Friday, January 15, 2010

ஜெயகாந்தனின் விழா
முந்தைய பதிவில் போவதா வேண்டாமா என்று பகிரங்கமாக யோசித்துவிட்டு, போ என்பவர்களும் போகாதே என்பவர்களும் என்ன சொன்னார்கள் என்பதை நினைவில் கொண்டு, பகல் முழுக்க யோசித்து, மாலை கார் ஒட்டிப்போனேன்!
அவர் இருக்க மாட்டார் என்று நினைத்தேன். போனது அவர் மீதுள்ள மரியாதையினால்தான். போய், நான் பேசப்போவதில்லை என்றும் சொல்லிவிடலாம் என்றுதான் போனேன். போனால் அவர் அமர்ந்திருந்தார்.
பழைய வாஞ்சையுடன் வா என்று அருகில் உட்காரச்சொன்னார். மேடையிலும் பக்கத்தில் உட்கார் என்றார். நான் பேசுவதற்குள், 9 மணி ஆகிவிட்டது. மூன்று நிமிடங்களில் முடித்துக்கொண்டு, அவரது ஏற்புரைக்கு வழிவிட்டால், இரண்டு நிமிடங்களில் அவரும் பேசி முடித்து விட்டார்.
திரும்பி வந்து இரவெல்லாம் ஏன் போனேன் என்று யோசித்தால் ஒரே உண்மையான விடை, அவர் மீது எனக்குள்ள அன்பு மட்டுமே! கலைமாமணி பட்டம் கிடைக்கும் என்று அந்தக்கூட்டதில் போய் நிற்கவில்லை, ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் பாராட்டப்படுவதை மனதார மகிழ்ந்து பார்க்கவே போனேன். அதுவும் எனக்கு நெருக்கமாக உள்ள நான் மிகவும் நேசிக்கும் ஒருவரின் திறமை கொண்டாடப்படுவதைப் பார்க்கவே போனேன். நிறைய புதிய, இளம் எழுத்தாளர்களையும் சந்திக்கலாம் என்றும் போனேன். ந.முத்துக்குமார் தவிர தமிழ் ஆர்வமுள்ள எந்த இளைஞரையும், இளைய எழுத்தாளர்களையும் அங்கே காணவில்லை!
அவர் என்னையும் அங்கீகரிக்க “என்ன தவம் செய்தனை” என்று என் மனம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.14 comments:

Anandi said...

happy sharing ,thank you dr.

Thenammai Lakshmanan said...

//ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் பாராட்டப்படுவதை மனதார மகிழ்ந்து பார்க்கவே போனேன். அதுவும் எனக்கு நெருக்கமாக உள்ள நான் மிகவும் நேசிக்கும் ஒருவரின் திறமை கொண்டாடப்படுவதைப் பார்க்கவே போனேன்//

execellent RUDHRAN

naanum itheyey than ninaippen

uthamanarayanan said...

oh.....

Thenammai Lakshmanan said...

//அவர் என்னையும் அங்கீகரிக்க “என்ன தவம் செய்தனை” என்று என் மனம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.//

nichaiyamaa

romba purithal irukku ungka rendu per kitayum
i like it RUDHRAN

ரவி said...

சூப்பர்........

Ashok D said...

முன் தீர்மானங்கள் இல்லாமாலிருப்பதே... நானும் சில சமயம் சிலரை கண்டைவதுயில்லை... வந்திருந்தால் உங்களை சந்தித்துயிருக்கலாம்

அரங்கப்பெருமாள் said...

// பாராட்டப்படுவதை மனதார மகிழ்ந்து பார்க்கவே போனேன்.//

அதுதான் நாம் அவர் மீது வைத்திருக்கும் அன்புக்கு அடையாளம் என் நினைக்கிறேன்.பார்வையாளராகவாவது போக வேண்டும் என நினைப்பவன் நான்.நமக்கு பிடித்தவருக்கு,நாம் மதிப்பவருக்கு,அன்பு செலுத்துபவருக்கு விழா எனவே போவதில் என்ன தவறு? விழா அமைப்பாளரை விடுங்கள், விழா நாயகர்தானே நமக்கு முக்கியம்.

Chitra said...

ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் பாராட்டப்படுவதை மனதார மகிழ்ந்து பார்க்கவே போனேன். அதுவும் எனக்கு நெருக்கமாக உள்ள நான் மிகவும் நேசிக்கும் ஒருவரின் திறமை கொண்டாடப்படுவதைப் பார்க்கவே போனேன். நிறைய புதிய, இளம் எழுத்தாளர்களையும் சந்திக்கலாம் என்றும் போனேன். ......... What a blessing to have you as a friend!

அன்புடன் அருணா said...

Celebrate!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

குட்.. இது தான் உண்மையான விட்டுக்கொடுத்தல்.. !! அவருக்காக நீங்கள் சென்றீர்கள்.. அவர் உங்களுக்கு தன் அன்பை பரிசளித்தார்.. நல்ல நிகழ்வு!!

Deepa said...

உங்களிடம் எனக்கு அபிமானம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே உங்கள் எளிமையும் அன்புள்ளமும் தான்.
சித்ரா சொல்லி இருப்பது மிகச்சரியே.

கலகலப்ரியா said...

:)

ஸ்ரீராம். said...

நீங்கள் குறையாக உணர்ந்ததை அங்கு (சம்பந்தப் பட்ட)யாரிடமாவது சொல்ல வாய்ப்பு கிடைத்ததா?

பா.ராஜாராம் said...

அருமையான பகிரல் சார்.

நிறைவான வார்த்தைகள்..

Post a Comment