெரியாமலேயே அல்ஜீப்ரா திரிக்நாமெட்ரி என்றெல்லாம் இம்சைகளை ஏற்றுக்கொண்ட காலம். Perry Mason படிக்க ஆரம்பித்த காலம்! அடுத்த ஆண்டே தொடர்ந்து இரண்டு வருடப்பாடமாக Shakespeare . Midsummer Night’s Dream அதன் ஒவ்வொரு வரியும் உள்பதிந்துள்ள கவிதையும் இலக்கியமும் மிக மிக விரிவாய் ஆழமாய்... மொழி, இலக்கியம் ஆகியவற்றினை அங்கு தான் பரிச்சயம் செய்துகொண்டோம். பள்ளியின் முடிவில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதன்மையாகத் தேர்வானபோதுதான் என் வாழ்வின் சுவாரஸ்யங்களே ஆரம்பம்!

ஆண்சிறுவர்களுக்கான பள்ளி என்பதால் பெண்களுடன் பழக்கம் இல்லை. ஆனால் பள்ளியின் வாசகமான viriliter age என்பதைத் தமிழில் சொல்லவேண்டுமென்றால், ‘ஆண்மை தவறேல்’ என்று சொல்லலாம். அந்த வயதுக்கான ஆண்மை விசித்திரமானது. “ஸ்மோக் பண்ணாத, கேர்ள் பிரெண்ட் இல்லாத” வெறும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய நான் அந்தப் பள்ளியின் ஆண்மைத்தனத்தில் சற்றுக் குறைவாகவே எடைபோடப்பட்டவன்! பள்ளியை விட்டுப்போவதற்குள் இந்த இரண்டு தகுதிகளையும் அடைந்து விட வேண்டும் என்ற முனைப்பும் இருந்தது; முனைப்பு இருந்ததால் முடிந்தது!

பள்ளி நாட்களின் கடைசி மாதங்களில், ஒரு சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு, நண்பர்களுடன் பஸ் நிறுத்தத்தில், “ நினைச்சா என்னாலே ஈசியா ஒரு பொண்ணோட பிரெண்ட் ஆய்ட முடியும்” என்று நான் வெட்டியாய்ப் பீற்ற, அதோ அங்கே நிற்கும் பெண்ணிடம் பிரெண்ட் ஆகிக்காட்டு என்று அவர்கள் சவால் விட, அவளருகே சென்று, “11டி இங்கே நிற்குமா” என்று கேட்டேன். அவள் மேலே எழுதி இருந்த பலகையைக் காட்டினாள். அசட்டுச்சிரிப்புடன், அவள் ஏறிய பஸ்ஸில் நானும் ஏறி தப்பிக்கலாம் என்று பார்த்தால், நண்பர்களும் ஏறிவிட்டார்கள்! அவளிடம் போய், சாரி, உன் கூட பேசுவேன்னு  பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டேன், கொஞ்சம் ஹெல்ப் பண்ணு, உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன், என்று கெஞ்சியது அவளுக்குப்பிடித்துப் போய், சிரிக்க.. என் நண்பர்கள் நடுவே நான் படிப்பையும் மீறி ஒரு நாயகன் ஆனேன்.

பதினைந்து வயதில் விளையாட்டாய் ஆரம்பித்த அந்த உறவு இன்னும் இருக்கிறது! நாற்பது ஆண்டுகளாக நாங்கள் நண்பர்கள். இத்தனை வருடங்களில் எந்த ஒரு கணத்திலும் எதிர்பாலின கவர்ச்சியாக, பாலுணர்வு தூண்டக்கூடிய நெருக்கமாக அது அமையவில்லை. என் நண்பர்கள் பட்டியலில், எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் வரக்கூடியவர்களின் பட்டியலில் முதல் பத்து பெயர்களில் அந்த கீதாவின் பெயர் இன்றும் உண்டு. இருவரும் வெவ்வேறு நபர்களால் ஈர்க்கப்பட்டபின் அந்த ஈர்ப்புகள் குறித்தும் பேசித்தெளிய ஒருவருக்கொருவர் உதவினோம்.

பள்ளி முடிந்து சீருடை இல்லாமல் படிக்கப்போன இடம் லயோலா. நான் சேர்ந்த ஆண்டுதான் அங்கே ஒரு மாணவர் போராட்டம் நடந்தது. போராட்டம் பிடித்தது. காரணங்களைப் பிடிப்பதாய்ச் சொல்லவும் பிடித்தது. கொஞ்சம் கம்யூனிஸ்டோ என்று பிறர் சந்தேகிக்கும் ஒரு பூர்ஷ்வாவாகவே இருந்தேன். அங்கே தான் முதலில் என் ஓவியத்திறமைக்கு அங்கீகாரம். போராட்டப் போஸ்டர்களில் ஆரம்பித்து, கல்லூரி சார்பாய் போட்டிகளில் கலந்து வெல்லும் அளவுக்கு மாற்றம். லயோலாவில் இருந்தது ஓர் ஆண்டு தான், ஆனால், நான் மருத்துவக்கல்லூரி சேர்ந்த பின்னும், பதினேழு வயதானவனைத் தன் புத்தகத்திற்கு முன்னட்டை ஓவியம் வரையச் சொல்லி ஊக்குவித்தவர், அன்றைய லயோலா தமிழ்த்துறையில் இருந்த பேராசிரியர் சுந்தரராசன் எனும் அழகரசன். வேங்கையின் வேந்தன் எனும் அவரது கவிதை நாடகம் தான் நான் முதன் முதலில் அட்டைப்படம் வரைந்த நூல்.

அடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி! நான் உருவானதே இங்கேதான்.

காதல் என்று நினைத்ததைப் பற்றி, கவிதை என்று நினைத்துக் கொண்டதை எழுதியதும், பள்ளியில் கற்றுக்கொண்ட நெஞ்சுறுதியுடன் எவராக இருந்தாலும் சரியென்று பட்டால் எதிர்க்கலாம் என்று நடந்து கொண்டதும், அதற்காக தண்டிக்கப்பட்டதும், எவ்வளவு விழுந்தாலும் எழும் அளவு மனத்திலோர் உறுதி வளர்ந்ததும் இங்கே தான்.

1972 ஆரம்பித்த நட்பு வட்டம் இன்னும் இருக்கிறது. பெயரளவில் மட்டும் அல்ல. பகிர்தலில், பார்த்துக்கொள்வதில், பேசுவதில், முன்போலவே இன்னும் சிரிக்க முடிவதில்!

சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது தான் அதுவரை என் வீட்டில் இருந்த வசதிகள் யாவும் மாயை என்று தெரிந்தது. கடனில் காட்டப்பட்ட ஆடம்பரமா இல்லை எனக்குத் தெரிய வேண்டாம் என்று கஷ்டம் தெரியாமல் வளர்த்தார்களா என்று இன்னும் தெரியாது. ஒரு நாள், வசதியிலிருந்து வறுமை தெரிந்தது. உணவுக்கும் போக்குவரத்துக்கும் கூட காசில்லை என்ற போதுதான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். எனக்குத்தெரிந்த ஒரே வேலை படம் வரைவதுதான். வரைந்து சம்பாதித்த பணத்தில்தான் MBBS பட்டம்! பதினெட்டு வயதில் சுயசம்பாத்தியதில் சுதந்திரம் தெரிந்தது. தன்னம்பிக்கை திமிரளவும் வளர்ந்தது.

பத்தொன்பதுவயதில்.. இலக்கியம் அறிமுகம் ஆனது. விமர்சனப்பார்வை வந்தது. வீரமும் வளர்ந்தது, வீம்பும் வளர்ந்தது. உறவுகள் புரிந்தது, உலகம் தெரிந்தது.

பதின்வயது தொடர் எழுத தீபா அழைத்த போது தயங்கியே எழுத ஆரம்பித்த பிறகு, இதைப் பற்றியெல்லாம், ஒரு மீள்பரிசீலனை செய்யவும் மனவியல் கோணத்தில் பார்க்கவும் ஆசை வருகிறது.

அனுபவங்களின் பரிசுத்தம் பகுப்பாய்வில் பழுதுபட்டுப் போகலாம்.

இன்ஷா அல்லாஹ்.

43 comments:

Amrutha said...

Nice :)

தமிழ் அமுதன் said...

நன்றி .. டாக்டர்..!

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நல்ல,அழகான பதிவு சிம்ப்ளி சூப்பர்ப்

Unknown said...

நல்ல அழகான பதிவு,நிறைய எழுதவும்

அன்புடன் அருணா said...

இனிய அனுபவங்கள்...மலரும் நினைவுகள்!

பத்மநாபன் said...

டாக்டர் , நீங்களும் இதெல்லாம் கடந்து தான் வந்து இருக்கிறிர்களா ? டாக்டராகவே நீங்கள் வந்துள்ளதாக இதுவரை எனக்கு பிரம்மை .
சுவாரசியமாக இருக்கிறது டாக்டர் ....

Deepa said...

நினைத்ததை விடப் பன்மடங்கு சுவாரசியமாக இருந்தது!

//விழுந்தால் பொறுக்கிக் கொள்ளலாம், உடைந்தால் ஒட்டிக்கொள்ளலாம், தொலைத்தால் வேறு பார்த்துக்கொள்ளலாம்//
ஆரம்பமே அதிரடி!

//பள்ளியை விட்டுப்போவதற்குள் இந்த இரண்டு தகுதிகளையும் அடைந்து விட வேண்டும் என்ற முனைப்பும் இருந்தது; முனைப்பு இருந்ததால் முடிந்தது! //
:-))

//சாரி, உன் கூட பேசுவேன்னு பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டேன், கொஞ்சம் ஹெல்ப் பண்ணு, உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன், என்று கெஞ்சியது அவளுக்குப்பிடித்துப் போய், சிரிக்க// class!
உங்கள் நட்புவட்டம் நீடுழி வாழ்க!

இளம் வயதிலேயே உழைத்து அந்தப் பணத்திலேயே படித்து; உதவியாக ஆசிரியரின் பெயரையும் நினைவு கூர்ந்த விதம் அருமை.
கடைசி வரி கவிதை.

மாதேவி said...

இனிய பகிர்தல். நட்பு வட்டம் இன்றும் தொடர்வது பாராட்டுக்குரியது.

sakthi said...

அன்புள்ள Dr..ஐயா ,
தான் சம்பாதித்து கஷ்டப்பட்டு அந்த உழைப்பில் படிக்கும் போது அந்த சுகமே தனி.படிப்பின் ஒவ்வொரு எழுத்தின் ஆழமும் அருமையும் புரியும்.ஆரோக்யமான நட்பு அதுவும் தொடர் நட்பு என்பது அறிய பொக்கிஷம் .நட்புக்கள் தொடர வாழ்த்துக்கள் தங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறவும் .

ஸ்ரீராம். said...

இனிமையான அனுபவங்கள். பழசை அசை போடுவது சுகம்தான். நல்ல பகிர்வு டாக்டர்.

சுந்தரா said...

//விழுந்தால் பொறுக்கிக் கொள்ளலாம், உடைந்தால் ஒட்டிக்கொள்ளலாம், தொலைத்தால் வேறு பார்த்துக்கொள்ளலாம் என்று ஓடிய வயதுகளைப் பற்றி, எதையும் சிந்திவிடாமல், இருப்பதைக் கெடுத்துவிடாமல் என்ற பத்திர உணர்வோடு வேகத்தைக் குறைத்துக்கொண்ட வயதில் நினைத்துப் பார்ப்பது, இனிய அனுபவமாகத்தான் இருக்கிறது.//

நிஜம்தான்.

சிறப்பான பதிவு.

Chitra said...

1972 ஆரம்பித்த நட்பு வட்டம் இன்னும் இருக்கிறது. பெயரளவில் மட்டும் அல்ல. பகிர்தலில், பார்த்துக்கொள்வதில், பேசுவதில், முன்போலவே இன்னும் சிரிக்க முடிவதில்!


.......... Thats a blessing, Dr.Rudhran. I am happy for you.

Thekkikattan|தெகா said...

நல்ல பகிர்வு!

//இத்தனை வருடங்களில் எந்த ஒரு கணத்திலும் எதிர்பாலின கவர்ச்சியாக, பாலுணர்வு தூண்டக்கூடிய நெருக்கமாக அது அமையவில்லை.//

hmmm... really great, many of us should still learn!

//சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது தான் அதுவரை என் வீட்டில் இருந்த வசதிகள் யாவும் மாயை என்று தெரிந்தது.//

இதுவேதான் இன்னமும் தரையில் கால் ஊன்றி இறுகப் பற்றிக் கொள்வதற்கு உதவுகிறதோ!! :-)

தருமி said...

//வரைந்து சம்பாதித்த பணத்தில்தான் MBBS பட்டம்! //

great ...

Pradeep said...

Really Amazing to see you in tamil blog....I am one of ur fan....

Ashok D said...

:)

MJV said...

வணக்கம் டாக்டர். உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் ஒரு முறை நீங்கள், கனவினைப் பற்றி கொடுத்த பதில் அருமை. நினைவலைகள் என்றும் மீட்டப்படத்தான். உங்களைப் போன்றோரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்வோம். அற்புதமாய் இருந்தது பகிர்வு....

MJV said...
This comment has been removed by the author.
Rettaival's Blog said...

என் ஐம்பத்தைந்தில் இது போன்றதொரு மீள்வருகைக்கும் ஞாபகச் சிதறல்களுக்கும் ஆசைப்படுகிறேன்.

குடுகுடுப்பை said...

அந்தக்காலத்தில் சொந்த சம்பாத்தியத்தில் படித்தவரா ? ஆச்சர்யமாக இருக்கிறது

மயூ மனோ (Mayoo Mano) said...

நல்ல பதிவு டாக்டர்.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தாராபுரத்தான் said...

வணக்கம் சார். அந்த நாள் நினைவுகள் படிக்க நன்றாகவே உள்ளது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அனுபவங்களை எழுதிய விதம் நன்றாக இருந்தது!!

உங்கள் நட்பு வட்டம் இன்னும் தொடர்வதிலும் மகிழ்ச்சி.. புகைப்படத்தில் இருந்தவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கலாம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அன்று வலித்தவை இன்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றன; அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன.//

உண்மை.

பகிர்விற்கு நன்றி டாக்டர்.

Anonymous said...

//அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன.//

இப்ப மட்டும் என்ன வாழுதாம் டாக்டர்,.நீங்க செய்வது கேவலமான செயல்கள் தான்.உங்களுக்குக் தான் வெட்கம் வரமாட்டேன் என்கிறது.உங்க லெவல் அவ்வளவு தான்.

Anonymous said...

//புகைப்படத்தில் இருந்தவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கலாம்.//. ஆமாம் டாக்டர்,இப்ப்டி கூட மனித மூஞ்சிகள் இருக்க முடியுமா என்ற லெவலுக்கு குழந்தைகளையும்,மன நல்ன் குன்றாதவர்களையும் பயமுறுத்தும் வண்ணம் உள்ள சூப்பர் மூஞ்சிகள் அல்லவா அந்த முஞ்சிகள்.பொறாமையில் வெந்து போகாதீங்க டாக்டர்.உங்க மூஞ்சியும் சாதரண மூஞ்சியா என்ன?
அதே ரேஞ்ச் தான்.

Dr.Rudhran said...

கேவலமாகத்தான் எழுதுவேன் என்று தீர்மானிப்பவர்களால் சிலரது மனம் புண்படுவதால், இனி ஒப்புதலுக்குப் பின்னரே மறுமொழிகள் வெளியிடப்படும்.
தைரியமுடன் என்னை விமர்சிக்கவும், வெறுப்பைக் காட்டவும் என் மின்னஞ்சலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தொடர்பு கொள்ள முடிபவர்களுக்குத் தக்க பதில் தரத் தயாராகவே இருக்கிறேன்.

சந்தனமுல்லை said...

மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள், டாக்டர். நிகழ்ச்சிகளையும் அதன் சுவை குன்றாமல் - இயல்பான நடையில்! /தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதன்மையாகத் தேர்வானபோதுதான் என் வாழ்வின் சுவாரஸ்யங்களே ஆரம்பம்!
/ நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது இந்த இடுகையில்! :-)

/
காதல் என்று நினைத்ததைப் பற்றி, கவிதை என்று நினைத்துக் கொண்டதை எழுதியதும், பள்ளியில் கற்றுக்கொண்ட நெஞ்சுறுதியுடன் எவராக இருந்தாலும் சரியென்று பட்டால் எதிர்க்கலாம் என்று நடந்து கொண்டதும், அதற்காக தண்டிக்கப்பட்டதும், எவ்வளவு விழுந்தாலும் எழும் அளவு மனத்திலோர் உறுதி வளர்ந்ததும் இங்கே தான்/

Teenage in a nut shell! :-)நன்றி டாக்டர்!

Anonymous said...

Thanks for deciding to moderate comments. Deliberate personal provocations have been killing the very experience of visiting your site.

ராமலக்ஷ்மி said...

அழகான முன்னுரையுடன் அருமையான பகிர்வு!

//வரைந்து சம்பாதித்த பணத்தில்தான் MBBS பட்டம்!//

க்ரேட்!

Unknown said...

எதையாவது உதுவதே அவர்களின் வேலை

Thenammai Lakshmanan said...

//இருப்பதைக் கெடுத்துவிடாமல் என்ற பத்திர உணர்வோடு//

இதுதான் நம் வாழ்வு முழுவதும் ஊடாடி நம்மை நல்லவராக இருக்கச்செய்கிறது ருத்ரன்...

Thenammai Lakshmanan said...

Ruthran i too have Daffodils in my plus two lession....nice poem...

Thenammai Lakshmanan said...

//கொஞ்சம் கம்யூனிஸ்டோ என்று பிறர் சந்தேகிக்கும் ஒரு பூர்ஷ்வாவாகவே இருந்தேன்//

hahaha... superb ....!!1

Thenammai Lakshmanan said...

//பத்தொன்பதுவயதில்.. இலக்கியம் அறிமுகம் ஆனது. விமர்சனப்பார்வை வந்தது. வீரமும் வளர்ந்தது, வீம்பும் வளர்ந்தது. உறவுகள் புரிந்தது, உலகம் தெரிந்தது.//

எல்லோருக்கும் இது ஒரு கால கட்டத்தில் நிகழ்கிறது ருத்ரன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆச்சர்யமும், சுவாரஸ்யமும் டாக்டர்.

பின்னோக்கிப்பார்த்தால், அன்று வலித்தவை இன்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றன; அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன.//

உண்மை டாக்டர்

Radhakrishnan said...

அருமையான தருணங்களை எழுதி இருக்கிறீர்கள்.

ரவிஷா said...

என்னமோ கீழ்வெண்மணி விவகாரத்தைப் பத்தி எழுதுவீங்கன்னு பாத்தா, சந்தடியில்லாமல் ஸ்கிப் பண்ணிட்டுப் போயிட்டீங்க!

ஏன் அதைப் பத்தி எழுதினா அடிவிழும்னா?

புருனோ Bruno said...

:) :)

CS. Mohan Kumar said...

அருமையான பதிவு சார். ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.

அந்த அனானி கமெண்ட் Not in good taste. கமெண்ட் மட்டு படுத்துதல் நன்றே.

இந்த வயது குறித்து இன்னும் கூட நீங்கள் எழுதலாம்

கண்ணா.. said...

//விழுந்தால் பொறுக்கிக் கொள்ளலாம், உடைந்தால் ஒட்டிக்கொள்ளலாம், தொலைத்தால் வேறு பார்த்துக்கொள்ளலாம் என்று ஓடிய வயதுகளைப் பற்றி, எதையும் சிந்திவிடாமல், இருப்பதைக் கெடுத்துவிடாமல் என்ற பத்திர உணர்வோடு வேகத்தைக் குறைத்துக்கொண்ட வயதில் நினைத்துப் பார்ப்பது, இனிய அனுபவமாகத்தான் இருக்கிறது. பின்னோக்கிப்பார்த்தால், அன்று வலித்தவை இன்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றன; அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன//

ஆரம்பத்தில் தொடங்கிய டெம்போ சுவாரஸ்யம் குறையாமல் இறுதி வரை.... நல்லா இருந்தது டாக்டர்


இது போலவும் அடிக்கடி எழுதுங்கள்..

கமெண்ட் மாடுரேஷன் மிகச்சரி..அதுபோல அனானி ஆபஷனையும் நீக்கி விடுங்கள். நல்ல கருத்து பரிமாற்றங்கள் நிகழும்.

ராஜ நடராஜன் said...

மெல்ல வந்து மெதுவாக அசை போடுகிறேன்.எழுத்து நடையும்,பழைய நினைவுகளும் மனதை கவ்ர்கின்றன.

Post a Comment