Tuesday, March 23, 2010

மேரிக்கு மரியாதையுடன்


இது மதம் சம்பந்தப்பட்ட மேரி அல்ல, மருத்துவ மேரி!
காதலித்த வில்லியம் ஷார்லெப் என்பவனை மணந்து அவனுடன் இந்தியாவிற்கு மேரி வந்த ஆண்டு 1865. கணவனைப்போலவே சட்டத்தில் நாட்டமிருந்தபோதும், இந்தியாவில் மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. மருத்துவம் படிக்க முடிவெடுத்தாள். இதில் முக்கியமான விஷயம், அப்போது ஆங்கிலம் பேசும் உலகில் பெண் மருத்துவர்கள் யாருமே இல்லை என்பதுதான்!
அவளது முடிவிற்கு பலத்த எதிர்ப்பு இருந்தாலும், இங்கிலாந்தில் கூட பெண்களை அனுமதிக்காத காலத்தில், பெண்களையும் அனுமதிக்கலாம் என்று முடிவெடுத்தது, சென்னை மருத்துவக் கல்லூரி! மேரியுடன் சேர்த்து மூன்று பெண்கள் 1878 ஆண்டில் மருத்துவர்களாக சென்னை மருத்துவக்கல்லூரியிலிருந்து வெளிவந்தார்கள்.
இந்தக் கல்வித் தகுதியுடன் மேரி லண்டனிலும் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்றார். இந்தியப் பெண்களுக்கு மருத்துவ வசதி வேண்டும் என்று அரசாங்கத்திடம் வாதாடி, மீண்டும் சென்னை வந்து 1883 ஆண்டில் சென்னையில் கோஷா மருத்துவமனை நிறுவினார். இப்போது அது கஸ்தூரிபாய் மருத்துவமனை என்று பெயர் மாற்றப்பட்டாலும் மக்களால் இன்றளவும் கோஷா ஆஸ்பத்ரி என்றே அழைக்கப்படுகிறது.
அவளை ஆங்கில உலகின் முதல் மருத்துவராக்கிய அந்தச் சென்னை மருத்துவக்கல்லூரிக்கு இது 175வது ஆண்டு!
அதே கல்லூரியில்தான் 1912 ஆண்டு முத்துலக்ஷ்மி ரெட்டி மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்றானார்.
இந்தக் கல்லூரியின் மாணவன் என்பதே எனக்குப் பெருமை.
இந்துவான முத்துலக்ஷ்மி பற்றி முக்கியமாகக் குறிப்பிடாமல் கிருத்துவரான மேரியை, (சரித்திரப்படி சத்தியம் என்றாலும்)  எதற்காக முதல் விஷயமாகவும் பெருமையாகவும் பார்க்கிறாய் என்று அரிப்புடன் கேட்கப்படப் போகும் கேள்விகளை எல்லாரும் ரசிக்கலாம்! வெறி ஏறிவிட்டால் வரலாறாவது வெங்காயமாவது?
இன்று மாபெரும் பெண் நிபுணர்கள் மருத்துவத்துறையில் சாதிக்க அன்று முதல் அடி எடுத்த அந்த மகத்தான பெண் டாக்டர் மேரி ஷார்லெப் அவர்களுக்கு,
மரியாதையுடன் நமஸ்காரம்!  வணக்கம் என்று சொல்வதைவிடவும் நம்ஸ்காரம் என்று சொன்னால்தான் முழுதாய் கீழே விழுந்து வணங்குகிறமாதிரி இருக்கும்.

18 comments:

Rajan said...

//வணக்கம் என்று சொல்வதைவிடவும் நம்ஸ்காரம் என்று சொன்னால்தான் முழுதாய் கீழே விழுந்து வணங்குகிறமாதிரி இருக்கும்.//

நல்லா விழுந்தாதானே அடியோடு வாரி விட ஏதுவாய் இருக்கும் !

Rajan said...

// வெறி ஏறிவிட்டால் வரலாறாவது வெங்காயமாவது? //

அவா வெங்காயம் பூண்டெல்லாம் சேத்துக்க மாட்டா ! கொஞ்சம் ஆச்சாரம்

Rajan said...

//இந்துவான முத்துலக்ஷ்மி பற்றி முக்கியமாகக் குறிப்பிடாமல் கிருத்துவரான மேரியை, (சரித்திரப்படி சத்தியம் என்றாலும்) எதற்காக முதல் விஷயமாகவும் பெருமையாகவும் பார்க்கிறாய் என்று அரிப்புடன் கேட்கப்படப் போகும் கேள்விகளை எல்லாரும் ரசிக்கலாம்!//

ஹா ஹா ஹா ! வரட்டும் டாக்டர் ரசிக்கலாம் !

Murali said...

really very good to know that our chennai medical college has this feather in its crown.

thanks for sharing..

by the way am a regular reader of your's and mrs uma rudhran's blog..
however today when i tried to read umarudhran's blog, it didnt allow me to do so and asking for mail verification.. i would like to have access to umarudhran's blog too.. this kind of blocking will make reader's like us to be disappointed..

just posting it here since i felt uma rudhran can see this and do the needful..

Murali said...

//இன்று மாபெரும் பெண் நிபுணர்கள் மருத்துவத்துறையில் சாதிக்க அன்று முதல் அடி எடுத்த அந்த மகத்தான பெண் டாக்டர் மேரி ஷார்லெப் அவர்களுக்கு, மரியாதையுடன் நமஸ்காரம்//

யார் தொடங்குவது என்பதில்தான் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.

பலர் தொடக்கத்திற்காக தானே காத்திருக்கிறோம். கோடு போட்டா ரோடு போட்ருவோம், புள்ளி வச்சா கோலம் போட்ருவோம்.

Uma said...

Apologies to other readers who are not related to this conversation!
Murali,
It is indeed flattering to know that you are reading what I write. Though I started my blogsite for personal reasons, I found myself getting pushed/pulled into Rudhran's topics and I thought I would rather stay away and leave him to do his job :)
I continue to maintain my blogger id so that I can comment on some authours I have become accustomed to read other than Rudhran.
If I indeed write something that I is worthy of readership I will request Rudhran to make you all know and get some free publicity ;-)!
May be I should write about being a Psychiatrist's Wife - I see a lot of books lying around that say Pilot's wife, Time Traveller's Wife and even Terrorist's Wife??
Regards,
Uma Rudhran

Chitra said...

//இன்று மாபெரும் பெண் நிபுணர்கள் மருத்துவத்துறையில் சாதிக்க அன்று முதல் அடி எடுத்த அந்த மகத்தான பெண் டாக்டர் மேரி ஷார்லெப் அவர்களுக்கு, மரியாதையுடன் நமஸ்காரம்//

........ மரியாதையுடன் நமஸ்காரம்!

//அவளது முடிவிற்கு பலத்த எதிர்ப்பு இருந்தாலும், இங்கிலாந்தில் கூட பெண்களை அனுமதிக்காத காலத்தில், பெண்களையும் அனுமதிக்கலாம் என்று முடிவெடுத்தது, சென்னை மருத்துவக் கல்லூரி! மேரியுடன் சேர்த்து மூன்று பெண்கள் 1878 ஆண்டில் மருத்துவர்களாக சென்னை மருத்துவக்கல்லூரியிலிருந்து வெளிவந்தார்கள். //


........சென்னை மருத்துவ கல்லூரிக்கும் மரியாதையுடன் நமஸ்காரம்!

நம்பி.பா. said...

பெண் டாக்டர் மேரி ஷார்லெப்-அவர்களுக்கும்,முத்துலக்ஷ்மி ரெட்டி அவர்களுக்கும் முழு வணக்கங்கள்!

மேரி ஷார்லெப் பற்றி அறியத்தந்தமைக்கு உங்களுக்கும் வணக்கம்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பதிவுக்கு நன்றி..

மேரிக்கும், முத்துலட்சுமிக்கும் மரியாதையுடன் நமஸ்காரங்கள்.. அந்தக் காலத்தில் இதையெல்லாம் சாதிக்க எவ்வளவோ துணிவிருந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது!

சென்னை மருத்துவக் கல்லூரிக்கும் அதன் திறம்மிகு மாணாக்கர்களுக்கும் :) வாழ்த்துக்கள்!

NO said...

அன்பான நண்பர் மருத்துவர் திரு ருத்திரன்,

எல்லாம் சரிதான் சார், அது என்னது சார் "இந்துவான முத்து லக்ச்மியை பற்றி......"????

இங்க யாரு சார், மற்ற மதத்தை சார்ந்த மக்களை போற்றினால் குற்றம் கண்டு பிடிப்பவர்கள்? அந்த மாதிரி இல்லாதுபோனாலும், இருப்பதாக ஒரு மாயையை, உங்கள் கூற்றுகளுக்கு ஒரு moral equivalent ஐ கண்டுபிடித்து, உங்களின் போலி முற்போக்கு முழகத்திர்க்கு வலிமை சேர்ப்பதுதான் சிவப்பு சர்வாதிகாரிகள் மற்றும்
முற்போக்கு குத்தகைக்காரர்களின் வாழ்வியல் என்பதை once more நிரூபித்து விட்டீர்கள்!

அதான் என்னடா முற்போக்கு முன்னணியின் தற்போதைய சுக்கிராச்சாரியார் யாரையும் திட்டாது, திரும்பி அடிக்காத ஒரு டார்கெட்டை (படிக்க - இந்து மதம்
மற்றும் இந்து மதம் சார்ந்த கலாச்சாரம், இந்தியம், மற்றும் சில விடயங்கள்) காரிதுப்பாது ஒரு பதிவை எழுதுகிறாரே என்று பார்த்தேன்! நடுவில் இந்த மாதிரி சில....

அடிப்படை வாதம் இல்லாதவர்களால் இந்து மத மரபுகளை மற்றும் இந்த நவீன சமுதாயத்தில் அதன் இருப்பை சொல்ல விடமாட்டேன் என்று கங்கணம் கட்டி, சாமானிய இந்துக்களையும், சார்பற்ற இந்துக்களையும், தங்களின் மரபான சிந்தனைகள் தாக்கப்படுகின்றன என்ற என்ன சுழலுக்குள் இட்டுச்செல்லுகின்ற பணியை செம்மையாக செய்யும் முற்போக்கு மன்னர்கள், நித்தின் கட்காரியும்,நாக்பூரில் உள்ள மற்றும் பலரும் செய்ய முடியாததை அருமையாக செய்து வருகிறார்கள்!

சும்மா சொல்லக்கூடாது சார். இது மதம் பற்றியது இல்லை என்று வேற கூறியிருக்கிறீர்கள்! உங்க மத சார்பின்மையைதான் கண்கூட பார்த்தோமே! திரு வினவு அவர்களின் தளத்தில், இஸ்லாமிய பெண்களின் புர்கா பற்றிய பதிவில் உங்களின் மேலார்ந்த மதிப்பீட்டை தேடிப்பார்த்தேன்! காணவில்லை! அதையே, திரு வினவு மற்றும் நண்பர்கள், "கொழுப்பெடுத்த இந்து மத வெறியர்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்" என்று ஒரு பதிவு போட்டிருந்தால், முதல் விருந்தாளி நீங்களாதான் இருக்கும்! இந்த அழகில் அந்த பதிவு, usual அக இந்து மதத்தை காரித்துப்புவது போல இல்லாமல், மிக மிக சாப்டாக, குழந்தையை தட்டி கொடுப்போதுபோல விமர்சனம் செய்கிறது! (கவினிக்க - நான் இதற்காக மற்ற எந்த மதத்தையும் மற்றவர் மனம் புண் படும் படி திட்ட வேண்டும் என்று கூற வில்லை. இதில் சுட்டிக்காட்டுவது அந்த நோக்கத்திற்காக அல்ல ) அதற்கே வந்து "Present Sir" போடாத நீங்கள், எந்த அளவு முற்போக்கு என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை! என்ன, பயம்தான் காரணம்! தங்களின் நம்பிக்கையை காயப்படுத்தினால் மற்ற மதக்காரர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்! அது உங்களுக்கு நல்ல தெரியும்! So take the straw man and hit him as long as you can!

இதில் மேலும் ஒரு காமடி, நீங்கள் எழுதும் பதிவிற்கு வந்து சலாம் போடும் ஒரு கும்பல்!

சரி அதெல்லாம் விடுங்க சார். நீங்களோ ஒரு மருத்துவர், அதுவும் மன நல மருத்துவர். அதற்க்கு மேல மாவோவிய மற்றும் ஸ்டாலினிய சித்தாந்தத அபிமானி! அதற்க்கு ஒரு படி மேல, ஓவியங்களின் பிரியர்!! ஆதலால், ஸ்டாலினின் காலத்தில் இருந்த ஓவிய சுதந்திரம் எப்படி, வரையப்பட்ட ஓவியங்கள் எவை, அது எதைச்சார்ந்தது போன்றவையை பற்றி கொஞ்சம் விலாவாரியாக எழுதினால், அதில் ஹுசைனை பற்றிய உங்களின் சார்பு வாதங்களை பொருத்திப்பார்க்க
வசதியாக இருக்கும். மேலும் எங்களைப்போன்ற பிற்போக்கு வாதிகளுக்கு புரிந்தாமாதிரியும் இருக்கும்!

நன்றி சார்...இந்த பின்னூடத்தை முடிந்தால் போடுங்கள், இல்லையேல் உங்கள் சீடர்களான (அல்லது நீங்கள் அவர்களின் சீடரா ??) திரு வினவு மற்றும் பலர் செய்வதைப்போல அழித்துவிடுங்கள்!

நன்றி - வாழ்க உங்கள் "நடுநிலையான பயமிலாத முற்போக்கான நாகரீகமான" "ஒரு" மத தாக்கு !!!

நன்றி

Dr.Rudhran said...

no, நன்றி.
மற்ற மதங்களின்மேல் உங்களுக்கும் கரிசனமா? மகிழ்ச்சி! யாரை எப்போது பாராட்டுவது கண்டிப்பது என்பது என் இஷ்டம். ஆனால் நான் இணையத்தின் சௌகரியத்தைப் பயன்படுத்திக்கொண்டு போய்ப்பெயர், போய் முகவரியோடு என்றும் எதுவும் எழுதமாட்டேன்.

பார்ப்பனீயம் என்பது சாதி-மதம் மீறிய ஒரு கொழுப்பு. அது எங்கெல்லாம் என் கண்ணில் படுகிறதோ அங்கெல்லாம் எதிர்ப்பேன். வெறும் சாதிக்காக மதத்திற்காக அரசியல் லாபத்திற்காக எழுத வேண்டிய பரிதாப நிலையில் நான் இல்லை.
இல்லாத பெயரிலாவது எழுதுவதற்கு பாராட்டுக்கள்.

Vipasana said...

டாக்டர் மேரி அவர்களை பற்றிய தகவல் புதிய ஒன்று ; பெருமிதமும் கூட ... ஆனால் பதிவின் இறுதியில் வார்த்தைகளின் தொனி சற்று அருவருப்பூட்டுவதாக இருப்பதாக அந்தரங்கமாக உணர்கிறேன்.. (எனது புரிதலின் போதாமையாகவும் இருக்கலாம்...)

நிற்க!..'ஆங்கில உலகின் முதல் பெண் மருத்துவர் ' என கூகிள் ஆண்டவரிடம் கேட்ட போது அவரளித்த பதில்களில் டாக்டர் மேரி அவர்களைப் பற்றி எதுவும் காண கிடைக்கவில்லை ....'elizabeth blackwell' என்பது மேரி அவர்களின் புனை பெயரானால் நீங்கள் எழுதியது சரியே...

'வரலாறு முக்கியம் மருத்துவரே' என்று உங்களை பார்த்து சொல்ல நேர்ந்ததிர்க்காக வருந்துகிறேன்... தகவல் பிழையா அல்லது வேறு ஏதேனும் நுண் அரசியலா என்பதை விளக்குவது உங்களின் உரிமை....

Dr.Rudhran said...

mary scharleib is the first woman to become a doctor in english speaking (british) world.
blackwell was the first woman doctor from USA.
MMC pioneered the inclusion of women in medical education in the then british world.

there are no factual errors in what i have written.

Dr.Rudhran said...

http://anglicanhistory.org/bios/mscharlieb.html

www.mmc.tn.gov.in/history.html

http://www.punchcartoons.com/p6165/Cartoon:-Dame-Mary-Scharlieb../product_info.html

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2451802/?page=1

the above links would tell about mary scharleib.

குடுகுடுப்பை said...

இந்துவான முத்துலக்ஷ்மி பற்றி முக்கியமாகக் குறிப்பிடாமல் கிருத்துவரான மேரியை, (சரித்திரப்படி சத்தியம் என்றாலும்) எதற்காக முதல் விஷயமாகவும் பெருமையாகவும் பார்க்கிறாய் என்று அரிப்புடன் கேட்கப்படப் போகும் கேள்விகளை எல்லாரும் ரசிக்கலாம்! வெறி ஏறிவிட்டால் வரலாறாவது வெங்காயமாவது?//

நீங்கள்தான் இங்கே பார்ப்பானீய கொழுப்புடன் எழுதியிருக்கிறீர்கள் டாக்டர், மிகவும் ஆவலுடன் படித்து வந்தேன் ஆனால் வம்பிழுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நீங்கள் சேர்த்த இடைச்செருகல்தான் மேலே உள்ளது.

Vipasana said...

பதிவில் "ஆங்கிலம் பேசும் உலகில் " என்றது காலனி நாடுகளை மட்டுமே குறிக்கும் என்றால் நீங்கள் தெரிவித்தது சரியே ...

dr.elizabeth blackwell...பட்டம் பெற்றது 1847 ல் ... இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்...

dr.elizabeth harret anderson...பட்டம் பெற்றது 1870 ல்...முதல் இங்கிலாந்து பெண்மணி ..

dr.mary scharleib... பட்டம் பெற்றது 1881 ல் royal london school ல் இருந்து ... MMC யில் LMC முடித்தவர் ...

புள்ளி விவரணைகளில் என்ன இருக்கிறது ... டாக்டர் மேரி யின் சாதனை நாம் பெருமிதம் கொள்ளக் கூடியது தானே...

தாங்கள் சுட்டிகளோடு பதிலளித்தமைக்கு நன்றி...

உங்களின் பதிலில் தேர்ச்சி பெற்ற வெளியுறவு துறை மேதையின் சாயல் தெரிந்தது

Thekkikattan|தெகா said...

//மரியாதையுடன் நமஸ்காரம்! வணக்கம் என்று சொல்வதைவிடவும் நம்ஸ்காரம் என்று சொன்னால்தான் முழுதாய் கீழே விழுந்து வணங்குகிறமாதிரி இருக்கும்.//
:)))
ருத்ரன், நானும் நமஸ்காரம் பண்ணிக்கிறேன். விடாது தொடர்ந்து எழுதுங்க.

காஞ்சி பிலிம்ஸ் said...

பனகல் அரசர் பற்றி இங்கே கொஞ்சம் சொல்லியிருக்கலாம்...

Post a Comment