Wednesday, June 30, 2010

அன்பு, நம்பிக்கை...


இரண்டுமே நல்ல வார்த்தைகள். இரண்டுமே நல்லன. ஆனால் இவ்விரண்டுமே ஏமாற்றக்கூடியவையும் ஆகும்.
அன்பு ஏமாற்றுமா? ஏற்பவர் முட்டாளாக இருந்தால்.
அன்பையும் நம்பிக்கையையும் ஏற்பவர் முட்டாளாக இருந்தால் இரண்டுமே ஏமாற்றும். இதில் தருபவர் ஒரு பொருட்டே அல்ல, பெறுபவர் குறித்தே இப்பதிவு.
இதோ, கீழே ஒரு படம். நான் வரைந்தது. இதை வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு நல்லது நடக்கிறது. இப்படி நான் சொல்லவில்லை, வைத்திருப்பவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதை நான் இலவசமாகத்தான் தருகிறேன். பிரதியை திரையிலோ காகிதத்திலோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், நல்லது நடக்கும் என்கிறார்களே, நடக்கட்டுமே!


தரவிறக்கம் செய்துவிட்டீர்களா? இனி சில கேள்விகள்!
முதலில் நான் சொன்னதை நம்புகிறீர்களா? அடுத்து நான் சொன்னது போல நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை இது பொய் என்று நிரூபிக்க நாசம் தேடுவீர்களா?
எல்லாருக்குமே ஆசை உண்டு, தேவை உண்டு, இவற்றால் எதிர்பார்ப்பும் உண்டு. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு நப்பாசை குறைவு அவ்வளவுதான், இல்லை என்று ஆகி விடுவதில்லை. இலவச இணைப்பாக ஒரு விஷயம் கிடைத்தால் அதை ஏற்பதே பொதுபுத்தி.
இப்போது இந்தப் படம் நீங்கள் வைத்துக்கொள்ளும்போது உங்களுக்கு நல்லது என்று ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் இந்தப் படம்தான் என்று சொல்வீர்களா? இதை உங்களுக்குத் தெரிந்த எல்லாருக்கும் கொடுப்பீர்களா? பகிர்வதே உயர்நிலை என்று வாய் ஓதினாலும் மனம் அதனைச் செயல்படுத்த முயலுமா?
உங்களிடமே இதே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள், நிறைய விடைகள் கிடைக்கும்.

இப்போது இன்னொரு படம். 

இது ஒரு நூலுக்கு முகப்பு வரைந்து தருமாறு கேட்டதற்காக வரைந்தது. இன்னும் எனக்கு என் படம் அச்சிட்ட பிரதி கிடைக்கவில்லை. இதை ஏன் இங்கே எழுதுகிறேன்? இப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் தானே எல்லாம் நடக்கின்றன, தமிழ் வளர்க்க நடந்த செம்மொழி மாநாடு போல!

இது ஒரு மயில் என்று நான் நினைத்து வரைந்தேன்,
பார்ப்பவருக்கேற்ப என்னவாக வேண்டுமானாலும் தெரியலாம்.

17 comments:

Unknown said...

இப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் தானே எல்லாம் நடக்கின்றன.

Rasitthen Iyya.

Ashok D said...

குழப்பங்களின் தொடக்கம்தான் தெளிவோ?

சின்னதாதான் எழுதிறீங்க... ஆனா நிறைய யோசிக்கவைக்கிறீங்க... நறுக்குன்னு இருக்கு, உங்கள் ப்ளாக் ஏதோ ஒரு விதத்தில் R.P.Raajanayahem ப்ளாக்கை ஞாபக படுத்துகிறது...

//உங்களிடமே இதே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள், நிறைய விடைகள் கிடைக்கும்//
ஹிஹி.. எதுவும் தோனலை சார் நீங்களே சொல்லிடுங்க... :)

Chitra said...

இப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் தானே எல்லாம் நடக்கின்றன, தமிழ் வளர்க்க நடந்த செம்மொழி மாநாடு போல!


..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... பஞ்ச்!

கோவி.கண்ணன் said...

//இது ஒரு நூலுக்கு முகப்பு வரைந்து தருமாறு கேட்டதற்காக வரைந்தது. இன்னும் எனக்கு என் படம் அச்சிட்ட பிரதி கிடைக்கவில்லை. இதை ஏன் இங்கே எழுதுகிறேன்? இப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் தானே எல்லாம் நடக்கின்றன, தமிழ் வளர்க்க நடந்த செம்மொழி மாநாடு போல!//

மன்னிக்கவும் நினைவு இருக்கிறது, உங்களைத் தேடிவரும். நீங்கள் சொன்னபடி மாணவர் ஒருவருக்கு அல்லது பலருக்கு எழுதுகோள் (பேனா) வாங்கித் தந்துவிட்டும் தெரியப்படுத்துகிறோம்

Rathna said...

சித்திரங்கள் அருமை. உலகத் தமிழ் மாநாடு நடந்து பதினைந்து வருடத்திற்குப் பின்னர், செந்தமிழ் என்கிற அங்கீகாரம் கிடைத்தப் பிறகு தானே இம்மாநாட்டை நடத்தி இருக்கின்றார்கள், தவறாக நினைக்கவில்லை என்றால் உங்களிடம் ஒரு கேள்வி, பிறகு எப்போது உலகத் தமிழ் மாநாடு நடத்தலாம் என்பது உங்கள் அபிப்பிராயம், இப்படி பலரும் (உங்களைப்போல) உலக செந்தமிழ் மாநாடு இப்போது தேவையா என்று கருத்து கூறுகின்றனர், கருத்துக் கூறுவது ஜனநாயக நாட்டின் சுதந்திரம், எனக்கு உண்மையாகவே இதற்க்கான பதிலை தெரிந்து கொள்ள விருப்பம், உங்கள் அபிப்பிராயமும் அதே போன்ற கருத்துடையதாக உங்களது இந்த பதிவில் வாசித்தறிந்தேன், உங்களிடமே கேட்டும் விடுகிறேன். பதில் கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ஹேமா said...

எங்கள் நம்பிக்கையைப் பரிசோதிக்கப் படத்தை தரவிறக்கச் சொன்னதிலேயே அன்பும் நம்பிக்கையும் கலந்திருக்கிறது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோசிக்க வைத்த பதிவு சார்..

kalagam said...

மிகச்சிறப்பான ஓவியம் (மயில்)

மங்குனி அமைச்சர் said...

முதலில் நான் சொன்னதை நம்புகிறீர்களா? அடுத்து நான் சொன்னது போல நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை இது பொய் என்று நிரூபிக்க நாசம் தேடுவீர்களா?////


சில நேரங்களில் இவைகள் தன்னம்பிக்கை குறையாமல் பாதுகாக்கும் நம் மனதிருக்கு இது பொய் என்று தெரிந்தாலும் , ஒரு உள் ஏமாற்றுவேலை

அரபுத்தமிழன் said...

நம்பிக்கையில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு,
ஆனால் அன்பிற்கு நல்லதைத் தவிர வேறெதுவும் தெரியாது.

Deepa said...

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே!
அந்த மயில் ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அதை மட்டும் தான் தரவிறக்கம் செய்யப் போகிறேன்! :)

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் மருத்துவர் ருத்ரன்,
// அன்பு , நம்பிக்கை இரண்டுமே நல்ல வார்த்தைகள். இரண்டுமே நல்லன. ஆனால் இவ்விரண்டுமே ஏமாற்றக்கூடியவையும் ஆகும்.// நிதர்சனமான வரிகள். பழைய நிகழ்வுகள் சில நினைவிற்கு வந்து விட்டன.

Incredible Monkey said...

என் நண்பன் ஒருவனுக்கு நம்பிக்கை மேல்
நம்பிக்கை இல்லை.அதற்கு அவன் சொல்லும்
காரணம் ''அனைத்து நம்பிக்கைகளும்
மூட நம்பிக்கைகளாம்.''

இது ஒரு வகையில் சரியானது போல்தான்
தோன்றியது.இப்போது இது தான் சரி என்று
எனக்கு தோன்றுகின்றது.

நம்பிக்கையில் நல்லது செய்வது கெட்டது
தருவது என்று வேண்டுமானால்
வைத்துக்கொள்ளாம்.

Dr.ருத்திரன் இருப்பதை நம்புகிறாயா என்று
ஒருவன் கேட்டால் நான் சிரிப்பேன்.நான்
Dr.ருத்திரன் இருக்கிறார் என்பதை
நம்பவேண்டியது இல்லை.ஏன் என்றால்
அவரை நான் நேரடியாக பாரத்து
இருக்கிறேன்.கை குலுக்கிஇருக்கிறேன்.
நேரடியாக பேசி இருக்கிறேன்.

Unknown said...

விநாயகர் மிக அருமை

Unknown said...

விநாயகர் மிக அருமை

ஜகதீஷ் said...

/*

இப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் தானே எல்லாம் நடக்கின்றன, தமிழ் வளர்க்க நடந்த செம்மொழி மாநாடு போல!

*/

உண்மையான வார்த்தைகள்.. செம்மொழி மாநாடும் ஒருவகையான நம்பிக்கை துரோகம் போலதான் தோன்றுகிறது..

முனியாண்டி பெ. said...

It's too good...I really liked the last paragraph.

Post a Comment