சுஜாதா நினைவு நாள் என்பது கூட முகநூல் முழங்கித்தான் தெரியுமளவு ஆகி விட்டது வாழ்க்கை. இங்கே சுஜாதாவை முகநூலில் இம்சை நான் செய்த்தில்லை, ஆனால் மின்னஞ்சலில் கொஞ்சமும் நேரிலும் தொலைபேசியிலும் இம்சித்திருக்கிறேன்.
முதல் சுஜாதா நைலான்கயிறு மூலம்தான், அதுவும் வாராவாரம். அதிலும் அப்போது எஸ்.பாலு ஓவியம்தான் முதல் ஈர்ப்பு..அப்புறம்ம்ம்ம்ம் (சுஜாத்தாத்தனமாய்) அங்கங்கே…..
ஒரு முறை ட்ரைவின்னில் நண்பர்களிடம், “மேல பார்ரா..பொட்டசியம் பெர்மாங்கனேட் கலந்த வானம்..” என்று ஆரம்பித்து சுஜாதாவை சிலாகித்ததும் நினைவுக்கு வருகிறது. நகுலன் தொகுத்த குருக்ஷேத்ரம் நூலில் ஸ்ரீரங்க எஸ்.ஆர். எழுதியதை ‘ இது சுஜாதா ஸ்டைல் ஆனா சுஜாதவை விட பெட்டர்’ என்று பேசியது எல்லாம் நினைவில் வருகிறது.
அந்த சுஜாதாவை நேரில் பார்த்தபோது…அது குமுதம் அலுவலகம். என்ன மாதிரி போஸ் பெண்கள் கொடுத்தால் போடப்படும் என்று சொல்லி, இதுக்கெல்லாம் ஸைக்கலாஜிகலா ஏதாவது இருக்கா என்று (இருக்காதே எனும் நமுட்டுச்சிரிப்புடன்) கேட்டார்.
தனக்கு வேண்டிய ஒருவரை, என் க்ளினிக் அழைத்து வந்தார். ஸ்கிஸோஃப்ரீனியா சார், என்றேன், தெரியும் என்றார். (ஆனாலும் அப்புறம் எழுதிய ஆ, மற்றும் ஸில்வியாவில் நோய் பற்றி சரியாய் எழுதவில்லை).
நடுவில் அப்போது ஓஹோவென்று வளர்ந்த ஜெஜெ டிவியில், “சார் உங்க கனவுத்தொழிற்சாலை ஸீரியல் பண்ணட்டுமா” என்று கேட்டபோது “ட்ரை பண்ணுங்க” என்றார். அரசியல் மாற்றத்தில் அது அம்போவென்றானது. (அதற்காக ஸில்க்கிடம் முதன் முறை தொலைகாட்சிக்காகவும் பேசிமுடித்தபின்!!).
அப்புறம்…சில மின்னஞ்சல்கள்..
//dear sir
i am rudhran, a psychiatrist in chennai.
though i have met you on a couple of occasions i am not presumptuous to imagine
tht you would recollect me.
i have embarked on a book for which i am stuck with
using a nice/right word for `cult'.
would you be able to send an apt word for the same?
i know it is a bother, but i could not think of any
other source.
thank you
with respects
--
Dear Dr Rudhran
Ofcourse I know You We consulted you in xxxxxxxxx 's case
I see you inseveral tv appearances
'cult' has a religious connotation suggestive of imposition by a
small group
pitivAtha vazhipAtu comes close
Sujatha
---
dear sir
thank you very much.
it is deeply heartening to see you responding to
me.
i shall not disturb you in this manner often, but i
still have some words that niggle my language when i attempt to use them in
tamil- relaxation for example.
Oivu would connote retiring and being calm minus
work
ilaipparuthal would give an idea that one is just
taking a break
by relaxation i mean a state of mind that is calm,
unperturbed, active and not just resting.
i wonder.
as a novice in writing in Tamil, my immediate
references to existing dictionaries are not comforting, i have to seek other
right sources.
even for mentioning mobile phone in tamil, kaipesi
makes me uneasy especially with my cordless phone around.
this letter is not meant to make this a
discomforting or nagging chain of correspondence.
i am grateful and as always my human mind
isyearning for more whenever something good is experienced.
i hope and wish i could meet you in person someday.
with repects
--If you are not happy
with oyvu ,nekizhthal or talarthal may be tried both these words have a
causative form nekizhthal /nekizhththa,l thalarthal/thalartthal
ws
--------------------
இப்படி அவ்வப்போது.
அப்புறம், அவர் செத்துப்போனார். நினைவுகளை நிரந்தரமாய் விட்டு விட்டு.
0 comments:
Post a Comment