Thursday, May 13, 2010

எனக்கெதற்கு ஒரு கடவுள்?



 உண்டு இல்லை என்பதெல்லாம் உண்மைகளா விருப்பங்களா?
கடவுள் ஒரு சௌகரியம். வருந்தினால் புலம்ப, அஞ்சினால் அடைக்கலம் தேட, அனுதினம் ஒரு கட்டுப்பாட்டுக்கு உதவ... என்று பலவிதங்களில் பயன்பட்டாலும் கடவுள் ஒரு சௌகரியம் மட்டுமே. சௌகரியங்கள் யாவும் சத்தியமும் கிடையாது சரியென்றும் ஆகாது.
பிறந்த குடும்பத்தின் பழக்கங்களுக்கு உட்பட்டோ, கேட்கும் கதைகளால் வசீகரிக்கப்பட்டோ இல்லை எதிர்பாராதும் புரிபடாதுமான அனுபவத்தால் உந்தப்பட்டோதான் கடவுள் நமக்கெல்லாம் அறிமுகம். சூழலாக இருந்தாலும் சரி, சுகமானதென்றாலும் சரி, கடவுள் ஒரு சௌகரியம் தான். உலகம் தட்டை, ஆப்பிள் கடித்ததால்தான் மனிதன் பல்லாண்டுகளாகக் கஷ்டப்படுகிறான், நாளும் கோளும் எல்லாம் செய்யும், நாளை நன்றாய்ப் பிறப்பாய் அல்லது பிறக்க மாட்டாய்...இப்படியே சொல்லக்கற்றுக்கொண்டவை யாவுமே அந்தந்த காலத்தின் சௌகரியம்தான். அறிவியல் சௌகரியமாக அறிமுகமாவதில்லை ஆனால் அறிவு சௌகரியம். அது இருட்டில் ஒரு விளக்கை ஒளி கூட்ட உதவும். ஆனால் கடவுள் பொதுவாகவே அறிவை விட மனதுக்கே நெருக்கம். இந்த நெருக்கம் அவசியம். இந்த நெருக்கம்தான் சௌகரியம்.
கடவுள் அவனா அவளா? ஹனுமானும் ராவும் மனித உருவில் இல்லாவிட்டாலும் கடவுள், ஆனால் மனித உருவில் உள்ள கடவுளர்க்கே இங்கே அங்கீகாரம் அதிகம். மனித உரு என்று வந்துவிட்டால் அப்படியே அச்சாக ஆக்குவதைவிட அதீதங்களை அடுக்குவதில்தான் பிம்பங்கள் பிரகாசம் அடைகின்றன, அதனாலேயே நான்கிலிருந்து ஆயிரம் கைகள், பல தலைகள். இடுப்பிற்குக் கீழே ஏன் அதீதங்கள் இல்லை என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்! மூன்றாவது கால்  வைத்தால் கூட அது மனிதனாய் நிற்காது என்பதால் தான். மச்சமும் வராகமும் அவதாரம் என்றே சொன்னாலும் அவை நிற்கும் வடிவில்தான் காட்டப்படுகின்றன. மனிதனின் கடவுளுக்கு மனிதனைப்போல் நிற்க இரண்டு கால்கள் அவசியம்!
மனிதனைப்போலவே உருவாக்கப்பட்ட கடவுளுக்கு மனிதனைப்போலவே கோபம் க்ரோதம் எல்லாமும் இருக்கும். கடவுள் படைத்ததாய்ச் சொல்லப்படும் மனிதன் படைத்த கடவுள், அவனைப்போலவே இருப்பதுதான் அவனுக்கும் சௌகரியம். அப்போதுதான் அதனிடம் கெஞ்சவும் முடியும், லஞ்சம் பேசவும் முடியும்!  
இப்படியொரு கற்பனை எதற்கு என்று அறிவு கேட்டவுடன், அந்த அறிவை ஏற்று அதன்வழியே தன்னையே அமைத்துக்கொள்ளப் பழகிவிட்ட மனம், இதில் தர்க்க ரீதியான தனக்கு சௌகரியமான முடிவைத் தேடியதின் விளைவுதான்-
"1 எனும் அத்வைதம், 1+ எனும் த்வைதம்,1-0+x எனும் விஸிஷ்தாத்வைதம்.   இதில் எந்தக் கணக்கும் ஒத்துவராதவர்களுக்கு இரண்டு விடைகளுள் தேர்வு செய்யும் சௌகரியம் உண்டு. 0 தான் விடை என்று சொல்லிவிடலாம். 0 என்பது நாத்திகம் எனும் மறுப்பா இல்லை சூன்யம் எனும் புரிதலா?"
“பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பானே” அவனா தெய்வம்? இல்லை, அவன் பூஜ்யம் எனும் இல்லாத ஒன்றா? பூஜ்யம் என்றால் இல்லை என்றுதான் அர்த்தம்; பூஜ்யம் இல்லாமல் போய்விடுமா?
பூஜ்யம், சூன்யம் என்பதையெல்லாம் விட ஓம் என்பதற்கு மிகப்பெரிய வியப்புமதிப்பீடு ( ஓவர் பில்டப்?!) உண்டு. இந்த ஓம் பற்றி ஒரு கதை.
முருகன் சிவனின் மகன். சிவன் பெரிய கடவுள். சிவனுக்குச் சமம் என்றாலும் பிரம்மா சமம் இல்லை- தற்கால அரசியல் போல. (அன்பழகனும் ஸ்டாலினும் ஒன்றா?). முருகன் பிரம்மாவிடம்  “ஹலோ நீர்தான் ஞானஸ்தராமே சொல்லும், பிரணவத்தின் பொருள் என்ன?” என்றானாம். அந்த மக்குக்கு விடை தெரியவில்லையாம். உடனே அதைச் சிறையில் வைத்துவிட்டானாம். எல்லா வல்லுனர்களும் நல்லவர்களும் (இன்றும் நடக்கும் சமாதானத் தூது(?) போல் சென்றும் வேலை ஆகவில்லை! சிவன் தானே தான் மகனுடன் பேச முடிவெடுத்தார், மகன் “நீ என் சிஷ்யனாய் வந்தால்தான் பிரணவத்திற்குப் பொருள் சொல்வேன்” என்றானாம். தலைவர் மகனுடன் விவாதிக்க முடியுமா, போனார், கேட்டார்- “ ஆமா, அந்த ஓம் என்பதற்கு என்னப்பா அர்த்தம்?”
மகன் சொன்ன பதில்- “ அது ஒன்னும்மில்லைப்பா!”
இந்த ஓம் கதையை என்னிடம் சொன்னவர் என் ஆசான், ஜெயகாந்தன்.



இந்தப் படம் 2007 வரைந்தது, ஒருவேளை இதைப்போடத்தான் இதை எழுதினேனோ என்று இப்போது தோன்றுகிறது! 


 இதை எழுதத் தூண்டிய நூல் 
 Daniel  Quinn எழுதிய Providence.

44 comments:

Ashok D said...

//சொல்லாக்காற்றுக்கொண்டவை//

மாற்றிவிடுங்கள்
Dont publish this cmt

உமர் | Umar said...

//சௌகரியங்கள் யாவும் சத்தியமும் கிடையாது சரியென்றும் ஆகாது.//

மிகச்சரி!

வால்பையன் said...

//அந்த ஓம் என்பதற்கு என்னப்பா அர்த்தம்?”
மகன் சொன்ன பதில்- “ அது ஒன்னும்மில்லைப்பா!”//


ஒன்னுமே இல்லையப்பா!

Ashok D said...

ம்ம்ம்ம்..... என்று தொடர்ந்து சொல்லும் போது வயிற்றில் உள்ள காற்று வெளியே போகிறது. வயிறும் உள்ளே ஒடுங்கிறது. ம்ம்ம்...என்று தொடர்ந்து சொல்லும் போது... ஓம்மென்றும் இயல்பாய் மாறிவிடுகிறது.

நல்லதோர் பயிற்சி.. உடலுக்கும் மனதுக்கும்.

பதிவு நிறைவு :)

Ashok D said...

//ஒன்னுமே இல்லையப்பா!//

வால்..நாமே கடவுள். நமக்கேன் கடவுள்? :)

Ashok D said...

//ஏறு சொல்லிவிடலாம். 0 என்பது நாதிகம் //
இதையும் கவனிக்கவும் :)

வால்பையன் said...

//ம்ம்ம்ம்..... என்று தொடர்ந்து சொல்லும் போது வயிற்றில் உள்ள காற்று வெளியே போகிறது. வயிறும் உள்ளே ஒடுங்கிறது. ம்ம்ம்...என்று தொடர்ந்து சொல்லும் போது... ஓம்மென்றும் இயல்பாய் மாறிவிடுகிறது.

நல்லதோர் பயிற்சி.. உடலுக்கும் மனதுக்கும்.//



ஓம் என்று சொன்னால் வயிற்றில் இருந்து காற்று வெளிவராது, நுரையீரலில் இருந்து தான் வரும், வயிற்றில் காத்து என்ன பண்ணபோகுது, அதுக்கு அங்கே என்ன வேலை!

உலகில் இருக்கும் 650 கோடி மக்களில் 80 கோடி பார்ப்பன மற்றும் பாரபன சொம்பு தூக்கி இந்துக்கள் தவிர மற்ற யாரும் இதற்காக சிரத்தை எடுத்து கொள்வதில்லை! வயலில் வேலை செய்பவன் கூட இதை பற்றி கண்டுகொண்டதாக தெரியவில்லை! அவனுக்கு மனசு கெட்டுச்சா, உடம்பு கெட்டுச்சா!.

பார்பனர்களை மறுத்தால் பத்தாது, அவரது கொள்கைகளையும் மறுக்கனும்! அது தான் சரியான பார்பனீய எதிர்ப்பு!, நீ வீட்டை விட்டு வெளியே போ, ஆனா வீட்டு சாமான்களை நானே வச்சிகிறேன்னு சொல்றது திருட்டு!

வால்பையன் said...

//வால்..நாமே கடவுள். நமக்கேன் கடவுள்? :) //


நான் அஹோரி கடவுள்! எப்போ சந்திக்கலாம்!

வால்பையன் said...

//ஏறு சொல்லிவிடலாம். 0 என்பது நாதிகம் //
இதையும் கவனிக்கவும் :)


ஆரம்பமே நாத்திகம் தான் என்கிறார்!
ஒன்றுமில்லாததிலிருந்து தான் ஆரம்பித்தது என்பது ஆன்மிக கூற்று!, ஒன்றுமில்லை என்பது தான் நாத்திக கூற்று! ஆதார புள்ளியும், விவாதத்தின் முடிவு புள்ளியும் 0 தான்!
அதாவது நாத்திகம்!

Anonymous said...

ஓவியம் அருமையாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஜெயகாந்தன் கோட்டோவியம் நினைவுக்கு வருகிறது.

Murali said...

பாவம் பிரம்மா ஒன்னும் இல்லாத விஷயத்துக்காகவா ஜெயிலுக்கு போயிட்டு வந்தாரு. முருகன் கொஞ்சம் ஓவர் தான்.

Ashok D said...

இதெல்லாம் சித்தர்கள்.. கண்டெடுத்தது... வால்..

ம்ம்ம்... என்றுதான் பயிற்சி எடுக்குறேன்... எனென்றால் வயலில் நான் வேலை செய்யாததே காரணம்...

உண்மையில் வயலில் இறங்கி வேலை செய்பவர்களுக்கு எந்தவிதமான பயிற்சியும் தேவையில்லை.


//வயிற்றில் காத்து என்ன பண்ணபோகுது, அதுக்கு அங்கே என்ன வேலை!//

ம்ம்ம்... என்று ஆழமாக மிக ஆழமாக சொல்லிபாருங்கள் வயிறு உள்ளே ஒடுங்கும்... daily சோமபானம் அருந்துவதால் வரும் gasukku தீர்வாக அமையும் :)

Ashok D said...

//நான் அஹோரி கடவுள்! எப்போ சந்திக்கலாம்!//

அட நான் சைவம்பா.. ஆளவிடு

Ashok D said...

//பார்பனர்களை மறுத்தால் பத்தாது, அவரது கொள்கைகளையும் மறுக்கனும்! //

இன்று யார் அதிகமான தவறுகளை செய்கிறார்கள் - in all aspects
தெரியுமா வால்?

Ashok D said...

//ஏறு சொல்லிவிடலாம். 0 என்பது நாதிகம் //
இதையும் கவனிக்கவும் //

தம்பி வால்.. நான் spelling mistakeயை சொன்னேன்

Ashok D said...

//நான் அஹோரி கடவுள்! எப்போ சந்திக்கலாம்!//

வால் நான் அசுத்த சைவம்.. அதனால ஆளவிடுப்பா

Dr.Rudhran said...

நன்றி அசோக். தவறுகள் திருத்தப்படவேண்டியவை மட்டுமல்ல சுட்டிக் காட்டப்படவேண்டியவையும்தான்.
என் கணினி சரியாக வேலை செய்யாததால் உடனே சரி செய்ய முடியவில்லை.

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

//கடவுள் பொதுவாகவே அறிவை விட மனதுக்கே நெருக்கம். இந்த நெருக்கம் அவசியம்//

கடவுள் நம்பிக்கை இருப்பதில் தப்பிருப்பதாக நான் எண்ணவில்லை. ஆனால் அந்த நம்பிக்கை, நித்யானந்தனுக்கு, கால் கழுவி விடும் அளவுக்கு போய் நிற்கக்கூடாது என்பது தான் என் விருப்பம்.

வால்பையன் said...

அங்கிருந்து சித்தருக்கு போயிட்டிங்களா!?

ஒம் என்பது ஸ்ரீ என்பது போல் சமஸ்கிருதத்தில் ஒற்றை எழுத்து மந்திரம்,

ஓம் நமோ நாராயணா!
ஓம் நமச்சிவாய!

இதில் ஆரம்பத்தை கவனியுங்கள், சைவம், வைணவம் இரண்டும் ஒன்றிலிருந்து தான் ஆரம்பிக்கிறது, மூலம் சமஸ்கிருதம் தான்!

சிவன் டாக்குடர் விஜய் மாதிரி ஓவரா ஹீரோயிசம் காட்டுவார், அரி அஜித் மாதிரி அதையே ஸ்டைலா காட்டுவார்!
அவையெல்லாம் கற்பனை புனைவுகள் தான் என்றாலும் உருவாக்கியவனின் மனநிலை உளவியலில் தெரிகிறது!

”ஓம்”னா என்னன்னே தெரியாம கோடிகணக்கான மக்கள் இருக்காங்க, அதுவும் ந்ம்மை விட செழிப்பா!

புரிஞ்சிக்கோ, முழிச்சிக்கோ
சன்ரைஸ் குடிச்சிக்கோ!

தனி காட்டு ராஜா said...

//சௌகரியங்கள் யாவும் சத்தியமும் கிடையாது சரியென்றும் ஆகாது. //
இப்படி எழுதி கொள்வது உங்கள் சௌகரியம் .........இது மட்டும் சத்தியமா சரியா ??

http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_07.html

மோனி said...

..//தலைவர் மகனுடன் விவாதிக்க முடியுமா//..

அத்த்த்தானே .
அப்புறம் மதுரையத்தவிர
தமிழ்நாடே - பத்திட்டில்ல எரியும்..

மோனி said...

..//பூஜ்யம் என்றால் இல்லை என்றுதான் அர்த்தம்; பூஜ்யம் இல்லாமல் போய்விடுமா?//..

வட்டங்கள் எல்லாம் பூஜ்யங்கள் அல்ல
என்று யாரோ சொன்னது
நினைவுக்கு வந்து
அதையும் எழுதச் சொல்கிறது மனது.

இதோ
இப்போது அடுத்த வரி அகப்படாமல்
பில்லியனுக்கு எத்தனை பூஜ்யம்
என்று எண்ணிக்கொண்டிருக்கிறேனே
... அதையும் !


இப்படியாக,
பூஜ்யத்தைப் பற்றி எழுதமுடியாதபடிக்கு
நிறைவாய்
இருக்கிறேன்
என்று ஒரு சப்பைக்கட்டு மனதில் தோன்றி,
கவிதையை முடித்துவிட்டுச் சிரிக்கையில் ...

அடுத்த கவிதைக்காய்
காத்திருக்கிறது
அடுத்த
பூஜ்யத் தாள். "

மோனி said...

..//daily சோமபானம் அருந்துவதால் வரும் gasukku தீர்வாக அமையும்//..

இனிமே டெய்லியும் நைட்டு ஒரு 30 தடவை காலைல ஒரு 30 தடவை
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சொல்லிடவேண்டியதுதான்..

மோனி said...

..//மனிதனைப்போலவே உருவாக்கப்பட்ட கடவுளுக்கு மனிதனைப்போலவே கோபம் க்ரோதம் எல்லாமும் இருக்கும். கடவுள் படைத்ததாய்ச் சொல்லப்படும் மனிதன் படைத்த கடவுள், அவனைப்போலவே இருப்பதுதான் அவனுக்கும் சௌகரியம்//..

..//கடவுள் ஒரு சௌகரியம் மட்டுமே. சௌகரியங்கள் யாவும் சத்தியமும் கிடையாது சரியென்றும் ஆகாது//..

A Cause is JUST

மோனி said...

..//என் பார்வையைநான் பதியாமல்உங்கள் பார்வைக்காகப் பொய் பதிந்தால்//..

புரியுது ஆனா புரியலை.
BUT
இந்த விஷயத்தை
இருக்கு ஆனா இல்லை-ன்னு லூசுல விட முடியாதே...

இல்லை-ன்னு சொல்லியே ஆகணுமே.
இல்லை-ன்னு சொல்றதால
இல்லை-ன்னு ஆயிடாது-ன்னு நீங்க சொல்றீங்க.

ஆனா இல்லை-ங்குறதே
இல்லை-ன்னு சொல்லத்தானே..?

மோனி said...

நமக்கெதற்கு ஒரு கடவுள்...?

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

@மோனி
//நமக்கெதற்கு ஒரு கடவுள்...?//

தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்திவிடும் என்று சொல்லி என் மகளை மிரட்ட (மட்டும்).

Dr.Rudhran said...

"ஆதிமூலம் வரைந்த ஜெயகாந்தன் கோட்டோவியம் நினைவுக்கு வருகிறது."
thank you porattam, i shall strive to deserve the honour.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//மனிதனைப்போலவே உருவாக்கப்பட்ட கடவுளுக்கு மனிதனைப்போலவே கோபம் க்ரோதம் எல்லாமும் இருக்கும். கடவுள் படைத்ததாய்ச் சொல்லப்படும் மனிதன் படைத்த கடவுள், அவனைப்போலவே இருப்பதுதான் அவனுக்கும் சௌகரியம்.//


உண்மைதான்..சார்..அதனால்தான் ஒரு சாமி சைவம் மற்றொன்று அசைவம்..
ஒன்றுக்கு படைக்க சாராயம் ,மற்றொன்றுக்கு பொங்கசோறு..

Ashok D said...

//நன்றி அசோக். தவறுகள் திருத்தப்படவேண்டியவை மட்டுமல்ல சுட்டிக் காட்டப்படவேண்டியவையும்தான்.//
உங்கள பப்ளிஷ் பண்ணவேண்டாம் என்று கூறினேன் :)

Ashok D said...

//”ஓம்”னா என்னன்னே தெரியாம கோடிகணக்கான மக்கள் இருக்காங்க, அதுவும் ந்ம்மை விட செழிப்பா!

புரிஞ்சிக்கோ, முழிச்சிக்கோ
சன்ரைஸ் குடிச்சிக்கோ!//

ஓம்னாவ பத்தி எங்க நான் சொன்னேன்...

நான் ம்ம்ம்ம் என்று தானே சொன்னேன்.

புரிஞ்சிக்கோ, முழிச்சிக்கோ
ஜானிவாக்கர் குடிச்சிக்கோ!

Madumitha said...

சில நம்பிக்கைகள்...
சில கேள்விகள்...
எல்லாவற்றையும்
அசைத்து விட முடியாது
சார்.

Ashok D said...

//ஆரம்பமே நாத்திகம் தான் என்கிறார்!
ஒன்றுமில்லாததிலிருந்து தான் ஆரம்பித்தது என்பது ஆன்மிக கூற்று!, ஒன்றுமில்லை என்பது தான் நாத்திக கூற்று! ஆதார புள்ளியும், விவாதத்தின் முடிவு புள்ளியும் 0 தான்!
அதாவது நாத்திகம்!//

ஒன்றுமில்லாதிலிருந்துதான் எல்லாம் வந்தது.. எப்படி? ஒன்றுமில்லாதது என்பது உண்மையில் ஒன்றுமில்லாததா?

ஹேமா said...

கடவுள் ....அப்போ சௌகரியம் மட்டும்தான்.சத்தியம் இல்லையா !

Dr.JP.Rajendran said...

எதிர்பாராதும் புரிபடாதுமான அனுபவத்தால் உந்தப்பட்டோதான்
கடவுள் நமக்கெல்லாம் அறிமுகம்.


Religion tries to preserve this true mystery. Communism tries to preserve a false mystery (equality, justice etc..) . And experience tells us mystery cannot be preserved.

Science often disembodies by reducing this ad infinitum .. the only hope remains with the art.. which can possibly embody the mystery in to our existence..
Thanks for sharing these provoking thoughts..

ராஜ நடராஜன் said...

//இந்த ஓம் கதையை என்னிடம் சொன்னவர் என் ஆசான், ஜெயகாந்தன்.//

Thought of saying too philoshipical and beyond my limit but quote makes me to read once again to understand the content fully.

ராஜ நடராஜன் said...

டாக்டர்!படங்களுக்கு சிறு விளக்கம் கொடுத்தீர்களென்றால் உற்று நோக்குவதின் நேரம் குறையும்:)

Anonymous said...

Your introspection is in your words here. Read such stuff ad nauseum written by so many.

Not interfering.

I think, the quality of consciousness may give some elucidation.

All of us are not endowed with same quality of consciousness. The consciousness the correspondent here Vall has, or you have, and that another has, is definitely and distinctly different.

Therefore, in matters of spirit, same size does not fit all.

It is generally believed, there ,what is called, Higher Conscisousness - you may not like the word, 'higher'- the HC is found among men who are called Saints - whichever religion they came from.

Their spiritual energy is highly active. Sithars are our nearest example.

All of us have, what is nowadays called, SQ - Spiritual Quotient. But the levels are different.

In Sithars, for instance, the level is high. Just as a boy with highest level of IQ is called a wizard, so we can call the man with highest level of SQ a saint or a sithar.

The man with highest SQ has his spiritual experiences, which the man with normal or low SQ, or inactive SQ, is unable to comprehend. The men with SQ level high, give expression to their spiritual experiences, some may do so, with the intention to make others feel that - in the process, they create religion, or theology, or words like OM etc. Later on, such things may morph into ideologies or dogmas, which we hate. Their intention is all that I point out.

What we dont understand, we hate, and, some of us, love to attack.

(If you think, highest level, or high, as demeaning to you, you can replace it with 'different'.

Dr Kenneth Walker calls it 'Higher Consciousness' in his book Diagnosis of Man)

Dr.Rudhran said...

Jo Amalan Rayen Fernando,
i have no qualms about acknowledging whatever is higher, in any sphere., but
to quote jayakanthan-
"சித்தர்கள் பூமியில் செப்படிக்காரர்கள் வித்தைகள் காட்டுவதோ?
ஞானரதந்தனில் நாய்களைப் பூட்டி நடநட என்பதுவோ?"

hariharan said...

"கடவுள் ஒரு சௌகரியம். வருந்தினால் புலம்ப, அஞ்சினால் அடைக்கலம் தேட, அனுதினம் ஒரு கட்டுப்பாட்டுக்கு உதவ... "

வெரி சிம்பிள்.. அபின்,கஞ்சா,.....

Radhakrishnan said...

நல்லதொரு கட்டுரை. எனக்கு என்பது மட்டுமல்ல எவருக்குமே தேவை இல்லை கடவுள்.

ஆனால் மனிதர்கள்... நாத்திகம் பேசுவோர்க்கும், ஆத்திகம் பேசுவோர்க்கும் கடவுள் மிகவும் அதிகமாகவே தேவைப்படுகிறார்.

எல்லாம் இந்த மனிதர்களின் செயல்பாடு என்பதை எவரேனும் மறுக்கட்டுமே.

ஒருவருக்கு கடவுள் தேவையில்லை எனில் எதற்கு அதைப் பற்றிய சிந்தனை?

ஓம் என்பதன் அர்த்தம் ஒண்ணுமில்லை என்பதல்ல. விளக்கப்பட முடியாத ஒருவர் அறிந்த ரகசியங்கள் எவையும் அத்தனை எளிதாக எவராலும் உணரப்பட முடிவதில்லை. உள்ளிருக்கும் விஷயத்தை சொல்ல விருப்பப்படாதபோது ஒண்ணுமில்லை என சொல்வதில்லையா?

பூஜ்யம் என்பது வெறுமை. அந்த வெறுமை பின்னால் இருப்பதுதான் பெருமை. மனிதர்களின், உயிர்களின் பின்னால் கடவுள் வெறுமையாய் இருக்கிறார்.

ஒவ்வொரு விஷயத்தை எப்படி ஒருவர் உணர்ந்து கொள்வதைப் பொறுத்து அந்த விஷயத்தின் தன்மை அமைகிறது. இதில் அறிவு இல்லாமல் இல்லை என எவரையும் குறை கூற இயலுமா?

கடவுள் சௌகரியம். அறிவு சௌகரியம். அறிவு மாறும், கடவுள் மாறாது. அறிவு சத்தியம் இல்லை. கடவுள் சத்தியம்.

எவருக்கு தேவை எனது இந்த விளக்கங்கள்?

தேவைப்படுவோர் எடுத்துக் கொள்வார்கள், தேவைப்படாதவர்கள் கண்டு கொள்ளாது செல்லலாம், காரி உமிழ்ந்தும் சொல்லலாம்.

எவருக்குத் தேவை கடவுள்? அவரவர் தீர்மானிக்கட்டும்.

நன்றி மருத்துவரே.

Anonymous said...

ருத்ரன், ஓவியம் பிரமாதம்! என்ன வரைந்திருக்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை :-), ஆனாலும் மிக அழகாக இருக்கிறது. ஜெயகாந்தனின் profile view-வை வரைந்திருக்கிறீர்களோ?

வாசகன் said...

||ஓம் நமோ நாராயணா!
ஓம் நமச்சிவாய!

இதில் ஆரம்பத்தை கவனியுங்கள், சைவம், வைணவம் இரண்டும் ஒன்றிலிருந்து தான் ஆரம்பிக்கிறது, மூலம் சமஸ்கிருதம் தான்!
||

வால்,அடி முடி தெரியாமல் உளறும் இது போன்ற உளறல்களைத் தவிர்க்கவும்..
நமக்குத் தேவை,பார்ப்பான்,பெரியார் ஈயம்..அதை மட்டும் பேசி விட்டுப் போகவும்...
முச்சந்தியில் கால் அகட்டி நின்று கத்துபவனை வேடிக்கை பார்ப்பதைப் போல் அனைவரும் வேடிக்கை பார்த்து விட்டு அவரவர் வேலையைப் பார்ப்பார்கள் !

Dr.Rudhran said...

ஆம் ஆர்வி