Friday, May 14, 2010

இதுவும் கசந்து, கடந்து போகுமா?

இவனெல்லாம் ஒரு ஜன்மம், இதுவெல்லாம் ஒரு தொழில்!


http://www.breakingnewsonline.net/newswatch/2050-muthalik-caught-on-camera-demanding-bribe-to-stage-riot.html

எனக்கு ம.க.இ.க பாடல்கள் இரண்டு நினைவுக்கு வருகின்றன-

1. மசூதியை இடித்து விட்டான் இது சரிதானா, ஹிண்டு மக்கள் விருப்பம் என்றான் உன்னைக் கேட்டானா? 


2. எச்சரிக்கை எச்சரிக்க எச்சரிக்க, கையில் தீப்பெட்டியை எடுத்து வரான் பத்தவைக்க.  
 பாடல் கேட்க இதில் முதல் ஒரு நிமிடம் அறிமுக உரை, அப்புறம்தான் பாடல்.


ம.க.இ.க பெயர் சொல்வதாலேயே இதுவெல்லாம் வேண்டாம் என்று நினைப்போர், வேடிக்கை பார்த்துக் கொண்டிருங்கள். விரைவில் ஜிம்பாப்வே உடன் கிரிக்கெட் நடைபெறும், கைதட்டலாம்.


எதிரிகள் விவரமாகவே இருக்கிறார்கள், நாம்தான் எதிர்ப்புகளை முணுமுணுக்கிறோம்.

12 comments:

Krubhakaran said...

சரியான நேரத்தில் சரியான கோபம், கோபிக்காதவன் மனிதன் அல்லன். ஆனால் இதுவும் கடந்து தான் போகும் DR.

Uma said...

எனக்கு "நாடு முன்னேறுதுங்கிறான்" கூட ஞாபகம் வருகிறது.

உமர் | Umar said...

அவாளை ஆதரிப்போர் கண்ணுக்கெல்லாம் இது தெரியாமல், சிரிப்புப் பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ராஜ நடராஜன் said...

//எதிரிகள் விவரமாகவே இருக்கிறார்கள், நாம்தான் எதிர்ப்புகளை முணுமுணுக்கிறோம்.//

யதார்த்தமான பொன்மொழி!

Unknown said...

ivanungala ellaam enna seyyarathu?

ithu naal varaikkum matham appidingira pothaiyila senjittu varaanunganu ninaichen. ippa kasu vaangittuthaan ippidi panraanganna??

kaasu kudutha enna venumnaalum seyvanga polarukku..

Anonymous said...

// மசூதியை இடித்து விட்டான் இது சரிதானா, ஹிண்டு மக்கள் விருப்பம் என்றான் உன்னைக் கேட்டானா? //
வினவு குழுவினரோடு பல முறை வாதிட்டவன் என்ற முறையில் சொல்கிறேன் - அவர்களும் இதே குட்டையில் ஊறிய மட்டைதான். சுப்பிரமணிய சாமியை முட்டையால் அடித்தது மக்கள் விருப்பம் என்று திருப்பி திருப்பி சொல்வார்கள். இந்த மக்களில் நான் உண்டா என்றால் பதிலே வராது. அவர்களுக்குத்தான் மக்கள் விருப்பம் ஞான திருஷ்டியில் தெரியுமே!

SurveySan said...

"இதுவும் கசந்து, கடந்து போகுமா?"

ofcourse :)

Anonymous said...

@ருத்ரன், உமா

தாங்கள் இருவரும் குறிப்பிட்ட பாடல்களுக்கான சுட்டிகள்:

இடித்து விட்டான் மசூதியை!
எச்சரிக்கை.. எச்சரிக்கை!
நாடு முன்னேறுதுங்கிறான்!

@கூட்டாஞ்சோறு

தங்களது மாபெரும் அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான தங்களது 'மட்டை' ஆய்வு முடிவை சர்வதேச அறிவியல் பத்திரிக்கைகளுக்கு தாங்கள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தஞ்சாவூர் கல்வெட்டுக்களில் எழுதி வைத்து, அதன் அருகிலேயே நீங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். ஒரு பெருமிதமான வீர தமிழ் ஹிண்டுவாக, தங்களை மட்டை ஞானி என எதிர்கால வரலாறு அழைக்கும் பொற்காலத்திற்காக காத்திருக்கிறேன்.

Renga said...

//ம.க.இ.க பெயர் சொல்வதாலேயே இதுவெல்லாம் வேண்டாம் என்று நினைப்போர், வேடிக்கை பார்த்துக் கொண்டிருங்கள். விரைவில் ஜிம்பாப்வே உடன் கிரிக்கெட் நடைபெறும், கைதட்டலாம்.///

WELL SAID DOC.

RENGA

Dr.Rudhran said...

இன்னும் சில பாடல்கள் இங்கே.. எனக்குப் பிடித்தவை-
கங்கை ஆர்ரோடு, மற்றும் நக்சல்பரி.
http://tamilcircle.net/index.php?option=com_sectionex&view=category&id=9&Itemid=111

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

“ஓராயிரம் ஆண்டு அடிமைப் பட்டாயே”


10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சாந்தோமில் உள்ள ஒரு ஒயின்ஷாப்பின் அருகில் நின்று நான்கைந்து தோழர்கள் அவர்களுக்குள் குழுக்களாகக்கூடி பாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியே சென்றுகொண்டு இருந்த நான் ஏனோ இப்பாடலில் ஈர்க்கப்பட்டு நின்று கேட்கத் துவங்கினேன். பாடலைப் பாதியில் இருந்து கேட்டதால் முழுவதும் கேட்க நினைத்து அவர்களிடம் மீண்டும் பாட முடியுமா என்று தயக்கத்தோடு கேட்டேன். மீண்டும் மீண்டும் 4 முறை பாடினார்கள். அந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாத ஒன்று.அப்ப எனக்கு மகஇகவும் தெரியாது வர்கபேதமும் தெரியாது.திராவிட இயக்க அரசியல் சூழலில் வளர்ந்ததால் இன பேதம் மட்டும்தான் தெரியும் :)

ராஜவம்சம் said...

நல்ல கருத்துமிக்க பாடல் முதல் முறையாக பலமுறைகேட்டேன்

Post a Comment