நான் சும்மாயிருக்கத்தான் நினைத்தேன்... ஆனால்
சமூக பிரச்சினைகளும், கூட்டுஉளவியல்கூறுகளும்… என்று பார்த்தவுடன்..
இன்றைய இளைய தலைமுறையின் பிரமை பற்றி ஒரு கவலை
சமூக பிரச்சினைகளும், கூட்டுஉளவியல்கூறுகளும்…
அறிவியல் என்ன அவலா வெறும்வாயர்கள் மெல்ல?முதலாவதாக இந்த உளவியல் பதம் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும். இது பற்றி இன்னொரு பதிவில், இப்பொழுது இங்கே கக்கியுள்ள திருவாய்மொழி குறித்து பார்ப்போம்.
எதையும் ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் ஒருவரியை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கும் ஒரு தரப்பு எப்போதும் காத்திருக்கிறது..
ஆம். அப்படி அவ்வப்போது ஒருவரி சொல்லிவிட்டு உபநிஷத் சொன்னமாதிரி நடித்து, அந்த மூட ஜால்ராக்களைப் பலர் வளர்த்துவிட்டார்கள். (ஒரு கட்டம் வரை நானும் செய்த அந்த பாவத்திற்கான பிராயச்சித்தமாய் இதை எடுத்துக்கொள்ளலாம்). அப்படி கூடும் கூட்டம் வீதிவரை கூட பிணத்துடன் வராது. சிலாகித்துச் சிலிர்த்துக்கொள்ளும் எத்தனைபேர் அந்த எழுத்தாளனை முழுதாய்ப் படித்தார்கள்? நான் உபாசிக்கும் லாசரா, ஜெயகாந்தன் கூட நான் முழுதாய்ப் படித்த்தில்லை.இத்தனைக்கும் அந்தக் காலத்தில் இணையம் இல்லை.
இவர்கள் என்ன சுயம்புவா? இவர்கள் ஜால்ராக்களாய் பத்திரமாய் வளர்க்கப்பட்டும் மலரமுடியாத கொடிகள். ஒட்டுண்ணி உறவு இருதரப்பு என்று ஏமாறும் கோமாளிகள். யாரும் யாரும் யாராயினரோ எனும் கேள்வியே இல்லை. இவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்- குண்டு கோழியாய், கொழுப்புடன் ஆடாய்- பலிபீடமே டைனிங் டேபிள் என்று தெரியாமல் மசாலா பூசிக்கொள்பவர்கள்.
இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? ஆட்டோக்ராஃப் போடத்துடித்த அற்பர்களால்தானே!
இங்கேயும் இந்த ஒரு வரியைப் பிடித்துக்கொண்டுதான் பேசுகிறேன். நம் பழமொழிகள் உபநிஷத்களை விட உள்ளர்த்தம் உள்ளவை. இது ஒரு பருக்கை!
சாதாரணமாக நாளிதழ்களை வாசித்துவிட்டு கருத்துச்சொல்லும் பலரில் ஒருவனாகவும் நின்று இதை எழுதவில்லை..
சாதாரணமாக நாளிதழ் படிப்பவன் தான் வெட்டியாய் டெல்லிசென்று சும்மா இருக்கும் எம்பிக்களைத் தேர்ந்தெடுக்கிறான். அவன் தான் முகம் கழுவிக்கொண்டு, தீவிர இலக்கிய வாசக முகப்பூச்சுடன் பேனா பிடித்த கையை முத்தமிட முண்டுகிறான்.
எழுத்தாளனாக மனித மனங்களை உய்த்துணரக்கூடியவன், வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் கண் கொண்டவன் என்ற முறையில். அடுத்ததாக இந்திய வரலாற்றைத் தொடர்ந்து கற்றுவருபவன் என்ற முறையில்…
இதையெல்லாம் படித்தும் நான் சும்மா இருக்க வேண்டுமாம்! Sylvia plath, Hemingway இவர்களுக்கு மிகவும் நன்றாகவும் அவ்வப்போதும் தேவைப்படும் பெயர்கள். நான் குறிப்பிடும் இருவரை விடவும் விரிவாகவோ, துல்லியமாகவோ எழுதாத (என்னைப்பொருத்தவரை எழுத முடியாத) பேனா பிடித்துவிட்டதால் எழுத்தையும் பிடித்துவிட்டதாய் ட்ரம்பட் இல்லாமல் பொக்கைவாயால் ஊதுபவர்கள், வேறு என்ன சொல்வார்கள் என்று சலிக்கும்போதே இதை நம்பி ஒரு தலைமுறையின் ஒருவராவது வீணாவதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்.
வரலாறு எது? சொல்லப்பட்டதா விடுக்கப்பட்டதா மறைக்கப்பட்டதா?
விவாதங்களில் உள்ளடங்கி இருக்கும் ஒர் உளவியல்கூறு…
நான் சாக்கடை சுத்தம் செய்பவரிடம் சும்மா இருப்பேன், மின்பழுது பார்ப்பவரிடமும் சும்மா இருப்பேன். “நான் பத்தாவதில் ஃபிஸிக்ஸில் நூறு மார்க்” என்று அவர்களிடம் உளற மாட்டேன். தன்னடக்கம் அல்ல, தெளிவு.
உளவியல் என்று உளறப்படும் மனவியல் என்ன மௌண்ட் ரோட்டோரம் பேரம் பேசி வாங்கி முதல் பக்கம் மட்டும் முக்கிப்படித்து மூடிவைக்கும் புத்தகமா? இதன் பெயர் என்ன? அறிவா/ திமிரா- இவையிரண்டும் கூடப் பரவாயில்லை... இதன் பெயர் பொய் விற்கும் சாகசம்.
இந்த நிலையை மாற்ற ஏதும் செய்யும் மனநிலை கொண்டவர்கள் அல்ல. தங்களுக்குச் சிறிய இழப்பை அளிக்கும் ஒரு மாற்றத்தைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ரொம்பரொம்பச் சாதாரணமான E=MCsquared..
ஏற்றுக்கொளாதவர்கள் மாற்றத்தை விரும்பியதில்லை. “நிலை மாறினால் குணம் மாறுவான்” என்று கண்ணதாசன் சொன்னது மேல் நோக்கி, இங்கே யதார்த்தம் கீழ் நோக்கி.
எதை எவன் எப்போது ஏற்றான்? ஏற்கும்படி விற்கத்தெரியாத பரிதாபமானவர்களா நீங்கள்?
இந்த இரட்டைநிலையை அவர்கள் ஒரு கருத்தியல்கழைக்கூத்து மூலம் கடந்து செல்கிறார்கள். அதை நாம் ‘பீர்க்கோப்பை புரட்சி ’ எனலாம். சாயங்காலம் கிளப்பில் ஒரு கோப்பை பீருடன் கூடி ஆவேசமாக ஏழை எளிய மக்கள் கிளர்ந்தெழுந்து வன்முறையில் ஈடுபடவேண்டியதன் அவசியம் பற்றி பேசும் அரசியல் இது. ஓர் உக்கிரமான நிலைபாடு எடுப்பதன் வழியாக அன்றாட வாழ்க்கையின் மொண்ணைத்தன்மையில் இருந்து தப்பிவிடுவதாக ஒரு பிரமை இவர்களுக்கு.குட்டிக்கரணம் எத்தனை போட்டாலும் குரங்கு திரும்பவும் வாழைப்பழம் இருக்கும் இடத்திற்கே வந்து நிற்கும்.
நடுத்தரத்தின் நடுக்கம் நாளையைப்பற்றியதே.அந்த அச்சத்தின் விடுபடுதல் ஸீரியலா ஸீரியஸா என்பது அந்தந்த மனத்தின் கலாச்சார-கல்வி-பார்வை-மற்றும் பல காரணிகள். எல்லாரும் ஒன்றென்றால் இந்த எழுத்தாளரைத்தவிர யார் விற்பனைக்கு உசிதமாவார்கள்!
பிரமை என்பது தொடர்ந்திருந்தால் தான் அது நோய். Gaslight படத்தில் இப்படி ஒரு பிரமை-உருவாக்குதல் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அந்தப் படம் பார்த்தவுடன் Paranoia, Manipulation Inducement என்றெல்லாம் தாண்டி Inception வரை போவதைக் கொண்டாடும் குறுகிய நோக்குடைய கூட்டத்திற்கு இவை சௌகரியமான, சுய அங்கீகரமான, செல்லுபடியாகும் வார்த்தைகள்!
ஓரு மாற்று ஆளுமையை இப்படி இவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. அந்தப் போலிபிம்பத்தை ஒரு சித்திரம் வரைவதுபோலத் துளித்துளியாக வரைந்துகொண்டே இருப்பதுதான் இவர்களின் அரசியல்.
இங்கே நடப்பது பிணத்துக்குப் போடும் நெற்றிக்காசு அல்ல! Anonymous proximity and escape route are the convenience of an internet squabble. போலியான பிம்பம் இங்கே தெரிந்தே தேர்வு செய்யப்படுகிறது. தப்பிக்க மட்டுமல்ல- இங்கேயாவது எம்ஜியாராக இருக்க விரும்பித்தான். இது அரசியல் அல்ல, மனவியலின் ஆரம்பப்பாடம்.
இணையம் இத்தகையவர்களுக்கு ஒரு நல்ல ஊடகம். உண்மையான ஆளுமையை மறைத்துக்கொண்டு அந்த போலி ஆளுமையை இணையத்தில் திறமையாக உலாவரச்செய்ய முடியும். இணையத்தின் தமிழ் யதார்த்தத்துடன் சம்பந்தமே இல்லாத புரட்சிக்கொந்தளிப்புக்கு காரணம் இதுவே.
இங்கே எவனும் தப்பித்ததில்லை. எத்தனை கண்களில் படுகிறான் என்பதே கணக்கு.
இப்படி அடிப்படையிலேயே நேர்மையும் தைரியமும் இல்லாதவர்களும் வீரம் பேசுவதே இணைய சௌகரியம். ஆனால் படிப்பவரோ பார்ப்பவரோ முட்டாளில்லை.
இந்துவிலோ டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலோ அவுட்லுக்கிலோ ஒரு மாவோசஆதரவுக் கட்டுரையை வாசித்து ஆவேசமாக ஆதரித்து பேசிவிட்டால் தங்களை முற்போக்கினராக எண்ணி நிறைவுகொள்ளக்கூடியவர்கள் இவர்கள்.
இங்கே இன்னும் கோபம் வருகிறது.
ப்ளு கலர் ஜெமோவின் எழுத்து, சிவப்பு ’அவ’ர்களது மொழியாளுமை...மீதி நான்,
யாரும் யாரும் யாராகிடினும் நானும் நானும் வேறாகிடல் வேண்டாம்- (இதுவும் ஒரு பிரார்த்தனை)
ப்ளு கலர் ஜெமோவின் எழுத்து, சிவப்பு ’அவ’ர்களது மொழியாளுமை...மீதி நான்,
யாரும் யாரும் யாராகிடினும் நானும் நானும் வேறாகிடல் வேண்டாம்- (இதுவும் ஒரு பிரார்த்தனை)
11 comments:
//இங்கே நடப்பது பிணத்துக்குப் போடும் நெற்றிக்காசு அல்ல! Anonymous proximity and escape route are the convenience of an internet squabble. போலியான பிம்பம் இங்கே தெரிந்தே தேர்வு செய்யப்படுகிறது. தப்பிக்க மட்டுமல்ல- இங்கேயாவது எம்ஜியாராக இருக்க விரும்பித்தான். இது அரசியல் அல்ல, மனவியலின் ஆரம்பப்பாடம்.//
அற்புதம்...நிதர்சனம்..
உளவியலின் வெளிப்பாடு ...அது வெளிப்படுத்துவது போலவே
பொய்யில்லா உண்மை...
அவசியமான மற்று அருமையான பதிவு
//இன்று ஊடகங்களில் புரட்சி கக்கும் பல ஊடகவியலாளர்களை நான் தனிப்பட்டமுறையில் அறிவேன். அவர்களின் ஒருநாள் குடிக்கும் பணம் என் மாத வருமானம். ஆனால் அவர்கள் புரட்சியாளர்கள், நான் குட்டிபூர்ஷுவா!//
''குட்டிபூர்ஷுவா''
பெருமாள் முருகனின் பீக்கதைகளில் வரும் இப்பதம் ஜெமோவுக்கு அட்டகாசமாக பொருந்துகிறது! சாரு நிவேதிதாவுக்கு எல்லாவிதத்திலும் ஈடு கொடுக்கும் போட்டியாளர் தான்! சினிமாவில் கூட இப்படி தராசின் சமனிலை போல போட்டி வந்ததில்லை! அபாரம்!
அற்புதமான பதிவு டாக்டர்.உலகத்தில் நடக்கும் அத்துணை அநியாயங்களுக்கும்,அவலங்களுக்கும் முற்றுப் புள்ளீ வைக்க நீங்கள் தொடங்கியிருக்கும் யுத்தத்திற்கு பிள்ளையார் சுழி போல் அமைந்திருக்கிறது இந்த பதிவு.வாழ்த்துக்கள்.
அது சரி படத்தில் இருப்பவரது நெற்றியில் இருப்பது காசு தானே?
நெற்றியில் இருப்பது காசுபோல ஓர் அலங்காரம்- ஒப்பனையல்ல.
உங்கள் பேச்சு(எப்போதுமே)கோப மூர்க்கமாக இருப்பது ஏன்? ஒரு டாக்டர்..மனோ தத்துவ டாக்டர்?ஏன் இப்படி?
ஜெமோவின் பதிவை படித்து பார்த்தேன். என்னளவில் சரியாகவே பட்டது.
உங்கள் வலைத்தளத்துக்கு மௌனமாக வந்து வாசித்து எதோ ஒன்றின் பாதிப்பில் மனதை எடுத்துக் கொண்டு போவது என் வழக்கம்..! இன்றும் அதே..!! அருமையான பதிவு..!!
//யாரும் யாரும் யாராகிடினும் நானும் நானும் வேறாகிடல் வேண்டாம்//
நான் கொஞ்சம் டியூப்லைட். தன்னடக்கமல்ல. நீங்க சொல்றது புரிஞ்சது போலவும் இருக்கிறது. புரியாதது போலவும் இருக்கிறது. நீங்க நல்லா பளிச்சுன்னு எங்களுக்கு மன்னிக்கனும் எனக்கு புரியுற மாதிரி எழுதுங்களேன்.
Doctor I want to ask you the same question what Mr. Thamizhan posted here ?
I have seen writings reflecting anger many times. Is it really good to express our anger ? When ever I read your blog, sometimes, I feel certain agony and despair in myself.
அற்புதமான பதிவு நன்றி
இவன்
http://www.tamilcinemablog.com/
Post a Comment