Monday, May 4, 2009

மே 10, மாலை

மே 10, மாலை என்று பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்படும் நிகழ்ச்சி குறித்து சில சிந்தனைகள்...
தீபாவை தெரியும், மற்றவர்களில் சிலரைப்பார்த்திருக்கிறேன், சிலருடன் பேசியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் என் பங்கேற்பு எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
நேரடியாய் பரிச்சயம் ஆகாமலேயே நன்கு பழகியவர்களைப்போன்றதொரு நெருக்கத்தை வலையுலகம் நம்மில் பலருக்கு அமைத்துத்தந்துள்ளது.

ஆனாலும்---
இப்போதுதான் அன்புள்ள தீபா என்று ஆரம்பித்து..
உன் பதிவில் தான் இதன் ஆரம்பம், அதனால் உனக்கே இதற்கான முதல் வாழ்த்தும் நன்றியும்.
இவ்வளவு பரபரப்பாக இது எதிர்பார்க்கப்படுவது உள்ளே ஒருவித சலனத்தையே ஏற்படுத்துகிறது.
இது வரை என்னை யாருமே வருகிறாயா என்று கேட்கவில்லை, ஆனால் நான் வரத்தான் போகிறேன்.. இம்மாதிரி விஷயங்களுக்கெல்லாம் அழைப்பு தேவையில்லைதான்..ஆனாலும் ஏனோ ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.
இன்னும் பொறுப்பாக..வருவதாய் அறிவிக்கப்படுபவர்களின் முன் ஒப்புதலோடு இனி வரப்போகும் நிகழ்வுகள் அமைய வேண்டும்.
இது ஒரு கெளரவப்பிரச்சினையல்ல.., ஒரு செளகரியம் சம்பந்தப்பட்ட விஷயம்.
நாளை சந்திப்போம்....ஷாலினியிடமாவது கேட்டு நிச்சயித்து விட்டார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
என்று எழுதி முடித்தேன் ...
பதிவர்கள் உருப்படியாகவும் காரியங்கள் செய்வார்கள் என்று காட்ட முயற்சிக்கும் இந்த நிகழ்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துகளும் இருந்தாலும்,

ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு சிலர் அறிவிப்பில் முன்வைக்கப்பட்டால் அவர்களிடம் ஒப்புக்க்காகவேனும் ஓர் ஒப்புதல் அவசியம் என்பது என் கருத்து .

சரி
அன்புடன் சில விஷயங்களுக்கு சிலரை அழைக்கவேண்டியதில்லை, அவர்கள் வருவது இயல்பாக எதிர்பார்க்கப்படும் ஒன்று என்றே நாம் நினைத்துக்கொண்டாலும்.. அந்த நெருக்கம் எப்படி வலைஉறவுகளில் உருவாகிறது என்பதை இப்போது நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். இதை ஆங்கிலத்தில் சற்றே யோசித்திருக்கிறேன் ..
இதை இன்னும் ஆழமாக நாம் கவனித்தால் நாளை இதன் மூலம் இன்னும் சில சமுதாய சாத்தியங்கள் எனக்கு கனவுகளாக விரிகின்றன.

அப்புறம்,
நாளைஎதிர்பார்ப்புகள் குறைய இருந்தால் மகிழ்ச்சிகள் கூடும் என்பது என் எண்ணம். நான்உரையாற்ற வரவில்லை, உரையாடத்தான் வருகிறேன்

சந்திப்பின் பின் இது குறித்து எழுத முயல்கிறேன்.
இதை வருத்தத்தோடு இல்லை ..அக்கறையோடு தான் எழுதுகிறேன்

9 comments:

Tech Shankar said...

படிக்க ஆவலுடன் உள்ளோம்

//சந்திப்பின் பின் இது குறித்து எழுத முயல்கிறேன்.
இதை வருத்தத்தோடு இல்லை ..அக்கறையோடு தான் எழுதுகிறேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாங்கள் வெளியூரில் இருப்பதால் உங்கள் எழுத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறோம் ஐயா.

GNU அன்வர் said...

எதிர் பார்க்கிறோம் ஆவலுடன் தமிழில் தொடர்ந்து எழதவும் வாழ்த்துக்கள்

நர்சிம் said...

டாக்டர் ருத்ரன் ஸார், உங்களின் அலைபேசி எண்ணிற்காக இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறேன்.

லக்கியின் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் உங்களுக்கு மடலில்(உங்கள் பதிவில் தரப்பட்டிருக்கும் மெயில்முகவரிக்கு, மன்னிப்புக் கடிதம்(இரண்டு முறை) அனுப்பினேன் ஸார். எண் இல்லாததால் அழைக்க முடியவில்லை..உங்களுக்கு ஒரு வேளை அந்த மடல்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், மன்னித்து விடுங்கள்.இன்றைய நிகழ்வில் தயவுசெய்து வந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் ஸார்.

டாக்டர் ஷாலினி மேடம் மெயிலில் கன்பர்மேஷன் கொடுத்திருக்கிறார் ஸார்.

மன்னித்து, இன்று வருகை தாருங்கள்.

தவறுக்கு வருந்தி, மன்னிப்புக் கோருகிறேன்.

Unknown said...

நல்ல காரியத்துக்கு கேட்காவிட்டாலும் ஒப்புதல்தான் ஆனாலும் கேட்பது நல்லது என்று அழகாக சொல்லப்பட்ட நல்ல கருத்து.

நாங்கள் வர இயலாவிட்டாலும் அதன் பின்னான பதிவுகளை எதிர் நோக்குகிறோம்.

குப்பன்.யாஹூ said...

ருத்ரன் சார் தயவு செய்து வாருங்கள், முன் ஒப்புதல் வாங்காமல் இருந்தது எங்கள் தவறுதான். இருந்தாலும் பதிவர்களின் ஒரு கன்னி முயற்சிக்கு உங்களி வருகை மிகவும் பயன் படும்.

மன்னிப்பு கேட்ட சகா நரசிம் முக்கு நன்றிகள் பல.

குப்பன்_யாஹூ

அமிர்தவர்ஷினி அம்மா said...

மே - 10, நேற்றைய உங்களின் வருகைக்கும், கலந்துரையாடலுக்கும் மிக்க நன்றி ருத்ரன் சார்.

Deepa said...

நேற்று உங்கள் வருகைக்கும் பயனுள்ள கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸார்.

eniasang said...

இதை இன்னும் ஆழமாக நாம் கவனித்தால் நாளை இதன் மூலம் இன்னும் சில சமுதாய சாத்தியங்கள் எனக்கு கனவுகளாக விரிகின்றன.
இத இத இதத்தான் நானும் எதிர்பார்த்தேன்

Post a Comment