ஜெயமோகனுக்கு ஒரு பதில்பதிவு எல்லாம் எழுதுவேன் என்று நான் நினைத்ததே இல்லை. முழுவதும் படிக்க முடிந்தால்தானே பதில்/ விமர்சனம் எழுதுவது! ஆனால் நித்யானந்தாவின் இன்றைய நிலைமை குறித்து வந்த பதிவைப் படிக்கச்சொல்லி சில நண்பர்கள் வற்புறுத்தியதால் மெதுவாகக் கஷ்டப்பட்டுப் படித்தேன்.
அதில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து என் எண்ணங்கள்-
நித்யானந்தர் ஊடகங்கள் முன்அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப்பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. அம்பலப்பட்டது ஒரு தனிமனிதன் என்றால் ‘இந்து மனங்கள்’ எந்தச் சிக்கலுக்காக முண்டியடித்து அவன் படத்தைப் போட்டுக் கொளுத்துகின்றன? அவன் முன்வைத்த தத்துவம் என்னவென்று தெரியாது, என்னையே துன்புறுத்திக்கொண்டு இம்மாதிரி எழுத்துக்களை நான் படிப்பதில்லை. இந்தக் கட்டுரையே போதும் இதற்கு மேல் நித்யா பெயரில் எவனோ எழுதியதெல்லாம் தத்துவம் என்று படிக்கும் பொறுமை எனக்கு இல்லை.
அறச்சிக்கல் என்றால் என்ன? இதே கட்டுரையில் பின்னர் வரும் தர்மம் சம்பந்தப்பட்ட விஷயமா? நீதிக்கும் நியதிக்கும் இடைபுகுந்து தப்பிக்கத்தெரியாத நிலைதான் அறச்சிக்கலா? அறம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவா? இல்லை இந்து அறம் முஸ்லிம் அறம் என்றெல்லாம் இருக்கிறதா?
இவனது கேவலம் என்று எல்லாரும் கொதிப்படைவது அவனது காம இச்சையை அவன் பூர்த்தி செய்துகொண்டதற்கா இல்லை அந்த பிம்பம் தகர்க்கப்படுகிறதே என்றா? எல்லா சாமியார்களையும் சகித்துக்கொள்ளாதவர்களுக்கும் இன்று இந்துமுகத்தில் இன்னுமொருமுறை கரிபூசப்பட்டதே என்று கலங்குபவர்களுக்கும் ஒரே அறப்பார்வைதானா?
நான் இந்து, நான் இப்படித்தான் எனும் ஆணவத்தின் அடக்கி வாசிக்கும் மொழியா?
இல்லை இந்து சாமியார் இப்படித்தானே செய்வான் இதற்கென்ன இவ்வளவு கொதிப்பு என்ற அசட்டையான மனநிலையா? திமிரா? இதற்கெல்லாம் அறம் வெங்காயம் என்று சொல்பவர்கள் முட்டாள்கள் எனும் ஏளனமா?
ஊடகத்தால் உருவாக்கப்பட்டஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை. இவ்வளவுதானா? சில அற்பர்கள் வெளிப்படையாகக் காசுக்குக் குரைத்தார்கள், வேறு சில அற்பர்கள் இன்னும் மிகுந்த தொலைநோக்கோடு பரந்த இந்து சாம்ராஜ்யக் குறிப்புணர்ந்து சால்ஜாப்பு சொல்கிறார்கள். இருவருக்குமே இதே ஊடக உதவிதானே. ஊடகங்கள் இல்லாவிட்டால் ராமபாலம் கதையை நாஸாவின் ஆதாரம் என்றெல்லாம் பொய் சொல்லி விற்க முடியுமா?
இவன் அவமானப்பட்டான் என்றால் இவன் இந்துப் பிரதிநிதி இல்லை, ஊடக மாயை! அவனுக்கும் இந்துமத முகமூடி இருந்ததால்தானே இப்போது எல்லா சேனைகளும் துள்ளி வருகின்றன?எங்கள் வீட்டுத் திருடனை ஊரெல்லாம் சேர்ந்து அடிக்க வேண்டாம் நாங்களே கண்டிக்கிறோம் எனும் மனப்பான்மைதானே!
இந்துஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாகஅது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது.திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில்கண்டிப்பாக இது ஓர் அடிதான் என்று. திட்டமிட்டு யாரும் துறவிகளைச் சீண்டுவதில்லை. துறவி என்ற பெயரில் இவர்கள் செய்யும் திருட்டுத்தனத்திற்குத் தான் எதிர்ப்பு. அவ்வளவு அற்புதமான ‘மரபு’ இவ்வளவு எளிதாகச் சிறுமைப்படுத்தப்பட்டால், அதன் வீச்சும் வீரியமும் எவ்வளவு?
இந்து மரபில் மூன்று கூறுகள் உள்ளன என்று சொல்லலாம். ஒன்று, தத்துவார்த்தமான தளம். இரண்டு , வழிபாடு,பக்தி சார்ந்த தளம். மூன்று, பழங்குடி நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த தளம்.……நம் சூழலில் பிந்தைய இரண்டும்தான் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவந்தன. அவை அறிவார்ந்த தேடல் கொண்ட ஒருவருக்கு முழுநிறைவை அளிப்பதில்லை. அறிவார்ந்த தேடலுக்கு எவை உதவுகின்றன? வேதங்களா உபநிஷத்துக்களா? இடைச்செருகல்கள் நிறைந்த கீதையா? அறிவார்ந்த தேடலுக்காக நித்யா போன்றவனெல்லாம் கிட்டத்தட்ட கடவுளாக மாறும் கூட்டம் எப்போதாவது அறிவுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறதா?
அறிவுள்ளவன் எவனாவது இந்துமதத்தின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதீயக் கேவலத்தைச் சகித்துக்கொண்டிருப்பானா? அப்படிப்பட்ட அநாகரிகத்துடன் ஒத்துப்போகும் போது அறிவு என்பது எது? சந்தர்ப்பவாதமா? சட்டத்திற்குப் பயந்து உள்ளேயே புகைந்து கொண்டிருக்கும் ஆதிக்க ஆணவமா?
இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டியதேவை ஏற்பட்டது. அதைச் செய்தவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இங்கே தான் குயுக்தி வெளிப்படுகிறது. விவேகானந்தர் இந்து கோட்பாடுகளை முன்வைத்து, உபநிஷத் சாரத்துடன் அத்வைத மார்க்கத்தைப் பரப்பியதைப் போல், ஜெ.கிருஷ்ணமூர்த்தி செய்யவில்லை. ஜேகே, ஓஷோ இருவருமே மத அடையாளங்களைத் தவிர்த்தவர்கள். அவர்களின் அறிவுத்திறன் இவர்களுக்குத் தேவைப்படுவதால்தான் ஜேகே கூட இந்துதத்துவ மரபின் உரையாடல்களை முன்வைத்ததாக இப்படி ஒரு பொய். அடுத்து புத்தர்கூட இந்துமதத்தைத்தான் முன்வைத்தார் என்று சொல்வார்கள்.
அதாவது ஒரு தேவை சமூகத்தில் உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றி தங்களைநிறுவிக்கொள்கிறார்கள் இவர்கள். பெரும் அமைப்புகளை உருவாக்குகையில்அமைப்புகளுக்குரிய அத்தனை சிக்கல்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. மதம் என்பது ஒரு மார்க்கமாக வாழ்முறையாகத்தான் சொல்லிக்கொண்டார்கள், இப்போது அது நிறுவனம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு பெரிய மதமே இருக்கும் போது அங்கே எதற்கு துணை நிறுவனங்கள்? இவ்வளவு தத்துவ பாரம்பரியமிக்க மதவழி வருபவர்களுக்கு ஒரு நிறுவனத்தை நேர்மையுடன் செயல் படுத்தத் தெரியாதா? பூஜ்யம் கண்டுபிடித்த மதம் என்று சொல்லிக்கொள்வது எல்லாம் கணக்கைத் தப்பாக எழுதி ஏமாற்றத்தானா?
நித்யானந்தர் மாட்டிக்கொண்டது சமீப காலமாக நடந்துவரும் ஊடகப்படையெடுப்பின் ஒரு விளைவு….. இன்று இழிவுபட்டு நிற்பது நித்யானந்தர் என்ற மனிதரே ஒழிய எந்த மரபின்தோற்றத்தை அவர் தன் வேஷமாகக் கொண்டாரோ அந்த தோற்றம் அல்ல… ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது பானையின் ஒரு பருக்கையே உதாரணம், மாட்டிக்கொண்டால் ஒரு பருக்கை பானையாகாது எனும் மொழிவிளையாட்டு!
ஆனால் காலம்தோறும் எந்தமோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும்காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எந்த மோசடியாளனும் எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் அந்த உடை அணிந்தவன் நம்ம ஆளு என்று குலாவுவதும், அவன் மாட்டிக்கொண்டால் ஜாதியைப் பொறுத்து அது குற்றமா இல்லை சறுக்கலா என்றெல்லாம் பேசும் அயோக்கியத்தனத்திற்கும் இந்த வர்ணத்திற்கும் ஏன் இவ்வளவு நெருங்கிய தொடர்பு?
அப்படி என்ன தனித்துவம் இதில்? இந்த ஆடையின் ஆரம்பம் என்ன? அன்றைய சூழலில் அவசியம் கருதி உருவான நிறத்துக்கு இன்று பட்டில் அதே நிறத்தில் நடிக்கப் புறப்படும் போலிகளுக்கும் என்ன தொடர்பு? காவிக்கு அன்றிருந்த அர்த்தம்தான் இன்னும் இருக்கிறதா?
காவி என்பது ஒரு குறியீடு என்றால் இன்று அது எதைக் குறிக்கிறது?
வழித்துணையாக ஆவது தங்கள் பாதையில்தாங்களே சென்றவர்களின் சொற்கள் மட்டுமே.ஆகவே ஒருகணமும் சிதையாத கவனம்அதற்கு தேவையாகிறது.அதைத்தான் உபநிடதம் சொல்கிறது ‘ஜாக்ரதை!’……… ஜாக்ரதா என்பது விழிப்புணர்வு!
எவனுக்கெல்லாம் கூச்சமில்லையோ, குற்ற உணர்வு இல்லையோ அவனெல்லாம் தன் பாதையில் தானே நடந்து சென்றதாகத்தான் சொல்கிறான். அவன் மாட்டிக்கொள்ளாதவரை ஞானி, மாட்டிக் கொண்டால் ஏமாற்றுப் பேர்வழி!
ஜாக்ரதா என்று குறிப்பிடப்படும் விழிப்புணர்வு எச்சரிக்கை உணர்வு அல்ல; அது அறிவின் கூர்மை நிதானத்துடன் வெளிப்படும் மனநிலை.
விழிப்புடன் இருப்பது மாட்டிக் கொள்ளாமல் இருக்கத்தான் என்று நினைத்தேன், இவர்கள்தான் இனி மாட்டிக்கொள்ளாமல் இருப்பது என்று காட்டுகிறார்கள்.
நம்மை நாமேதான் பெரும்பாலும் ஏமாற்றிக்கொள்கிறோம்...இத்தகைய தருணங்களில் நாம் உணரவேண்டிய ஒன்றுண்டு. எது இந்து ஞான மரபின்சாரமோ அதை முன்வைப்பதே சரியான வழியாக இருக்க முடியும். எது உண்மையோ அதுமுன்வைக்கப்படவேண்டும். அது உண்மை என்றால் அதற்கு தன்னை நிறுவிக்கொள்ளும்வல்லமை இருக்கும். போலிகளை, மோசடிகளைச் சார்ந்து உண்மை நிலைகொள்ளமுடியாது. அது அவர்களை பிளந்துகொண்டுதான் தன் வழியைக் கண்டுபிடிக்கும். இல்லாத ஒன்றை எவ்வளவு வாய் கிழியக் கத்தினாலும் அது நிலைக்காது.
இந்து மத ஞானம் என்பது எந்தக்காலத்திலிருந்து? இந்து என்று இஸ்லாமியர்கள் பெயர் வைத்தார்களே அன்றிலிருந்தா? இந்திய ஞானி வேறு இந்து ஞானி வேறு. தொன்மையான இந்நாட்டு ஞான மார்க்கம் கேள்விகளை உள்ளடக்கியது. கேள்விகள் நெருடலானபோதுதான் பதில் தர முடியாத வர்க்கம் பாமரர்களிடமிருந்து பலவற்றை மறைத்து வைத்தது. தெளிவை நோக்கியது இந்திய ஞானம், திருட்டுத்தனத்தை உருவாக்கியது இந்து ஞானம். இந்தத் திருட்டுத்தனம், தானே பிளந்து கொண்டு அழியும்.
நித்யானந்த சாமியாரின் மீது எனக்கு எப்போதும் மரியாதையோ நம்பிக்கையோ இருந்தததில்லை. எல்லா அயோக்கியர்களிடமும் இருந்த கோபம்தான் அவன் மீதும். அந்தப் பெண்ணுடன் சுகமாகக் கிடந்த படம்கூட எனக்குக் கோபம் வரவழைக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.
//ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.// அய்யா, நீங்க கோபப்பட்டுக்கிட்டாவது படிச்சிட்டீங்க? என்னால அது முடியலையே! நான் என்ன செய்ய? தப்பிச்சுக்கிட்டேனே-னு சந்தோசப்படவா? இல்லை உங்களுக்காக துக்கப்படவா?
//ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது//
பொட்டுத் தெரித்தாற்போல் முற்று வைத்திருக்கிறீர்கள்.. இத்துடன் இந்தப் பிரச்னை முற்றுப் பெற்றதாகவே கருதிக்கொள்கிறேன்... இனிமேலும் வேறு யாரையும் இவன் படிக்கவைத்துவிடப் போகிறான்..... கணலான கேள்விகளுக்கு நன்றி டாக்டர்...
//ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது பானையின் ஒரு பருக்கையே உதாரணம், மாட்டிக்கொண்டால் ஒரு பருக்கை பானையாகாது எனும் மொழிவிளையாட்டு!//
கலக்கல் மருத்துவரே .
//ஆனால் காலம்தோறும் எந்த மோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும் காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.//
:) இன்னும் கொஞ்சம் கூட்டிச் சொன்னால் சாமியார்களுக்கு காவி நிற ஆணுறைகள் வந்தால் கூட வரவேற்பேன் என்பார் போல ஜெ.
இதில் மக்கள் வருத்தப்பட் ஒன்றுமில்லை. இன்னும் பல சாமியார்கள் வருவார்கள் இவர்கள் ஏமாந்து நிப்பார்கள். ஆனாலும் வீட்டின் வரவேற்பறைக்கு இம்மாதிரியான காட்சிகளை குழந்தைகளை பார்க்கும் வண்ணம் செய்த ஊடகம் சில தணிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்
இந்து மதத்தின் மாசுகளை (அல்லது அவ்வாறு நீங்கள் கருதுவதை)ஜெயமோகனின் மேல் தெளிக்கிறீர்களா? அல்லது ஜெயமோகனின் காவியை கரைத்து இந்து மதத்தின் மீது ஊற்றுகிறீரா?
ஏனிந்த பதற்றம் உங்கள் எழுத்தில்?
//// இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே //
உங்கள் தரத்திற்கு பொருந்தாத வரிகள் இவை, அதை ஆமோதிக்கும் கல்வெட்டுக்கும் இதேதான்.
ஜெயமோகனின் கட்டுரை வாசித்தேன், நித்யானந்தர் என்ற தனி மனிதனின் சரி/தவறுகள் மதத்தின் மீது ஏற்றிப் பார்க்கப்படுதல் சரியல்ல என்று இருக்கிறது. அது தவறா?
கருத்து மட்டுமே உங்களிடம் எதிபார்க்கப்படும் பட்சத்தில், எழுத்தில் உணர்வுகள் தாறுமாறாக ஓடுவதைக்கண்டு என் அவதானிப்பை பதிவு செய்கிறேன்.
நித்யானந்த சாமியாரின் மீது எனக்கு எப்போதும் மரியாதையோ நம்பிக்கையோ இருந்தததில்லை. எல்லா அயோக்கியர்களிடமும் இருந்த கோபம்தான் அவன் மீதும். அந்தப் பெண்ணுடன் சுகமாகக் கிடந்த படம்கூட எனக்குக் கோபம் வரவழைக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.
....... எப்படி சிரிக்காமால், உங்களால் இப்படி எழுத முடிகிறது? :-)
//இந்து மத ஞானம் என்பது எந்தக்காலத்திலிருந்து? இந்து என்று இஸ்லாமியர்கள் பெயர் வைத்தார்களே அன்றிலிருந்தா? இந்திய ஞானி வேறு இந்து ஞானி வேறு. தொன்மையான இந்நாட்டு ஞான மார்க்கம் கேள்விகளை உள்ளடக்கியது. கேள்விகள் நெருடலானபோதுதான் பதில் தர முடியாத வர்க்கம் பாமரர்களிடமிருந்து பலவற்றை மறைத்து வைத்தது. தெளிவை நோக்கியது இந்திய ஞானம், திருட்டுத்தனத்தை உருவாக்கியது இந்து ஞானம். இந்தத் திருட்டுத்தனம், தானே பிளந்து கொண்டு அழியும்.//
உங்களையும் இந்து மார்கத்தின் அடிப்படை சாதீயம் என என்ன வைத்து விட்டார்களே என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. இந்து மார்க்தில் மடுமல்ல வேறு எந்த மார்கத்திலும் சாதீயம் என்பது அடிப்படையாக இல்லை... இவை அனைத்தும் ஒரு சில சுய நலக்காரர்கள் உருவாக்கிய மாயய் அல்லது சுலாபதிற்காக செய்த சதி அவ்வளவுதான்.
உங்களை போண்ற ஒருவர் அனைத்து கோணத்திலும் பார்க்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். (மீண்டும் இது ருத்ரணின் பார்வை என்று சொல்ல வேண்டாம் இது என்னுடைய வேண்டுகோள் மடும்தான்) இப்படிக்கு மாசி my id is sivakumarmvel@gmail.com
//ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது பானையின் ஒரு பருக்கையே உதாரணம், மாட்டிக்கொண்டால் ஒரு பருக்கை பானையாகாது எனும் மொழிவிளையாட்டு!//
இந்த மையமான புள்ளியில் நின்று குறிப்பாகவும், தெளிவாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் டாக்டர்.அவசியமான நேரத்தில் சரியான எதிர்வினை.
//ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது. // என்ன கொடுமை டாக்டர். ஜெயமோகன் எழுதியுள்ளதை பாதிக்குமேல் படிக்க முடியவில்லை.
இப்படி ’ஆத்தரப்பட்டால்’ எப்படி ? ஓம் சாந்தி பவ. :)))) ஒரு வேளை எழுத்தாளர் ஜெயமோகன் அல்லது நித்யானந்தர், மன உளைச்சல் தாங்காமல், உங்களிடம் Counselingக்கு வந்தால் எப்படி treat செய்வீர்கள் ? (சும்மா கற்பனை செய்து பார்தேன். சிரிப்பு தாங்கவில்லை).
ஜெயமோகன் எழுதுவதை படிக்க வைத்துவிட்டார் என்று ஆத்திரம் கொள்கிறீர்கள். ஜெயமோகன் எழுதுவது அனைத்தும் அப்ப நிராகரிக்கபட வேண்டிய குப்பையா ? அவர் எழுதிய அனைத்தும் superlative என்ற நிலை போன்றே இதுவும் ஒரு extreme and irrational stand. அவ்வளவு black and white ஆக இதை எப்படி பார்க்கிறீர்கள் ? பல விசியங்களில் அவரோடு முரண்படலாம். ஆனால் பல புதிய விவாதங்களை (உதாரணமாக காந்தி பற்றி) இணையத்தில் துவக்கி வைத்தவர் அவர். காந்தி பற்றி அவர் எழுதிய ஒரு பெரும் நூலை உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். நிதானமாக படித்து பார்த்துவிட்டு பிறகு ஜெ பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள்.
//// //ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது////
பின் தொடரும் நிழலின் குரல் பற்றி சொல்கிறீர்கள். ஆன்மீகமும், கம்யூனிசமும் ஒப்பிடும் அளவிறுக்கு ஒன்றா என்ன ? பி.தொ.நி.குரலில் விவரிக்கப்பட்ட சோவியத் ரஸ்ஸியாவில் அன்று நடந்த பெரும் கொலைகளை, அடக்குமுறைகளை deny செய்கிறீர்களா என்ன ? அல்லது ம.க.இ.க தோழர்களை போல அவை அனைத்தும் ஆதாரமில்லா அவதூறுகள்’ என்று ஒற்றை வரியில் நிராகரிக்கிறீர்களா ? உலகில் இன்று எந்த வரலாற்று ஆய்வாளும், பல்கலைகழகமும் அப்படி மறுக்கவில்லை.
//ஒரு வேளை எழுத்தாளர் ஜெயமோகன் அல்லது நித்யானந்தர், மன உளைச்சல் தாங்காமல், உங்களிடம் Counselingக்கு வந்தால் எப்படி treat செய்வீர்கள் ? (சும்மா கற்பனை செய்து பார்தேன். சிரிப்பு தாங்கவில்லை).//
இதுல சிரிக்க என்ன இருக்கு, இவருகிட்ட இல்லாட்டியும் வேற யார்கிட்டயாவது போகத்தானே போறாங்க!
பொதுமக்கள் செய்யவேண்டியது என்ன? 1. சன்குழும டிவிக்களை புறக்கணிக்கவேண்டும். அவர்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்க பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் முன்வரவேண்டும். 2. நூலகங்கள் மற்றும் பொதுமக்கள் முழுநீல படங்களை வெளியிடும் நக்கீரன் மற்றும் சன்குழும பத்திரிக்கைகளை புறக்கணிக்கவேண்டும். சந்தாக்களை கேன்சல் செய்யவேண்டும்.
புறக்கணிப்பும் அவர்களுக்கு எதிரான குரலுமே நாம் நமது இளைய சமுதாய ஒழுக்கத்திற்கு செய்யும் மிகப்பெரிய உதவி.
//இணையத்தில் துவக்கி வைத்தவர் அவர். காந்தி பற்றி அவர் எழுதிய ஒரு பெரும் நூலை உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். நிதானமாக படித்து பார்த்துவிட்டு பிறகு ஜெ பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள்.//
அதிய மான்... என்ன ஒரு நல்லெண்ணம் உங்களுக்கு. டாக்டர் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கிலயா? உங்களைப் போல எல்லாரும் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு பித்துகுளி போல அலைய வேண்டுமா?
நாவல்பழம் விற்றுப் பிழைக்கும் ஒரு ஏழை ஒரு ரூபாய் அதிகமாக வாங்கி பிழைக்கக் கூடாது, ரிலையன்ஸ்பிரஷ் வரவேண்டும் புரட்சி மலர வேண்டும் என்று குதித்த ஜெமோ காந்தி பூந்தி பற்றி எழுதினால் நாங்கள் படிக்க வேண்டுமா? அதில் என்னென்ன பொய்புரட்டு இருக்குமோ? நாங்க அதைப் படித்தால் ரத்த அழுத்தம் அதிகமாகி சாகவேண்டியது தான். நீங்களே படிங்க, சர்வம் ப்ராப்தி ரஸ்து.
//இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதைச் செய்தவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்//
Big Lie or ignorance about Jittu Krishinamoorthi (JK). JK completely denounced all religions, their instituions and methods including Hinduism,Budhism and even Theosophy from which he was brought by AnniBeasent.
It is pity that the socalled big writer like Jemo doesnot know this.
மரியாதை இல்லாமல் உளர வேண்டாம். முழுவதுமாக ஒரு நூலை வாசிக்காமலேயே இப்படி பேசுவது irrationalityஇயின் உச்சம்.
//// நாவல்பழம் விற்றுப் பிழைக்கும் ஒரு ஏழை ஒரு ரூபாய் அதிகமாக வாங்கி பிழைக்கக் கூடாது, ரிலையன்ஸ்பிரஷ் வரவேண்டும் புரட்சி மலர வேண்டும் என்று குதித்த ஜெமோ///
இது இன்னும் மேலோட்டமான, முட்டாளதனமான புரிதல். அப்படி அவர் எழுதவில்லையே. முழுசா படித்து, பிறகு ஆதாரத்துடன், தர்க்கரீதியாக மறுக்க முடியாதவர் நீர். ரில்யன்ஸ் பிரஸ் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன குடி முழுகி போச்சு ? அன்று நடந்த ஆர்பாட்டங்கள் இன்று அர்த்தமற்றதாகி விட்டன.
//அம்பலப்பட்டது ஒரு தனிமனிதன் என்றால் ‘இந்து மனங்கள்’ எந்தச் சிக்கலுக்காக முண்டியடித்து அவன் படத்தைப் போட்டுக் கொளுத்துகின்றன? // டாக்டர் சரியான கேள்வி. தனிமனிதன் என்பவன் தன் சுயசார்பில் நிற்பவன். இவன் ராமகிருஷ்ணர், விவேகனந்தர் வாரிசாக இந்து மடத்தின் இளவலாக பார்க்கப் பட்டவன். //அறிவுள்ளவன் எவனாவது இந்துமதத்தின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதீயக் கேவலத்தைச் சகித்துக்கொண்டிருப்பானா? // மனு தர்மம் என்னும் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டது தான் இந்து தர்மம். இது கீதையின் அங்கீகாரம், காந்தியின் கனவு. இதை இன்னும் பலர் அறியவில்லை என்பது தான் ஆச்சர்யம். ஜெயமோகன், சாரு போன்றவர்கள் எழுத்தாளர்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. இவர்கள் புரியாத விஷயத்தை விட்டுவிட்டு புதினம் மட்டும் எழுதலாம்.
டாக்டர், ருத்ரன் என்ற பெயர் காரணத்தால் ரௌத்ரம் பழகுகிறிர்களோ? பாரதியின் கோபத்தை படித்திருக்கிறோம், அதன் அழகை உங்களிடம் ரசிக்கிறோம்.
சிறு விடயஙகளைக்கூட பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கும் ஜெயமோகன் போன்ற கூர் மொக்கை-மொன்னைகளுக்கு உங்களைப் போன்றவர்களால் தான் சரியான சவுக்கடி கொடுக்கமுடியும்.
நாங்கள் வெறும் வாசகர்கள் மட்டுமே. ரசிகர்கள், பக்தர்கள் அல்ல. படிச்சிட்டு தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை தள்ளிவிட்டு சென்றுவிடுவோம். எங்களுக்கு நீங்கள் சொன்ன irrationality-க்கும் சம்பந்தம் இல்லை. அரைகுறையாக தெரிந்த விடயத்தைப் பற்றி தலையணையளவிற்கு பொஸ்தகம் போடுவது நாங்கள் இல்லை. அப்படி போடுபவரிடம் உங்கள் கருத்தை வலியுறுத்துங்கள்.
முரண்பாடா இருக்கே. முழுசா படிக்காம எப்படி தேவையானது / தேவையில்லாதது என்று பிரிப்பது ?
சரி, போகட்டும். யார் பித்துகுளி, யார் அரைகுறை, யார் irrational என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்வார்கள். நீங்கள் பெரிய வெண்ணை மாதிரி முழங்க வேண்டாம்.
(ஸாரி டாக்டர், உங்க பதிவுல இப்படி பேச வேண்டியதாயிற்று.)
//நாவல்பழம் விற்றுப் பிழைக்கும் ஒரு ஏழை ஒரு ரூபாய் அதிகமாக வாங்கி பிழைக்கக் கூடாது, ரிலையன்ஸ்பிரஷ் வரவேண்டும் புரட்சி மலர வேண்டும் என்று குதித்த ஜெமோ //
// நித்யானந்த சாமியாரின் மீது எனக்கு எப்போதும் மரியாதையோ நம்பிக்கையோ இருந்தததில்லை. எல்லா அயோக்கியர்களிடமும் இருந்த கோபம்தான் அவன் மீதும். அந்தப் பெண்ணுடன் சுகமாகக் கிடந்த படம்கூட எனக்குக் கோபம் வரவழைக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது. //
என்னடா ரொம்ப தீவிரமா சவுக்கடி கொடுக்கிற (ஜெமோ-வுக்கு, வாசகர்களுக்கில்லை!) இடுகையா இருக்கேன்னு பாத்தா, கடைசில விழுந்து விழுந்து சிரிக்க வைச்சிட்டீங்க!
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான துறைகள் மனநல மருத்துவம் மற்றும் ஓவியம்.
எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன
பகிர்ந்துகொள்ள முகவரி-
dr.rudhran@gmail.com
48 comments:
//ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். //
- 100% உண்மை.
// இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.//
:-))))))))
ஜெயமோகன் கருத்து கந்தசாமி மாதிரி , கதை எழுதுவதுடன் இப்படி செய்வார் போல.
இந்தக் கதை எழுதிகளைத் தாண்டி எதுவும் இல்லையா?
காலக்கெரகம் புடிச்ச அப்பாவிகள் இவர்களை இன்னும் நம்பிகொண்டு இருக்கிறார்கள் கருத்துக்களுக்காக.
ஜெயமோகன்,அது என்ன பொந்து ஞான மரபு? சனாதன அல்லது அடுக்கு வரும் பார்ப்பனிசம் என்று பச்சையாய் சொல்லலாம்.
மலம் என்று சொல்ல கூச்சப்பட்டு shit என்று சொல்வதுபோல, எப்படிச் சொன்னாலும் அது சனாதன வர்ணாசிரம பார்ப்பனிசம் தான் மூலம்.
.
"ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோஹனை கூட படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது" நல்ல நகைச்சுவையோடு பதிவு நிறைவு பெற்றுள்ளது.
நீங்கள் படித்தீர்களா டாக்டர்? என்னால் பாதிக்கு மேல் செல்லமுடியாமல் வெளியேறிவிட்டேன்.
சில சம்பவங்கள் பல குப்பைகளையும் படிக்கவைத்துவிடுகின்றன
அந்தப் பக்கமெல்லாம் போறதில்லைங்க. நல்லவேளை இந்த முறை நீங்க அங்கே போயி தோலுறிக்கிற வேலையை சரியாச் செஞ்சிருக்கீங்க. அதுக்கு ஒரு டாங்க்ஸ்.
//அறிவுள்ளவன் எவனாவது இந்துமதத்தின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதீயக் கேவலத்தைச் சகித்துக்கொண்டிருப்பானா?//
அது! அது!!
//ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.//
ஓஹாஹாஹா... oh boy! oh boy! சிரிப்பை அடக்க முடியல இன்னிக்கு முழுக்க முழுக்க சிரிச்சு சிரிச்சு என் உடம்பு என்கிட்ட இருக்கான்னே தெரியல அவ்வளவு ஈசியா இருக்கு போங்க...
//ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.//
அய்யா, நீங்க கோபப்பட்டுக்கிட்டாவது படிச்சிட்டீங்க? என்னால அது முடியலையே! நான் என்ன செய்ய? தப்பிச்சுக்கிட்டேனே-னு சந்தோசப்படவா? இல்லை உங்களுக்காக துக்கப்படவா?
"ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது. "
I never expected this type of statement from a great Doctor like you..
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை. ஆரிருள் உய்த்து விடும்.
சில நல்ல கருத்துக்களெல்லாம் அவர் கூறுவது என எண்ணி இருந்தேன்.. காமம் தவறல்ல ... காவிதான் தவறு... திருமணம் செய்து கொண்டிருக்கலாமே ...
உண்மையிலேயே தாங்கள் கூறுவது போல அந்த பிம்பங்கள் உடைபடுவதுதான் தாங்கொண்ணாத்துயரம் ருத்ரன்
//ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது//
பொட்டுத் தெரித்தாற்போல் முற்று வைத்திருக்கிறீர்கள்..
இத்துடன் இந்தப் பிரச்னை முற்றுப் பெற்றதாகவே கருதிக்கொள்கிறேன்... இனிமேலும் வேறு யாரையும் இவன் படிக்கவைத்துவிடப் போகிறான்..... கணலான கேள்விகளுக்கு நன்றி டாக்டர்...
tamilil eppadi eluthuvathu endru theriyavillai... Samiyarum manithan thaney...
//ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது//
அட்டகாசமாக கூறியுள்ளீர்கள் சார்
// அறிவுள்ளவன் எவனாவது இந்துமதத்தின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதீயக் கேவலத்தைச் சகித்துக்கொண்டிருப்பானா? அப்படிப்பட்ட அநாகரிகத்துடன் ஒத்துப்போகும் போது அறிவு என்பது எது? சந்தர்ப்பவாதமா? சட்டத்திற்குப் பயந்து உள்ளேயே புகைந்து கொண்டிருக்கும் ஆதிக்க ஆணவமா? //
நிறைய எழுதுங்கள்.
// இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.//
ஹிஹி... உண்மை.
கட்டுரை மிக நேர்த்தி. மிக நன்று.
//ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது பானையின் ஒரு பருக்கையே உதாரணம், மாட்டிக்கொண்டால் ஒரு பருக்கை பானையாகாது எனும் மொழிவிளையாட்டு!//
கலக்கல் மருத்துவரே .
//ஆனால் காலம்தோறும் எந்த மோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும் காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.//
:) இன்னும் கொஞ்சம் கூட்டிச் சொன்னால் சாமியார்களுக்கு காவி நிற ஆணுறைகள் வந்தால் கூட வரவேற்பேன் என்பார் போல ஜெ.
//இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.// same blood.
இதில் மக்கள் வருத்தப்பட் ஒன்றுமில்லை. இன்னும் பல சாமியார்கள் வருவார்கள் இவர்கள் ஏமாந்து நிப்பார்கள். ஆனாலும் வீட்டின் வரவேற்பறைக்கு இம்மாதிரியான காட்சிகளை குழந்தைகளை பார்க்கும் வண்ணம் செய்த ஊடகம் சில தணிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்
// இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.//
அதே உணர்வை அடைந்த மற்றொருவன்..
-- சரவணன் - சாரதி
Dr. ருத்ரன்,
இந்து மதத்தின் மாசுகளை (அல்லது அவ்வாறு நீங்கள் கருதுவதை)ஜெயமோகனின் மேல் தெளிக்கிறீர்களா?
அல்லது ஜெயமோகனின் காவியை கரைத்து இந்து மதத்தின் மீது ஊற்றுகிறீரா?
ஏனிந்த பதற்றம் உங்கள் எழுத்தில்?
//// இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே //
உங்கள் தரத்திற்கு பொருந்தாத வரிகள் இவை, அதை ஆமோதிக்கும் கல்வெட்டுக்கும் இதேதான்.
ஜெயமோகனின் கட்டுரை வாசித்தேன், நித்யானந்தர் என்ற தனி மனிதனின் சரி/தவறுகள் மதத்தின் மீது ஏற்றிப் பார்க்கப்படுதல் சரியல்ல என்று இருக்கிறது. அது தவறா?
கருத்து மட்டுமே உங்களிடம் எதிபார்க்கப்படும் பட்சத்தில், எழுத்தில் உணர்வுகள் தாறுமாறாக ஓடுவதைக்கண்டு என் அவதானிப்பை பதிவு செய்கிறேன்.
நித்யானந்த சாமியாரின் மீது எனக்கு எப்போதும் மரியாதையோ நம்பிக்கையோ இருந்தததில்லை. எல்லா அயோக்கியர்களிடமும் இருந்த கோபம்தான் அவன் மீதும். அந்தப் பெண்ணுடன் சுகமாகக் கிடந்த படம்கூட எனக்குக் கோபம் வரவழைக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.
....... எப்படி சிரிக்காமால், உங்களால் இப்படி எழுத முடிகிறது? :-)
//இந்து மத ஞானம் என்பது எந்தக்காலத்திலிருந்து? இந்து என்று இஸ்லாமியர்கள் பெயர் வைத்தார்களே அன்றிலிருந்தா?
இந்திய ஞானி வேறு இந்து ஞானி வேறு.
தொன்மையான இந்நாட்டு ஞான மார்க்கம் கேள்விகளை உள்ளடக்கியது. கேள்விகள் நெருடலானபோதுதான் பதில் தர முடியாத வர்க்கம் பாமரர்களிடமிருந்து பலவற்றை மறைத்து வைத்தது. தெளிவை நோக்கியது இந்திய ஞானம், திருட்டுத்தனத்தை உருவாக்கியது இந்து ஞானம். இந்தத் திருட்டுத்தனம், தானே பிளந்து கொண்டு அழியும்.//
refreshing :)
நித்தியானந்தத்தை சன் மாட்டிவிட்டதற்குப் பதிலாக போட்டி தொலைக்காட்சிகள் கலைஞர் வீட்டிற்குள் ஊடுருவி லீலைகளை அம்பலப் படுத்துவார்களா?
'இந்து' தர்மத்தை பாதுகாப்பதற்காக ஜெயமோகன் வார்த்தைகளால் செய்து கொண்டிருக்கும் கயமைத்தனத்தை சுளீர் என்று நறுக்காக புட்டுவைத்திருக்கும் பதிவுக்கு நன்றி
//அறிவுள்ளவன் எவனாவது இந்துமதத்தின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதீயக் கேவலத்தைச் சகித்துக்கொண்டிருப்பானா?//
உங்களையும் இந்து மார்கத்தின் அடிப்படை சாதீயம் என என்ன வைத்து விட்டார்களே என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. இந்து மார்க்தில் மடுமல்ல வேறு எந்த மார்கத்திலும் சாதீயம் என்பது அடிப்படையாக இல்லை... இவை அனைத்தும் ஒரு சில சுய நலக்காரர்கள் உருவாக்கிய மாயய் அல்லது சுலாபதிற்காக செய்த சதி அவ்வளவுதான்.
உங்களை போண்ற ஒருவர் அனைத்து கோணத்திலும் பார்க்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். (மீண்டும் இது ருத்ரணின் பார்வை என்று சொல்ல வேண்டாம் இது என்னுடைய வேண்டுகோள் மடும்தான்)
இப்படிக்கு
மாசி
my id is sivakumarmvel@gmail.com
//ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது பானையின் ஒரு பருக்கையே உதாரணம், மாட்டிக்கொண்டால் ஒரு பருக்கை பானையாகாது எனும் மொழிவிளையாட்டு!//
இந்த மையமான புள்ளியில் நின்று குறிப்பாகவும், தெளிவாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் டாக்டர்.அவசியமான நேரத்தில் சரியான எதிர்வினை.
தான் கொண்ட கொள்கைக்காக சப்பை கட்டு கட்டுகிறார் ஜெயமோகன்..காலம் காலமாக மதத்தை தூக்கி பிடிக்கும் செயல் இது..!
படித்த போது எனக்கும் இதே மனநிலை தான்!
கடுப்பேத்துறார் யுவர் ஆனர்!
//ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது. // என்ன கொடுமை டாக்டர். ஜெயமோகன் எழுதியுள்ளதை பாதிக்குமேல் படிக்க முடியவில்லை.
டாக்டர் சார்,
இப்படி ’ஆத்தரப்பட்டால்’ எப்படி ? ஓம் சாந்தி பவ. :))))
ஒரு வேளை எழுத்தாளர் ஜெயமோகன் அல்லது நித்யானந்தர், மன உளைச்சல் தாங்காமல், உங்களிடம் Counselingக்கு வந்தால் எப்படி treat செய்வீர்கள் ?
(சும்மா கற்பனை செய்து பார்தேன். சிரிப்பு தாங்கவில்லை).
ஜெயமோகன் எழுதுவதை படிக்க வைத்துவிட்டார் என்று ஆத்திரம் கொள்கிறீர்கள்.
ஜெயமோகன் எழுதுவது அனைத்தும் அப்ப நிராகரிக்கபட வேண்டிய குப்பையா ?
அவர் எழுதிய அனைத்தும் superlative என்ற நிலை போன்றே இதுவும் ஒரு extreme and irrational stand. அவ்வளவு black and white ஆக இதை எப்படி பார்க்கிறீர்கள் ?
பல விசியங்களில் அவரோடு முரண்படலாம். ஆனால் பல புதிய விவாதங்களை (உதாரணமாக காந்தி பற்றி) இணையத்தில் துவக்கி வைத்தவர் அவர். காந்தி பற்றி அவர் எழுதிய ஒரு பெரும் நூலை உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். நிதானமாக படித்து பார்த்துவிட்டு பிறகு ஜெ பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள்.
//// //ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது////
பின் தொடரும் நிழலின் குரல் பற்றி சொல்கிறீர்கள். ஆன்மீகமும், கம்யூனிசமும் ஒப்பிடும் அளவிறுக்கு ஒன்றா என்ன ? பி.தொ.நி.குரலில் விவரிக்கப்பட்ட சோவியத் ரஸ்ஸியாவில் அன்று நடந்த பெரும் கொலைகளை, அடக்குமுறைகளை deny செய்கிறீர்களா என்ன ? அல்லது ம.க.இ.க தோழர்களை போல அவை அனைத்தும் ஆதாரமில்லா அவதூறுகள்’ என்று ஒற்றை வரியில் நிராகரிக்கிறீர்களா ? உலகில் இன்று எந்த வரலாற்று ஆய்வாளும், பல்கலைகழகமும் அப்படி மறுக்கவில்லை.
//ஒரு வேளை எழுத்தாளர் ஜெயமோகன் அல்லது நித்யானந்தர், மன உளைச்சல் தாங்காமல், உங்களிடம் Counselingக்கு வந்தால் எப்படி treat செய்வீர்கள் ?
(சும்மா கற்பனை செய்து பார்தேன். சிரிப்பு தாங்கவில்லை).//
இதுல சிரிக்க என்ன இருக்கு, இவருகிட்ட இல்லாட்டியும் வேற யார்கிட்டயாவது போகத்தானே போறாங்க!
பொதுமக்கள் செய்யவேண்டியது என்ன?
1. சன்குழும டிவிக்களை புறக்கணிக்கவேண்டும். அவர்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்க பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் முன்வரவேண்டும்.
2. நூலகங்கள் மற்றும் பொதுமக்கள் முழுநீல படங்களை வெளியிடும் நக்கீரன் மற்றும் சன்குழும பத்திரிக்கைகளை புறக்கணிக்கவேண்டும். சந்தாக்களை கேன்சல் செய்யவேண்டும்.
புறக்கணிப்பும் அவர்களுக்கு எதிரான குரலுமே நாம் நமது இளைய சமுதாய ஒழுக்கத்திற்கு செய்யும் மிகப்பெரிய உதவி.
நக்கீரன், சன் குழுமம், சன்யாசம், ஊடக விபச்சாரம் & ஃபத்வா
// இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.//
:)))))))))))))
வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல போகிறபோக்கில் சில தகவல்களையும், பல பொய்களையும் நயமாக கலந்து சொல்வதில் ஜெயமோகனுக்கு நிகர் ஜெயமோகனே.
//இணையத்தில் துவக்கி வைத்தவர் அவர். காந்தி பற்றி அவர் எழுதிய ஒரு பெரும் நூலை உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். நிதானமாக படித்து பார்த்துவிட்டு பிறகு ஜெ பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள்.//
அதிய மான்... என்ன ஒரு நல்லெண்ணம் உங்களுக்கு. டாக்டர் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கிலயா? உங்களைப் போல எல்லாரும் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு பித்துகுளி போல அலைய வேண்டுமா?
நாவல்பழம் விற்றுப் பிழைக்கும் ஒரு ஏழை ஒரு ரூபாய் அதிகமாக வாங்கி பிழைக்கக் கூடாது, ரிலையன்ஸ்பிரஷ் வரவேண்டும் புரட்சி மலர வேண்டும் என்று குதித்த ஜெமோ காந்தி பூந்தி பற்றி எழுதினால் நாங்கள் படிக்க வேண்டுமா? அதில் என்னென்ன பொய்புரட்டு இருக்குமோ? நாங்க அதைப் படித்தால் ரத்த அழுத்தம் அதிகமாகி சாகவேண்டியது தான். நீங்களே படிங்க, சர்வம் ப்ராப்தி ரஸ்து.
//இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதைச் செய்தவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்//
Big Lie or ignorance about Jittu Krishinamoorthi (JK). JK completely denounced all religions, their instituions and methods including Hinduism,Budhism and even Theosophy from which he was brought by AnniBeasent.
It is pity that the socalled big writer like Jemo doesnot know this.
Venkat
இப்படித்தான் டாக்டர் நீங்கள் தொடர்ந்து பதிவெழுதி உங்களை குறித்து அறிவு ஜீவி என்று இன்னும் சிலர் கொண்டுள்ள பிம்பத்தை கட்டுடைக்க வேண்டும் .
//இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது//
தேங்க்ஸ் டாக்டர் , சாருவின் புத்தக வெளியீட்டு விழா விமர்சன பேச்சு போலவே அருமை .
இணையத்தில் எழுத துவங்கி எத்தனை பேர் தங்களை தாங்களே துகிலிரித்துக் கொள்கிறார்கள் , வாழ்க சர் டிம் பெர்னர்ஸ் லீ .
“எல்லாம் மாயை
ஆம் எல்லாமுமே மாயை
ஆண்டவனின் நாடகத்தில்
நாமெல்லாம் நடிகர்கள்”
ரஞ்சிதா மாயை
சொர்ணமால்யா மாயை
சங்கரராமன் மாயை
ஜட்டியோடு படுத்திருந்த நித்தியும் மாயை
ஆண்குறியும் பெண்குறியும் மாயை
ஆனந்தத்தை தேடி
அனுதினமும் அலைவோரே
ஆனந்தம்
உள்ளாடைக்குள்
பத்திரமாய் இருக்கிறதாம்
http://kalagam.wordpress.com/2010/03/04/ஆன்மீகத்-தேடல்கள்/
குட்டிபிசாசு,
மரியாதை இல்லாமல் உளர வேண்டாம். முழுவதுமாக ஒரு நூலை வாசிக்காமலேயே இப்படி பேசுவது irrationalityஇயின் உச்சம்.
//// நாவல்பழம் விற்றுப் பிழைக்கும் ஒரு ஏழை ஒரு ரூபாய் அதிகமாக வாங்கி பிழைக்கக் கூடாது, ரிலையன்ஸ்பிரஷ் வரவேண்டும் புரட்சி மலர வேண்டும் என்று குதித்த ஜெமோ///
இது இன்னும் மேலோட்டமான, முட்டாளதனமான புரிதல். அப்படி அவர் எழுதவில்லையே. முழுசா படித்து, பிறகு ஆதாரத்துடன், தர்க்கரீதியாக மறுக்க முடியாதவர் நீர். ரில்யன்ஸ் பிரஸ் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன குடி முழுகி போச்சு ? அன்று நடந்த ஆர்பாட்டங்கள் இன்று அர்த்தமற்றதாகி விட்டன.
//அம்பலப்பட்டது ஒரு தனிமனிதன் என்றால் ‘இந்து மனங்கள்’ எந்தச் சிக்கலுக்காக முண்டியடித்து அவன் படத்தைப் போட்டுக் கொளுத்துகின்றன? // டாக்டர் சரியான கேள்வி. தனிமனிதன் என்பவன் தன் சுயசார்பில் நிற்பவன். இவன் ராமகிருஷ்ணர், விவேகனந்தர் வாரிசாக இந்து மடத்தின் இளவலாக பார்க்கப் பட்டவன். //அறிவுள்ளவன் எவனாவது இந்துமதத்தின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதீயக் கேவலத்தைச் சகித்துக்கொண்டிருப்பானா? // மனு தர்மம் என்னும் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டது தான் இந்து தர்மம். இது கீதையின் அங்கீகாரம், காந்தியின் கனவு. இதை இன்னும் பலர் அறியவில்லை என்பது தான் ஆச்சர்யம். ஜெயமோகன், சாரு போன்றவர்கள் எழுத்தாளர்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. இவர்கள் புரியாத விஷயத்தை விட்டுவிட்டு புதினம் மட்டும் எழுதலாம்.
டாக்டர், ருத்ரன் என்ற பெயர் காரணத்தால் ரௌத்ரம் பழகுகிறிர்களோ? பாரதியின் கோபத்தை படித்திருக்கிறோம், அதன் அழகை உங்களிடம் ரசிக்கிறோம்.
//இணையத்தில் எழுத துவங்கி எத்தனை பேர் தங்களை தாங்களே துகிலிரித்துக் கொள்கிறார்கள் , //
நீங்கள் உடுத்தியுள்ள இந்த்துவா புடவை உருவிப்போட தான் அவர் உரிச்சிகிட்டு இருக்கார்!
சிறு விடயஙகளைக்கூட பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கும் ஜெயமோகன் போன்ற கூர் மொக்கை-மொன்னைகளுக்கு உங்களைப் போன்றவர்களால் தான் சரியான சவுக்கடி கொடுக்கமுடியும்.
பதிவுக்கு நன்றி,
வாழ்த்துக்களுடன்,
சர்வதேசியவாதிகள்.
நாங்கள் வெறும் வாசகர்கள் மட்டுமே. ரசிகர்கள், பக்தர்கள் அல்ல. படிச்சிட்டு தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை தள்ளிவிட்டு சென்றுவிடுவோம். எங்களுக்கு நீங்கள் சொன்ன irrationality-க்கும் சம்பந்தம் இல்லை. அரைகுறையாக தெரிந்த விடயத்தைப் பற்றி தலையணையளவிற்கு பொஸ்தகம் போடுவது நாங்கள் இல்லை. அப்படி போடுபவரிடம் உங்கள் கருத்தை வலியுறுத்துங்கள்.
குட்டிபிசாசு,
///படிச்சிட்டு தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை தள்ளிவிட்டு சென்றுவிடுவோம்///
முரண்பாடா இருக்கே. முழுசா படிக்காம எப்படி தேவையானது / தேவையில்லாதது என்று பிரிப்பது ?
சரி, போகட்டும். யார் பித்துகுளி, யார் அரைகுறை, யார் irrational என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்வார்கள். நீங்கள் பெரிய வெண்ணை மாதிரி முழங்க வேண்டாம்.
(ஸாரி டாக்டர், உங்க பதிவுல இப்படி பேச வேண்டியதாயிற்று.)
அதியமான் , ரொம்ப வருத்தப்படாதீங்க , டாக்டர் லேங்குவேஜ் மட்டும் வேற மாதிரியா இருக்கு ?
டாக்டர் பிரமாதமா டெவலப் ஆயிட்டு வர்ரார் , சீக்கிறமே வினவு டைப் வசவு பதிவுகளை எதிர்பார்க்களாம்.
//நாவல்பழம் விற்றுப் பிழைக்கும் ஒரு ஏழை ஒரு ரூபாய் அதிகமாக வாங்கி பிழைக்கக் கூடாது, ரிலையன்ஸ்பிரஷ் வரவேண்டும் புரட்சி மலர வேண்டும் என்று குதித்த ஜெமோ //
லிங் கிடைக்குமா?
விடுங்க பாஸ் இவங்க எப்பவுமே இப்படித்தான்
@ வெட்டிப்பயல்...
http://www.jeyamohan.in/?p=508
//

Post a Comment