Thursday, January 21, 2010

சலிப்பும் பயமும் வாராது


தோழி எழுது என்றதும்,
தோழர் நிதானமாய் எழுது என்றதும்

நண்பனும் மனைவியும் –
“உனக்கு தமிழில் எழுதினா வரலே
இங்கிலீஷ்லே எழுது” என்று சொன்னதும்எழுதியது புரிந்து  அல்லது புரியாத சௌகரியத்தில்
அன்பும் வெறுப்புமாய்
வெவ்வேறு வார்த்தைகளைச் சந்தித்ததும்

எழுதும் விரல்களின்
பின் நிற்கும் கண்களானபின்

சலிப்பும் பயமும் வாராது

இன்னும் எழுதவே பார்க்கிறேன்

நான் நாடகக்காரன்.
காட்சிகளைச் சமாளிக்க எனக்குத் தெரியும்.


23 comments:

Ashok D said...

எழுத்தின் கைபிடித்து நடக்கப்பார்க்கிறீர்கள்... சூட்சமம் எழுத்தின் மூலம் நாடகமாகிறது :)

Deepa said...

//நான் நாடகக்காரன்.
காட்சிகளைச் சமாளிக்க எனக்குத் தெரியும்.
//
அப்படிப் போடுங்கள்! :)

dr.raghavan said...

all are wear a mask and act here sir . not only
you me all. thank you sir

sathishsangkavi.blogspot.com said...

//நான் நாடகக்காரன்.
காட்சிகளைச் சமாளிக்க எனக்குத் தெரியும். //

கலக்கல்...

ஸ்ரீராம். said...

பின்னூட்டங்களுக்கு மொத்த பதிலா?

அன்புடன் அருணா said...

/காட்சிகளைச் சமாளிக்க எனக்குத் தெரியும்./நானும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சந்தனமுல்லை said...

:-)தொடர்ந்து எழுதுங்கள் சார்!

eniasang said...

ஆங்கிலத்தில் உங்களின் எண்ணங்களை சிறப்பாக வெளிப்படுத்துவது ஒரு சிலரிடமே சென்று சேருகிறது ஆனால் தமிழ் என்னை போன்ற பல பாமர மக்களையும் மேம்படுத்தும் என உங்களுக்கு நினைவூட்டலாமா?

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

ரவிஷா said...

முதலில் ஏதாவது substance இருக்கிறமாதிரி எழுதும்! இப்படி தண்ணி போட்டுவிட்டு எழுதாதீர்கள்!

thegoodlady said...

mind changing the photo in your profile?

Dr.Rudhran said...

நாய்களும் வரலாம் என்று தான் வேலி போடவில்லை, அதற்காக அவை வந்து வாந்தியும் எடுக்கலாம் என்று அர்த்தமும் இல்லை. இனி, நாளை முதல் பின்னூட்டங்கள் அனுமதிக்குப் பின்னரே வெளியிடப்படும்.

Anonymous said...

Dear Doctor,

Your opinion that you write better in English,is misplaced.That view has to be disabused.

Anonymous said...

//அதற்காக அவை வந்து வாந்தியும் எடுக்கலாம் என்று அர்த்தமும் இல்லை. இனி, நாளை முதல் பின்னூட்டங்கள் அனுமதிக்குப் பின்னரே வெளியிடப்படும்.//

Dear Doctor Rudhran,

Why this exasperation in a great doctor who is supposed to cure mental disorder that usually obtains in terrorists,periyaarists and maoist fascists.

That too, when no member of the above mentioned community of thugs have presented themselves here as yet.Even the most faithful "I am Mani" hasnt shown up.Then why this despair?
This shows that even great loony doctors are not immune to acute mental disorder syndromes.

Cool doctor cool for the sake of your patients.

Radhakrishnan said...

மிகவும் அருமையான சாதுர்யம் தான்.

Thenammai Lakshmanan said...

//உதடுகளின் விரிதலிலோ விரல்களின் தட்டுதலிலோ இல்லை. கண்கள் சிரித்தால் தான் அது சிரிப்பு.

Its true Doctor Rudhran

fantasticv aa irukkku

Anonymous said...

உங்கள் பின்னூட்டங்களில் சிறிது கவனம் செலுத்துங்கள். இதில் இருப்பதை விட இதற்கு முந்தைய பதிவில் வாந்தி அதிகம். விகாரங்கள் விரசமாகும் அளவுக்கு சென்று கொண்டிருக்கின்றன.
சில சமயம் adult content அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது ஆபாசம் - sex, masturbation and rape not to mention involuntary voyareism from those who want to avoid this! மட்டறுக்கும் முடிவை வரவேற்கிறேன்.
Even for this there will be a comment that some of those who understand you or support you are obsessed with adult content! Wanna bet?!

Anonymous said...

//இதற்கு முந்தைய பதிவில் வாந்தி அதிகம்//

புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். இருந்தாலும்...பிறர்க்கு சொல்ல வந்தது

//இதற்கு முந்தைய பதிவின் பின்னூட்டங்களில் வாந்தி அதிகம்//

நுண்ணோக்கி said...

மதிப்புக்குரிய மருத்துவர்க்கு..

நியூரோசிஸ் தோன்றுவதற்கான சமூக-பண்பாட்டுக் காரணங்கள்-சூழல்கள் குறித்த உங்கள் பார்வைகளை உளத்தியல் பழகாதோரும் புரிந்துகொள்ளும்வண்ணமாய், தமிழில் விரிவாய்ப் பதிவிட (அல்லது நூலாக்க) வேண்டும் என்பது என் கோரிக்கை.

செழியன்

மயூ மனோ (Mayoo Mano) said...

//நான் நாடகக்காரன்.
காட்சிகளைச் சமாளிக்க எனக்குத் தெரியும்.//

எல்லோரும் நாடகத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்... உண்மை... :)

Anonymous said...

//This shows that even great loony doctors are not immune to acute mental disorder syndromes. //

Why do you call this guy loony?Because of his behaviour in public or because of the way he looks?

mohamedali jinnah said...

சலிப்பும் பயமும் வாராமல் எழுத தெரியும் உங்களூக்கு . இன்னும் எழுதுங்கள்

Post a Comment