Tuesday, September 6, 2016

விளம்பரத்தால் உயர்ந்த பிம்பம்

ஜக்கி பற்றி.. ம்ருத்திகா எனும் தோழி சுட்டியும் தந்த போதும் பார்க்கவில்லை. பின் பலரும் சொன்னார்கள்..
ஆகவே அந்த தொலைகாட்சி ஒளிபரப்பைப்பார்த்தேன்.
ஹா..
முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.- பாண்டே சொன்னது  போல் நான் ரஜ்னீஷ்/ஓஷோவை இந்த போலி imitate செய்வதாய்ச் சொல்லவில்லை, இது அவரிடமிருந்து திருடி பேசுவதாய்த் தான் சொன்னேன்.
IMITATION CAN BE PARDONED AS A POOR ART, BUT PLAGIARISM IS DEFINITE THEFT- CONDEMNABLE AND PUNISHABLE.
அப்புறம், இதை நான் சந்தித்த கதை!
1990களின் மையத்தில்  நான் ஓரளவு தொலைகாட்சி வழியாய் பிரபலம். அப்போதெல்லாம் என் தினசரி மதிய உணவு சென்னை பாண்டி பஜார் பாலாஜி பவனில் தான். தொடர்வாடிக்கையாளர் எனும் முறையில் உரிமையாளரிடம் புன்னகைப் பழக்கம். ஒரு சாப்பிடும் நேரம் அவர் வந்து ஒரு மகான், யோகி..என்றெல்லாம் ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அப்போதெல்லாம் என்னிடமும் ஒரு குரு தேடல் இருந்ததும் கடன் தொல்லையும் இருந்தது. எதனால் என்று இன்று நிச்சயமாய் சொல்ல முடியவில்லை, போய்த்தான் பார்ப்போமே என முடிவெடுத்தேன். முதல்லெ நாரத கான சபா வாங்க.. ஸ்பெஷல் ப்ரோக்ராம், ஸீட் புக் பண்ணி வெக்கறேன்என்றவர் பேச்சுக்கிணங்கி போனேன். well designed opening..packing was glittering more than the content..உமாவிடம் இது ரொம்ப உடான்ஸா இருக்கே என்றதற்கு..dont be a cynic என்றாள்.
நாகரிகம் கருதி  (சமயங்களில் நாகரிகம் என்பது பரிதாபத்தின் இன்னொரு பெயர்). கடைசிவரை இருந்து வெளிவந்து கார் தேடும் போது அந்த உணவகத்தின் இளைஞன்  ‘ சார் வாங்க இண்ட்ரொட்யூஸ் பண்றேன்’ எனவும், அந்த மனிதனை பார்த்தேன் கை குலுக்கினேன். பேசாமல் வந்து விட்டேன்.
அடுத்த சில நாட்களின் ஒன்றில், அந்த இளைஞன்  அவரை நீங்க பாக்கணும் பேசனும் என்ற போதும் என் இயல்பான MAN WATCHING CURIOSITY யுடன் தான் போனேன், உமாவுடன்.
சென்னை லாய்ட்ஸ் சாலையில் ஒரு ஸ்பெஷல் எஃபெட்ஸ் ஸ்டுடியோ, மாடியில் உமாவும் நானும் அந்த இளைஞனும் இருக்க ஒரு dramatic delayed entry.
அறிமுகம் செய்யப்பட்டும் நான் சும்மா இருக்க தானே பேசிய அந்த alleged மகான்.. தான் பிறந்து வளர்ந்து ஒரு கட்டிடம் கட்டுமிடம் வேலை செய்த்து..பிடிக்காமல் பைக்கில் ஊரெல்லாம் சுற்றி ஒரு மலையிடம் படுத்து யோசித்தது  எல்லாமும் சொல்லும் வரை எனக்குப் பிடித்திருந்த்து..தேடல் வலி எனக்கும் தெரியுமென்பதால்.
அப்புறம் தான்..... திடேரென தன் கழுத்திலிருந்த் ருத்ராட்ச மாலை கழற்றி என் கையில் கொடுத்து கண் மூடச்சொன்னபோது.. ‘சரி பார்ப்போமே’ என்றே ஒத்துழைத்தேன்.
சில நிமிடங்களில் what happened எனும் கேள்விக்கு என் சத்தியமான விடையான nothing என்றவுடன் ..You are not peaceful meditate more என அந்த “திரு” வாய் சொன்னபோதும்.. சும்மாயிருந்தேன். அதெல்லாம் வயதுக்கெல்லாம் நான் மரியாதை தந்திருந்த காலம்.
Why don’t you come for the seven day program..எனும் அழைப்பிற்கு மையமாய் சிரித்து விட்டு வெளிவந்தால், கூடவே அந்த இளைஞன்..”ட்ரை பண்ணிப் பாருங்க” என, ‘ உனக்கேம்ப்பா என் ஆத்மா உயரணும்னு ஆசை. என்றதும் அவன் சொன்ன பதில்== சார் நீங்க இதை experience பண்ணிட்டு உங்க ஷோவுல சொன்னா நிறைய பேருக்கு பலன் இருக்குமில்லே..
பாண்டே நிகழ்ச்சியில் என்னைத் தெரியாது என்று சொன்னது ஒருவேளை மறதியாகவும் இருக்கலாம்.. நான் கூட நிறைய போலிகளைப் பார்த்திருக்கிறேன் அதில் பலர் பெயர் நினைவில் இல்லை. இவன் போல் பெரிய அளவில் பொய்மை பரப்புவோர்தான் நினைவில் உள்ளது- கோபத்துடன்,

திருடியே பேசுபவன் மட்டுமல்ல, தீமையானவன் என்பதாலேயே இவன் மீது என் கோபம்.
https://www.youtube.com/watch?v=V3SHyl8piQc&feature=share

Monday, July 4, 2016

என் மருத்துவமனையும் ஆரம்பித்த நாள்...

ஜூலை நான்கு என் வாழ்வின் முக்கியமான நாள்.
அன்றுதான் என் மனநல மருத்துவமனை ஆரம்பித்தேன். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு அரசுசாரா நிறுவனத்தில் பணியாற்றி அங்கே தொடர பிடிக்காமல், நானே சொந்தமாய் மருத்துவ மனையும் சேவை மையமும் தொடங்குவதென்று முடிவெடுத்தபோது என் கையிருப்பு ஏழாயிரம் ரூபாய். பூர்விக சொத்து சம்பாதித்த சொத்து எதுவும் கிடையாது. படம் வரைந்து தந்த்தால் கிடைத்த ஒரு டிவியெஸ்50 மட்டுமே சொந்தம். க்ளினிக்கிலும் பெரிய கூட்டம் கிடையாது....
வங்கிவங்கியாய் ஏறி தெரிந்து கொண்டது கடன் வாங்கும் வழிமுறை பற்றிய முழுமையான புரிதல். 20% என்னிடம் இருந்தால் மீதி கடனாய் கிடைக்கும்..அந்த 20%?
இருந்த இடத்தின் அருகிலேயே ஒரு கட்டிடம் காலியாக இருந்தது. அது எனக்குப் பரிச்சயமான கட்டிடம். முன்பு அங்கே ஔரங்கசீப் நாடகம் போட சிம்மாசனம், முகலாய உடைகள் வாடகைக்கு எடுக்க போயிருக்கிறேன். அவர்கள் வாடகை 6000 முன்பணம் 60,000 கேட்டனர். ஆயிரம் ரூபாய் கொடுத்து, கண்டிப்பாக எடுத்துக் கொள்கிறேன், மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள், எடுக்கும் போது இந்த மூன்று மாத வாடகையும் சேர்த்து தந்துவிடுகிறேன், என்றதற்கு பரவாயில்லை காத்திருக்கிறோம் என்றார்கள்.
தாட்கோவில் நிதியுதவி கிடைக்கும் என கேள்விப்பட்டு, ஒரு வரைதிட்டம் தயாரித்து, ஒப்புதல் வாங்கி, இந்தியன் வங்கிக்குப் போனால், என் திட்டம் சாத்தியமா என சந்தேகித்தார்கள். அந்நேரம் நண்பர் அனந்தபத்மநாபன் கோபாலகிருஷ்ணனைப் பார் என்றார், அவர் தொலைகாட்சியில் பணியாற்றியதால் ஒரு நிகழ்ச்சி கவர் பண்றேன் அவர் வருவார் அறிமுகம் செய்கிறேன் அப்புறம் உன் பாடு என்றார். அந்நிகழ்ச்சியில் மனநலமருத்துவமனை பற்றிச் சொல்லி கடன் கேட்டேன், மறுநாள் அலுவலகம் வரச்சொல்லி, என் வரைதிட்டம் பார்வையிட்டு, வங்கிக்கிளைக்கு கடிதமும் தந்தார். அதே நேரம் நண்பர் வைத்தியநாதன் என் நிதிநிலைமை நன்கு தெரிந்தும் உத்தரவாத கையெழுத்திட வந்ததும், ஒருமாதத்தில் கட்டிடத்தை தயார் செய்து வேண்டிய எல்லாமும் வாங்கி ஆரம்பித்த நாள்_ 1990 ஜூலை நான்கு!
எப்படியோ ஒரு மாதத்திலேயே புற+உள் நோயாளிகள் நிறைய வந்தனர்.காசு இல்லாதவர்களும் அதிகம் வந்தார்கள். சலுகை தர ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இலவசமாகவே பலருக்கும் சிகிச்சை தர வேண்டி வந்தது. ஏழைகளோடு சமமாய் அமர்ந்து வரிசையில் காத்திருக்க வசதியானவர்கள் விரும்பவில்லை... வருமானம் குறைந்தது. தவணைகள் தவறின, வட்டியும் கடனும் கூட ஆரம்பித்த்து...
அதே நேரம் தொலைகாட்சியில் வாரந்தோறும் மனநலம் பற்றி பேசி மக்களிடையே பரிச்சயமானதாலும், என் நூல்கள் நன்கு விற்பனையாகிக்கொண்டிருந்ததாலும், பணம் வைத்துக் கொண்டே தராமல் இருக்கிறேன் என்று வங்கி நினைத்து நெருக்கடி தர ஆரம்பித்ததுஇரண்டிலும் நான் சம்பாதிக்கவில்லை என்று யாரும் நம்பமாட்டார்கள்.
ஏழாம் ஆண்டு இனி இப்படியே நடத்த முடியாது என்று புரிந்தது, வேறென்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.
அப்போதுதான் Y2K அமெரிக்காவில் சம்பாதிக்கும் வாய்ப்பை அள்ளி வழங்க ஆரம்பித்த கட்டம். உமா அமெரிக்கா சென்று சம்பாதித்து கடன் அடைக்கலாம் என முடிவு செய்தோம். ஒரு வருடத்தில் கடன் முடிந்தது. மருத்தவமனையும் மூடப்பட்டது.
அதன்பின் இன்னுமொரு வருடம் அவள் சம்பாதித்து, இங்கு வந்தும் சம்பாதித்து வாங்கிய வீட்டில்தான் இப்போது சிகிச்சைக்காக வருபவர்களை பார்க்கிறேன்.
ஜூலை நான்கு என் வாழ்வின் முக்கியமான நாள்அன்றுதான் என் உமா என் மருத்துவமனைக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் நுழைந்த நாள்.


Thursday, May 19, 2016

2016 மே மாத எரிச்சல்

டிசம்பர் 2015, சென்னை தத்தளித்தது. வயது,வசதி பேதமில்லாமல் எல்லார்க்கும் அவதி. அரசு ஏரி திறந்துவிட்டது அதனால் பலர் வாழ்நாள் சேமிப்புகளும் பொக்கிஷங்களும் நீரோடொழிந்தன. இணைய இணைப்பிருந்தோர் பொங்கினர்.  ஆட்சியை ஆள்பவரை வசை பாடினர்.. அவர்களை ஒழிப்போம் என சூளுரைத்தனர்.

வெள்ளம் வடிந்த ஒரு மாதம் கழித்து நான் பேசிய பலதரப்பட்டவர் சொன்னது, ஏரி திறந்தது தப்பு தான் ... முதல் நாள் தான் அரசு செயல்படவில்லை ..அப்புறம் சிறப்பாக எல்லாவற்றையும் சமாளித்தார்கள்>. எனும் தொனியிலேயே இருந்தது.
ஆட்சியின் மீது கோபம் யாருக்கும் - நான் பார்த்த வெகுஜனங்கள் யாருக்கும் பெரிதாய் இல்லை.

மே 2016, ஆட்சி மாறும் என்றார்கள், மாறவில்லை. ஏன்?
முதல்வர் சிறையிலிருந்தால் எதுவும் நடக்காது எனும் ஸ்தம்பித்த ஆட்சி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல்வர் மீண்டும் பதவியேற்புமதுவிலக்கு கோரியவர் சிறையடைப்பு, எதிலும் ஒரு மெத்தனம் என பலவகையிலும் மக்கள் வெறுப்படைய வைக்கக்கூடிய செயல்பாடுகள். இவை யாவும் மீறி தேர்தலில் அதே கட்சி அதே முதல்வர். இது எப்படி நடந்தது?
மக்களுக்கு ஆட்சியின் மீது மிகப்பெரிய அதிருப்தி இல்லை எனும் போது, ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி விழிப்புணர்வேற்றி மாற்றம் உருவாக்க உந்துவதே எதிர்கட்சியினர் கடமை. ஆனால்,
 எவ்வித கணக்கில் எவ்வித லாபம் எனும் ஒரே நோக்கில் கூட்டணி அமைக்கவே எதிர்கட்சிகள் முனைந்தன. சதவிகித வாக்கு எனும் மாய தோற்றத்தின் பின்னேயே அலைந்தன. ஊடக பிம்பங்களையே நம்பின.
திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது ஒரு தெருவோர டீக்கடையில் நின்றாலேயே புரிந்திருக்கும். அவர்கள் தம் மீது படர்ந்திருக்கும் அதிருப்தியை அறிந்து களையாமல், அடுத்த கட்சியில் யார் வந்தால் லாபம், யார் போனால் லாபம் என்றே இருந்தார்கள். பழம் கனியும் நழுவும் என்றெல்லாம் பேசி இன்னமும் தம்மையே கேவலப்படுத்தி ஏற்கனவே மக்கள் மத்தியில் தம் மீதிருந்த நம்பிக்கையின்மையை வலுவூட்டினார்கள். காங்கிரஸ் எப்போதோ செல்லா காசாகியிருந்தும் அதனுடன் கூட்டு வைத்து சில வெல்லக்கூடிய தொகுதிகளையும் தாரை வார்த்தார்கள். ஸ்டாலின் முதல்வர் என அறிவித்திருந்தாலும் ஏதோ சில கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும்.  எம்ஜியார் மறைந்தபின் கலைஞருக்காக யாரும் திமுகவை வெற்றி பெற வைக்கவில்லை, முந்தைய ஆட்சி வேண்டாம் என்றே அவர் ஜெயித்தார். தவிர அவரது குடும்பம் தான் திமுக எனும் எண்ணம் சாமான்யனுக்கு ஆழப்பதிந்துவிட்ட்து.  இந்நிலையில் தேறாத திமுக, உருப்படாத அதிமுக எனும் நிலையில் சலிப்படைந்த மக்களிடம் மாற்றம் குறித்து நிச்சயமாய் ஒரு விருப்பம் இருந்த்து.

அந்த மாற்றம் நான் என அன்புமணி வந்தது வரவேற்பை விடவும் வேடிக்கை நிகழ்வாகவே ஆனது. ஜாதி மீதான அவர்களது தீவிரம் எவ்வித தீவிர ஒப்பனையாலும் மறைக்கமுடியாத ஒன்று. ஜாதி பற்றி பார்க்க வேண்டாம் அன்புமணியை மட்டும் பார்ப்போம் என்றால், மருத்துவக்கல்லூரி ஊழல் முதல் மாமல்லபுரம் கோவில் மீதாடிய அநாகரிகம் யாவும் மக்கள் மறந்து விடவில்லை.
பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் இங்கே அர்த்தமே இல்லை. ஆகவே விஜயகாந்த்! இதுதான் ஜெ ஜெயிக்க முக்கிய காரணம்.
மநகூ எனும் சாத்தியம் விஜயகாந்த் வாசன் எனும் காரணங்களாலேயே வீணாய்ப்போனது. இவ்விரு கட்சியுமே பேரங்கள் சரியாய் படியாததாலேயே இக்கூட்டணிக்கு வந்தன. திருமதி விஜயகாந்த் பேசியதெல்லாம், கைதட்டல் பெற்றிருக்கும், வடிவேலுவுக்கு வரும் கைதட்டல் போல. ஆனால் அறிவு பூர்வமாய் மக்களை அணுகுவார்கள் என மக்களே நினைத்த கம்யுனிஸ்ட்களும் இந்த கட் அவுட் நிஜமான ஆசாமி என நம்பி பின் சென்று வாய் பொத்தி நின்ற நேரமே நிராகரிக்கப்பட்டார்கள், சில தோழர்களாலேயே. வைகோ எனும் பொய்யின் வாய்ஜாலம் தானே நிற்க முடியாது கழன்றவுடன், ப்ரேமலதா சதீஷ் என்போரெல்லாம் ஆடிய உடன் மநகூ வெறும் ஒரு ஹீரோவோடு நின்று அடிவாங்கும் காமெடியனானது.
திருமாவுக்கென ஒரு வாக்கு வங்கி நிஜம், அதேபோல்தான் கம்யுனிஸ்ட்களுக்கும். இவர்களின் கூட்டுத்தொகை வெல்லுமளவு இல்லை என்றாலும் இம்முறை வாக்கு கூடியிருக்கும். அவசரம் ஆத்திரம் பேராசையோடு விஜய்காந்த் முதல்வர் என அறிவித்தபோதே இவ்விருவரும் இருப்பதையும் இழப்பர் என எனக்குத் தோன்றியது. வாசுகி நின்றிருந்தால் கூட நான் வாக்களித்திருக்க மாட்டேன் எனும் அளவு இவர்கள் தம் மரியாதை இழந்த நிலை உருவாகியது.
இந்நிலையில் அதிமுக அல்லது திமுக எனும் போது, ஏன் திமுக எனும் கேள்வி தான் முன்னின்றது, அதுவே ஏன் அதிமுக வேண்டாம் என்பதை உள்ளடக்கியது. தாங்கள் மேல் என சொல்லும் திராணி யாருக்கும் இல்லாத்தால், இப்படியே இருக்கட்டுமே என மக்கள் நினைத்துவிட்டனர்.
வெள்ளம்  வந்து அதிமுகவை அழிக்கவில்லை. மக்கள் மனநிலை புரியா எதிர்கட்சிகள்  தான் அதிமுகவை ஜெயிக்க விட்டார்கள்.
காசு கொடுக்கப்பட்ட்து என என்னிடமே பலர் சொன்னாலும், காசு அந்த 90+ தொகுதிகளுக்கும் தானே போயிருக்கும்.
என் நோக்கில் இத்தேர்தல் முடிவு அதிமுகவை சகித்துக்கொள்வது திமுகவை நம்புவதை விட மேல் என மக்கள் எடுத்த முடிவாய்த் தெரிகிறது