Thursday, October 14, 2010

அறிமுக நூலுக்கு ஓர் அறிமுகம்.

பதினேழு வயதில்தான் முதன் முதலில் மாமல்லபுரம் பார்த்தேன்- முதலாமாண்டு மாணவர் சுற்றுலா. அன்று என்னிடம் ஒரு காமெரா இருந்தததால் பலருக்கும் என்னிடம் ஆக வேண்டிய காரியம் நிறைய இருந்தது. தங்களைச் சிலை அருகே, கோவிலருகே கடலருகே படம் எடுத்துத் தர மட்டும் நான் முக்கியம் இல்லை, தங்களுக்குப் பிடித்தவர்களைப் படம் எடுத்துத் தரவும் நான் தேவைப்பட்டேன். சக மாணவர்களிடையே கிடைத்த அங்கீகாரத்தைப் பெருமையாக எண்ணி, மல்லையை முழுதாய் என்ன மேலோட்டமாய்கூட ரசிக்கவில்லை

என் ஆசைக்கு கடற்கரை கோவிலைச் சுற்றிச் சுற்றி வெவ்வேறு கோணங்களில் படமெடுத்ததோடு சரி.அந்தப் படங்களின் நினைவுகளோடுதான் அடுத்த மூன்று வருடங்கள் பல்வேறு சித்திரங்களைத் தீட்டிக்கொண்டிருந்தேன். பிறகொரு நாள் மாமல்லபுரம் பார்க்க ஒரு மழை நாளில் கிளம்பி, அங்கங்கே நின்று ஒவ்வொன்றாய் ரசிக்க ஆரம்பித்த போது தான் அது என் வாழ்வின் ஓர் அங்கமாக மாறியது.

மாமல்லபுரம் சென்னைக்கு மிகவும் நெருக்கமான முக்கியமான இடம். சென்னைவாசி, சுற்றுலா வரும் விருந்தினர்களைக் கண்டிப்பாய் அழைத்துச்செல்ல வேண்டிய இடம். தன் இளமையில் காதலியுடன் செல்ல ஒரு சௌகரியமான இடம் என்பதால் நானும் அதே காரணங்களுக்காக அங்கே அடிக்கடி போக நேர்ந்தது. அங்கிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் எனக்குத்தெரியும் எனும் இறுமாப்பு கூட என்னிடம் இருந்தது.

பல்லவனுக்கும் சாளுக்கியனுக்கும் கட்டிடக்கலையில் இருந்த வித்தியாசங்களை எல்லாம் தெரிந்து கொள்ள பல வருடங்கள் ஆனது. காஞ்சியின் கைலாசநாதர் கோவில் சிற்ப அமைப்பும், மல்லையின் சிற்ப அமைப்புக்கும் இருந்த வித்தியாசம் புரிய இன்னும் சில ஆண்டுகள் ஆயின.

சென்ற ஆண்டு மாமல்லபுரம் சென்ற போது நிறைய படங்கள் எடுக்க முடியவில்லை, ஏனென்றால் பிடிக்கவில்லை. கடற்கரை கோவில் சிதைந்து கொண்டிருக்கிறது. சிற்பங்களின் முகங்களெல்லாம் தேய்ந்து கொண்டிருக்கின்றன. கைலாசநாதர் கோவிலின் சிற்பங்களை பழுதுபார்ப்பதாய் மேல் பூச்சில் ஒரு கொலு பொம்மைத்தனத்துடன் மாற்றி வரும் போது எனக்கு கோபம் வந்தது. ஒழுங்காய் இதைச் செய்யக்கூடாதா என்று ஆத்திரம் ஆதங்கம் எல்லாம் வந்தது. ஆனால் மல்லையின் சிற்பங்கள் கண்முன்னே காணாமல் போய்க் கொண்டிருப்பதையும் தாங்க முடியவில்லை. 
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னமேயே இதையெல்லாம் நான் ஒழுங்காகப் படம் எடுத்து வைத்திருந்திருக்கலாமே என்று என் மீதே வருத்தமும் வந்தது. இன்னும் இரண்டு தலைமுறைக்கப்புறம் இங்கே அழைத்துவந்து எதைக் காட்டுவார்கள் என்ற கவலையும் வந்தது- நடுத்தர மனப்பான்மையோடு அன்று ஒரு நாள் மட்டும்.

இந்த என் கவலையைத் தீர்க்கும் விதத்தில் இப்போது ஒரு புத்தகம் கிடைத்திருக்கிறது. நண்பர் அரவிந்த் அடிக்கடி என்னிடம் பேசும்போது குறிப்பிட்ட சுவாமிநாதன் எழுதிய நூல். அசோக் கிருஷ்ணசுவாமி எடுத்திருக்கும் மிகவும் அற்புதமான படங்களுடன் நூல் வந்திருக்கிறது. 

படங்களுக்காகவே அதைப் பாதுகாக்கலாம். கூடவே சுவாமிநாதன் எழுதியிருக்கும் விஷயமும் விதமும் மகாபலிபுரத்தின் மீது அவருக்கு இருக்கும் காதலையே காட்டுவதால், இது பார்க்க மட்டுமல்ல அவசியம் படிக்கவும் முக்கியமான நூலாகிறது.

பல்லவர்களின் கலை நயம், நுணுக்கம் குறித்தும், வரலாறு குறித்தும் எழுதிவிட்டு, ஒவ்வொரு சிற்ப அமைப்பையும் விவரமாக அவர் வர்ணிப்பதைப் படிக்கும் போது, மாமல்லபுரம் எனக்குப் புதியதோர் இடமாகவே தோன்றியது. மீண்டும் அங்கே சென்று ஒவ்வொரு சிற்பத்தையும் இன்னும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. அசோக் கிருஷ்ணசுவாமியின் படங்களைப் பார்த்தால் நாம் எதற்கு அங்கே ஒரு காமெரா கொண்டு போக வேண்டும், எல்லாம் எல்லா கோணங்களிலும் அழகாக இருக்கிறதே என்று தோன்றுகிறது- திருப்தியுடன் ஒரு பொறாமையில்.

பலமுறை அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துப் படம் எடுத்த எனக்கு புத்தகத்தின் பல பக்கங்களில் பல புதிய செய்திகள் இருந்தன. இனி அடுத்த தலைமுறைகளும் இப்படித்தான் இந்த இடம் இருந்தது என்று பெருமையாகப் பேசிப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. 

இந்தியாவில் தமிழ்நாட்டின் சிற்பக்கலையின் வெற்றிக்கு அடையாளமான மாமல்லபுரம் பற்றிய இந்நூல், பார்த்தவர்களை மீண்டும் போய்ப் பார்க்கத்தூண்டும், பார்க்காதவர்களைப் பார்க்க வைக்கும்.
சில உயர்வான படைப்புகளுக்கு விலை குறித்து விவாதிக்க முடியாது. மலிவான விலையில் வெளியிட்டிருக்கலாமே என்று எண்ணுவதைவிட இதை வாங்கவே கொஞ்சம் சேமித்து வைக்கலாம் என்று எண்ண வைக்கும் பதிப்பு.

http://www.poetryinstone.in/lang/en/2010/08/15/mahabalipuram-unifinshed-poetry-in-stone-prof-s-swaminathan-photographs-ashok-krishnaswamy.html

http://www.thehindu.com/life-and-style/metroplus/article764650.ece

12 comments:

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா இருந்தது அறிமுகம்....
எனக்கும் மகாப்ஸ் டூர் போன ஞாபகங்கள் வந்துவிட்டது... வாசிக்கும்போது நீங்க பேசிக்கிட்டிருக்கிற மாதிரியே நெருக்கமா இருந்தது, இடுகை.

புக்லேர்ந்து படம் பார்க்கறதுக்கு வர்றேன்...:-‍)

VELU.G said...

நல்ல அறிமுகம் டாக்டர்

Krubhakaran said...

http://viewsofmycamera.blogspot.com/2010/08/blog-post.html

சமீபத்தில் நான் காஞ்சி சென்றபோது எடுத்த படங்கள் Dr.
http://treasuresoftamilnadu.blogspot.com/2010/08/blog-post.html
இது சென்று வந்த விவரம்

http://treasuresoftamilnadu.blogspot.com/2007/12/maamallapuram-pallavas-architectural.html

இது 2004ம் ஆண்டு மாமல்லபுரம் சென்ற போது எடுத்த படங்கள் Dr.

இந்த பதிவுக்கு தொடர்புள்ளது என்பதால் இங்கே சொல்லி இருக்கிறேன். நன்றி Dr.

ராஜ நடராஜன் said...

மாமல்லபுர தினங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.
இவ்வளவு கட்டிடக்கலைத் துறை வளர்ச்சி, நுட்பங்கள் இப்போது இருந்தும் அந்த பழமைகளை உருவாக்க நம்மால் இயலாமல் இருப்பது Really paradox.

சுகமான பரிமாற்றத்திற்கு நன்றி Doc.

Chitra said...

இந்தியாவில் தமிழ்நாட்டின் சிற்பக்கலையின் வெற்றிக்கு அடையாளமான மாமல்லபுரம் பற்றிய இந்நூல், பார்த்தவர்களை மீண்டும் போய்ப் பார்க்கத்தூண்டும், பார்க்காதவர்களைப் பார்க்க வைக்கும்.


......நல்ல அறிமுகம்/review. பகிர்வுக்கு நன்றி.

Vijay said...

இந்த படைப்பு ஒரு பொக்கிஷம். படங்களை பார்த்து பொறாமை என்று நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இதே போல அடுத்து அவர் காஞ்சி கைலாசநாதர் நூலையும் வெளியிட ஆண்டவனை வேண்டுகிறேன்.சிங்கையில் என்னிடத்தில் மூன்று பிரதிகள் வைத்துள்ளேன். யாருக்காவது வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளுங்கள்

மிக்க நன்றி
விஜய்
www.poetryinstone.in

http://www.poetryinstone.in/lang/en/2010/10/05/recreating-a-lost-treasure-somaskanda-paintings-of-kanchi-kailasanatha-part-3.html

vijay said...

ருத்ரன் அய்யா வணக்கம், நம்மால் புதிதாக மகாபலிபுரங்களையும் தஞ்சையையும் உருவாக்க முடியாவிட்டாலும் பாதுகாக்கவாகவது செய்யவேண்டும் உங்களை போன்ற பிரபலங்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த கைக்கோருங்கள்.I'm vijay kadambur Trustee to the the famous sculptural temple i'm maintaining this temple as i can , in each and every temple some peoples should come forward to protect the wealth of our country.visit my blog [[kadamburtemple.blogspot.com]]

Rajkumar said...

dear rudhran
have you seen belur and halebid in karnataka. worth seeing as i think mahabalipuram, thanjavur are more crude if you pardon the expression but belur and halebid are much finer. see it and then we will discuss
Rajkumar

Dr.Rudhran said...

raj
பேலூர் மற்றும் ஹொய்சாலா சிற்பங்கள் அற்புதம் தான். அறிவு மயங்கி, வித்தை முன் பரவசம் வரவழைப்பவைதான்...
ம்ஹாபலிபுரம் என் மனதுக்கு நெருக்கம். இது ஊனர்வு பூர்வமான ரசனை.

இதுவரை மொத்தமாக மஹாபலிபுரத்தை கணக்கிட முடியாத முறை சென்று படம் எடுத்ததை விட ஹலபேடில் 1000 படங்கள் இரண்டு நாட்களில் எடுத்திருக்கிறேன்.

Rajkumar said...

பெலூர் கோவிலில் இன்றும் வழிபாடு நடைபெருகிறது.கோவிலில் உள்ள சிற்பங்களைப்பற்றி நேரில் பேசுவோம்.
ராஜ்குமார்

Arvind Venkatraman said...

Hoysala sculptures have a lot of ornamentation. At most times the ornamentation is so high that it distorts the proportions of the sculptures. Pallava sculptures is just class personified. The proportions and simplistic rendering make it a class of its own. The only sculptures that are worth comparing in India with Pallavas are that of the Guptas and the works in Amaravathi and Nagarjunakonda.
As one can say Cholas mastered the broze, Pallavas mastered Sculpting.
The most important aspect of Pallava sculpture is its material, they consciously chose the hardest material to express themselves. In comparison, all of Hoysala art was done with the most softest stone available.
Both Hoysala and Pallava arts are to be treasured and appreciated, but I personally would tend to lean in favor of Pallavas.
Regards
Arvind

Bhushavali said...

Came here while searching for reviews on the book - Mahabalipuram (Unfinished Poetry on Stone). Its a great review you've written!!!
Happy to have found your blog. Am following you now!!!
Here is my simple humble layman's view, review of the book:
Mahabalipuram - Unfinished Poetry on Stone

Post a Comment