1972.. முதலாம் ஆண்டில், MBBS , BDS இரு பிரிவினரும் அப்போது ஒன்றாகப்பயிலும் காலம்.
ஏதோ ஒரு வகுப்பு.. நான் குறிப்பு எடுப்பதைப்போல் பாவனை செய்து கொண்டிருந்து விட்டு, அதிலும் சலிப்பு தோன்ற அந்த டைரியை மூடித் திறந்து ஆடிக்கொண்டிருந்தபோது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவன் என்னிடம் பேச்சு கொடுக்க, அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தோம்..
அவனிடம் நான் கேட்ட கேள்விகளும் அவனது பதில்களும்:
"உங்க வீடு?"
"தி.நகர்"
உங்கப்பா என்ன செய்றார்?"
"பாட்டு எழுதுவார்"
ஓ என்று என் டைரியை பிரிக்க, அதில் அந்தக் காலத்தின் என் வழக்கத்தின்படி, கண்ணதாசனின் பாடல் வரிகள்..
ஹூம் இவங்கப்பா பாட்டு எழுதுவார்னு சொல்றானே என்னன்னு சொல்றது என்று நான் யோசிக்கும்போதே அவன் சொன்னான்..
"இது எங்கப்பா எழுதினது தான்.."
அவனிடம் சில ஆண்டுகள் கழித்து,
"உங்கப்பாவை விழாவுக்கு வரச்சொல்றியா" என்றபோது அவன் சொன்னபதில்,
"இதெல்லாம் நீயே பாத்துக்கப்பா, என்னை மாட்டிவிட்டு அப்புறம் தராறு பண்ணாதே"
பல வருடங்கள் கழித்து அவனுடைய அண்ணன் மகனின் கல்யாணத்தில் பார்த்தவுடன் கட்டிக்கொண்டான். இப்படி என்னிடம் நேசம் பாராட்டுபவர்களை எல்லாம் என் மனைவிக்கு அறிமுகம், அதனால் அவள் ஆச்சரியத்தோடு பார்த்தபோது நான் சொன்னது..
"அவன் பெயர் கமால்.
இன்று பல் மருத்துவர், என்றும் நெஞ்சிற்கு இனியவர்!..தன் தந்தையால் அல்ல, தன்னால்.
maladies of the mind..
9 years ago
4 comments:
கமால் என்றொரு மகனா..?
நான் இதுவரையில் கேள்விப்பட்டதில்லை டாக்டர்..
மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பவர்களுக்கு என்றும் மரணமில்லை..
நிஜமான உதாரணம் கவிஞர்தான்..
கவிஞர் ஒரு புதிர்.. அவருக்கு என்றும் மரணமில்லை...
கவிஞர் கண்ணதாசனின் நினைவு இந்த நூற்றாண்டு மட்டும் அல்ல, எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தும் இருக்கும் (கம்பன், பாரதி நினைவுகள் போல)
குப்பன்_யாஹூ
புது தகவல்.
Post a Comment