Thursday, March 4, 2010

இத்துடனாவது இது முடியட்டும்.
மனமொப்பி, சட்டப்படி செல்லுபடியாகும் வயதிலுள்ள ஆணும் பெண்ணும், சுயநினைவோடும் ஒப்புதலோடும் சுகமான தருணங்களை அனுபவிப்பதை எப்படி இவ்வளவு பேர் கோபத்தொடு பார்க்கிறார்கள்? அவர்கள் இருவரும் மற்றவர் எல்லாரும் பார்ப்பதற்காக வியாபார நோக்கில் ஆபாசப் படம் எடுக்க நினைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களது அந்தரங்கத்தின் அத்துமீறல்தானே இது?

அவன் மீது கோபப்பட இப்படி ஒரு படம் தேவைப்பட்டது என்பதே கேவலமில்லையா? ஆதிசேஷன் மீது அமர்ந்து ஆண்டவனாக அவன் படம் எடுத்து வெளியிடும்போது புண்படாத இந்து மனங்கள் இப்போதுதான் புண்படுகின்றனவா? இது என்ன கோபம்? அறச்சினமா ஆவேச நடிப்பா?

திரும்பத்திரும்ப இந்த நிகழ்வு மனத்தில் நெருடும்போது அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவளுக்கு விருப்பமானவனோடு இருக்க அவளுக்கு உரிமை உண்டு. அது வன்புணர்ச்சியாகவோ வியாபாரக் கொஞ்சலாகவோ தெரியவில்லை. அவளை அவமானப் படுத்த நமக்கெல்லாம் யார் உரிமை தந்தது?

அவனது போலி ஆன்மீகநாடகத்தை விமர்சிக்கும்போது அவளையும் அவமானப்படுத்துதல் என்ன நியாயம்?

யாராவது உற்றுப்பார்த்தாலேயே உடையைச் சரிபார்க்கும் வழக்கம் எல்லா பெண்களுக்கும் உண்டு. நீச்சல் உடையில் நடிக்கும் நடிகையர்க்கும். இது அனிச்சையான மான உணர்வு. இவளை இப்படித் தொடர்ந்து காட்டும்போது அவள் மனம் எவ்வளவு வருந்தும்? சம்பளம் கொடுத்தால் நெருக்கமாகக் கட்டிலில் புரண்டு நடித்துப் பாட்டுப் பாடத் தயாராக இருப்பதால் அவளுக்கு மானம் கிடையாதா? இயல்பான மென்னுணர்வுகள் இருக்கக்கூடாதா?

மானம் ரோஷம் இல்லாதவன்தான் ஞானி என்று கபட வேடம்போட்டு குற்ற உணர்வு இல்லாமல் சிரித்துக்கொண்டு திரிய முடியும்; அவனுடன் இருப்பதாலேயே அவளுக்கும் இதெல்லாம் கிடையாது என்று முடிவெடுக்கலாமா?

அவனைத் திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும். மனத்தில் ஈரம் உள்ளவர்கள், இனி நிதானமாக அவளைப் புரிந்து கொள்ளப் பாருங்கள்.

63 comments:

Chitra said...

அவனைத் திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும்.

.......... well-said!

Anonymous said...

உங்களில் மனதளவில் கூட விபச்சாரம் செய்யாதவர்கள் இப்பெண் மீது கல்லெறியக் கடவர்கள்.
-mani

பத்மா said...

சரியாய் சொன்னீர்கள்

Anandi said...

hats-off; a real honour to womanhood

அமுதா கிருஷ்ணா said...

சரியாக சொன்னீர்கள்.அந்த பெண்ணை உயிருடன் எரிக்கிறது அந்த சேனல்..

சீ.பிரபாகரன் said...

காதலும் காமமும் உயிர் இயற்கை. அதை தடுக்கவும் தடைபோடவும் சம்மதப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.

33 வயதுடைய இளைஞன் ஒரு பெண்ணோடு உறவு கொள்ளக்கூடாது என இந்த நாட்டில் ஏதாவது சட்டம் போட்டுள்ளார்களா என தெரியவில்லை.

தனக்கு நன்மை பயக்காத எந்தவொரு நிகழ்வு பற்றியும் கவலைப்படாத சன்குழுமம் இந்த படத்தை தொடர்ந்து போட்டு காட்டுவது ஏன்?

நித்தானந்தன் என்ற ஒரு ஆணும் இரஞ்சீதா என் ஒரு பெண்ணும் மனமுவந்து உறவுகொள்வதை படம்பிடிக்கவும் அதை வெளியிடவும் சீ.டி. போட்டு விற்கவும் இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?

போராட்டம் said...

டாக்டர் இது முதல் கோணல் முற்றிலும் கோணலான கதையாக தோன்றுகிறது. துவக்கத்திலேயே, சன் டிவியின் அத்துமீறலையும், அருவெறுக்கத்தக்க ஆபாச முறையையும் கண்டிப்பது, அதே வேளையில் நித்தியானந்தத்தின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவது என்பதற்கு பதிலாக குதூகலம்தான் பல முனைகளிலிருந்தும் வெளிப்பட்டது. மீண்டும் மீண்டும் எல்லோரும் வீடியோவை பரிமாறிக் கொண்டார்கள். தங்கள் பதிவுகளில் லிங்க் கொடுத்து(ஏதோ கிடைக்காத பொக்கிஷம் போல)எல்லோரையும் பார்க்க வைத்தார்கள். இந்நிலையில் இப்பொழுது, "இத்துடன் இது முடியுமா" என சந்தேகமாக இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், சாரு நிவேதிதா கூட ப்ளோ ஜாப் பற்றி கவலைப்படுகிறார்.

//அவன் மீது கோபப்பட இப்படி ஒரு படம் தேவைப்பட்டது என்பதே கேவலமில்லையா//

இந்தப் புள்ளியில்தான் புரட்சிகர சக்திகள், முற்போக்காளர்கள் நின்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், இதற்கு மாறாகத் தான் இது நடந்து வந்திருக்கிறது.

Deepa said...

Salute!

R.A.Israel Jebasingh IAS said...

I agree with you. She will be literally dieing every moment. I also feel sorry for the Godman. This Godman is caught and others are yet to be caught. He succumbed to his human feelings.What he did was mistake but he is a human and the way the channels are REPEATEDLY telecasting his private moments is pathetic.It is like killing a person inch by inch. Yes the Godman did a mistake, but he became a human.But these channels are treating the lady and the Godman in a very very inhumane manner by repeatedly telecasting their private moments.These channels are worser than Talibans.

சந்தனமுல்லை said...

செம சாட்டையடி, டாக்டர்!

ரஞ்சிதா இவர்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால்....?

மதார் said...

U ARE RIGHT DOCTOR , THE CHANNEL FOCUS THE NEWS ON SPECIAL VIEW . ITS VERY BAD .

மணிஜி said...

ரஞ்சிதா உண்மையில் பாவம் தான்..அதுவும் அந்த வீடியோவில் அவர் வெளிப்படுத்தும் இன்னசென்ஸ்!!

ராம்ஜி_யாஹூ said...

I was (am) a sincere fan of Ranjitha . Even as a perosn I respect her.

But here she made one major blunder. She should not have gone to have s-exual relation with a sanyasi (saint).

Because as per Hindu culture a sanyasi should not have desire on food, sex, money, posts, comfort.

As a devotee we should not create desire to a sanyasi.

Hence as a devotee Ranjitha did a mistake.

If Ranjitha had s-ex affair with a business man or employee I wont object her.

மாசி said...

ஒருவரின் படுக்கையரை எட்டிப் பார்பதே கேவலமான ஒன்று இதில் அதை படம் எடுத்து போடும் இத்த நா........... கல பத்தி என்ன சொல்லுறது...... த்தூ... பனம் சம்பாதிக்க வேற வழி இவணுங்கலுக்கு கிடைகல போல. அந்த பெண் அவமாணைத்தால் தற்கொலை செய்து கொண்டால் அந்த தொலைகாட்சி நிறுவணம் அதற்கு பொறுப்பு ஏற்குமா ???
-மாசி
sivakumarmvel@gmail.com

elango said...

Highly intolerable activities.. who has given right to publish one's private affairs. whether actress or sadhu they are humans and they have every right to live their own life. the news channel was not merely giving news rather demolishing them. who has given power to broadcast one's private life.no police case filed against the media or no action taken. it is neither constitutional nor humanity. it is not at all symptom of civilized society. honestly i also very curious to watch the news but after that i felt it was brutal.people were in the film were not doing any crime then why this much big punishment .I really could not understand why people are reacting in such a way all over tamilnadu.

Anonymous said...

சமூகமும் சமுதாயமும் எப்போதுதான் எப்படித்தான் திருந்தும், இந்த அவமானம் அவளுக்கு கொடுக்கப்படும் தண்டனை எத்தனை சாமியார்கள் பிடிபட்டாலும் இந்த பெண் இனத்துக்கு எப்படி புரிய வைப்பது, இந்த பெண் ஒரு நடிகை என்பதால்தான் இந்த vedio அதிகமான கண்களை சென்றடைந்தது, ஆர்வமும் அதிகமானது, இவள் இந்த நிலைக்கு தள்ளபட்டாலா இல்லை இந்த நிலைக்கு தானே வந்தாளா. இதில் அவளது சுயநலமும் இருக்கும். இவள் மட்டும் இல்லையம் list இன்னும் நீள்கிறதாம், வெகுஜன மக்களின் நம்பிக்கையில் பேரிடி. இன்னும் எத்தனை சாமியார்கள் எத்தனை பெண்கள்

Thenammai Lakshmanan said...

well said Doctor...

ss she looks innocent in it..

Ashok D said...

எனக்கு.. இருவரையும் திட்டுவதே தவறாக தெரிகிறது

பொன் மாலை பொழுது said...

// ஆதிசேஷன் மீது அமர்ந்து ஆண்டவனாக அவன் படம் எடுத்து வெளியிடும்போது புண்படாத இந்து மனங்கள் இப்போதுதான் புண்படுகின்றனவா? //

// இது என்ன கோபம்? அறச்சினமா ஆவேச நடிப்பா? //


செருப்பால் அடித்த மாதிரிதான்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இது சம்பந்தமான என் கருத்துக்களை எங்கு சொன்னாலும் தவறாக புரிந்து கொள்ளப் படும். நல்ல வேளை ஒரு தளம் கிடைத்தது. அந்த செய்தி பார்த்ததும் உங்கள் உணர்வுகளுடன் தான் எனதும் ஒத்து போனது. ஆனால் வீட்டில் வெளிப்படுத்தவில்லை . இரண்டு adults உடைய அந்தரங்கத்தை பகிரங்கப்படுத்த யார் அதிகாரம் கொடுத்தது? ஆனால் சாமியார் மேல் கோபப்பட இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர் பிரம்மச்சரியத்தை வலியுறுத்தி நிறைய பிரசங்கங்கள் செய்துள்ளார். இவரது பேச்சுக்கும் செயலுக்கும் இடையேயான பெரும் இடைவெளி மக்களை ஆத்திரப்படுத்தி இருக்கிறது. இவரது பேச்சால் பலர் நல்லவர்கள் ஆகி இருக்கலாம். சிலர் ரஞ்சிதா போல் சிக்கி இருக்கலாம்.
இரண்டாவது பணம், பொருள், பக்தி, நேரம் என்று நாம் ஒரு அயோக்கியனிடம் செலவழித்து இருக்கிறோமே என்ற ஆற்றாமை காரணமாக இருக்கலாம். பெண்கள் பெரும்பாலும் சிதைந்து போவது விவாகத்தில் சிக்கல், கணவனின் வன்கொடுமை போன்ற மீள முடியாத சோகத்தில் இருக்கும் போது தான். சிலர் விதி விலக்காகி இருக்கலாம். காவி உடையைக் கூட மாற்ற நினைக்காதது தான் மிகுந்த கோபத்தை வரவழைக்கிறது. பல விதங்களிலும் வருத்தத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு.

சிவாஜி சங்கர் said...

மனத்தில் ஈரம் உள்ளவர்கள், இனி நிதானமாக அவளைப் புரிந்து கொள்ளப் பாருங்கள்// well said sir..

Kanna said...

அவனைவிட, வெளிபடுத்திய அவர்கள் மிக கேவலமானவர்கள்! அய்யா நமது சமூகத்தின் நாகரீக வளர்ச்சியை சந்தேகம்கொள்ள வைக்கும் இத்தகைய நிகழ்வுகளுக்கு முற்றுபுள்ளி வைக்கவும், நமது அடுத்த தலைமுறையாவது இத்தகைய அநாகரீகங்களை கடைபிடிகாமலிருக்க ஏதேனும் வழியுள்ளதா?

சைவகொத்துப்பரோட்டா said...

//அவனைத் திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும்.//


இதை விட சூடான விஷயம் கிடைத்தால்தானே இதை நிப்பாட்டுவார்கள் :))

Murali said...

டாக்டர், நீங்கள் சொல்வது சரிதான். காட்சிகள் இல்லாமல் செய்தியை மட்டும் வெளியிட்டிருக்கலாம். அவன் ஒரு "spiritual fraud " என்பதை மக்கள் அறிய செய்திருந்தால் போதுமானது.ஆனால் மக்கள் அதை நம்புவார்களா என்னும் கேள்வி எழலாம். There is no necessacity in exposing the actress and tarnishing her image.

Saran-DBA said...

News papers, magazines and tv are spoiling peoples. Yes we are not still civilized.

sikkandar said...

"உங்களில் மனதளவில் கூட விபச்சாரம் செய்யாதவர்கள் இப்பெண் மீது கல்லெறியக் கடவர்கள்."

excellent......

essusara said...

நியாயமான மனக்குமுறல் டாக்டர். அந்த பெண்ணின் மன நிலையில் இருந்து பார்க்கும்பொழுது எவ்வளவு வலி இருக்கும் என்று .இதை தொலைகாட்சியில் வெளியிடும்போது சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வீடு பெண்ணாக ஒரு கணம் யோசித்திருந்தால் இது நடக்குமா ?
நாளைகே அந்த பெண் எதாவது விபரீதமாக செய்து கொண்டால் அதையும் இவர்கள் செய்தியாக கூச்சம் இல்லாமல் வெளி இடுவார்கள். மாதர் சங்கங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன . எல்லா கட்சிகளும் மகளிர் அணி உண்டே அவர்கள் எல்லாம் மகளிர்த்தனா?

எல்லாவற்றையும் பர பர பாக்கி காசு பண்ணும் கும்பல் அதிகரித்து கொண்டே வருகிறது .மனிதம் ஏனோ தொலைந்து பொய் விட்டது.

ஜெயந்தி said...

நீங்கள் சொல்வது சரிதான்.

Anonymous said...

அவனது போலி ஆன்மீகநாடகத்தை விமர்சிக்கும்போது அவளையும் அவமானப்படுத்துதல் என்ன நியாயம்?

//

அவர் பிரம்மச்சார்யம் போதிக்கின்றார்.தன்னை ஒரு பிரம்மச்சார்யப் புனிதனாக ஊரெங்கும் இமேஜை உருவாக்கி வைத்திருக்கின்றார்.இப்படிப்பட்டவரோடு நாம் உறவு கொள்வது தவறு.அதிலும் அவர் செய்ய நினைக்கும் அந்தத் தவறுக்கு நாம் துணைபோவது பெரிய தவறு என்பதெல்லாம் அறியாது இன்னொசென்டாக சென்று அவரிடம் மாட்டிய ரஞ்சிதா உண்மையிலேயே பரிதாபத்துக்குறியவர் :(//ரஞ்சிதா இவர்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால்....?

//

நித்யானந்தா இவர்கள் வீட்டு ஆணாக இருந்திருந்தால் செய்ய மாட்டார்கள்.

Anandi said...

//as a devotee Ranjitha did a mistake.//very nice.அப்போ அந்த சாமியார்(!)?என்ன ஒரு புரிதல் Mr.ராம்ஜி_யாஹூ

Anandi said...

//ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.//thanks to nithyanand and the media for "இத்துடனாவது இது முடியட்டும்.":)

Subha said...

well said doctor

Unknown said...

ஊடகம்...
தன்னைத் தானே கற்பழிக்க தொடங்கி ரொம்ப நாட்களாகிவிட்டது...
ருத்ரனின் பார்வை....
பலமிழந்து விட்டதா ?

T S Rajan said...

You are right when you mention it is the private affair of two individuals. But then Nithyanandha is respected by his devotees for his preachings on divinity. Preachers are expected to practice first and more so such saamiyars. Regarding the lady with him, you would agree such compromises are being proposed by such ladies who have dissatisfied married life and it is these characters who corrupt the minds of even strong willed males. Nithyananda, in his prime youth has easily succumbed to her advances. Fault on both sides and very bad on the part of media to bring these photos and videos to our living room, if what is presented is true.

சீனு said...

நக்கீரன் ஒரு படி மேலே போய், "சப்ஸ்கிரஃப் செய்யுங்கள். முழு படத்தையும் ஹை டெஃபனிஷனில் பாருங்கள்" என்று விளம்பரம் செய்கிறார்கள். கேவலம். சன்னும் நக்கீரனும் செய்வது. இதுக்காத்தான் நக்கீரனை வாங்குவதையே ரொம்ப காலத்துக்கு முன்னமே நிறுத்திவிட்டேன்...

என்ன ஜென்மங்கள் இவை. ஜந்துக்கள்...

திவ்யாஹரி said...

அவனைத் திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும்.

அவனின் ஆன்மீக நாடகத்தை அசிங்கப் படுத்துவதாக நினைத்து, அவளின் பெண்மையை காயப்படுத்துகிறார்கள்.. நன்றி நண்பா..

திவ்யாஹரி said...

உங்கள் உணர்வுகளுடன் தான் எனதும் ஒத்து போனது.

its too..

Anonymous said...

ரஞ்சிதா மணமானவர். சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் கணவ்ருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், டில்லியில் இருந்து வந்து நடிக்க வேண்டி இருப்பதால் அலைய முடியாமல் பாரதிராஜா சீரியலில் இருந்து விலகிவிட்டதாகவும் சொன்னார். நித்யானந்தர் பிரம்மச்சாரி என்று சொல்லி பலரையும் நம்ப வைத்து களியாட்டம் ஆடினார். இந்த நடிகை நான் உனக்கு மட்டுமே உரியவன் என்று கணவரை நம்ப வைத்து களியாட்டம் ஆடி இருக்கின்றார்.

இங்கு ஒருவர் அவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். ஏனம்மா நீங்களும் பெண்தானே? உங்களால் இப்படி ஒரு செயலில் ஈடுபட கனவிலும் முடியுமா??

டாக்டர் நீங்க நேர்மையாளராக இருக்கும்பட்சத்தில் இந்த கமெண்ட்டை வெளியிடுங்க.

hamaragana said...

அன்புடன் வணக்கம்
நீங்கள் வெளிட்ட இந்த பதிவு சரி ஒரு ஆணும் பெண்ணின் அந்தரங்கத்தில் தலையட சன் டிவி யார்
இதே இதை வெளிடும் இவர்களில் எத்துணை பேர் யோகியமன்வர்கள் .இந்த காட்சி குடும்பத்தில் இருந்து பார்க்க முடியாமல் பட்ட கஷ்டம் ....

சரண் said...

பன் டி.வி ஒண்ணும் யோக்கியவான் இல்லை... அங்கேயும் hidden கேமராக்கள் வைக்கலாம்.. அங்கே நிறைய இடம் இருக்கிறது!

அமைதி அப்பா said...

அவர்களது அந்தரங்கத்தின் அத்துமீறல்தானே இது?//

ஆம்.

இத்தோடு முடிப்போம். நாம் நினைப்பது இனி போலி வேடத்துடன் இந்த ஆசாமிகள்( ஆ.. சாமிகள்) ஏமாற்ற வேண்டியதில்லை. பிரேமானந்தா,நித்தியானந்தா வரிசையில் இன்னொரு ஆனந்தா சீக்கிரம் வருவார்

Veliyoorkaran said...

மக்கள் செம்மறி ஆட்டுகூட்டம்னு எனக்கு இந்த பதிவுல பதியபட்டிருக்கற பின்னூட்டங்கள பார்த்தாலே தெரியுது...நீங்க ரஞ்சிதாவோட உணர்வுகளுக்கு மரியாதை குடுத்தால எல்லாரும் அதே மாதிரி ஜிஞ்சா போட்ருக்காங்க..நாளைக்கு நான் ரஞ்சிதாவ திட்டி ஒரு பதிவு போடறேன்..அங்க வந்து இதே நண்பர்கள் ஆக்ரோசமா திட்டுவாங்க..இதேதான் சார் சாமியார் கதையும்..ஒருத்தரு சொல்லிட்டா போதும்..இந்த சாமி சக்தி வாய்ந்தவர்னு ..கூட்டம் கூட்டமா போய் விழுந்துட வேண்டியது...அவருக்கு ஒரு பிரச்சனைனா எல்லாரும் கூட்டம் கூட்டமா போய் திட்ட வேண்டியது...நான் உங்களுக்கு ஜிஞ்சா அடிக்கல..உங்க வார்த்தைகள்ல இருக்கற உண்மைய என்ன மாதிரி நாத்திகவாதிகளால மட்டும்தான் முழுசா புரிஞ்சுக்க முடியும்..ஏன்னா எங்களுக்கு மட்டும்தான் தெரியும்...அவன் சாதாரண மனுசன்தான்னு...!!

Jerry Eshananda said...

சபாஸ்.

அ.வெற்றிவேல் said...

இது காசுக்காக நடந்தது மாதிரி தெரியவில்லை. அப்படி இருக்கும் போது அவனை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணை அவமானப்படுத்துவது என்ன நியாயம். முதல் நாள் முகம் மறைத்து வெளியிட்ட அந்த ஊடகம் மறுநாள் பெயருடன் முகத்தை காண்பித்து தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியுள்ளதாகத் தகவல்.. அந்த தொலைக்காட்சி நிறுவனமும் நக்கீரன் பத்திரிக்கையும் தண்டிக்கப்பட வேண்டும். காசுக்காக எதையும் செய்யத்துணியும் இந்த தொலைகாட்சியையும் நக்கீரன் பத்திரிக்கையையும் தமிழகமக்கள் புறந்தள்ள வேண்டும்..மாறாக இதனை திரும்பி திரும்பிப் பார்த்து ஆனந்திப்பது மகாக் கொடுமை..

நல்ல பதிவு!

Sundar சுந்தர் said...

இந்த நிகழ்ச்சி பற்றி கோபப்படுபவர்கள் அவர்தம் தன்னம்பிக்கை மீறிய சாமியார் நம்பிக்கைகளின் பின்னுள்ள மடமையை கோபம் மூலம் மூடிக்கொள்வதாகவே எனக்கு படுகிறது.

பங்காரு போன்றவர்கள் புற்றில் சுயம்பு சக்தி என்று புருடா விட்டு இன்று சில ஆயிரம் மாணவர்கள் கொண்ட பள்ளி நிறுவனங்கள் நடத்தும் போது, புது சாமியார்கள், அதை ஒரு career choice ஆக நினைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் - அதை நம்புவர்கள் அல்லவா முட்டாள்கள்.

இதில் உள்ள தனிப்பட்ட பெண்ணின் சுயயுரிமைமீறல் பற்றிய உங்கள் கருத்து எனக்கு புரிகிறது. ஆனால் என்ன hypocrites rule!

எல்லா பொய்மைகளும் ஒவ்வொருவிதத்தில் ஒன்றோடு ஒன்றாகி நம் சமூக முறைகளாய் இருக்கும் வரை தனிப்பட்ட முரண்பாடுகள் களைவது அதீத முயற்சி தான்.

sarul said...

at last I found a human being ,sir I salute your humane heart which lacks in modern world.
the biggest unlawful act is telecasting someones private video ,media is first to blame , the long arm of law is not interfering this which is also making big mistake .human rights is equal for every person , if they are guilty it has to be dealt in proper manner.

Anonymous said...

let this be a lesson for all those who want to take sanyasam&for those who want to gain money from them

பூங்குழலி said...

ஆதிசேஷன் மீது அமர்ந்து ஆண்டவனாக அவன் படம் எடுத்து வெளியிடும்போது புண்படாத இந்து மனங்கள் இப்போதுதான் புண்படுகின்றனவா? //

// இது என்ன கோபம்? அறச்சினமா ஆவேச நடிப்பா? //

சரியான சாட்டையடி ..இந்த விவகாரத்தில் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது சன் டிவியின் செயல்

kalagam said...

அவன் மீது கோபப்பட இப்படி ஒரு படம் தேவைப்பட்டது என்பதே கேவலமில்லையா?//


இப்போது இதற்காக புதியதாய் கேவலப்படுபவர்கள் நாளை இன்னொருவனிடம் கேவலப்படத் தயாராகவே இருப்பார்கள். ஒரு நாய்க்கு பட்டயைப்போட்டு நான்கு கொட்ட்டைகளை மாட்டி விட்டால் கூட ஏனென்று கேட்காது அதை கும்பிடக்கூடிய மனது, நாய் தனக்கு பிடித்தமான கேவலத்தை உண்ணும் போது கோபப்படுகிறார்கள். இப்போது கூட ரஞ்சிதா மீது தான் கோபம் பொம்பள வீக்னஸை வச்சு கவுத்துட்டாளே என்று, பக்தனாக இருக்கலாம் , ஆனால் பகுத்தறிவினை விட்டால் தான் பக்தன் என்ற இடம் கிடைக்கிறது. அவனின் போலித்தனங்களை அம்பலப்படுத்த வேண்டிய தருணத்தில் வேறு எந்த நடிகையோடு தொடர்பு இருக்கும் என்ற கேள்விக்கு மக்களை தாவ விட்டு விட்டார்கள் என்பதுதான் உண்மை

கலகம்
kalagam.wordpress.com

priyan said...

Ranjitha pennaga iruppadhal ungal paarvai menmayagi vittadhu pol therigiradhu.

Andha penn mattumalla idhil sambatha pattavargal including saamiyaar , sun tv.. ellorum paadhagargalae..!!
Elloridamum oru maraivana thevai irukkiradhu, adhu asingamanadhaga irukkiradhu... avvalavae..

Indha penn saamiyaarudan sallabippadhu sari enral... Ivaladhu kanavan enru oruvar irundhare... avar enna paavam seidhaar...?

Indha penn vibachaari enru naan solla varavillai... avargal kaasukkaga yaarodu vendumaanalum pagirakkoodiyavargal. Ivargalil palarukku oru nyayamana thevai irukka kooda vaaipirukkiradhu.

Ival appadiyalla icchaikaaga parathaiyaanaval. Naan kaama ichai thavaru enru solla varavillai... adhu kandavarudanellam aen enrudhan solgiren.

Mukkiyamana vishayam ennavenraal... saamiyaarukku indha pennai vida kuraivaana vayadhudhhan irukkum ena ninaikiren.

appadiyaanal avalukku innum poruppu adhigam saamiyaaraivida....

indha penn meedhu naan kalleriya varavillai... sollaponaal yarume kalleriya mudiyaadhu... kaamam ippodhu ulagaiye aatkonduvittadhu.
thavaru enraal ellorum thavaru seidhavargal... idhuve en karutthu. yaarum vidhivilakkalla.

priyan said...

ennudaiya innoru karuthu ....

saamiyaarudaiya thozhil edhirigalo.. alladhu inna piraro... ranjitha vai pagadaikaayaga payan paduthiyirukkalam....

Avarum adheedha panathukkagavo alladhu ariyaamalo udanpattirukkalam.

அமர்ஹிதூர் said...

இப்போதுதான் அந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது.இந்த பெண்மணி தேச பக்தியை நினைவூட்டும் விதத்தில் பெயரமைந்த ஒரு சினிமாவில் படு ஆபாசமாக நடனமாடியிருப்பார். வீடியோவையும், பாட்டையும் 'compare' செய்தால் சினிமாபாடல் தான் ஆபாசமாக இருக்கிறது.

Kesavaraj said...

Well-Said

ஹிப்ஸ்... said...

இன்றைய சாமியார்கள் மக்களை ஏமாற்றும் ஏமாற்று பேர்வழிகள் என்பதில் துளியேனும் சந்தேகமேயில்லை.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அய்யா,

உங்கள் பக்கத்தினை பார்வையிடுவது இது முதன்முறை.

தாங்கள் கூறியிருப்பது போல யோசிக்க பட்டு இருக்கவேண்டிய விடயம். இன்றைய மீடியாக்கள் ஏதோ கிடைத்துவிட்டது தடயம் என்று விளம்பர நோக்கத்துடனும், வியாபார நோக்கத்துடனும் செயல்படுகின்றன.

இந்த மீடியா இல்லையென்றால் இன்னொரு மீடியா இதனை மேலும் மெருகேற்றி ஒளிபரப்பும்.

இதில் பாதிக்கபடும் மற்ற மனிதர்களின் உணர்வுகளை, நிலைமையினை சற்றும் யோசிப்பதில்லை.

நித்தியானந்தாவோ அல்ல வேறு யாராக இருந்தாலும் காவி உடையினில் சங்கமம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ளபடமுடியாத ஒன்று.

மக்கள் அவர் செய்ததை தவறு என் சொல்பவர்கள் எத்தனை முறை படகாட்சிகளை ரசித்தவர்கள் என்று தெரியாது. எத்தனை பேருக்கு பரப்பினார்கள் என்று தெரியாது. அவர்களுக்கு அவ்வாறு தான் செய்வதும் ஒருவகையில் தவறு என்பதை உணர்வதில்லை.

அவர்க்கு எத்தனை ஆயிரம் பேர் பக்தர்களாய். அதில் தன்னுடைய குடும்பத்தினர் ஒருத்தருக்கும் சாமியாரோடு தொடர்பு என்றால் அவர்களால் உயிர் வாழ முடியுமா?
இந்த சமூகம்தான் விடுமா?

ஸ்ரீராம். said...

அட்சர லட்சம் டாக்டர்...

Unknown said...

//இன்றைய சாமியார்கள் மக்களை ஏமாற்றும் ஏமாற்று பேர்வழிகள் என்பதில் துளியேனும் சந்தேகமேயில்லை//

முதலில் சாமி-யார் ? என்று தெளிவுபடுத்துங்கள்

Unknown said...

சரி. இந்த வீடியொ வெளியாகி இருக்கா விட்டால் அந்த சாமியார் இன்னு்ம் ஏமாற்றி கொண்டுதானெ இருப்பான். ஒரு ஊர் ந்ன்றாக இருக்க ஒரு் வீடு கெட்டு போவது தப்பில்லையே.

gk said...

I've seen comments (at least 1000 or 10000) in many websites tell me what is the use????
if i dont like something which sun tv or dinakaran is doing just posting a comment in a blog whict abt 100 or 1000 pple see will help??????? what is the use in posting a comment like that???????
what is the use just writing in a blog??? this im writing to "கீழ்த்தரமான சன் டிவியும், தினகரன் பத்திரிகையும்!" too if possible mail me

எஸ் சக்திவேல் said...

Hi Doctor, I agree that no one has the right to enter into a bedroom , shoot the 'scene' and then publish it on the TV; This is disgusting especially when the TV channel uses it to boost it rating up.

However, on the other side, I see a lot of 'believers' starting to think. They would have not listened to anyone saying these god's agents are really dodgy. This video has a domino effect. The public opinion is changed in such a way that they are willing to 'think'. In the last vikatan, I see a good article with photos of baba, Kalki, Rajneesh and others. Vikatan would have never dared to publish such an article and lose circulation unless they are pretty confident that people's opinion is swayed in such a way that they are ready to read 'rational' article like this.

I was thinking aloud, but it is in no way justifying voyeuristic TV broadcast or journalism.

muszhaaraff said...

லிங்கம் (குறி) வழிபாடு முதல் புண்ணிய தலங்களின் சுவரோவியங்கள்,சிற்பங்கள் வரையிலும் காமமும்,புணர்தலும் புனிதமாகவும்,வணக்கமாகவும் பார்க்கப்படுகின்ற மதங்களைப் போதிக்கும் போதகர்களோ,ஆன்மீகவாதிகளோ புணர்வதென்பது சாதாரணமானது.ஆனால் தன் இள வயதிலே புலனொடுக்கம் கண்டவர் என்ற அடையாளத்தோடு மக்களை தன் பக்கம் ஈர்த்த நித்தியானந்தர் சுவாமிகள் இவ்வாறு செய்தமையானது, ஒரு தனி மனித அந்தரங்கத்தை அநாகரீகமான முறையில் ஒளிபரப்பிய சன் டீவியின் செயலைப் போன்றதே....

Madhavan said...

Dear Dr.Rudhran,

I fully agree with what you say.

1. Nithyananda has not done anything which can be even remotely called as illegal.

2. Yes he is a sanyasi but what is the big deal there. Even our ancient time Rishis had wives, (rishipathnis).And the Hindu scriptures define various grades of sanyasa and many grades of sanyas are allowed to live a family life. In the vaishnavite tradition in which the Acharyan is the most important, apart from a few jeers, most of the acharyas are grihasthas.

3. What was shown repeatedly on TV was a private affair between two consenting male and female that too in the privacy of their bedroom. It is a criminal offence to have aired it publicly.

4. The only mistake, if it can be called so, committed by Nithyananda is to preach something which he has not practised. And this does not attract any legal punishment. Even if it so, before Nithyananda gets punished, 90% of our politicians should get punished - do they practice what they preach ?

Anonymous said...

பலரும் சன் டிவி மீது எதற்காகவோ கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுதுவது போல் தோன்றுகிறது.நித்யானந்தா என்கிற சாமியார் ஒரு பெண்ணோடு உறவு கொள்வது தவறு இல்லை.ஆனால் எத்தனை லட்சம் பெற்றோர்கள் தங்கள் மகள் மகனுடன் ,எவ்வளவு நம்பிக்கையோடு அவரைப் புனிதராக நினைத்து வணங்கியிருப்பார்கள்.அந்த நம்பிக்கைத் துரோகம் (தன்னைப் புனிதனாக சொற்பொழிவுகள் மூலம் காட்டிக் கண்டது)எப்படி ஒத்துக் கொள்ள முடியும்.அவ்வளவு அப்பட்டமாகக் காட்டிய பின்னும் அவருக்கு வக்காலத்து வாங்க பல பேர் எத்தனை விதமாக திசைதிருப்புவது மட்டுமல்ல,சாதாரண செய்தியாக சொல்லியிருந்தால் பக்தர்கள் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை காரணமாக நம்பியிருக்கவும் மாட்டார்கள்.ஒரு நம்பிக்கைத் துரோகம் எப்படி எல்லாம் திசைதிருப்பப்படுகிறது.1.ஆளும் கட்சிக்கு பணம் கொடுக்கவில்லை.2.டிவி கம்ம்பெனியுடன் நிலத்தகறாரு.3.நடிகை திட்டமிட்டே எடுத்தார்.4.இதுவே வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்றால் வெளியில் சொல்வார்களா?.5.பெண்ணிய உரிமை மீறல்.6.தனி நபர் உரிமை மீறல்.இதுவே ஒரு குடும்பப் பெண் அவர் மீது விழுந்து புரண்டதைக் காட்டியிருந்தால் உங்கள் மனப் புழுக்கம் சரி எனத் தோன்றும்.ஆனால் கணவன் இருக்கும்போதே இப்ப்டிச் செய்யும் பெண்ணிற்க்காக இவ்வளவு தூரம் பரிந்து பேசவேண்டிய அவசியம் இல்லை.ஏசு நாதர் போல் சுத்தமானவன் மட்டுமே கல்லெரி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களால் தவறு செய்யும் ஆண்களையும், பெண்களையும் எண்ணிக்கையில் அதிகரிக்கத்தான் முடிந்திருக்கிறது.

Post a Comment