அல்லாவுக்கு எந்தப்படமும் கிடையாது, கூடாது.
யேசுவிற்கும்,மேரிக்கும்
இரண்டுதான், ஆனால், ராமன், க்ருஷ்ணன் தவிர
ஏனைய இந்துக்கடவுள் பிம்பங்களெல்லாம் நான்கு அல்லது அதற்குமேற்பட்ட கைகள்
கொண்டிருக்கின்றன..நான் எழுத முனைவது கடவுளின் கைகளைப்பற்றியல்ல, அந்தக்கைகளைக் கொண்டுவந்த
தன் பெயரைப்பொறித்துக்கொள்ள நினைக்காத கலைஞர்களைப்பற்றி.. அது பற்றி மட்டுமல்ல, அப்படியொரு
கலாசாத்தியத்தின் நுண்ணறிவு பற்றியும்.
உலகின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவர் Frank Netter. அவரது ஓவியங்கள் இன்றைக்கும் உடற்கூறு கற்கும் மருத்துவ
மாணவர்களுக்கு உதவுகின்றன. அவரை Michelangelo of Medicine
என்று சிலர்
அழைப்பதுண்டு! அவர் வரைந்த தோளின் ஓவியம் இது. இதில் இனி எதுவும் கூடாது, குறையாது. இந்த
சித்திரத்தில் உள்ளது போல் தான் நம் எல்லார் தோள்களும் இருக்கின்றன, ஒவ்வொரு தோளிலும்
ஒரு கையுடன்.
இந்திய கலைஞர்கள் ஒரு தோளில் இரண்டு கைகளைப் புகுத்தியதைப்
பாருங்கள். உடற்கூறு மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஓவிய-சிற்பக்கலைஞர்களுக்கும் அடிப்படை பாடம். இருக்கும் ஒரு துளையில் இரண்டு
கைகளைப்பொருத்தியது தான் இந்திய சாகசம்.
கடவுள் உருவத்திற்கு எதற்கு பல கைகள்? முதலாவதாக கடவுள்
என்னும் ஓர் அரூபப்பிரக்ஞைக்கு எதற்கு உருவம்? ஒரு கட்டத்தின் அவசியம் என்பது தான் கடவுள் என்னும்
மர்மமாயை. புரியாதவற்றின் ஒரு collective noun பெயராக!
பயமுறுத்த, பண்படுத்த, புத்திசொல்ல.. என்று பலவிதங்களில் கடவுள் எனும் விஷயம்
மனிதனுக்குப் பயன்பட்டு வந்தது. அந்நாளில் இதுவே நன்கு விற்பனையாகக்கூடிய சரக்காக
ஆதிக்கம் செலுத்திய வர்க்கத்தினரால், ப்ரத்யேக உரிமையும் கொண்டாடப்பட்டது. இதுவே வெவ்வேறு
வகைகளில் வெவ்வேறு பேதங்களையும் மக்களிடையே உருவாக்க, நம் நாட்டில்
பயன்படுத்தப்பட்டது. இப்போது நான் எழுதிக்கொண்டிருப்பது, கலாபேதம் பற்றி.
கலைகளில் பேதம் உயர்வுகூட்டும், சமுதாய அரசியல் பேதங்களைப்போலல்லாமல்.
Multiple exposure எனும் முறையில்
இப்படி ஒரே உருவத்திற்கு ஆயிரம் கைகள் உள்ளது போல் காட்டமுடியும், நன்கு
அமைக்கப்பட்ட நாட்டியத்தில் ஒரே பெண்ணுக்கு ஆயிரம் கைகள் விரிவதைப்போலவும்
காட்டவும் முடியும்.
ஆனால் இவை ஒரு கோணத்தில் மட்டுமே நிஜமென்று நம்பவைக்கும், நம் இந்திய சிற்பிகளின்
கைவண்ணத்தில் எந்த கோணத்தில் பார்த்தாலும் நான்கு கைகள் சாத்தியம்
என்றே நம்பத்தோன்றும்.
சிலசமயங்களில் ஒரே தோளின் இரண்டுகைகளை சாமர்த்தியமாக ஒரு
சின்னத்துணியின் உதவியுடன் இவர்கள் சாத்தியமாக்கியிருப்பார்கள்.
அப்படியொருசாகசம் கூடச்செய்யாமல் சிலர் இதைச் சாத்தியமாக்கி இருப்பார்கள்.
அப்படியொருசாகசம் கூடச்செய்யாமல் சிலர் இதைச் சாத்தியமாக்கி இருப்பார்கள்.
இதைப்பற்றி என்னை நினைக்கத்தூண்டியது நான் இப்போது
படித்துக்கொண்டிருக்கும் ஒரு புத்தகம். Deepanjana Pal எழுதிய The Painter . இது
ரவிவர்மாவைப்பற்றிய நூல். Agony and Ecstasy என்று Michelangelo பற்றி இருப்பது போல், Lust for Life என்று Van Gogh பற்றி இருப்பது
போல் நம் கலைஞர்களைப்பற்றிய நூல்கள் இல்லை. அந்த விதத்தில் நான் இதுவரை படித்த
நூறு பக்கங்களில் இந்நூல் ஒரு நிறைவையே அளிக்கிறது.
படித்துக்கொண்டிருக்கும்போதுதான், ரவிவர்மாவின் ஸரஸ்வதி படமும் நினைவுக்கு வந்தது. அதில் அவளுக்கு நான்கு கைகள். நான்கு கைகள் என்பதையே உணராதவண்ணம் அது வரையப்பட்டிருக்கும். அவளுக்கு நான்கு என்ன அறுபத்திநான்கு கைகள் கூட இருக்கலாம், இருக்கட்டும். கடவுள் என்பது ஏன் இப்படி ஒரு அதீத பிம்பமாகவே நமக்குக் காட்டப்படுகிறது?
படித்துக்கொண்டிருக்கும்போதுதான், ரவிவர்மாவின் ஸரஸ்வதி படமும் நினைவுக்கு வந்தது. அதில் அவளுக்கு நான்கு கைகள். நான்கு கைகள் என்பதையே உணராதவண்ணம் அது வரையப்பட்டிருக்கும். அவளுக்கு நான்கு என்ன அறுபத்திநான்கு கைகள் கூட இருக்கலாம், இருக்கட்டும். கடவுள் என்பது ஏன் இப்படி ஒரு அதீத பிம்பமாகவே நமக்குக் காட்டப்படுகிறது?
மனித முகமும் உடலும் கடவுளுக்குக்கொடுத்த கலைஞன் ஏன் சில
அதிகூறுகளையும் இணைத்தான்?
முதலில்
மனிதக்குறுகள் ஒரு பரிச்சயத்தின் விளைவாக வரும் அந்நியோன்யத்தை உருவாக்க, இரண்டாவது அப்படி
வரும் நெருக்கத்தின் இடையிலும் நீ வேறு அது வேறு என்பதை நிழலாகவாவது நினைவுறுத்த.
ரவிவர்மாவுக்கு மு பலநூறு ஆண்டுகளாக தேவியர் சிற்பங்களாக
உருவாக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்திருந்தபோதும் ரவிவர்மா தான் அன்றாடம்
சந்திக்கும் முகங்களை தெய்வங்களுக்குப் பொருத்திய முதல் கலைஞன். ஆனால், அவன் கூட அவளை
ஒரு தெய்வமாக வரையும்போது,
இன்னும் இரண்டு
கைகள் கூடுதலாக வரைய வேண்டியிருந்தது. இரண்டு கைகளோடு அதே படம்
வரையப்பட்டிருந்தால், ரசிக்கப்பட்டிருக்கும், ஆனால்
வணங்கப்பட்டிருக்குமா தெரியவில்லை.
நிஜங்களைவிட மிகைகளை ரசிப்பதும் வியப்பதும் கண்டுகேட்டு
அதிசயிப்பதும் தானே மனித குணம். இதுதானே அன்று தெய்வங்களையும் பின்பு
தலைவர்களையும் உருவாக்கியது! ஒரு கூர்மையான கலைஞன் மனித மனத்தின் இந்த கோணத்தைக்
கணக்கிலெடுத்துக்கொண்டு உயர்படைப்பைத் த்ருவான், ஒரு கோணல் புத்தியுள்ளவன் அந்தப் படைப்பை
வைத்துக்கொண்டு பிறரை அடக்கி மயக்கி மிரட்டி வைப்பான். கடவுள் இருவருக்குமே
உதவுவதைப்போல், சாமான்யனுக்கு
உதவுகிறதா?
கடவுள் நம்பிக்கை என்பது அச்சத்தின் வெளிப்பாடாக அமையாமல், அன்பின்
இன்பத்தின் ஒரு இளைப்பாறலாக அமைந்தால்..
அப்போது ஒவ்வொரு மனமும் தன் அகக்கண்ணாடியில் தன்முகத்தை கடவுள் முகமாகப்
பார்த்துக்கொள்ளும்.. கடவுள் என்று பேச ஆரம்பித்தாலேயே கற்பனைகளும் இயல்பாகவே
வந்துவிடுகின்றன.
17 comments:
உண்மை தாங்க ஐயா. இப்படி, இயல்புக்கு மாறாக உள்ள ஒரு உருவத்தை, பல கைகள் கொண்ட ஒரு உருவத்தை சரியாக வரைவதோ, செதுக்குவதோ பெரிய மேட்டர் தாங்க.
"அப்போது ஒவ்வொரு மனமும் தன் அகக்கண்ணாடியில் தன்முகத்தை கடவுள் முகமாகப் பார்த்துக்கொள்ளும்.. "
கீதையோட மொத்த Content இதுலயே சொல்லிட்டீங்க. ஒரே ஒரு வித்யாசம், கீதையில், மனம் ஒரு Invisible matter, ஆன்மா தான் Core Matter. மற்றபடி மேட்டர் சேம் தான் : )
அருமையான கோணத்துல யோசிச்சு இருக்கீங்க! வாழ்த்துக்கள்!
அத்தனை கை வ்க்கிறாங்க, ஏன் கால் மட்டும் ரெண்டோட நிறுத்திகிறாங்க!?
கீழ யார் பார்க்க போறான்னா?
கடந்த வாரம் முதுமலையைத் தாண்டிய பண்டிபூர் வன விலங்குகள் சரணாலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே, ஒரு நான்கு கைகளுடனான ஒரு சிலையைப் பார்த்தேன். அது ஒரு போர்வீரர்களின் சிலையாகத் தோன்றியது.
அப்பொழுதுதான் நினைத்தேன், எதற்காக இவர்களுக்கும் 4 கைகள் என்று.
அதற்கான பதில் உங்கள் இடுகையில் கிடைத்தது.
நன்றி
அந்த படத்தையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
டாக்டர் நல்ல பதிவு பல விஷயங்களையும் யோசனைகளையும் இது முன் வைத்தது எனலாம்...
அன்புடன்
ஜாக்கி
/கடவுள் நம்பிக்கை என்பது அச்சத்தின் வெளிப்பாடாக அமையாமல், அன்பின் இன்பத்தின் ஒரு இளைப்பாறலாக அமைந்தால்/
அழகான வார்த்தையாடல்!பூங்கொத்து!
//நிஜங்களைவிட மிகைகளை ரசிப்பதும் வியப்பதும் கண்டுகேட்டு அதிசயிப்பதும் தானே மனித குணம். //
உண்மைதான்....கற்பனைகளிலும் ரசனைகளிலும் உருவாகும் பொருளுக்கு அழகேற்றுவதும், மெருகேற்றுவதும் ஒரு தனித்திறமைதான்...
இப்போதைய தேவை எல்லா மனிதர்களுக்கும், நீங்க கூறிய கடைசி பத்தியில் உள்ள புரிதல்.
கட்டுரை அருமை.
ரவிவர்மா தான் அன்றாடம் சந்திக்கும் முகங்களை தெய்வங்களுக்குப் பொருத்திய முதல் கலைஞன். ஆனால், அவன் கூட அவளை ஒரு தெய்வமாக வரையும்போது, இன்னும் இரண்டு கைகள் கூடுதலாக வரைய வேண்டியிருந்தது. இரண்டு கைகளோடு அதே படம் வரையப்பட்டிருந்தால், ரசிக்கப்பட்டிருக்கும், ஆனால் வணங்கப்பட்டிருக்குமா தெரியவில்லை.
நிஜங்களைவிட மிகைகளை ரசிப்பதும் வியப்பதும் கண்டுகேட்டு அதிசயிப்பதும் தானே மனித குணம்
மிகைகள் வியப்பு காட்டி வணங்க வைக்கின்றன .ஆனால் பிற மதங்களில் இவ்வாறு இல்லையே ஏன் ?
அருமை டாக்டர்.
இன்னொரு ஆயிரம் வருஷத்துக்கு அப்பறம் காங்கிரஸ மதமாக்கி காந்திய கடவுளாக்கி , அவருக்கு எட்டு கை வெக்கப் போறாங்க பாருங்க !
கடவுளை மனிதனை தாண்டி வேறு படுத்தி காட்ட அதிகமான கைகள் மட்டும் அல்ல !! தலைகளும்,கால்களும் , கண்களும் பல்வேறு தெய்வ உருவங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன , எனக்கு தெரிந்து இது பயமுருத்தலே தவிர வேறில்லை :)
கலை நோக்கம் மூட நம்பிக்கையின் முன் மண்டியிடுகிறது !!!
கடவுளை மனிதனை தாண்டி வேறு படுத்தி காட்ட அதிகமான கைகள் மட்டும் அல்ல !! தலைகளும்,கால்களும் , கண்களும் பல்வேறு தெய்வ உருவங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன , எனக்கு தெரிந்து இது பயமுருத்தலே தவிர வேறில்லை :)
கலை நோக்கம் மூட நம்பிக்கையின் முன் மண்டியிடுகிறது !!! //
கடவுளை நம்பாட்டி நரகம் தான் என்பது பயமுறுத்துதல் இல்லையா?
அது என்ன ஆலோசனையிலா சேரும்!?
//கடவுளை நம்பாட்டி நரகம் தான் என்பது பயமுறுத்துதல் இல்லையா?
அது என்ன ஆலோசனையிலா சேரும்!?//
வாலு, நிச்சயம் அதுவும் பயமுறுத்தல் தான் , இப்போ யாரு இல்லன்னு சொன்னது,
சொர்க்க, நரக கோட்பாடுகளின் ஆதார சுருதியே மனித மனதின் பேராசை மற்றும் பயம் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் !!
வேணும்னா ஒரு ஈமான்தாரி (இறை நம்பிக்கையாளர் ) கிட்ட கேட்டால் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் :)
//கடவுளை நம்பாட்டி நரகம் தான் என்பது பயமுறுத்துதல் இல்லையா?
அது என்ன ஆலோசனையிலா சேரும்!?//
வாலு, நிச்சயம் அதுவும் பயமுறுத்தல் தான் , இப்போ யாரு இல்லன்னு சொன்னது,
சொர்க்க, நரக கோட்பாடுகளின் ஆதார சுருதியே மனித மனதின் பேராசை மற்றும் பயம் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் !!
வேணும்னா ஒரு ஈமான்தாரி (இறை நம்பிக்கையாளர் ) கிட்ட கேட்டால் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் :)
ஒரு ஈமான்தாரி (இறை நம்பிக்கையாளர் ) கிட்ட கேட்டால் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் :) //
ஹாஹாஹா
இருந்தா தானுங்களே பதில் சொல்வாங்க!
பலமுறை கேட்டாச்சே!
போங்க பாஸ்,
கேளுங்கள் கொடுக்கப்படும் , தட்டுங்கள் திறக்க படும்னு , இயேசு -மன்னிக்கணும், ஈசா சொன்னது தெரியாதா?
என்னை கைவிட்டீரோ என்று அவரே கத்திய போது நீங்கள் எம்மாத்திரம்?
உங்களுக்கு பதில் மனிதனிடமும் இல்லை அவன் கற்பனையில் உண்டான கடவுளிடம் இல்லை.
மனதை சாந்த படுத்தி கொண்டு பொய் பொழப்ப பாக்கலாம் பாஸ் :))
அருமையான பதிவு.
Post a Comment