உண்மையிலேயே உங்களில் யாருடைய
மனமாவது புண்படும்வகையில் நான் தவறாகவோ தெரியாமலோ ஏதாவது எழுதியிருந்தால் மன்னிப்புக்
கேட்கத்தயார்; ஆனால் நான் தவறாக எழுதியதாகவும்
நினைக்கவில்லை, தெரியாத விஷயத்தையும் எழுதவில்லை.
எவ்வளவு எழுதினாலும், எப்படி எழுதினாலும் சிலருக்குச் சில விஷயங்கள்
புரிபடவில்லை போலிருக்கிறது. ஏதாவது காரணத்துக்காக எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசையில்
உளறுபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இவர்களின் இரைச்சலினால் நான் சொல்ல வந்த
மையக் கருத்திலிருந்து விவாதங்கள் திசைமாறுகின்றன.
உண்மையைத் தெரிந்து கொள்ள
விரும்புவோருக்காக-
1.அந்த (இப்போதைய) கத்தார்
நாட்டுக்காரன், இந்தியக் குடிமகனாக இருந்த
போது, இந்த மொக்கை அரசாங்கம் ரவுடி மதவெறியர்களின் கூச்சலுக்கு
கைபிசைந்து நின்றதுதான் முதல் தவறாக எனக்குப் பட்டது.
2.இந்த ரவுடி கும்பலும் பக்தி
புண்ணாக்கு என்றெல்லாம் துள்ளிக் குதிக்கவில்லை. நடந்தது மத அரசியல்.
3.நட்கர்ணி என்பவர் ஹூஸைன்
பற்றி எழுதிய 1996 புத்தகத்தில் இந்த சரஸ்வதி படம் வந்தது. இது வரையப் பட்ட ஆண்டு 1970.
இந்தப் படம் எல்லார் பார்வைக்குமான கண்காட்சியாகவோ, தெருவெல்லாம் ஒட்ட ஒரு போஸ்டராகவோ உருவாக்கப்படவில்லை. இது ஒரு பணக்கார ஓவிய
சேகரிப்பவரின் விருப்பத்திற்காக வரையப்பட்டது. இது ஒரு தனிமனிதனின் பிரத்யேக சேகரிப்பு.
1996 என்பது ரதயாத்திரை, மசூதி இடிப்பு எல்லாம் முடிந்து ஆட்சியும் பிடித்த காலம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் தேர்தலில் ஜெயிப்பது சிரமம் என்பதால், இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றும் பொய்பிரச்சாரத்திற்கு ஒரு முஸ்லிம் எதிரி தேவைப்படவே இவன் மீது பாய்ந்தார்கள்.
ஹூஸைன் அப்போதே மன்னிப்பு கேட்டதை இன்று இணையத்தில் இதைப்பற்றிப் பேசுபவர்கள் மறந்துவிட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்.
1996 என்பது ரதயாத்திரை, மசூதி இடிப்பு எல்லாம் முடிந்து ஆட்சியும் பிடித்த காலம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் தேர்தலில் ஜெயிப்பது சிரமம் என்பதால், இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றும் பொய்பிரச்சாரத்திற்கு ஒரு முஸ்லிம் எதிரி தேவைப்படவே இவன் மீது பாய்ந்தார்கள்.
ஹூஸைன் அப்போதே மன்னிப்பு கேட்டதை இன்று இணையத்தில் இதைப்பற்றிப் பேசுபவர்கள் மறந்துவிட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்.
4. 1996 அவன் மீது வழக்குகள்
போடப்பட்டன. 1998 சிவசேனாவும் பஜ்ரங்க்தள்
கூட்டமும் அவன் வீட்டைத்தாக்கின. அவன் படம் இருந்த ஒரு கண்காட்சியை நாசமாக்கின. அவர்கள்
அட்டகாசம் செய்த அந்த ஓவியக் கண்காட்சியில் எந்த சாமி படமும் வைக்கப்படவில்லை. 2004 டில்லி உயர்நீதிமன்றம் அவன் மீது போடப்பட்ட
வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. அவனும் நாட்டை விட்டே ஓடி விட்டான்.
அரசியல் காரணங்களுக்காக ஒரு
முஸ்லிம் இந்துக் கடவுளை அவமானப் படுத்தலாமா என்று அந்தக்கூட்டம் அன்று எழுப்பிய கேள்வி
இன்று தமிழ்ப் பதிவுலகில் மீண்டும் ஒலிக்கிறது. இப்போது சர்ச்சைக்குரிய அந்தப் படத்தைப்
பார்ப்போம்.
படத்தை நன்றாகப்பாருங்கள்
இதில் எது ஆபாசம்? மேலாடை இல்லாதது
ஆபாசம் என்று சொல்ல முடியாது. அவளை அப்படித்தான் சாஸ்திரப்படி சிற்பிகள் வடித்து வைத்திருக்கிறார்கள்.
அப்புறம் வேறு என்ன ஆபாசம்?
அவளது பெண்ணுறுப்பைக் கூட அவன் நாசூக்காக
வீணையை வைத்து மறைத்திருக்கும் போது, அதை நீக்கி எட்டிப்பார்க்கும்
கயமை நிறைந்த மனங்களில்தானே ஆபாசம்?
இதைவிட என்ன சரஸ்வதி?
இதில் எங்கே ஆபாசம்?
அவனது ஓவியங்கள் மீது எனக்குப்
பெரிய மரியாதை கிடையாது.அவன் செத்தால் ஒப்புக்குக்கூட அஞ்சலி என்றெல்லாம் எழுதமாட்டேன்.
அவன் வீம்புக்கு விளம்பரத்துக்கு நிறைய பண்ணியிருக்கிறான். ஆனால் இந்த விஷயத்தில் என்
நிலைப்பாடு இதுதான்-
(அ) இந்தப் படம் ஆபாசம் அல்ல.
(ஆ) இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்
ஒரு முஸ்லிம் எங்க சாமி கிட்ட விளையாடறான் எனும் விடலைத்தனமான வாதம். இது அறியாமையில் வருகிறது
இல்லை அரசியல் குயுக்தியாய் வெளிப்படுகிறது. எப்படியிருந்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியது.
(இ) இந்திய அரசு உள்ளூர் ரவுடிகளிடம்
இவ்வளவு பயப்பட்டால்,அமெரிக்காவின்
காலை என்ன நிழலைக் கூட நக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இது அவமானமாக இருக்கிறது, இதுதான் ஆபாசமாகவும் தெரிகிறது.
உண்மையிலேயே யாரையும் புண்படுத்துவது
என் நோக்கமல்ல.
உண்மையே உங்களைப் புண்படுத்தினால்?
40 comments:
////////உண்மையிலேயே உங்களில் யாருடைய மனமாவது புண்படும்வகையில் நான் தவறாகவோ தெரியாமலோ ஏதாவது எழுதியிருந்தால் மன்னிப்புக் கேட்கத்தயார்; ஆனால் நான் தவறாக எழுதியதாகவும் நினைக்கவில்லை, தெரியாத விஷயத்தையும் எழுதவில்லை. ////////
இந்த வரிகளுக்கு எந்த அவசியமும் இல்லை . சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க . வாழ்த்துக்கள்
அய்யா நான்தான் பர்ஸ்ட் !
//இந்தப் படம் ஆபாசம் அல்ல.//
உண்மைதாண் அய்யா.
ஒரு முஸ்லிம் இந்து கடவுளை மேன்மையாகதான் வரைந்துள்ளாரே தவிர ஆபாசமாக அல்ல என்று
தோன்றுகிறது எனக்கு.
இதுவரை நானும் தவறாக தான் நினைத்தேன் . உங்களின் ௪ பாயிண்டுகள் படித்த பின்பு புரிகிறது இதிலிருக்கும மத அரசியல் மற்றும் ஒரு குறிப்பிட்ட சாராரின் மோசமான செயல்..
வெல் செட் !!!
Sir, with due respects
In a previous post, you had showed the Gyana Saraswathi of gangaikonda cholapuram in a previous post - it is ` topless' in your words, but my mind doesn't even register that. You refer to silpa sastra - is this sensory veil due to the fact that proportions and the overall composition appeal to a different part of your brain or is it just to the 'hindu' culturing of the brain -. Comparing that this to this painting - where is the focus of this art work. My eyes seem drawn not to the points you have highlighted excellently in your post - as to the attributes of her, but more to depiction of a female art nude.
You question the people who are necessarily not cultured into the nuances of modern art and artistic expression, but the same commoner does stand and appreciate the chola masterpiece, within the same illiterate artistic accumen. There exists, in my humble opinion the difference. The sculptor / stapathi managed to bring the divinity in his art, while the painter chose to portray - maybe its just in his style - the sensual women in his minds and not a goddess. ... See More
anbudan
vijay
அற்புதமாக புரியவைதிர்கள் நன்றி.
சற்றும் மனம் தளராமல், புரிந்து கொள்ள முயலுங்கள் என்ற எண்ணத்தில் எழுதப் பட்டது, புரியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இவங்க எல்லாம் இன்னும் திருந்துவாங்க என்று இன்னும் நினைக்கிறீர்களா டாக்டர்? கஜுராஹோ கோவில் சிலைகளிலுள்ள 'கலை நயத்தை' என்னவென்று கூறப் போகிறார்கள்? நீங்கள் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்?
அவன் இவன் என்கிற ஏக வசனமெல்லாம் கூடாது - சரி ஜாக்ஸன் துரைசங்கி....
சும்மா நக்கலுக்காகத்தான். இதுக்கு பதில் சொல்லுறேன்னு சொல்லி ஒரு பதிவு தயவு செய்து போட்டு விடாதீர்கள்.
//முஸ்லிம் எங்க சாமி கிட்ட விளையாடறான் எனும் விடலைத்தனமான வாதம். இது அறியாமையில் வருகிறது இல்லை அரசியல் குயுக்தியாய் வெளிப்படுகிறது.//
அறியாமை எல்லாம் இல்ல டாக்டர் திமிர் ! வேறென்ன சொல்ல என்ன திமிர்னு சொல்லனுமா ?
//உண்மையே உங்களைப் புண்படுத்தினால்?//
கோயிலுக்கு போயி கும்புடு போடுவாங்க ... அப்பறம் சரியாப் பூடும் ! கிறுக்குப் பயலுக
vijay, you are right. this man has not been able to capture that divine magic in this drawing. my contention is though it may not be divine nor even beautiful, even if it may be termed outright a bad picture it is not obscene by any standards.
திரும்பத் திரும்ப இந்த விஷயத்தையே எழுதுவது குறித்து என் நண்பர்கள் சிலர் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
எழுதக் காரணம் மத வெறி வேவேறு வடிவங்களில் இந்த விஷயத்தை ஊதிக் கொண்டிருப்பதுதான். இதோ ஒரு சுட்டி-
http://truthdive.com/2010/03/13/shree-shree-ravi-shankar-mf-hussein/
இந்த ஜென்மம் ஒரு குரு! இது மெய்ப்பொருளையும் ஆனந்த வாழ்வையும் காட்டுமாம்!!
http://www.artoflivingmedia.org/2010/03/sri-sri-ravi-shankar-on-mf-husain.html
இந்த ஜென்மத்துக்கு நோபல் பரிசு பெறவும் ஆசை! நல்ல வேலை அதற்கு விலை அதிகம்!!
மதங்கள் குறித்த உங்கள் சிந்தனையில் மறு பரிசீலனை தேவை,
Admittedly, the artist is right to keep such drawings to himself or to his circle of his admirers. It is wrong on the part of the Hindu militant groups to drag him into controversy and attack him.
So, I agree with you, Dr.
Where I dont, is in your question whether the picture is obscene or not. According to you, it is not. But why to say that those who find the pic obscene show their mental perversion ? How can your opinion be common to all?
Take the pic itself. You say:
அவளது பெண்ணுறுப்பைக் கூட அவன் நாசூக்காக வீணையை வைத்து மறைத்திருக்கும் போது, அதை நீக்கி எட்டிப்பார்க்கும் கயமை நிறைந்த மனங்களில்தானே ஆபாசம்?
But have you noticed the way the legs are spread? Such a pose is definitely obscene, even in real life. No woman sits like that: if she does, it is taken as an invitation to...
Therefore, women are advised not to sit that way - spreading legs apart, or in sensual way like in the pic.
The pic is obscene.
I am not a Hindu; nor care to be one. I dont sympathise with anyone.
For me, the pic strikes and shocks me with its obscenity. It is crudely drawn, and no amount of Hindu symbols associated with Sarawati, that you point out as the artist have consciously drawn - can mitigate the offence the pic causes on onlookers, whoever they are.
Beauty lies in the eyes of the Beholder. So also, obscenity.
Please give freedom to people. Dont force your judgment on others.
//அறியாமை எல்லாம் இல்ல டாக்டர் திமிர் ! வேறென்ன சொல்ல என்ன திமிர்னு சொல்லனுமா ?//
வால்பையன் சொன்ன சூவன்னா கோனா ன்னு நினைக்கிறேன்.
//அவளது பெண்ணுறுப்பைக் கூட அவன் நாசூக்காக வீணையை வைத்து மறைத்திருக்கும் போது, அதை நீக்கி எட்டிப்பார்க்கும் கயமை நிறைந்த மனங்களில்தானே ஆபாசம்?//
Even a drawing of a woman, fully clothed, can be made to look obscene, by a clever artist. Covered or uncovered - matters not much!
இந்தப் படம் ஆபாசம் அல்ல. - இது தெரிந்து தான் இதில் பலர் அரசியல் செய்தனர், செய்கின்றனர். மற்ற பலர் (தொ{கு}ண்டரடியார்கள்) இன்னமும் கூச்சலிட்டுக் கொண்டுள்ளனர்.
இது நிச்சயம் உசேன் பற்றியதல்ல, உசேனின் மதமே இவர்களுக்கு ஆயுதமாகக் காட்சியளிப்பது, இவர்களில் கொட்டிக் கிடக்கும் வெறுப்பின் வெளிப்பாடன்றி வேறென்ன?
அடடா!
உங்களையே தேர்ல ஏத்திட்டாங்களா?
நீங்க நினைச்சதை -உங்களுக்கு சரின்னு பட்டதை எழுதியிருக்கீங்க - லூஸ்ல விடுங்க டாக்டர்! :)
பல இந்துமகாறிவுசமுத்திரங்களுக்குத் தெரியாதவற்றை (சரசுவதி ஒரு ஆறும், தாமரை ஞானம், மயில் மமதை) ஒரு முகம்மதியர் தெரிந்து வைத்திருப்பதற்கு, அவர் கொஞ்சமேனும் சரசுவதி என்ற கற்பிதத்தை அவர் ரசித்து தியானித்து திளைத்திருக்கக்கூடும்.
"கலைவடித்த கற்பனையே நிலையென்னும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக" - வள்ளலார். சரசுவதியை நேரிலே பார்த்ததுபோல் இழுத்துக்கட்டிப் போர்த்தி உட்காரவைத்து வரைந்தவனும் மாயா. மேலாக்கைப் போடாமல் வரைந்தவனும் மாயா. அதைக்கொண்டு செத்துச் செத்து உயிர்க்கொள்ளும் சண்டைகள் மட்டுமே நிஜம்!
தெளிவா விளக்கியிருக்கிங்க. புரியாத மாதிரி நடிக்கிறவங்களை என்ன செய்வது?
சரஸ்வதி தவிர சீதை அனுமனின் வாலில் அமர்ந்து செல்லும் ஓவியத்தை ஒட்டியும் பிரச்சினை எழுப்பப்பட்டது நினைவிருக்கிறது.
jo, well said. you hit the nail on the head.
rgds
vj
அற்றது பற்றெனில்
உற்றது வீடுயிர்,
செற்றது மன்னுறில்
அற்றிறை பற்றே.
பற்றிலன் ஈசனும்
முற்றவும் நின்றனன்
பற்றிலை யாயவன்
முற்றில் அடங்கே.
உங்களுக்கு விளக்கம் தேவைபடாதென நினைக்கிறேன் Dr.
//இந்த ஜென்மம் ஒரு குரு! இது மெய்ப்பொருளையும் ஆனந்த வாழ்வையும் காட்டுமாம்!!//
இவர் கருத்தை முன்பே படிக்கும் போதே மனதை நெருடியது. இவரை பற்றி பெரிய அபிப்பிராயம் இல்லாத போதும், தன் நிலை விளக்கம் பெற்ற மனிதராக இருக்க கூடுமோ என்ற ஒரு சிறிய ஐயம் இருந்தது. படித்த பிறகு தான் புரிந்தது, இவன் ஆன்மாவும் அழுகிறது. அதை அடைந்து அதையே பார்ப்பான், அதையே கேட்பான், அதையே சிந்திப்பான் என்ற நாரத பக்தி சூத்திரத்திற்கு உரை எழுதியவர் பார்வையிலேயே பழுதிருந்தால், அவரை படித்து கருத்து கூறும் மக்களை குறை சொல்லி பயனில்லை. பரமார்த்த குருவும் சீடர்களும். யார் கருத்தை, யார் வழிமொழிகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. கருத்து மோதல்கள், யுத்தமாக மாறி, வாழும் கலை எச்சக்கலை ஆகாமல் இருந்தால் சரிதான்.
jo, i dont want to bias you as you seem biased about me already.
just for your information such postures are not an expression of vulgarity but accepted norms of tantric spiritualism.
Hi Jo Amalan Rayen Fernando,
I consider the core issue is not about beauty or obscenity because it depends on the gestalt of the individuals. For a person considering it as a beauty, it may look greater like a mona lisa painting and for a person considering it as an obscene is one more to add, what he might have seen in a fantasy magazine. Same object will look differently for different people, so there is no point in the debate.
This particular case is a political manipulation in the name of religion. This country and the religion has seen such images in the past, it is nothing new. It is good that some people are bold enough to interfere and this is how humanity can grow.
Dear Dr,
I had mentioned in my previous post about your intolerance to views which are contrary to yours.
'இந்த ஜென்மம் ஒரு குரு! இது மெய்ப்பொருளையும் ஆனந்த வாழ்வையும் காட்டுமாம்!!
இந்த ஜென்மத்துக்கு நோபல் பரிசு பெறவும் ஆசை! நல்ல வேலை அதற்கு விலை அதிகம்!!
The two above statement of yours on Ravishankar again shows your scant respect to another fellow human.
Just like you have the freedom to have your views, Ravishankar also has a freedom to have his views. You need not accept his views but commenting on what he does otherwise in a derogoratory way and referring to him as "இது" is not justified.
Note that I am not a follower of Ravishankar nor do I believe in following anybody. But I believe is respecting fellow beings.
Let us discuss issues and not get personal.
madhavan, i have no respect for raqvi jaggi or ramdev who are yet to get fully exposed. i cannot accord them the respect i would give to you.
there is no issue in fraud and debauchery; each and every person has to be dealt in this way.
i know i am harsh.
nails are never driven in with soft kisses.
Dr.Rudhran,
Coming to the issue, though I have a different view on the motive behind Hussain's controversial paintings, I would fully agree with you on the politics played over the issue.
Our shameless politicians play a ruthless brand of divisive politics. Their utterly selfish intentions in anything what they do with total disregard to public well being have divided our country and made our country poorer in all aspects.I am not exaggerating here - i feel helpless when we are looted in front our own eyes. Our politicians are shameless, spineless, deceitful, narrow minded and selfish, visionless, corrupt, arrogant...i can add any number of negative adjectives here.
I really wonder when we will see objective and goal oriented governance ?
Your logic is ok,but there must be a manures aboute othere.good to avoide AVAN , AVANAI, IVANAI its is not highly cultured words - even If he your enymey
Jo, i thought this would be the issue where we both might have the same opinion. But Alas, Not so. What is so obscene about the picture ?
Dr
No, I am not biased about or against you. Perhaps based on my feedbacks on your other posts, you may have been led to that conclusion.
Had I been biased, I would not have supported you in your remarks against the talibanised Hindu groups, at the outset of my feedback here.
Thanks
அன்புள்ள ருத்ரன்,
நல்ல பதிவு. ஹுசேன் பற்றியது எழுதியது போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இப்போது இந்த சுட்டியை படியுங்கள் என்றாவது எழுதி ஆக வேண்டும்.
உங்கள் படம் பற்றி இன்னும் ஒரு குரல் கூட வரவில்லை, கவனித்தீர்களா?
இந்த படம் சரி. ஆனால் சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் துர்கை படத்துக்கு (படம் நினைவு வரவில்லை என்றால் இங்கே பார்க்கவும் - http://koottanchoru.wordpress.com/2009/11/28/எம்-எஃப்-ஹுசேனின்-ஓவியங்/) இந்த மாதிரி விளக்கம் தர முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.
Dear Rudran,
What you say is only partially correct. The art concerned was an old piece and when digital world made this into a big issue Hindu zealots made it an issue. But it was never made an election issue - as far as I know. However if you are going to analyse this as a social psychologist then you should have seen this seeking of bans as a power-politics in which the more effectively you can get a ban then more powerful your group is perceived. Nonsensical. Yes. But a compounded complex also due to p-sec double-speech. As i pointed out earlier (which you twisted with an ingenuity which i never expected from you) if "Virgin" Mary depicted a bit with erotic-humor can make you feel uncomfortable - what about the average Hindu youth of MP or UP? And when Jyothi Basu could get a ban on Taurus in International film festival with not a single murmur from intellectuals, with Church able to effect bans on Da Vinci Code state after state (and years before that they have secured so silently with no media fanfare a ban on Jesus Christ Super Star)and India being first of the countries to ban Salman Rushdie's Satanic Verses and Kushwant Singh was the one to recommend the ban, Pray tell me whom should we blame for this perverted socio-psychological pathology of securing bans to boost identity-egos?
s. aravindan neelakandan
ஹுசேன் குற்றவாளி என்றால் பகவான் ராமனை குதிரைக்கு பிறக்க வைத்த வால்மீகியையும் கம்பனையும் என்ன செய்யலாம்? இந்து புராணங்களே பெரிய புளூ பிலிம் மாதிரி அதன் தயாரிப்பாளர்களான இந்து மத வெறியர்களுக்கு ஏன் கோபம் வந்திருக்கும்? ஒரு வேளை காப்பிரைட்டுக்கு பணம் தரலைன்னு கோவம் வந்திருக்குமோ என்னவோ?
கலகம்
kalagam.wordpress.com
இந்தப்படத்தில் ஆபாசம் இல்லை.
ஏனெனில்
இரு கொங்கை கொடும்பகை
வென்றனம் என்று குழைந்து குழைந்தாட
என இந்துக்கள் பாடிய அபிராமி பாடலில்
ஆபாசம் இல்லை.
இடம் கொண்ட கொங்கை
.......இறுகி
.......படம் கொண்ட.......
அல்குல்......
அது இது என
அம்பாளைப் பற்றிப்
பாடிய இந்துக்கள்
ஆபாசமாகப் பாடவில்லை.
எனவே இந்தப்படத்தில்
துளியும் ஆபாசம் இல்லை.
எனது வலைப்பூவில்
துறவிகளின் காமம்
எனும் பதிவை நீங்கள்
படித்தால் மகிழ்வேன்
கலை புரிந்தவனுக்கே கடவுள் உண்டு. கலை புரியாதவனுக்கு கடவுளும் இல்லை. நடப்பது அனைத்தும் அரசியல். Sivan
Post a Comment