Thursday, February 18, 2010

நான்?


எல்லாருமே எல்லாரைப்பற்றியும் மனத்தில் பிம்பங்கள் வைத்திருக்கிறார்கள். அவை நிஜத்தில் நினைத்தவாறு இருக்கும்போது மகிழ்வதும் இல்லாதபோது வெறுப்பதும் கூட இயல்புதான்.
மீண்டும் நான் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்று ஒரு புலம்பல் ஆரம்பிப்பதாய் இல்லை. ஆனாலும் என்னைப்பற்றி சிலர் கொண்டுள்ள பிம்பங்களுக்கு ஏற்ற வகையில் நான் இல்லை எனும்போது அவர்கள் என்மீது வெறுப்பை உமிழ்வதே இதைப்பற்றி நான் இப்போது சிந்திக்க காரணம்.
கடவுள் நம்பிக்கை உள்ளது என்று சொன்னால் நான் ஒரு RSS-BJP வெறியன், வினவுக்கு ஆதரவு தெரிவித்தால் நான் ஒரு தீவிரவாதி, சாதீய ஆதிக்கத்தை எதிர்த்தால் நான் ஒரு பெரியாரிஸ்ட், எப்போதாவது ஜோதிபாஸுவைப் பாராட்டினால் நான் ஒரு போலி கம்யூனிஸ்ட், லீனாவைப் பாராட்டாவிட்டால் ஒரு பெண்ணிய எதிரி, பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்தால் ஒரு பெண்ணியவாதி, கண்ணதாசனைப் பற்றி உருகினால் நான் கவிதை தெரியாதவன், பாரதியை நேசித்தால் நான் ஒரு பார்ப்பன ஆதரவாளன், கருணாநிதியைக் கண்டித்தால் ஆரியன், பார்ப்பனீயத்தை விமர்சித்தால் திராவிட வெறியன் இந்தப் பட்டியல் மிகமிக நீளம். இதில் எது நான்?
இப்படி வரையறுக்கப்படும்போதும் வர்ணிக்கப்படும்போதும் சிலவற்றை என் மனம் புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறது, சிலவற்றை முறைப்போடு நிராகரிக்கிறது. சிலவற்றை நான் பாராட்டாகக் கொள்ளும்போது எவ்வளவு தூரம் தகுதி உள்ளதோ அதே அளவுக்குச் சில விமர்சனங்களிலும் உண்மை உள்ளது. மனம் தனக்கு வேண்டியதை மட்டும்தானே உடனே ஏற்றுக்கொள்ளும்!
இரண்டையும் காலமும் அனுபவமும், வேடமோ போலித்தனமோ இல்லாத சுய விமர்சனமுமே சீர்தூக்கிப் பார்த்து, நீ இப்படித்தான் என்று மனத்துள் என்னைப்பற்றிய  உண்மையின் பிரதிபலிப்பான ஒரு பிம்பம் உருவாகும். அதுவரை முரண்கள் இருக்கும். சமூக லாபம் தரும் பிம்பங்களே மனத்துள் விலைபோகும். அதுவரை நான் யார் என்பது அனுமானமே தவிர தீர்மானம் ஆகாது.
நான் யார் என்று தெரியாத நீ எப்படி நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கலாம்? அதுவும் நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது?
பிம்பங்கள் பற்றி பிறகு..

50 comments:

Deepa said...

//நான் யார் என்று தெரியாத நீ எப்படி நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கலாம்? அதுவும் நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது?//
Hats off Doctor! மறக்கவே முடியாத எழுத்து.

//கடவுள் நம்பிக்கை உள்ளது என்று சொன்னால் நான் ஒரு RSS-BJP வெறியன், வினவுக்கு ஆதரவு தெரிவித்தால் நான் ஒரு தீவிரவாதி, சாதீய ஆதிக்கத்தை எதிர்த்தால் நான் ஒரு பெரியாரிஸ்ட், எப்போதாவது ஜோதிபாஸுவைப் பாராட்டினால் நான் ஒரு போலி கம்யூனிஸ்ட், லீனாவைப் பாராட்டாவிட்டால் ஒரு பெண்ணிய எதிரி, பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்தால் ஒரு பெண்ணியவாதி, கண்ணதாசனைப் பற்றி உருகினால் நான் கவிதை தெரியாதவன், பாரதியை நேசித்தால் நான் ஒரு பார்ப்பன ஆதரவாளன், கருணாநிதியைக் கண்டித்தால் ஆரியன், பார்ப்பனீயத்தை விமர்சித்தால் திராவிட வெறியன்… இந்தப் பட்டியல் மிகமிக நீளம். ///
"என்ன இது, சின்ன‌ப்புள்ள‌த்த‌ன‌மால்ல இருக்கு!" என்றும் சொல்லி இருக்க வேண்டும்!
:-)

Ashok D said...

நன்றாகவே அனுகியுள்ளீர்கள் :)

Anonymous said...

பிம்பங்களின் முடிவுகள் மாறுதலுக்குட்பட்டதுதான். தீர்மானித்து விட முடியாத பிம்பம் அதன் வளர்ச்சியின் திசையைக் கூடவா தீர்மானிக்காமல் இருக்கும். இந்த தீர்மானத்திற்கு அகராதி அனுமானம் எனப் பெயர் தந்தாலும், இவற்றை மற்றொருவர் அனுமானிக்க கூடாது எனக் கருதுவது சரியா.. சமூகத்தின் பிரஜைகள்தானே எல்லோரும்... உங்களுக்கான ஜனநாயகத்தை அந்த அனுமானம் மறுக்கின்றதா...
-mani
பூவிதழின் மென்மையே அதன் கீழிருக்கும் முட்களிலும் இருக்க வேண்டும் என எப்போதுமே விரும்ப மாட்டேன். அதனை பூவே தேர்வு செய்யும். ஆனால் அப்பூவின் மாறுதல்களையும் இயக்கத்தின் வீச்சையும் உள்வாங்கி தான் அவற்றை தரிசிப்பேன். அதில் தரிசிப்பவனின் தனிநபர்வாதமும் உள்ளது என யாரும் சொல்லாமல் இருந்தால் சரிதான்.

Amrutha said...

சமூக லாபம் தரும் பிம்பங்களே மனத்துள் விலைபோகும்...........means?

Chittoor Murugesan said...

//நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது?//

Simply Superb !

மனிதர்கள் பல்வேறு போர்வைகளில் செய்வது கொல்வதும், கொல்லப்படுவதும்தான். இது போன்ற கருத்து ஆக்கிரமிப்புகளும்,முத்திரை குத்துதலும் கூட கொல்வதில் ஒரு ரகமே போலும்.

சகமனிதனை அவனது சுயத்துடன் நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொள்வதே மனிதம் என்று எப்போது தான் புரிந்துகொள்வார்களோ ?

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நீங்கள் யாரென்று தெரிந்தாலும் நான் யார் உங்களைப்பற்றி முடிவெடுக்க? ஒவ்வொருவரையும் அவர்களை அப்படியே ஏற்று,கருத்துக்களை வாங்கி,பகிர்ந்து கொள்ளும் பொறுமை நம்மவர்களுக்கு வரவில்லையா, டாக்டர்? மனித மனங்களைப்பற்றி அறிந்த தாங்கள் தான் அறிவீர்கள்.

சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க!

/துவும் நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது?
பிம்பங்கள் பற்றி பிறகு../

:-)

ஆனால் முத்திரை குத்துவதற்குத்தான் எத்தனை ஆர்வம்!நமது மனதுதான் எத்தனை விசித்திரமானது, டாக்டர்!

Dr.Rudhran said...

மணி, தரிசனம் பற்றித்தான் தெய்வம் பேசும். பக்தனின் அனுமானங்கள் எப்படி பரம்பொருளின் பொறுப்பாகும்?
யாரும் யாரைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம், நான் நினைத்தேனே நீ அப்படி இல்லையே என்று சொல்வது தான் தவறு.

Dr.Rudhran said...

அம்ருதா, சமூக லாபங்கள் என்பவை இன்றின் சௌகரியங்களைச் சிதைக்காதவகையில் இருக்கும் சந்தோஷங்கள்

Anonymous said...

நீங்கள் எழுதியவகைளில் மிகப் பிடித்ததில் இந்தப் பதிவும் ஒன்று.

Anonymous said...

ப‌ரம்பொருளின் ஜனநாயக உரிமை பாமரனுக்கு கிடையாதுதான். கண்டவனின் குற்றமா, காட்சியின் குற்றமா என்ற கேள்விக்கு காட்சியில் நடித்த பாத்திரங்கள் பொறுப்பேற்க முடியாது என்பதும் புரிகிறது. பக்தனுக்கு எப்படி காட்சி தர வேண்டும் என பாமர பக்தன் கூட முடிவு செய்ய முடியாதுதான். பரம்பொருளும் தனது பாத்திரத்தை தானே தேரவு செய்ய முடியாதுதான். அத்ற்காக தெய்வம் அம்மணமாக நிற்பதுமில்லை. பாமரனின் கருத்து அம்பலமேறவுமில்லை. பாமரனுக்கு உள்ள அனுபவ தொகுப்பிற்கு எந்த அம்பலத்தில் கணக்கு கேட்க முடியும்.
-mani

Dr.Rudhran said...

hello,
பரம்பொருள் பாமரன் என்று இரண்டாக இருக்கும் வரை சரியாகப் புரியாது. try to fit in the other shoe and then tell why the shoe bites. it can be your wrong choice.... not necessarily a bad design

அன்புடன் அருணா said...

நானும்!

ஜேவி said...

வணக்கம் சார், 1986-87/ல் நீங்கள் அருகில் இருந்தும் நான் தூரத்தில் நின்றேன், அது கார்த்திகேயன் காலேஜ் ஆப் பார்மசி-யில் தாங்கள் எடுக்காத வகுப்பில் படித்தேன்.
இப்பொழுது உங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். என்னுடைய பிளாக்குக்கு பெயர் வைத்த பிறகுதான் தாங்கள் பிளாக் எழுதுவதே எனக்குத் தெரியும். என்னுடைய சொந்த விவரங்களை மெயிலில் அனுப்புகிறேன்.

Amrutha said...

சமூக லாபங்கள் என்பவை இன்றின் சௌகரியங்களைச் சிதைக்காதவகையில் இருக்கும் சந்தோஷங்கள்// great;thanks for the reply doctor.

Anonymous said...

இரண்டும் ஒன்றாவது உயர்ந்தா, தாழ்ந்தா என்பது கூட பரம்பொருளின் பாத்திரத்தை அனுமானிக்கப் போதுமானதுதானே.. திடீரென பாத்திரத்தின் தன்மை மாறிவிடுமா என்ன•.. பாத்திரங்களை தெரிவுசெய்யும் சுதந்திரம் எல்லோருக்குமா கிடைக்கின்றது. கால் செருப்பு கடித்தால் செருப்பை மாற்றத்தானே வேண்டும். வழவழப்பாக மாற்றுவது காலையா அல்லது காலணியையா
-mani

Murali said...

காண்பவனின் பக்குவத்தை பொருத்து காட்சி மாறும். பகிர்வது இப்படித்தான் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, இப்படியும் பார்க்கலாம் என்பதற்காக. நீ ஒழுங்கா என்ற கேள்வியே நான் ஒழுங்கில்லை என்பதை பறைசாற்றுகிறது. ஐம்புலன்களை மட்டும் தூண்டும் செயலானது,ஆறாம் அறிவை முடக்கும் செயல். இதைத்தான் தொலைகாட்சியும்,பத்திரிகையும் இன்று செய்துவருகிறது. இது ஆட்சியாளர்களின் சதியும் கூட. சிந்திக்கும் மனிதன் என்றுமே சமூகத்திற்கு எதிரி. சமூக மனிதன் ஒரு குழப்பவாதி. அவனது கனவுகளில் ஒன்று ஜனநாயகம் என்பது. கனவு ஒரு சுகம் அவர்களுக்கு. மெய்படாத கனவு உடைபடும் போது, எரிச்சல்தான் வரும்.

Murali said...

காண்பவனின் பக்குவத்தை பொருத்து காட்சி மாறும். பகிர்வது இப்படித்தான் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, இப்படியும் பார்க்கலாம் என்பதற்காக. நீ ஒழுங்கா என்ற கேள்வியே நான் ஒழுங்கில்லை என்பதை பறைசாற்றுகிறது. ஐம்புலன்களை மட்டும் தூண்டும் செயலானது,ஆறாம் அறிவை முடக்கும் செயல். இதைத்தான் தொலைகாட்சியும்,பத்திரிகையும் இன்று செய்துவருகிறது. இது ஆட்சியாளர்களின் சதியும் கூட. சிந்திக்கும் மனிதன் என்றுமே சமூகத்திற்கு எதிரி. சமூக மனிதன் ஒரு குழப்பவாதி. அவனது கனவுகளில் ஒன்று ஜனநாயகம் என்பது. கனவு ஒரு சுகம் அவர்களுக்கு. மெய்படாத கனவு உடைபடும் போது, எரிச்சல்தான் வரும்.

Dr.Rudhran said...

முரளி, நன்றி.
இதற்காகத்தான் போய்ப்பேயாரிலாவது கருத்து சொல்லுங்கள் என்று சொல்கிறேன்!
ஜனநாயகம், அத்வைதம்,மார்க்ஸீயம், மாவோயிஸ்ம்... என்று எல்லா விட கனவுகளுக்கும் பெயர் சூட்டுவதே மானுடம். குழப்பம் சில நேரங்களில்தான் தேக்கம். சில நேரங்களில் அதுவே அடுத்த கட்டத்துக்காப ஆரம்பம்.
யார் எங்கே இருக்கிறார்கள் என்பது அவர்களை விட எதிரே இருப்பவர்க்குத்தான் தெரியும்.
வழி தெரியுமேன்றாள் சொல்லுங்கள், பரிசோதிக்க நான் தயார் தான்.

அப்புறம் மணி,
செருப்பின் அளவு பற்றிப் பேசும்போது காலைச்சீவுவது பற்றி பேசினால், விவாதத்தில் அர்த்தம் இருக்குமா?

Dr.Rudhran said...

எழுத்துப்பிழை மீறி படியுங்கள். அவசரத்தின் விளைவு இது. எல்லாம் நன்றாக இருக்க வேண்டுமே எனும் கனவும்கூட அவசரம்தான்.

Anonymous said...

விவாதிக்குமளவுக்கு எனக்கு இதில் அனுபவம் இல்லை. அறிவோ மிகத் தாழ்ந்த்து. ஐயங்களை விளங்குவதில்தானே கல்வி ஒளிந்திருக்கிறது. நிற்க• நான் சீவுவது குறித்தெல்லாம் பேசவில்லை. வழவழப்பாக்குவது பற்றித்தான் கூறினேன். கடந்த மாதம் மதுரைக்கு போன இடத்தில் செருப்பு எடுத்தேன். வலது காலில் செருப்பில் உள்ள ஆணி ஒன்று வெட்டுவது போல உள்ளது. முதலில் சில நாட்கள் உறுத்தலாக இருந்த்து. பிறகு அதற்கே பழகிப் போனேன்.
-mani

Thenammai Lakshmanan said...

அவரவர் மனசுக்குப் பிடித்த எல்லாமே கண்ணுக்கு அழகாகத்தானிருக்கும்...

யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம்...

இதுக்கெல்லாம் தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கத்தேவை இல்லை என்பது என் கருத்து ருத்ரன்

Anonymous said...

//சௌகர்யங்களைச்சிதைக்காத வகையில் இருக்கும் சந்தோஷங்கள்//சௌகரியத்தில் சந்தோஷம் இல்லையா?இருந்தால் வேறு சந்தோஷத்தின் அவசியம் என்ன?on the other hand,சந்தோஷம் தராத சௌகர்யத்தை, சந்தோஷத்துக்காகச்சிதைப்பதில் தவறென்ன ?சிதைக்காமல் சந்தோஷம் வேண்டுவது பேராசை இல்லையா?மேலும் சௌகரியத்தை விட சந்தோஷம்தானே மனித மனதின் ultimate dr?.....my previous comment was just a hollow effect.please forgive

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எல்லாருமே எல்லாரைப்பற்றியும் மனத்தில் பிம்பங்கள் வைத்திருக்கிறார்கள். அவை நிஜத்தில் நினைத்தவாறு இருக்கும்போது மகிழ்வதும் இல்லாதபோது வெறுப்பதும் கூட இயல்புதான். //
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். நபர்களை எடை போடுவதோடு மட்டும் அல்லாமல் இந்த சந்தர்ப்பத்தில் இவன் இப்படித்தான் நடப்பான் என்று எதிர்பார்ப்பது நடந்து விட்டால் அதிக உரசல் இல்லை. மாறி நடந்தால் ரணகளம் தான்.

Thekkikattan|தெகா said...

ஆரோக்கியமானதொரு சுய அலசல்!

//நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது?//

ம்ம்ம்ம் உண்மை. இருப்பினும் அடிப்படை இயல்பெனும் ஒரு ஆழ் மன விடயம் நம்மை அதனை நோக்கிய வீச்சிலேயே நகர்த்துவது இல்லையா, டாக்?

நம்முடைய சமூகத்தில் எந்தளவிற்கு சமரசம் பேசாமல், சமூகத்திலிருந்து drop outஆக புரிந்து கொள்ளாமலேயே வாழும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன?

Amrutha said...

//........//சௌகர்யங்களைச்சிதைக்காத வகையில் இருக்கும் சந்தோஷங்கள்//சௌகரியத்தில் சந்தோஷம் இல்லையா?இருந்தால் வேறு சந்தோஷத்தின் அவசியம் என்ன?on the other hand,சந்தோஷம் தராத சௌகர்யத்தை, சந்தோஷத்துக்காகச்சிதைப்பதில் தவறென்ன ?சிதைக்காமல் சந்தோஷம் வேண்டுவது பேராசை இல்லையா?மேலும் சௌகரியத்தை விட சந்தோஷம்தானே மனித மனதின் ultimate dr?.....my previous comment was just a hollow effect.please forgive.......//
sorry doctor, by chance, this was anonymus comment.sorry again-Amrutha

Chitra said...

சமூக லாபம் தரும் பிம்பங்களே மனத்துள் விலைபோகும். அதுவரை நான் யார் என்பது அனுமானமே தவிர தீர்மானம் ஆகாது.
நான் யார் என்று தெரியாத நீ எப்படி நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கலாம்? அதுவும் நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது?

.............பலருக்கு மனதில் தோன்றும் எண்ணங்களை - அழகான வார்த்தைகளில் ஆழமாக சொல்ல, உங்களுக்கு தெரிந்து இருக்கிறது.

sakthi said...

அன்புள்ள Dr.ஐயா ,
வணக்கம் .நாளுக்கு நாள் தங்களிடம் உள்ள மதிப்பும், நட்பும்,மரியாதையும் எனக்குள் அதிகமாகி வருகிறது .
" மனம் தனக்கு வேண்டியதை மட்டும்தானே உடனே ஏற்றுக்கொள்ளும்! "நூற்றுக்கு உண்மை .நானும் தங்களை தவறாக நினைத்து உள்ளேன் . தங்களது சில பதிவுகளில் கடவுளை விமர்சித்து எழுதி இருந்தீர்கள் .அதனால்

நான் மனம் புண்பட்டு நான் தங்களை நாத்திகனாகவும் ,கடவுளை விமர்சிபவராகவும் சித்தரித்து இருந்தேன் .நண்பர் வினவு மிக கடுமையாக விமர்சனம் செய்கிறார் (அவருடைய வலை தலத்தில் ).ஒரு சிலர் செய்யும் தவறுகளை எல்லோர் மீதும் போடுவது தான் மனகஷ்டம் .மற்றபடி அவர் மேல் தவறில்லை அவருடைய ஆதங்கம் கடுமையாக வெளிபடுகிறது அது என் போன்ற பலரை பாதிக்கிறது அவ்வளவே .

ஒவ்வொருவரும் உங்களது பதிவை படிக்கும் போது படிப்பவரது எண்ணம் ,மனதிற்கு ஒத்துபோனால் உங்களை நம்மவர் என்றும் எதிராக இருந்தால் அவர் எழுத்துகள் சரி இல்லை என்றும் எண்ண தோன்றும் .

"இரண்டையும் காலமும் அனுபவமும், வேடமோ போலித்தனமோ இல்லாத சுய விமர்சனமுமே சீர்தூக்கிப் பார்த்து, நீ இப்படித்தான் என்று மனத்துள் என்னைப்பற்றிய உண்மையின் பிரதிபலிப்பான ஒரு பிம்பம் உருவாகும். அதுவரை முரண்கள் இருக்கும். சமூக லாபம் தரும் பிம்பங்களே மனத்துள் விலைபோகும். அதுவரை நான் யார் என்பது அனுமானமே தவிர தீர்மானம் ஆகாது."
ஒவ்வொருவரது எண்ணத்திற்கு ஏற்ப Dr ஐயாவின் பிம்பம் மாறுபடுகிறது .Dr ஐயாவின் பிம்பம் எப்போது நிஜமாக தோன்றும் என்றால் உங்களை புரிந்துகொள்ளும் வரை பிம்பங்கள் தொடரும் .
நன்றியுடன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அருமை ருத்ரன்.. ஒருவரை இப்படி அல்லது அப்படி என்று எதிரெதிர் இடங்களில் பொருத்திப் பார்ப்பது குறுகிய பார்வை கொண்ட மனிதர்களின் இயல்பு.. மக்கள் மனத்தில் எப்பவும் ஒரு ஜட்ஜார் இருக்கிறார்.. சந்திக்கும் மனிதர்கள் யாவரும் அவரால் இங்குமங்கும் பொருத்தப்படுவர்.. சிலர் பொருந்துவார்கள் சிலர் மாட்டார்கள் பலர் இரண்டுக்கும் இடையில் நிற்பார்கள்..

சிரமம் உங்களுடையது மட்டுமல்ல.. எல்லாவற்றுக்கும் புன்னகைத்து விட்டு நகருங்கள்..

? said...

எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். எப்படி வேண்டுமானாலும் சிந்திப்பேன். அதனை செய்யவும செய்வேன் என்பது எல்லோருக்கும் வாய்த்திடுவதில்லை. என்னை வரையறுக்காதே என்று சொல்வதன் மூல்ம் ஒருவர் சொல்ல வருவது இதுதான். நான் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன். அல்லது நான் எதுவாக இருந்தாலும் முதலில் நான்தான் வரையறுப்பேன் என்னை என்பது. இது சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் எப்போதுமே நெருடலாக இருக்க வேண்டுமா என்ன?

மூன்றாண்டுகளுக்கு முன்னர் தினமணியில் படித்த செய்தி இது. 18 வயது விதர்பா விவசாயி தற்கொலை. மூன்று ஆண்டுகள் விவசாயம் செய்த பிறகு கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவனது தந்தை அதற்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது 45 வது வயதில் விவசாய கடன் பளு தாங்காமல்தற்கொலை செய்து கொண்டவர் என்பதும் அச்செய்தியில் நான் கண்டவை. இவரை அனுமானிக்காமல் செய்தியை கடந்து செல்வதற்கு என்னால் முடியவில்லை. முடியும் என்பவர்கள் பேசுங்கள். அது எப்படி சாத்தியம் என்றும் நாளும் உழலும் என் மனதை மாற்றவும் உதவி செய்யுங்கள்.
-mani

மயூ மனோ (Mayoo Mano) said...

//..என்னைப்பற்றி சிலர் கொண்டுள்ள பிம்பங்களுக்கு ஏற்ற வகையில் நான் இல்லை எனும்போது அவர்கள் என்மீது வெறுப்பை உமிழ்வதே//

வெறுப்பு உமிழப்படுவது எம் பெயர் மீது... உள்ளிருக்கும் "நான்" என்பதை யாராலும் நெருங்க முடிவதில்லை. அதைச் சுற்றிவந்துவிட்டு "உன்னை நான் அறிவேன், இல்லை உன்னை நான் வெறுக்கிறேன்" என்று இலகுவாக சொல்லிவிடுகிறது சமூகம்.

தொடர்ந்து வரப்போகும் அடுத்த பதிவை மிகவும் எதிர்பார்க்கிறேன் dr. Rudhran.

Murali said...

//பூவிதழின் மென்மையே அதன் கீழிருக்கும் முட்களிலும் இருக்க வேண்டும் என எப்போதுமே விரும்ப மாட்டேன். அதனை பூவே தேர்வு செய்யும். ஆனால் அப்பூவின் மாறுதல்களையும் இயக்கத்தின் வீச்சையும் உள்வாங்கி தான் அவற்றை தரிசிப்பேன். அதில் தரிசிப்பவனின் தனிநபர்வாதமும் உள்ளது என யாரும் சொல்லாமல் இருந்தால் சரிதான். //
நண்பரே நிச்சயமாக அதில் தரிசிப்பவனின் தனிநபர்வாதமும் உள்ளது.
1 . ஒரு பூ மனிதனுக்கும், வண்டிற்கும் ஒரே மாதிரி காட்சி தருவதில்லை. மனிதருள்ளும், ஒரு கவிஞ்யனின்,ஓவியனின் பார்வை வேறு அந்த பூவை விற்பவனின் பார்வை வேறு.
2 . தரிசனம் என்பதே தனிநபர்வாதம் தான். "பூவின் மாறுதல்களையும் இயக்கத்தின் வீச்சையும் உள்வாங்கும்" போது வேறுபாடுகளுடன் சேர்ந்து தரிசனமும் மறைகிறது.

eniasang said...

யாரும் யாரையும் தராசிலிட்டு தீர்ப்பு சொல்ல முனையும் முன் அவரவர் தகுதி,மற்றவரை பற்றி தனக்கு என்ன தெரியும் ,என யோசிக்க வேண்டும்.

K.R.அதியமான் said...

////அதுவும் நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது?
////

அடக்கடவுளே ! இத்தனை வயசாகியும் இன்னும் இது கொஞ்சம் கொஞ்சமாக தான் தெரிய வருதா ? அப்ப உங்க உளவியல் மருத்துவ தொழிலை எப்படி செய்றீங்க ? :))))

மன்னிக்கனும் டாக்டர், கிண்டலுக்காக ஜாலியாக இப்படி எழுத தோன்றியது. ரொம்ப சீரியசா விவாதம் போயிக்கிட்டு இருந்ததால்..

Prasanna said...

Thank you for the post. Its not possible to label what person we are. I also hate this labels. For eg: Rather than saying "He is a smoker", one can say that he is person who smokes at times. This could at least help them to give up smoking habits. But are you saying that, rather than assuming different identities, its also good if we deny our identity.

Murali said...

"குழப்பம் சில நேரங்களில்தான் தேக்கம். சில நேரங்களில் அதுவே அடுத்த கட்டத்துக்காப ஆரம்பம்."
டாக்டர், இது கடினம் என்றே எண்ண தோன்றுகிறது. முத்துகுமாரை பற்றி எழுதி இருந்தீர்கள். இப்போது மீண்டும் ஒரு சம்பவம் தெலுங்கானாவில். இங்கே புதுப்புது கனவுகள் விற்பனைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. அடக்கி ஆளும் எண்ணம் கொண்டவர்கள் "classical conditioning theory" நன்றாகவே அறிந்துள்ளார்கள். "conditioned stimulus changes but the same very old unconditional response".

vasan said...

You have difined Mr, Piramil`s words.

குமரன் said...

உங்க பதிவில் எந்த எழுத்தையையுமே வாசிக்க இயலவில்லை டாக்டர்.

Ragztar said...

// நான் யார் என்பது அனுமானமே தவிர தீர்மானம் ஆகாது//

நான் தீர்மானத்திற்கு வந்து விடுவேன். தீர்மானம் மாறிக்கொண்டே இருக்கும். அனுமானதிர்க்கும், தீர்மானதிற்குமான இடைவெளி உண்மையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது தானே?

Anonymous said...

உங்கள் கட்டுரையோடு லவலேசம் பொருந்தி வருகிற ஒரு விஷயத்தை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நீங்கள் டாக்டர் ருத்ரன் என்கிற 'நானாய்' இருக்கும் போது இங்கே வந்த பின்னூட்டங்கள் இவை. நீங்கள் உங்களை வெளிப்படுத்தாமல் சாதாரண ப்ளாக்கராய் எழுதினால் வரும் பின்னூட்டங்களே வேறு மாதிரி இருக்கும். இந்த 'நான்'ஐ வைத்துதான் எல்லாமே நடக்கிறது. என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். இன்று நல்ல ப்ளாக்குகள் ஐந்தை படித்தேன். ஆனால் உங்களுக்கு மட்டும் பின்னூட்டம் இடுகிறேன். அது இந்த டாக்டர் ருத்ரன் எனும் 'நான்'ஐ வைத்துதான்.

இளங்கோ

mohamedali jinnah said...

நான் மிகவும் விரும்புபவகள் நீங்கள்.

தங்களுக்கு இறைவன் உயர்வான பதவிகளை நன்மையை வழங்குவானாக!

அன்புடன்,
முஹம்மது அலீ.

Sundar சுந்தர் said...

மனதிற்கும் சிந்தனைக்கும் தீனி...உங்கள் எண்ணங்கள். நன்றி!

mohamedali jinnah said...

Your knowledge gives you power and force and your beard gives you respect
I respect you and admire your knowledge

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

எண்ணங்கள் 13189034291840215795 said...

நான் யார் என்று தெரியாத நீ எப்படி நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கலாம்? அதுவும் நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது

----------------------

மாறிக்கொண்டே இருப்போம்...

வளர்ச்சியோ, வீழ்ச்சியோ..

-------------------------------


டாக்டர் உங்களையும் , பலரையும் நம்ப வெச்ச இந்த புரளி
http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

எண்ணங்கள் 13189034291840215795 said...

நான் யார் என்று தெரியாத நீ எப்படி நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கலாம்? அதுவும் நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது

----------------------

மாறிக்கொண்டே இருப்போம்...

வளர்ச்சியோ, வீழ்ச்சியோ..

-------------------------------


டாக்டர் உங்களையும் , பலரையும் நம்ப வெச்ச முகிலனின் இந்த புரளி பற்றிய நிஜம்
http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

எண்ணங்கள் 13189034291840215795 said...

வினவுக்கு ஆதரவு தெரிவித்தால் நான் ஒரு தீவிரவாதி

----------------

எனக்கு ரவுடி என பெயர் கிடைத்தது..:)))

madrasdada@gmail.com said...

சவாப்பியே(ன்) புக்கு மெர்ஸி.

அல்லாத்ததியும் ஒன்னா சொன்னா ஓங்கி ஒர் சாப்பா முதுகுல - குயப்பவாதி.

தப்பா இருந்தா என்னை விமர்சி, ‘விருப்பத்துக்கு மாறாக போலீசார்கள் கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா’?

குணாமகிழ் said...

namaskaram.no person has the rights to label your individuality...and those persons dont know and cant understand that you changed your words as medicine...

Post a Comment