ஒரு கேவலமான விஷயத்திற்கு
என் மனம் குதூகலம் அடையும் என்று நினைத்ததே இல்லை; அப்படி ஆனதற்காக குற்ற உணர்வும் இல்லை. அவன் சாமியார் என்று இருப்பதால்
அவன் யாரோடு படுக்கிறான் என்பதை மிகப்பெரிய விஷயமாக்குகிறார்களே, சாமியார் என்று அவனுக்குப் பட்டம் சூட்டிச் சூடம் கொளுத்தியவர்கள் யார்?
ஒரு சாமியாரின் வேடமாவது கலைந்ததே
என்ற மகிழ்ச்சியோடு, மீதம் இருப்பவர்கள்
இன்னும் எச்சரிக்கையோடு செயல்படுவார்களே என்றும் ஒரு கவலை வருகிறது. இவர்களிடம் இருப்பவர்கள்
தான் அவனிடமும் இருக்கிறவர்கள்.
அவனை ஆக்கியது யார்?
படிப்பை முடிக்காமலேயே, உடன் படித்த பிறரை விடவும் கோடிக்கணக்கில் அவன்
சொத்து சேர்க்க வைத்தது யார்? பணமும் புகழும் கூடி வரும்போது
நிதானமும் பக்குவமும் அவனிடம் இருக்கும் என்று எதிர்பார்த்தது யார்?
இன்று கல்லெறிபவர்களுமல்லவா
நேற்று வரை பூச்சொரிந்தவர்கள்? திடீரென்று
அவன் இந்துத்வ எதிரியாகவோ துரோகியாகவோ ஆக்கப்படுவது ஏன்?
அவன் பெயரில் வந்ததையெல்லாம்
அவனா எழுதினான்? அவனுக்கொரு பிம்பம் உருவாக்க
அந்த எழுத்துவியாபாரியும் ஒரு காரணமில்லையா? நிழல் எழுத்தாளனாவது
காசு வாங்கிக்கொண்டு எழுதியிருப்பான், கூவிக்கூவிப் பொய் விற்ற
‘அறிவுஜீவி’? இவர்களெல்லாம் இன்று கழன்று
கொள்ள, அந்த முட்டாள் மாட்டிக்கொண்டான். மக்கள் மீது நடத்தப்பட்ட
இந்த ஆன்மிக மோசடி ஒரு குற்றமென்றால் மாட்டிக்கொள்ளும்வரை கூட்டாளிகளாகச் செயல்பட்டவர்களை
என்ன செய்யப் போகிறோம்?
ஆன்மீக மோசடி என்பது என்ன? இதற்கெல்லாம் கைது செய்ய முடியுமா? இன்று குதிக்கும் இந்துக்கட்சி அவனை இந்துக்களின் பிரதிநிதி என்று எப்போது
ஏற்றுக்கொண்டது? இவன் இந்து இவன் இந்து அல்ல எனும் தரநிர்ணய
உரிமை இவர்களுக்கு யார் கொடுத்தது?
மானம் ரோஷம் குற்ற உணர்வு எதுவும் இல்லாதவன் இனி என்ன திருந்திவிடப்போகிறானா இல்லை தற்கொலை செய்து கொள்ளப் போகிறானா?
மானம் ரோஷம் குற்ற உணர்வு எதுவும் இல்லாதவன் இனி என்ன திருந்திவிடப்போகிறானா இல்லை தற்கொலை செய்து கொள்ளப் போகிறானா?
-------------
பரவலாக உலா வரும் அந்தப் படத்தில்
அவர்கள் இருவரும் அன்புடன் இணைந்திருப்பதாகவே தோன்றுகிறது. முழுப் படத்தையும் பார்க்க
காசு தரும் எண்ணம் எனக்கு இல்லை. இதற்கும் ஒரு திருட்டு டிவிடி வந்தாலும் தேவையில்லை.
விற்பனையாகும் படத்திற்கு நடிகன் என்ற முறையில் அவனுக்கும் ஒரு தொகை போய்விடுமோ?
அவனை வைத்து வியாபாரம் செய்தவர்கள், வசதி சேர்த்துக்கொண்டவர்கள் இப்போது அவனை வைத்து
குற்றம் சாட்டிப் பெயரும் பணமும் சம்பாதிக்க முனைப்பாய் இருப்பவர்களோடு சேர்ந்து கொள்வார்களே.
மீதி இருக்கும் சாமியார்-குருமார்களைப் பற்றியெல்லாம் பரிசீலிப்பது எப்போது?
இவனிடமிருந்து ஆரம்பிப்போம், கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும்.
45 comments:
இவனிடமிருந்து ஆரம்பிப்போம், கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும். //
சூப்பர் சார்.. இன்னொறு கவலையாக மற்றவர்கள் இன்னும் கவனமாக இருப்பார்கள்.. எனும் போது அதே கவலை எனக்கும்..
//மாட்டிக்கொள்ளும்வரை கூட்டாளிகளாகச் செயல்பட்டவர்களை என்ன செய்யப் போகிறோம்?//
yeah same thought with me....
நமக்கு மறதி அதிகம்...அதுதான் கவலையாய் இருக்கிறது.
பேர், புகழ், பணம், இவற்றை அனைவரும் நாடுகிறார்கள் யாரவது ஒருவன் இதையெல்லாம் ரூ 2500 கட்டி ஒரு வாரம் வகுப்பில் சேர்ந்தால் உட்கார்ந்த்படியே பெற்றுவிட்லாம் என்று சொல்லும் போது மக்கள் நம்புகிறார்கள்..
சோம்பேறிகளின் கூட்டம் தான் சாமியார்களை உருவாக்குகின்றன..
நாம் சிறுவயதிலிருந்தே கேட்கபடும் கதைகளில் கஷ்ட்டபடும் மக்களுக்கான் வெற்றி போராடி கிடைக்காது கடவுள் ஒரு நொடியில் அவதாரமெடுத்து நொடியில் கஷ்ட்டங்கள் துடைக்கப்படும்.ஆழ்மனதில் பிரச்ச்னைகளை ஒரு நொடியில் தீர்ந்துவிட வேண்டும் என்கிற ஆசை தான் ஒரு வார தியான வகுபிற்கு 10,000 கட்ட நம்பிக்கை தருகிறது அதுவும் கட்டும் பணத்தைவிட பன்மடங்கு அதிகம் வரபோகிறது என தெரிந்த்வுடன் தான்..
இது போன்ற சாமியார்கள் எத்தனை பேர் வந்து சீரழிந்தாலும், மழையில் முளைக்கும் காளான்கள் போல மேலும் மேலும் முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களும் விட்டில் பூச்சிகள் போல, வெளிச்சத்தை தேடி அலைந்து செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் வாழ்க்கைக்கு விடையை இன்னொருவன் சொல்வான் என்று மனிதர்கள் அலையும் வரை, இன்னும் இன்னும் பல ஆயிரம் சாமியார்கள் முளைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அன்பார்ந்த தோழர், இந்தப் பதிவையும் படித்து கருத்துச் சொன்னால் மகிழ்வேன்.
http://www.savukku.net/2010/03/blog-post_03.html
ருத்ரன் ,
அந்த எழுத்து வியாபரி மட்டும் அல்ல , நிச வாழ்வில் வாழத்தெரியாத அந்த எழுத்து வியாபரி , சாமியார்ப்பயல்களிடம் மூளையை அடகு வைத்துவிட்டு அவரின் புகழ் பாடிக் கொண்டிருந்த வேளையில் , சுவராசியமாக கதை எழுதும் காரணத்திற்காக சில பதிவுலக இன்டலக்சுவல்களும் சேர்ந்து ஜல்லி அடித்தார்கள். போட்டோ எடுத்து போட்டுக் கொண்டார்கள்.
தனிப்பட்ட வாழ்வில் இப்படி சாமியார்விரும்பியாக இருக்கும் இவர்கள் முன் பின் பக்கவாட்டு நவீனம் பேசுவதும் , வொலகவிசயம் பேசுவதும், அதற்கு சில இன்டலக்சுவல்கள் ஜல்லி அடிப்பதும் காமடிக் கதம்பம்.
**
இந்துத்துவ வியாதி கதை எழுதியும் பெரியாரைப் பற்றி விளக்குகிறார். எல்லாம் காலக் கொடுமை.
**
நேற்றுவரை இந்த ஆள் நண்பராக இருந்தார் யாரும் விமர்சிக்கவில்லை. இன்று எதிரியாகிவிட்டார். விமர்சிக்கிறார்கள்.
***
உங்களுக்கும் இது வரலாம்.
நீங்களும் ஒருவகையில் அப்படித்தான்.
சமஸ்கிரகத்தை நக்கிக்பிழைக்கும் நாய்கள் என்று சொன்ன ஒருவரை , அவர் சுவராசியமாக கதை எழுதுவார், நண்பர் என்றால் பொதுவில் எனவே விமர்சிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதும் அப்படியே.
**
தமிழ்ப்பதிவுலகத்தில் கூட இன்னும் ஜோசியத் தொழில் பார்ப்பவர் மற்றும் சாமியார்த் தொழில் பார்ப்பவர்களுக்கு பலர் உற்சாகப்படுத்துகிறார்கள். ஜால்ரா சத்தம்தான் அதிகமே தவிர அங்கேயும் விமர்சிப்பவர்கள் குறைவு.
என்னமோ போங்கள். பட்டால்தான் புத்தி வரும்.
:-(((((
**
கடவுள் கதவை திறந்து விட்டார்.அத்தனை அம்மா சாமிகளும் இப்படித்தான் மந்தகாச புன்னகையுட்ன் யாரை பார்த்தாலும் ஒரு உஷார் குறிப்பு மனதில் வரனும்.
கடவுளை மனிதன் தாமே அறிந்து கொள்ள முடியாதா, இந்த பூசை வழிபாடு எதுவுமின்றி,முடியலையா வருகிற போது வரட்டுமே ஞானம்.
சரியாகச் சொன்னீர்கள் அய்யா..அவனுடன் சேர்ந்து பிழைத்து வந்தவர்கள்..இன்று அவனைத்தூற்றியும் சம்பாதிப்பார்கள்..இவர்களுக்கு எந்த வழியிலாவது வருமானம் வரவேண்டும்...வேறு எந்த நோக்கமும் இல்லை..
sex thavara?
ஒரு மன இயல் நிபுணரான உங்களிடம் கேட்கிறேன்.
அந்த சாமியார் மீது எனக்கு ஈடுபாடோ பக்தியோ கிடையாது, ஆனால் அவரின் பேச்சுக்களை பொதிகை தி வி யிலும் குமுதத்திலும் படித்து இருக்கிறேன்.
என் பார்வையில் அவர் ஞானியா, நேர்மையானவரா,சத்தியமானவர என்பது எல்லாம் தெரிய வில்லை.
ஆனால் நிறைய புத்தகங்கள் படித்து இருக்கிறார். தந்திரம் தெரிந்து இருக்கிறார். மக்களை நம்பக் செய்யும் திறமை இருக்கிறது, அது ஒன்றும் எளிய கலை அல்ல.
எனவே இத்தனை விபரம் உள்ள ஒரு நபர், இந்த மாதிரி காம காரியங்களை காமரா முன்பு செய்வாரா.
அந்த அளவுக்கா அவருக்கு விபரம் தெரியாமல் இருக்கும்.
இதில் ஏதோ வேற ஒரு மறைவு வேலையோ திட்டமோ இருப்பதாக தெரிய வில்லையா உங்களுக்கு
சண் தொலைக்காட்சியும் காவல் துறையிடமோ, நீதி மன்றத்திலோ இந்த சீ டி யை கொடுத்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க சொல்லாமல், சட்டதை தங்கள் கையில் எடுத்து கொள்வது சரியா.
அடுத்தவரின் படுக்கை அறை விசயங்கள் மீது மட்டும் நமக்கு இவ்வளவு ஆர்வம் வருவது ஏன். ஹார்மொன்ஹல், உளவியல் ரீதியான கரணங்கள் உள்ளனவா.
அவனுக்கு கிடைத்தது யோகம் எனக்கு கிடைக்க வில்லையே என்ற எரிச்சலா இது.
ஒரு வேளை சிறிய வயது நடிகையாக இல்லாமல் ஒரு வெள்ளைகார பெண்மணியுடன் அல்லது இந்தோனேசிய பெண்மணியுடன் இவர் உறவு வைத்து இருந்த கட்சியாக இருந்தால் எனது ஈர்ப்பு குறைவாக இருக்குமோ.
//
மானம் ரோஷம் குற்ற உணர்வு எதுவும் இல்லாதவன் இனி என்ன திருந்திவிடப்போகிறானா இல்லை தற்கொலை செய்து கொள்ளப் போகிறானா? //
ருத்ரன் சார் !!!
பதிவின் உள்ளம்சம் அருமை.
ஆனால் மானம் ரோஷம் இருப்பவர்கள் குற்ற உணர்ச்சிகள் உடையவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற தொனியில் மேற்கண்ட வாக்கியம் இருக்கின்றதே !!!
கைய்யக் குடுங்க டாக்டர் சார்.
நித்தி விசயத்துல வந்த கட்டுரைகளிலேயே வினவு கட்டுரையும் உங்கள் கட்டுரையும் தான் நல்ல கணம்.. அவர்கள் இதன் பின் இருந்த
அரசியலை அலசியிருந்தார்கள்.. நீங்கள் உளவியலைத் தொட்டிருக்கிறீர்கள்..
அந்த ஓவியம் நீங்கள் வரைந்ததா?
I agree with your post.
I am really concerned about innocent people who follow this charlatans. I am also a victim of worshipping one such godman. In my situation, right from my childhood onwards, I was forced to believe him. Now fortunately I am out of that organization. But I really wonder how on this earth are people who are CEOs, Prime Minister, President could really be deceived by this godmen ? Can you please explain this ?
//இன்று கல்லெறிபவர்களுமல்லவா நேற்று வரை பூச்சொரிந்தவர்கள்//
இன்று மட்டும் தெரிவது இதற்கு முன்பு தெரியாமல் போனதெப்படி?
நேற்று இரவில்தான் தப்பு செய்ய ஆரம்பித்தாரா?
//ஒரு சாமியாரின் வேடமாவது கலைந்ததே என்ற மகிழ்ச்சியோடு, மீதம் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையோடு செயல்படுவார்களே என்றும் ஒரு கவலை வருகிறது. இவர்களிடம் இருப்பவர்கள் தான் அவனிடமும் இருக்கிறவர்கள்.//
சூப்பர்
//பணமும் புகழும் கூடி வரும்போது நிதானமும் பக்குவமும் அவனிடம் இருக்கும் என்று எதிர்பார்த்தது யார்?//
நாம் தான் :(
//அவன் பெயரில் வந்ததையெல்லாம் அவனா எழுதினான்? //
ஹி ஹி ஹி நீங்கள் கிணறு வெட்டுகிறீர்கள் சார் !! பல பூதங்கள் வரும்
//விற்பனையாகும் படத்திற்கு நடிகன் என்ற முறையில் அவனுக்கும் ஒரு தொகை போய்விடுமோ?//
ஹி ஹி ஹி
--
அசத்தல் இடுகை சார்
ஒவ்வொரு வரியும் சாட்டையடி
நாம் திருந்த நிறைய விஷயங்கள் உள்ளன
அருமையான பதிவு சார்.
//எனவே இத்தனை விபரம் உள்ள ஒரு நபர், இந்த மாதிரி காம காரியங்களை காமரா முன்பு செய்வாரா.
அந்த அளவுக்கா அவருக்கு விபரம் தெரியாமல் இருக்கும்.//
யாஹீராம்ஜி அவர்களுக்கு !
எத்தனை கில்லாடியான தவறிழைப்போரும் தடயங்களை விட்டுவிடுவதாக துப்புத்துலக்கும் துறை கூறுகிறது.
இவரோ காமபோதையில் தவழ்கிறார்; பாய்கிறார்,துடிக்கிறார்...அதனால் கோட்டை விட்டுவிட்டார்.
பலநாட்கள்ளன் ஒரு நாள் மாட்டுவான்...கிராமங்களில் கிழடுகள் கூறுவது.இந்த நகர்புற ஹய்ரெக் ஆசாமிக்குத் தெரியாமல் இருக்கலாம்.
இவன் அவளுடன் சல்லாபித்தது பிரச்சனையல்ல; ஆனால் அதற்கு ஆத்மீகப் போர்வை போட்டு மக்களை ஏமாற்றிக் காசுபறித்ததே தவறு.
இவன் பிரமச்சரியம் பற்றிப் போதித்தானாம்; அதை இவனெல்லா? முதல் பயின்றிருக்க வேண்டும்.
உழுத்தம் பிடிமாதிரி இருந்து கொண்டு; இவனுக்கு ஒன்றுமே வேலை செய்யவில்லையென இவனை
நம்பிய கூட்டதை என்னென்பது.
இனி இந்தக் கூட்டம் இன்னுமொரு காவியுடன் ஓடுங்கள்.முதல் இந்தக் கூட்டதை அடிக்கவேண்டும்
ஆன்மீகத்திற்கு குருக்கள் தேவையில்லை என்ற உங்களின் பழய பதிவை இங்கே நினைவுகூர்கிறேன்!
ருத்ரன்,
சாமியார் சாமியாரகவே என்றும் இருக்கிறார்கள்.
இந்தமாதிரி ஆட்கள் சொல்லும் கதைகளை நீங்களும் படிக்கிறீர்கள் நானும் படிக்கிறேன்.
நீங்களும் நானும் அதைக் கடந்துவிடுகிறோம்.
அதே சமயம் அந்த கதை எழுதுபவரும் படிக்கிறார், கதை எழுதுபவர்பாடும் துதியையும் ,அவரின் விளம்பரத்தையும் அவரின் சிஷ்ய கோஸ்டிகளும் படிக்கிறார்கள்.
பலவீனமானவர்கள்.
உட்கார்ந்து ஆராதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
பிம்பம் கலையும்போது கட்சி மாறி அடுத்த சாமியாரிடமோ அல்லது கதை எழுதியிடமோ போய்விடுகிறார்கள்.
**
1.சாமியாருக்கென்று எந்த அரசியலமைப்ப்புச் சட்டமும் கிடையாது.
2.அவர் யாரையும் வண்புனர்வு செய்யவில்லை. யாரும் புகார் செய்யவில்லை.
3.அவரின் படுக்கையறைக் காட்சியை ஒளிபரப்பியது தவறு.
4. எந்த முன்னறிவுப்பும் இல்லாமால் ப்ரைம்டம் செய்தியில் இது போன்ற அடல்ட் கண்டென்ட் காட்சிகளை ஒளிபரப்பியது ஊடகவிதிகளின்படி குற்றம் என்றே நினைக்கிறேன்.
5. இதே ஊடகத்தை சார்ந்த சில குடும்ப உறுப்பினர்கள், மேஜிக் பாப்ஸிடம் அருள் வாங்கினார்கள் . பாப்ஸ் முதல்வரின் வீட்டிற்கே வந்து அருள் கொடுத்தார். அந்த மேஜிக் பாப்ஸின் மேஜிக் வித்தைகள் You tube ல் இருக்கிறது. அதை ஒளிபரப்புவார்களா?
6.இது ஏதேனும் சாமியார்த் தொழில் போட்டியாகக்கூட இருக்கலாம். ஊடகம் இதற்கு தெரிந்தோ தெரியாமலோ பலியாகி இருக்கலாம்.
**
எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் சொதப்பியுள்ளது...
7. ஒரு மன நல மருத்துவராக இருந்து கொண்டு .....
//மானம் ரோஷம் குற்ற உணர்வு எதுவும் இல்லாதவன் இனி என்ன திருந்திவிடப்போகிறானா இல்லை தற்கொலை செய்து கொள்ளப் போகிறானா?//
என்று எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது. தற்கொலை செய் / ஏன் செய்யவில்லை?..... என்ற தொனியில் உள்ளது.
:-((((((((
.
//மானம் ரோஷம் குற்ற உணர்வு எதுவும் இல்லாதவன் இனி என்ன திருந்திவிடப்போகிறானா இல்லை தற்கொலை செய்து கொள்ளப் போகிறானா?//
அதீத குற்ற உண்ர்வு தான் மனநலம் பாதிக்கபட முதல் காரணம்!
தான் செய்தது தப்பேயில்லை என்று நினைப்பவனுக்கு எப்படியிருக்கும் குற்ற உணர்வு! நம்ம அரசியல்வாதிகளையும் சேர்த்து தான் சொல்றேன்!
இன்னும் வரதராஜன் விஷயம் மனதை விட்டுப் போகவில்லை என்பதால்தான் இவன் என்ன தற்கொலையா செய்து கொள்ளப்போகிறான் என்று எழுதிவிட்டேன். அது தற்கொலைக்கு தூண்டலாகத் தோன்றினால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படித் தேடிதேடி என்னிடம் குறை கண்டுபிடிப்பதற்காக மிக்க நன்றி கல்வெட்டு, தொடருங்கள்.
வால், அந்தப்பதிவின் சுட்டி:
http://www.vinavu.com/2009/03/06/gurus/
இது என் ஆங்கிலப்பதிவில் எழுதப்பட்டதை பெயர் வெளித்தெரிவிக்க அவசியம் இல்லாத தோழரின் மொழிபெயர்ப்பு.
மக்களோ , சாமியாரோ திருந்த வேண்டியது அவசியமில்லை., ஒரு வேலை நான் சொல்வது சரியில்லை எனில், இந்த விசயத்தில் நாம் என்ன செய்தோம் (கற்றோம்) என்று பார்போம்.!
கும்பகோணம் பள்ளிகூட தீ விபத்து.,
ஸ்ரீரங்கம் திருமண மண்டபம் விபத்து.,
சுனாமி போன்ற விபத்துகளில் நாம்.,
மாணவிகள் பஸ்ஸில் எரித்த வழக்கு.,
பிரேமானந்தா.,
கோயம்புத்தூர் மத கலவரங்கள் \விநாயக ஊர்வல கலவரங்கள்.,
காசு கொடுத்தால் உடனடி கற்பக தரிசனம்.,
இன்னும் பல.,
தயவு செய்து திருந்திவிடாதீர்கள் ., லஜ்ஜை இல்லாமல் வாழ்வது நமது பிறப்புரிமை !
நல்ல பதிவு , சார். நான் என்ன நினைத்தேனோ அதை எழுத்து வடிவில் காண்கிறேன் உங்கள் பதிவின் மூலம்.இவை அனைத்திற்கும் அவரை குருவாக ஏற்று வழிபட்ட மூடர்களை தான் சொல்ல வேண்டும்.இன்னும் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்களோ?சொல்ல முடியாது.எதுவும்நடக்கும்.
"இன்று கல்லெறிபவர்களுமல்லவா நேற்று வரை பூச்சொரிந்தவர்கள்"
மிகவும் சரியான வார்த்தைகள்.
என்ன, இன்னும் சில நாட்களில் இதுவும் நமக்கு மறந்து போகும்.அதுதானே இன்று நடைமுறையில் உள்ளது.
/இவனிடமிருந்து ஆரம்பிப்போம், கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும்./
அதே....இனியாவது ஆரம்பிப்போம்.
//மீதி இருக்கும் சாமியார்-குருமார்களைப் பற்றியெல்லாம் பரிசீலிப்பது எப்போது? இவனிடமிருந்து ஆரம்பிப்போம், கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும்.//
வணக்கம் சார்,
இவனிடமிருந்து ஆரம்பிப்போம், கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும். நிச்சயமாக...!
என்னுள் தோன்றும் கேள்வி.
சாமியார்களை யார் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் போட்டார்கள், அப்படி அந்த சட்டத்திற்கான அவசியம் என்ன?
இந்த சாமியார்கள் ஒன்றுக்கு இரண்டாக திருமணம் செய்து கொள்ளட்டுமே. ஏன் இந்த வேஷம்?
ஆன்மீகத்தையும் தாண்டி ஒரு தனி மனிதனின் மனநிலை ஆய்வில் உங்கள் கருத்து எப்படியிருக்குமென்று எதிர்பார்த்தேன்.இடுகையில் எனது தேடல் பூர்த்தியடையவில்லை.கூடவே தலைப்பு ஏனைய விசயங்களைப் போல் இதுவும் நம்மை கடந்து போகும்.நினைவிலிருந்து உருவினால் வட்டப்பொட்டு சந்திரசாமி முதல் சாமியார் சமாச்சாரம் ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது.பின் தாழ்நிலை அமைதியில்(Low profile) மக்களின் கண்முன்னிருந்து காணாமல் போய் விடுகிறார்கள்.இதுவும் ஒரு தற்காலிக பரபரப்பே.வாழ்வையே பரபரப்பாகும் வித்தையில் இந்திய ஊடகங்கள்,அதுவும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
//படிப்பை முடிக்காமலேயே, உடன் படித்த பிறரை விடவும் கோடிக்கணக்கில் அவன் சொத்து சேர்க்க வைத்தது யார்? //
அறியாமையில் வாழும் மக்களும், மற்றும் இந்த மாதிரி சாமியார்களின் புகழ் பாடும் ஊடகங்களும்.
எதாவது ஒரு சாமியாரை தேடி அவர் நிம்மதி/பணம்/உடல்நலம் தருவார் என்று சென்று கொண்டிருக்கும் மக்கள் திருந்தாதவரை இவர்கள் தங்கள் ராஜாங்கத்தை நடத்தி கொண்டு தான் இருப்பார்கள்.
தங்கள் பதிவு இவர்களுக்கெல்லாம் நல்ல சவுக்கடி.
@@இவனிடமிருந்து ஆரம்பிப்போம், கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும்./
இதே வாசகத்த என் தாத்தா பிரேமானந்தா மாட்ணப்ப சொன்னாரு...அப்பறம் எங்கப்பா சங்கராசார்யார் மாட்ணப்ப...இப்போ நீங்க நித்யானந்தருக்கு...நாளைக்கு நான் சொல்லுவேன் சார்...ஜக்கிக்கோ இல்ல கல்கிக்கோ...ஆனா, பெருசா எதுவுமே மாறிடாது...படிச்சிட்டு தலைய ஆட்டிட்டு வேற ஒரு சாமியார கும்புட போய்டுவாங்க...ஆனா இந்த வரி மட்டும் எப்பவுமே உயிரோடையும் படிக்க கவர்ச்சியாவும் இருக்கும்..ரஞ்சிதா மாதிரி...! :)
அவனை வைத்து வியாபாரம் செய்தவர்கள், வசதி சேர்த்துக்கொண்டவர்கள் இப்போது அவனை வைத்து குற்றம் சாட்டிப் பெயரும் பணமும் சம்பாதிக்க முனைப்பாய் இருப்பவர்களோடு சேர்ந்து கொள்வார்களே
............இந்த சாமியார்கள், தானாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். இப்பொழுது கூட, மாட்டி கொண்டதுக்கு ஒரு அசிங்கமான பின்னணி இருக்கலாம்.
நம் வீடுகுள்ளே வந்து விட்ட ஆபாச கூத்து அரங்கேறி இருக்கிறது. தொலை காட்சி ஊடகங்கள் மக்களையும் அரசு யந்திரங்களையும் தங்கள் கட்டுக்குள்ளே வைத்திருப்பது மீண்டும் ஒரு முறை தெளிவாகியுள்ளது. இல்லை என்றல் இது போன்ற சென்சிடிவான விசயங்களை எடிட் செய்யாமலே ஒளி பரப்பி உள்ளது. இதை பார்க்கும் குழந்தைகள் , விடலை பயன்களின் மனோ நிலை கேள்வி குறிதான்.
சாமியார்களின் முகத்திரை மீண்டும் ஒரு முறை கிளிபட்டிருகிறது. எந்த ஊடகங்கள் nityanandavai தூக்கி வைத்து ஆடியோதோ அதே ஊடகங்கள் குழி தோண்டி புதைத்து விட்டது
டவுசர் பாண்டி... said...
நமக்கு மறதி அதிகம்...அதுதான் கவலையாய் இருக்கிறது.
****************************
அது தான சார் நம்ம பிளஸ் பாயிண்டே!
டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு .. உங்கள் தமிழ் வலைப்பதிவுகளை வாசித்தேன்.சமூக அக்கறையும் ஒரு தத்துவப்பார்வையும் கூடிய உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடித்திருக்கின்றன.சுவையாகவும் இருக்கின்றன.தொடர்ந்து வாசிக்க ஆர்வமூட்டுகின்றன.ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். எழும்பூர் ம்யூசியம் தியேட்டரில் உங்களுடைய இரண்டு நாடகங்களை நான் பார்த்தேன்.இன்னும் பல காட்சிகள் அப்படியே இனு பார்த்ததுபோல இருக்கிறது.அன்று முதல் இன்று வரை நீங்களும் 'உயிரோடு' இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
மதிப்பிற்குரிய ருத்ரன் அவர்களுக்கு,
பிம்பங்கள் உடைபடும்போது மந்தை மனங்கள் கொள்ளும் பேரவலம்தான் எத்தனை பரிதாபகரமானது.
அந்த நிலையிலிருந்து அவர்கள் மீண்டுவரவாவது இது போன்ற செய்திகள் வெளிச்சத்துக்கு வருவது நல்லதுதான்.
எழுத்து வியாபாரிகளைப் பகடைகளாக்கிக் கொள்ளும் இவர்களின் தந்திர குணத்தை ஜெயமோகனும்,நீங்களும்தான் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
இது குறித்து என் வலையிலும் ஒரு சிறிய பதிவு உண்டு.
முடிந்தால் வாருங்கள்.
http://masusila.blogspot.com/2010/03/blog-post.html
இது போன்ற சென்சிடிவான விசயங்களை எடிட் செய்யாமலே ஒளி பரப்பி உள்ளது. இதை பார்க்கும் குழந்தைகள் , விடலை பயன்களின் மனோ நிலை கேள்வி குறிதான்
********************************
தோழரே!
தொலைகாட்சிகள் ஒளிபரப்பும் டான்ஸ் நிகழ்ச்சிகளில் இல்லாத ஆபாசமும் அருவருப்பும் சமூகத்தில் நடக்கும் உண்மையை பார்க்கும்போது வந்து விட்டதா? இதைப் பார்த்தாவது கடவுளுக்கு புரோக்கர் வைத்துக் கொள்வது தவறு என்ற முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது. சில நிகழ்ச்சிகள் எல்லாம் எல்லை மீறிப் போய் ரொம்ப நாளாகிவிட்டன.(உதா. ஐ.பி.எல் சியர் லீடர்கள் , ராணி6 ராஜா யாரு, மானாட .). நிஜம் மட்டும் கசக்கிறதா? விடலைகளின் பாதுகாப்பான மனோ நிலையை எல்லாம் அல்பங்களுக்கு ( மீடியாக்களுக்கு) நாம் காவு கொடுத்து வருஷங்கள் பதினைந்துக்கு மேல் ஆகின்றன நண்பரே! இதில் நியூஸ் சேனல்கள் என்ன ஏமாளிகளா? அவர்களுக்கு இந்த மாதிரியான சமயம் தானே தீபாவளி பொங்கல் எல்லாம்!
Well said RUDHRAN...
நல்ல பதிவு
//மீதி இருக்கும் சாமியார்-குருமார்களைப் பற்றியெல்லாம் பரிசீலிப்பது எப்போது?//
உண்மைதான் இல்லாத கடவுளை வைத்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைக்கும் மதங்களை
தோலுரிக்க விடயம் அறிந்தவர்கள் முன்வரவேண்டும். மத நம்பிக்கைகாரர்களின் மனம் புண்படும் என்று தயங்குவது இனியும் சரிவராது. பெரியார் அப்படி நினைத்திருந்தால் இன்று எமது தமிழர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் எண்ணிப்பாருங்கள் நண்பர்களே.
நகைச்சுவையாக அழகாக எழுதி இருக்கிறீர்கள். அதுவும் // புல் போதையில் ஒருமுறை வாந்தியெடுத்தார் என்பது வேறு விசயம்// சிரிப்பை அடக்க முடியவில்லை. இதுபோல தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
//ஆன்மீகத்திற்கு குருக்கள் தேவையில்லை என்ற உங்களின் பழய பதிவை இங்கே நினைவுகூர்கிறேன்!//
ஆன்மீகத்திற்கு குருக்கள் தேவைதான்
Politicians like this only, ketpadhai koduthaal silent, illai endraal violent. Aduthavan silentaa saidhadhai violentaa kaatraan, mudhalil ivanai arrest seiyanum, because avalum udandhaiyaaga irukkum bodhu.... idhil yaarum emattrap padavaillai / emattra villai, idhu personal,
idhai thiruttu thanamaaga padam eduthavanaiyum, adhuthavanga secretai veliyittavanum thaan mudhal kuttravaali. Adhil irukkum ponnu / avan, avan meliyo / aval meliyo case koduthaal appo adhu thavaru endru sollalaam, iruvarum inangi yarukkum theriyaamal saidhadai yaarukkum theriyaamal padam eduthu sambaarikkum ivargal indha naal varai avargalukk thunai ponavargal thaanea? ippo enna ivvalavu vilambaram?
டாக்டர், இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக நீங்கள் தொட்டிருக்கலாமோ என்ற எண்ணத்துடன் பின்னோட்டம் இட வந்தேன்,இன்னொரு பதிவை கண்டு மகிழ்ச்சி.இதை முடித்துவிட்டு அதற்கு வருகிறேன். போலிகள் புத்தர் காலத்திலும் உண்டு என்பதை அறிந்திருக்கிறோம். புலியை பார்த்து சூடு போட்டு கொண்ட பூனைகள். Spirituality has become a fashion more than a passion. ஆன்மிகம்,அரசியல்,சினிமா மூன்றும் பின்னி பிணைய காரணம் மூன்றின் நோக்கமும் மூன்றானத்தால்,"பணம்,புகழ்,காமம்". In a period where business are giving importance to ethics and social responsibility, it is disgusting to note these people have forgetten their core values. இருட்டில் இருக்கும் குருட்டு மனிதன், வழி நடத்துபவன் பார்வையில் ஒளி உள்ளதா என்பதை அறிய வேண்டும் என்பது ந்யாயம் இல்லை என்றே தோன்றுகிறது. யாரையும் பின்பற்ற தேவையில்லை என்பது பலரை பின்பற்றிய பின்பு தானே மண்டைக்கு உரைத்தது. சிலர் நித்தியுடன் தொடங்கலாம், பலர் அடுத்தவருக்காக காத்திருக்கலாம். எது எப்படியோ ஆன்மிக தேடல் பலருக்கு, மூலன் தமிழில் குருடாட்டமாகவே உள்ளது.
//நிழல் எழுத்தாளனாவது காசு வாங்கிக்கொண்டு எழுதியிருப்பான், கூவிக்கூவிப் பொய் விற்ற ‘அறிவுஜீவி’? இவர்களெல்லாம் இன்று கழன்று கொள்ள, அந்த முட்டாள் மாட்டிக்கொண்டான். மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த ஆன்மிக மோசடி ஒரு குற்றமென்றால் மாட்டிக்கொள்ளும்வரை கூட்டாளிகளாகச் செயல்பட்டவர்களை என்ன செய்யப் போகிறோம்?//
அடுத்து ஒரு சாமியாரை தேடுவார்களோ?
samooha maatram varum varai ivanhal irukkathan seivarhal
பயம் என்ற ஆயுதத்தை முதலில் மதங்கள் வைத்திருந்தன இப்போது இவன்கள்,,,
அவன் அவன தன்னையே நம்பனும் முதல்ல,,,
இன்று கல்லெறிபவர்களுமல்லவா நேற்று வரை பூச்சொரிந்தவர்கள்? திடீரென்று அவன் இந்துத்வ எதிரியாகவோ துரோகியாகவோ ஆக்கப்படுவது ஏன்?
அவன் பெயரில் வந்ததையெல்லாம் அவனா எழுதினான்? அவனுக்கொரு பிம்பம் உருவாக்க அந்த எழுத்துவியாபாரியும் ஒரு காரணமில்லையா?
-------------
Wonderful ! I Agree 100 %.
Post a Comment