நான் வேறு நான், தேடினால் தொலைந்து போகிறேன்...
என்று பத்தொன்பது வயதில் எழுதிய நான் இன்று,
நான் வேறு நான் ஆகி விட்டதைத் தெரிந்து கொண்டதால் வெட்குகிறேன்.
என்று பத்தொன்பது வயதில் எழுதிய நான் இன்று,
நான் வேறு நான் ஆகி விட்டதைத் தெரிந்து கொண்டதால் வெட்குகிறேன்.
வறுமையில் இருந்த
வேகம், வசதி கூடுமுன் இருந்த
வீரம், சௌகரியத்தில் சோம்பலாகிவிட்டது.
புலம்புவதற்கு இரவின் தனியான தலையணை போல கணினியின் வெளிப்பாட்டு வசதி...
தெரியாதவர்களும் சில நேரம் எழுதியதைப் புரியாதவர்களும்
சொறிந்து வளர்த்த ’ஸோஷ்யல்’ அரிப்பில் இன்னும் ஆக்ரோஷ அவதாரம் தொடர்கிறேன்.
இங்கே புலம்பி
போர்க்குரல் எழுப்பி கூடங்குளம் மூடப்படுமா இலங்கையை மன்+ஸோ கூட்டம் விட்டுக்கொடுக்குமா?
ஆனாலும் நானும் இங்கேதான் புலம்பவும் போர்க்குரல்களுக்கு ஆதரவும் தர முடிகிறது..
கையாலாகாது கை பிசைவது போல.
வெட்கத்தை சோகம் மறைப்பது போல..
நாடகமாடுவதை நடிகனே ரசிப்பது போல...