Sunday, April 24, 2011

அனுதாபங்கள் பாபா பக்தர்களுக்கு



உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.

மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்... இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.

பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..
ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால். 
அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.

வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.


எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கொஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம். 
அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்! 
அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.



தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை, extended grief  கூட ஆறுமாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்....
இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.

இது நுகர்வு கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ-விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்தபாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?


79 comments:

நடராஜன் said...

ஐயோ, சாய்பாபா, சாவு!!! அருமை

நடராஜன் said...

ஐயோ, சாய்பாபா, சாவு!! அருமை

போ. மணிவண்ணன் said...

சிந்திக்க தெளிய சுயம்உணர..நல்ல கட்டுரை .நன்றி

Unknown said...

சாய்பாபா - சாய்ந்து போன மந்திர சரித்திரமும், தரித்திர தந்திரமும்
http://aagaayamanithan.blogspot.com/2011/04/blog-post_24.html

Feroz said...

மிக நுன்னிய ஆக்கம். உணர்வார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. என் சிறுபிராயத்தில் இருந்து எங்களுடைய குடும்ப மருத்துவர் உடலின் மொழியை வைத்தே இந்த காய்ச்சல் என்று துல்லியமாக சொல்பவர். சாய்பாபாவின் பின்னல் போக சொத்துக்களை இழந்து, மனைவி பிரிந்து மகளும் மருத்தவ படிப்பை முடிக்க முடியாமல் சொந்த ஊரில் மருத்துவமனை விற்று கிராமத்தில் இன்று மருத்துவமனை வைத்து இருக்கிறார். நேற்று அப்பா சொன்னார் புட்டபர்த்திக்கு சென்று விட்டார் என்று. மனம் வேதனையில் இருக்கிறது. ஆனால் எத்தனை அறிவுப்பூர்வமாக விவாதித்தாலும் திருந்துவார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. தோழமையுடன்

Colors of Silence said...

I wish none will say that they are the incarnation of Sai Baba, like he did..

//சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது//


very true!!

கூத்தாடி said...

காலங்கள் மாறும், அவதாரங்கள் மாறும் நம் மக்கள் மாற மாட்டார்கள் .. பலரிடம் போதித்து அடி பட்டு இருக்கிறேன்

அத்திரி said...

good post

அருணன் பாரதி said...

வணக்கம் டாக்டர் ருத்ரன் சார். சாய்பாபாவின் நிரந்தர துயில் பற்றிய பதிவு.ரொம்ப தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. மிகச் சரியான அலசல். பக்தர்கள் தான் பாவம். ஒரு கடவுள் போனால், தனக்கு ஆறுதல் தர, தாற்காலிகமாய் துன்பம் துடைக்க, வேறொரு கடவுளை நாடுவார்கள். இன்னொரு சாய்பாபா முளைத்துவிடுவார். இவர்களை இந்த கடவுள்களிடமிருந்து யார் காப்பாற்ற?

Unknown said...

please some one must come to advice the peopl who encourage and creates babas like this.... first the innoncent peopl should change ....

தவமணி said...

சாய்பாபாவின் பக்தர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
சாய்பாபாவின் மலிவான வித்தைகளால் மெத்த படித்தவர்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் கூட மண்டியிடும் அவலம் இத்துடன் முடியுமா? தொடருமா?.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

முற்றிலும் உண்மை !

சுதர்ஷன் said...

மிக நுண்ணிய பார்வை Dr ருத்ரன் ஐயா .. :-) அருமையான விளக்கம் ..இதை உணர்வார்களா ?

Stellar Qatar Office said...

ஏம்பா அடுத்த பாபா ரெடியா ?.... மனிதன் ஒரு நாளும் கடவுளாக முடியாது .... திருந்துங்கடா ....

Stellar Qatar Office said...

ஏம்பா அடுத்த பாபா ரெடியா ?.... மனிதன் ஒரு நாளும் கடவுளாக முடியாது .... திருந்துங்கடா ....

Ram Sridhar said...

டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகள் சாய் பாபா மக்களை ஏமாற்றினாரா, மக்களின் மூட நம்பிக்கையை வளர்த்தாரா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும் போது, சாய் பாபா அவருடைய ட்ரஸ்ட்களின் மூலம் எவ்வளவு நல்ல காரியங்களை செய்து வந்தார் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்? ஏழைகளின் உதவிக்காக ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வரை அவருடைய சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்துவமனைகளில் நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் குடிதண்ணீர் வழங்குவதில் ஏரளாமான உதவிகளை அவருடைய ட்ரஸ்ட் செய்து வருகிறது. வசதி இல்லாத மாணவர்களின் படிப்பு வசதிக்காக அவருடைய பல்வேறு கல்வி நிறுவனங்கள் உதவி வருகின்றன.

தன்னை பகுத்தறிவுக் காவலன் என்று காட்டிகொள்ளும் நம் முதல்வரைப் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டு குடிதண்ணீருக்காக சாய் பாபாவின் உதவியைத்தான் நாடினார்கள். நம்முடைய துணை முதல்வர் ஸ்டாலின் வெட்கமே இல்லாமல், சென்னையில் கூவம் ஆறு சுத்தப்படுத்தும் பணிக்கு சாய் பாபாவிடம் பொருளுதவி கேட்பதாக பொது மேடைகளில் முழங்கினார். பகுத்தறிவை மக்களிடையே வளர்க்க முற்படும் அரசியல் கட்சிகள், அதனுடைய தலைவர்கள் யாராவது இதைப் போன்று தனக்கு வரும் வருமானத்தை செலவிட முன் வருவார்களா? இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா? ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு குடிதண்ணீர் வருவதற்காக சாய் ட்ரஸ்ட் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது என்று இன்றைய இரங்கல் செய்தியில் முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.

புட்டபர்த்திக்கு போகும் எந்த பக்தனும் கட்டாயமாக பொருளுதவி செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அங்கு வந்து குவியும் பொருளுதவி எல்லாமே பக்தர்கள் தாமாகவே முன்வந்து வழங்கும் நன்கொடைகள்தாம். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்து, வருமானத்தை பெருக்கிக் கொண்டு, சுயநலத்தோடு வாழும் எவ்வளவோ சாமியார்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், சாய் பாபா அவ்வகைச் சார்ந்தவரல்ல. உலகெங்கும் பரவியுள்ள அவருடைய தொண்டு நிறுவனங்களே அதற்கு சாட்சி. ஒருவர் மீது சேற்றைவாரி தூற்றும் முன் அவர் செய்த நல்ல காரியங்களை நினைவு கூற மறுப்பது டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகளுக்கு நியாயமாகப்படுகிறதா? அல்லது மனிநிலை சரியில்லாதவர்களுடன் பழகிப்பழகி அவருக்கும் மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா?

Dr.Rudhran said...

ராம்!!! சரிப்பா, மோடி கூட நல்லது பண்ணீயிருக்கான்!!!! உருப்படுங்களேன்!

murankalari.blogspot.com said...

babakkal sainthalum bakthakodigalin
muda nambikkaigal saivathillaiye, enna seivadhu ivargalai? edhavadu seithaga vendume....

நண்பன் said...

ithallam oru pathiva? oru nalla manusanukku ippadiya pinuuttam ezuthuvathu

murankalari.blogspot.com said...

ram sridharukku en ivvalavu gobham varugiradhu? rudran sir engey saibabavin udavigalai maruththirukkirar? oru nattin adhibaralkuda sambathikka mudiyadha allavukku babakkalal eppadi sambathikka mudigiradhu? makkalin ariyamaiyai payanpaduthi avargalukke vudhavigal seivadhil enna pullarippu vendikidakku? malaiyalavu kollaiyadiththadhil thagalalavu thaanm...adhuvum vilambaraththirkaaga! thirunthungappa..!

Anonymous said...

ருத்ரன் சார், இன்னொரு சாய்பாபா ஏற்கனவே உருவாகிட்டார். பாலசாய் பாபா பற்றி கேள்விப்பட்டு இருபிங்கன்னு நினைக்கிறன். (http://www.sribalasai.com/index.htm)ஆஸ்ரமம் எல்லாம் வச்சி நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு. இன்னும் மார்கெடிங் வேலைதான் பாக்கி. இப்போ புட்டபருத்தி சாய்பாபா மறைவுக்கப்பரம் இவர் பெரிய ஆள வந்தாலும் வருவார்.
ஆனா பிராடு வேல பண்ணலும் புட்டபருத்தி சாய்பாபா செய்த சமுக சேவைகள் நிச்சயம் பாராடவேண்டியவைகளே. - Raj

ஷர்புதீன் said...

ஏதேனும் வித்தை செய்து காட்டும்பொழுது அது ஒரு ஐம்பது பேர்களை கவர்ந்துவிட்டால், அப்புறம் நான் கூட பாபா போல்தான் வாழ ஆசைப்படுவேன்., என்னைக்குமே மந்திரவாதிகளை நான் திட்டியதில்லை., ஒரு முறை ஏமாற்றினால் அது அவனின் குற்றம், நிரந்தரமாக ஏமாற்றினால் எமார்ந்தவனின் குற்றம.

தன்னுடைய பேட்டிங்கை மேம்படுத்த எல்லாவிதமான அறிவியல் ஆலோசனைகளையும் மேற்கொள்ளும் சச்சின் போன்றவர்களே செயின் வரவழைப்பதை நம்பும்பொழுது , யாரை நோக!

நண்பர் ராம் அவர்களுக்கு!
ரஜினி போன்ற வசிய தோற்றம் உடையவர்கள்/மக்களை கவர்ந்திழுக்க கூடிய அம்சம் உள்ளவர்கள் , அதிலும் நல்ல மனதுள்ளவர்கள் ஏராளம் பேர் உள்ளார்கள், அவர்களிடம் பாபாவின் பக்தர்கள் தாமாக கோடியை கொட்டினால், நதி நீர் என்ன, அமேசானையே இந்தியாவுக்கு கொண்டுவர முயர்ச்சிபார்கள்.

kumar said...

ஒரு மனோ தத்துவ மருத்துவரால் மட்டுமே இது போன்று நுண்ணிய எழுத்துக்களை வடிக்கமுடியும்.
youtube இல் எதனை வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.ஆனால் பலன் பூஜ்யம் தானே.கல்வியறிவிற்கும்
இந்த கண்மூடித்தனத்திர்க்கும் எந்த தொடர்பும் இல்லை.

பிரபாஷ்கரன் said...

நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் .நம்பியவர்கள் எல்லாம் முட்டாளும் அல்ல நம்பாதவர்கள் எல்லாம் புத்திசாலியும் இல்லை . செத்து போனால் மனிதன் ,சாகாமல் யார் இந்த உலகில் இருக்கிறார் . கடவுள் இருக்கிறரா என்ற கேள்வி எழுகிறது எல்லாமே நம்பிக்கையின் வடிவம்தான் சச்சின் பாபாவின் பக்தர் இன்று பிறந்த நாள் கொண்டாட வில்லை இது அவரின் விருப்பம் எனவே அடுத்தவரின் நம்பிகையை நாம் மதிப்போம்.
நட்புடன்
பிரபாஷ்கரன்

Anonymous said...

Nice post Doctor. I know Reality Bites. It gives me a lot of pain to accept myself. But still I want to be identified as whom I am. An ordinary human being ... Nothing more ... Nothing less ...

malar said...

ருத்ரன் சார்...

’’’’’பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான்.’’’’’
ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால். ’’’
இது தான் இயல்பு....

இதை மனித மூளை உணர்தவில்லை என்றால் இன்று உலகில் அத்தனை பேரும் மன நலம் பாதிபில் தான் இருபார்கள்(இப்ப்வும் அப்படிதான்)

சாய் பாபா இறப்புக்கு மக்கள் அழுகிறார்கள் என்றால் அவரால் ஆதயம் அடைந்தவர்கள் தான்..

எம்.ஜி.ஆர் இறப்புக்கு மக்கள் எப்படி இருந்தார்கள்?


சாய் பாபா அவருடைய ட்ரஸ்ட்களின் மூலம் எவ்வளவு நல்ல காரியங்களை செய்து வந்தார் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்? ஏழைகளின் உதவிக்காக ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வரை அவருடைய சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்துவமனைகளில் நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் குடிதண்ணீர் வழங்குவதில் ஏரளாமான உதவிகளை அவருடைய ட்ரஸ்ட் செய்து வருகிறது. வசதி இல்லாத மாணவர்களின் படிப்பு வசதிக்காக அவருடைய பல்வேறு கல்வி நிறுவனங்கள் உதவி வருகின்றன.


சாய்பாபா பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டார். புட்டபர்த்தி ஆசிரமத்தில் பிரமாண்ட ஆஸ்பத்திரி கட்டி ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்.

சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க தெலுங்கு கங்கை திட்டத்தை ஆந்திரா-தமிழக அரசுகள் கொண்டு வந்தன. இதற்கு கால்வாய் அமைக்கும் பணிக்காக சாய்பாபா தனது டிரஸ்ட்டில் இருந்து ரூ.100 கோடி நிதி வழங்கினார்.

சாய்பாபா ஆசிரமம் மூலம் பல்கலைக்கழகமும், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 220 படுக்கை கொண்ட ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர பெங்களூரிலும் தனி மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு 333 படுக்கை அறை கொண்ட ஆஸ்பத்திரி செயல்படுகிறது.

இதை எல்லாம் பொய்யா?

நன்றி கடனை அழுகை மூலம் தான் தெரிவிப்பார்கள்....

நீங்கள் எழுதிய மிக நுன்னிய ஆக்கம்

படிதவர்களை எட்டலாம் பாமரனை எட்டாது....

Unknown said...

ஐயா ருத்ரன் அவர்களே! நீங்கள் இன்று முன் வைக்கும் கருத்துக்களை முன்பே சொல்லி ஏதாவது முயற்சித்திருக்க வேண்டும்... எனக்கும் மந்திரம் தந்திரங்களில் நம்பிக்கை இல்லைதான் ஆனால் சாய் பாபா செய்த சேவைகளில் நம்பிக்கை இருக்கிறது! பசியோடு இருப்பவனுக்கு உணவு கொடுப்பவனும் கடவுள்தான்! ஏழையொருவனுக்கு எழுத்தறிவித்தவனும் கடவுள் தான்! தீர்க்க முடியாத நோய்களைக் குணப்படுத்தும் உங்களைப் போன்ற மருத்துவர்களும் கடவுள்தான்!

மக்களோ, நானோ அல்லது நீங்களோ தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்... இந்திய ராணுவத்திற்கு Short Service Commission என்று வைத்து ஆளெடுப்பார்கள்.. அதைப்போல பாபா போன்றோர்கள் SSC கடவுளாகட்டும்! அல்லது கடவுள்கள் கூட SSC க்கு உட்பட்டு ஆங்காங்கே அவதரிக்கட்டும்!

Moni said...

நீங்கள் சொல்வது முற்று முழுதாக உண்மை ஐயா... தன் சொந்தக காலில் நிற் பயந்த மனிதன் முதலில் கடவுளை உருவாக்கினான்... பின் அதுவும் போதவில்லை என்று மனிதனை கடவுளாக்கி வழிபட்டுவிட்டான்... இதை பலர் அவன் அவன் நம்பிக்கை என்று வாதிடுகிறார்கள்.. உண்மையில் நீங்கள் கூறியது போல அறியாமையும் இயலாமையுமே காரணம்... இதை விளங்குவார்களா என்றது கேள்வி...???

Muszhaaraff Muthunabeen said...

மதிப்பிற்குரிய ருத்ரன் ஐயாவுக்கு,
உளவியல் தொடர்பிலும், ஆன்மீகம் தொடர்பிலும் அதிக ஈர்ப்பு கொண்டு அதிகம் புத்தகங்களையும் அதிகமதிகம் பயிற்சிகளையும் மேற்கொண்ட போதெல்லாம் தங்களுடைய புத்தகங்களையும், கருத்துகளையும் வரித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. என்னுடைய சொற்பமான அறிவிலும் தங்களுடைய பங்கும் இருக்கின்றது என்பதற்காய் தங்களுக்கு நன்றி கூறுகிறேன். இருந்தும் 'உள்' பற்றி அதிகம் விவரித்த நீங்கள் இன்னும் வெளி மனதில்தான் தரிபட்டிருக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. உளவியல் கல்வி இன்னும் முற்றுப் பெறவில்லை என்பது திண்ணம். அது தவிரவும் உளவியல் முகம் என்பதும் இடத்திற்கிடம், கலாசாரத்திற்கொப்ப புறக்காரணிகளால் வேறுபடுகின்றது. இல்லையேல் சிக்மன் பிரெய்ட் கூறிய டாக்டர் ருத்ரனின் ஆழ்மனதில் தன் தாய் மீது காம உணர்ச்சி உள்ளது. அவர் தாயை புணரும் தகப்பனை தன் ஆழ்மனதால் டாக்டர் ருத்ரன் வெறுக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆக உளவியல் சென்றடையாத பல விடயங்கள் இன்னும் ழத்தில் புதைந்திருக்கின்றன என்பது நிஜம். இப்படி உளவியல் இன்னும் உள் நோக்கி பயணிக்கையில் இன்று டாக்டர் ருத்ரன் போன்றோர் வெறும் புத்தக அறிவை அடிப்படையாய்க் கொண்டு மறுக்கின்ற விடயங்களை சுய உணர்தலின் மூலமாக ஒப்புக் கொள்ள முடியும் என்பதை எதிர்பார்க்க முடியும்.
அறிவுகளிற் சில அறிவீனங்களும் உண்டு.
உளவியலோ ஆன்மீகமோ இவற்றின் மையப்புள்ளியாக அன்பை மாத்திரமே சொல்ல முடிகிறது. இந்த அன்பு வெகு இயல்பாகவே எபது சிந்தனையிலும், பேச்சிலும், செயல்களிலும் மிகைக்கின்ற போது ஆக்ரோசமான எழுத்துக்களுக்கோ, பிறரை கருத்தியல் மோதலுக்கு கூவி அழைக்கும் பண்புக்கோ, அணல் பறக்கும் பேச்சுக்கோ தேவையில்லாமல் போய் சாக்கடைக்குள்ளும் நிலவை மட்டும் பார்த்து ரசிக்கும் நெகிழ்ந்த மனதுக்குள் நாம் புதைந்து விடுவோம். இது வார்த்தைகளோ, அறிவோ தேவையற்ற நீண்ட மௌனத்திற்குள் எம்மை வீசிவிடும். இந்த மௌன வெளியில் பிணமும், ருத்ரனும், பக்தனும், கடவுளும் வெறும் நாமங்களும் தோற்றங்களுமாகவே நுரைத்துவிடும். ..
டாக்டர் ருத்ரனின் பேச்சுகளிலும், எழுத்துக்களிலும் தலை காட்டும் கோபமும், ஆவேசமும் ஆதாம் உண்ட ஆப்பிள் கனியாகத் தெரிவது வேதனையளிக்கிறது. மாறாக அன்புக்குள் உங்கள் எண்ணங்களும் எழுத்துக்களும் முகிழ்த்தெழ வேண்டும் என விரும்புகின்றேன். எனது கருத்துக்கள் உங்களைக் காயப்படுத்தியிருந்தாலும் நீங்கள் என் மீது அன்பு காட்டுவீர்கள் என நம்புகிறேன். மன்னியுங்கள் டாக்டர்

Unknown said...

சாய் பாபா நல்லது செய்தார் என்று சொல்கிறீர்கள் பிறகு ஏயேன் பூட்டபதிஇல் எத்தனை பிக்சைக்காரர்கள்,பாபா பற்றி விவாதிக்கவில்லை,அவர் கடவுள் இடம் இருந்து ஆசீர்வாதாம் வாங்கி கொடுத்தாள் நல்லது,ஆனால் நான் தான் கடவுள் என்று சொல்லி கொண்டு இருந்தது ஏற்று கொள்ள முதியவில்லை.அவர் உழைத்து கொடுக்க இல்லை,தொழிலில் செய்து கொடுக்க இல்லை,மக்கள் கொடுத்தது. பாபா மக்களை புரிந்து இறுகிறார். மாக்கள் ஊப்ஸ் மன்னிக்கவும் மக்கள் தான் பாபவை புரிந்து கொள்ள வில்லை.

Khader Mohideen said...

கவலை வேண்டாம் தோழர்களே !!
இன்னும் ஒரு நூறு பாபாக்கள் முளைப்பார்கள் !!

Najimudeen said...

உலகில் அதிகமான பணம் நம்பிக்கைகள் மேலேயே கொட்டிக் கிடக்கின்றன.எல்லாவித நம்பிக்கைகளிலும் வாதமும் எதிர்வாதமும் இருந்து கொண்டே
இருக்கின்றன. எது சரி எது பிழை என்பதனை எப்படிப் பிரித்தறிவது என்றுஅறியாது, பலவீனமுள்ள மனிதன் எல்லாவிதமான படைப்புகளுக்கு முன்னாலும் மண்டியிடுகின்றான்
இது கீழை நாடுகளில் மிகவும் சாதாரணம். ஆகக் குறைந்தது சமூகத்தில் இழப்புக்களையும்
குடும்பங்களில் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் மூட நம்பிக்கைகளைச் சாடுவதுஇதைவிடச் சிறப்பானதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
ஏனென்றால் இந்தநம்பிக்கையாளரது நம்பிக்கை ஏனையோரது மூட நம்பிக்கைகளை விட வித்தியாச
மானது என நான் நம்பவில்லை.

Unknown said...

சர்ச்சைகளுக்கு ஆளாகாத மனிதன் இன்னும் பிறக்கவேயில்லை, நீங்கள் உட்பட டாக்டர் ருத்ரன்....உங்களை என்னைக் காப்பாற்றிய தெய்வம் என்று போற்றுபவர்களும் உண்டு..இவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தவன் யார் என்று கூறுபவர்களும் உண்டு..அது அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது...ஒரு சாரார் மற்றவரைப் பார்த்து மூடர் என்று நினைப்பது தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மூடத்தனத்தில்.. நீங்கள் உங்களைப் பெரிய அறிவாளி என்று எதை வைத்து நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களோ அதே அளவுகோட்களில் உங்களை விடப் பெரியவர்கள் பாபாவின் பக்தர்களாக உள்ளனர்..அது அவரவர் அனுபவம் நம்பிக்கை...அதை தூற்றுவது மடமை...உங்களிடம் வரும் நோயாளிகளுக்கு என் அனுதாபங்கள்

White Sands said...

He has done many good things for the poor and common people and all need to admit it. But he also has worshipers of him who see him as God .. this really doesn't makes sense at all .. how come a man be a God who eats goes to sleep, has to attend call of nature who was hospitalized and died. These are the qualities of man , a creation of God. --- God was never born, neither dies, neither sleeps, neither is hungry, is not in need of anything, has power over everything, he is unique, he is the beginner the end, the eternal, he begets not nor he was begotten, there is none like unto Him.

anthony said...

/////ஒருவர் மீது சேற்றைவாரி தூற்றும் முன் அவர் செய்த நல்ல காரியங்களை நினைவு கூற மறுப்பது டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகளுக்கு நியாயமாகப்படுகிறதா? அல்லது மனிநிலை சரியில்லாதவர்களுடன் பழகிப்பழகி அவருக்கும் மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா?////


தம்பி ராம் நீங்க சொல்வது படி பார்த்தால் நிழல் உலக தாத்தா இப்ராகிம் கூட நிறைய தோண்டு நிறுவனங்களையும் கல்லூரிகளையும் பினாமிக பெயரில் நடத்துகிறான் . அப்ப அவரும் மோசடிக்காரன் சாய் பாபா மாதிரி பெரிய மனிதன் .........ச்சாரி கடவுள் தானா .

திருந்துங்கப்பா. மன பிறழ்வின் உச்சத்தில் நீர் உள்ளது போல் தோன்றுகிறது

sikkandar said...

excellent article

சீனு said...

"மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும்"னு சொல்லியிருந்தாலும், நீங்கள் செய்திருப்பதும் அதே தான் என்பது என் பகுத்தறிவுக்கு தோன்றுகிறது.

ஆன்மீகம் என்ற பெயரில் அவர் அடித்த அதே கூத்துக்களைத்தான் பகுத்தறிவு என்ற பெயரில் நீங்கள் அடிக்கிறீர்கள்...பெரிய வித்தியாசம் இல்லை.

Ramnath said...

i am not a sai devotee but still i would appreciate his good work to society. he is far better than our politicans who swindle crores and crores of ppl money. rudran sir, it is easy to comment on any body but before commenting we must do an introspection what good we have done to society.

Pathman said...

இச்சந்தர்ர்ப்பத்தை பயன்படுத்தி அவ்ர்களை மத போதையில் இருந்து விடுபட உதவுங்கள் ..

...அவர்கள் சிலவேளைகளில் போதைமருந்துடன் , மதபோதை கொடுக்கும் வேறு சாமியார்களிடம் செல்லாமல் பாது காருங்கள் ..
சத்ய சாய் பாபா தான் செய்த் மஜீக் மூலம் மக்களை ஏமாற்றி காசு பறித்தாலும் , தனதும் , உறவினர்களினதும் சுகபோக வாழ்க்க்க்குப் போக மிகுதியை பல நல்ல விடயங்களுக்கு உபயோகித்த்தாக பக்தர்கள் நம்புகிறார்கள் ..ஆகவே அப் பகதர்களிற்கு ஆதரவாக இருந்து அவர்கள் மேலும் ஏமாற்றுப் படாமல் பாது காருங்கள்.
நன்றி!!!!!

Pathman said...

இச்சந்தர்ர்ப்பத்தை பயன்படுத்தி அவ்ர்களை மத போதையில் இருந்து விடுபட உதவுங்கள் ..

...அவர்கள் சிலவேளைகளில் போதைமருந்துடன் , மதபோதை கொடுக்கும் வேறு சாமியார்களிடம் செல்லாமல் பாது காருங்கள் ..
சத்ய சாய் பாபா தான் செய்த் மஜீக் மூலம் மக்களை ஏமாற்றி காசு பறித்தாலும் , தனதும் , உறவினர்களினதும் சுகபோக வாழ்க்க்க்குப் போக மிகுதியை பல நல்ல விடயங்களுக்கு உபயோகித்த்தாக பக்தர்கள் நம்புகிறார்கள் ..ஆகவே அப் பகதர்களிற்கு ஆதரவாக இருந்து அவர்கள் மேலும் ஏமாற்றுப் படாமல் பாது காருங்கள்.
நன்றி!!!!!

Thameez said...

Doctor, as a personality you can very well comment on this! But as a Muslim if I comment the same then there is free internet in office, time is more, people can 'criticize' more. (Ram had criticize you too)

Unknown said...

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

நீங்கள் நிறைய படிக்க வேண்டும் ஐயா. மக்கள் மீது தங்களின் அக்கறை நிறைய தெரிகிறது, வாழ்த்துக்கள்.

Velayudham said...

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

நீங்கள் நிறைய படிக்க வேண்டும் ஐயா. மக்கள் மீது தங்களின் அக்கறை நிறைய தெரிகிறது, வாழ்த்துக்கள்.

malar said...

உதாரணம்......சாய்பாபா பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டார். புட்டபர்த்தி ஆசிரமத்தில் பிரமாண்ட ஆஸ்பத்திரி கட்டி ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்.சாய்பாபா ஆசிரமம் மூலம் பல்கலைக்கழகமும், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 220 படுக்கை கொண்ட ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர பெங்களூரிலும் தனி மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு 333 படுக்கை அறை கொண்ட ஆஸ்பத்திரி செயல்படுகிற்து...இந்த உதவிகளை இனிவருபவர்களும் செய்யனுமே.... நீங்கள் எழுதியது போல் /////எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால். /////இருந்தால் மனி்த இனமே அழிந்து இருக்கும் அல்ல்து எல்லோரும் மன நல்ம் குன்றி இருப்பர் .நீங்கள் எழுதியதை படிதவர்கள் மெச்சலாம் பாமரன் மெச்ச மாட்டான்..

Anonymous said...

அய்யா குங்குமப்பொட்டு நக்சலைட்டு,

உமக்கு காமாட்சி,அவர்களுக்கு சாய்பாபா. அவ்வளவுதான் வித்தியாசம்.அவர்கள் மூடரென்ரால் நீர் மகாமூடர்.

hemikrish said...

பொதுச் சேவை நேர்மையாக பண்ணியிருக்கலாமே...எதுக்கு ஒரு கடவுள் வேஷம்...நல்லது செய்பவரகள் அனைவரும் கடவுள்தான்..தனியாக மாய மந்திரம் செய்ய தேவை இல்லை...

நம்மிடம் வாங்கிய காசை நமக்கே கொடுப்பதை எப்படி சேவை என்று சொல்லிட முடியும்...திருடன் போனா போகுதுன்னு வீட்ல கொஞ்சம் நகையை விட்டுட்டு போனா அவன் கடவுளா?

Unknown said...

திரு .ருத்ரன் அவர்களை விரைவில் மனநல காப்பகத்தில் சேர்க்கா விட்டால் இவர் மீது ஜாதி கலவரம் தூண்டியதாக கைது செய்ய போகிறார்கள்.சாய்பாபா நல்லவரோ கேட்டவரோ அவரால் நன்மை அடைந்தவர்கள் ஏராளம்.திரு ருத்ரனால் யாரவது ஒரு நபர் நன்மை அடைந்திருப்பரா ?முதலில் தான் யோக்கியமா என்று எண்ணிவிட்டு மற்றவர்களை விமர்சிக்க வேண்டும் .ஒவ்வொருவருக்கும் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தால் எவனும் யோக்கியமில்லை .முட்டாள்தனமான பதிவு

கவி அழகன் said...

பகவானை நினைத்து பிரார்த்தனை செய்வோம்,ஜெய் சாய்ராம்

Sathish Kumar said...

/இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.//

மூட நம்பிக்கையுடைய பக்தர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி வித்தைக்கார மந்திரவாதிகள் முளைத்து விரிந்து கொண்டே இருப்பார்கள்...! இவர்களை திருத்தவே முடியாது...! நம் ஆசை தீர இவர்கள் மீது வசையடிகளை வீசிக்கொண்டே இருக்க வேண்டும்...! நல்ல சவுக்கடி...!

Unknown said...

தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. --------------அருமை

mohamedali jinnah said...

மனநல மருத்துவம் நாடியவர்களுக்கு சாய்பாபா தேவைப்பட்டார் . அவர் கெட்ட பெயர் வாங்காமல் போய் சேர்ந்தார் . அவர் கையாண்ட முறை தவறாக இருக்கலாம். ஆனால் அவர் செய்த சேவைகளை போற்ற வேண்டும்.(பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டார்.)
அரசியல் பிழைப்பு அசிங்கமாக உள்ள நிலையால் அனைவரும் அவதிப்படுகின்றோம். சாய்பாபா மற்றவருக்கு தொல்லை தராமல் நல்ல நோக்கத்தோடு செய்த சேவைகள் நிலைத்து நிற்கும் .அவர் வலிய வந்து மற்றவரை மோசடி செய்யவில்லை. இவர் எதையோ கொடுத்தார் போனவர்கள் பணத்தினை கொடுத்தார்கள் சாய்பாபா மற்றவருக்கு உபயோகமாக செய்தார். வந்த வழியும் போகும் வழியும் முறையாக இருப்பது நல்லது. சாய்பாபாவுக்கு பணம் வந்த வழி ? அது அவர் குற்றமல்ல . ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர் செய்த நல்லவைகளை பாராட்டுவோம் ,

A.R.ராஜகோபாலன் said...

எனக்கு சாய் பாபாவின் செயல்களில் உடன் பாடு இல்லை என்றாலும் அவர் இறந்த இந்த நேரத்தில் இந்த கட்டுரை தேவையா என என் தமிழ் மனம் கேட்கிறது ..........................
இந்த கட்டுரை முன்னமே வந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்

@ hemi krish உங்களின் வலிமையான கருத்திற்கு உடன்படுகிறேன் சகோதரி

@Ram Sridhar " நம்முடைய துணை முதல்வர் ஸ்டாலின் வெட்கமே இல்லாமல், சென்னையில் கூவம் ஆறு சுத்தப்படுத்தும் பணிக்கு சாய் பாபாவிடம் பொருளுதவி கேட்பதாக பொது மேடைகளில் முழங்கினார்"

இதில் வெட்கத்திற்கு எங்கே? என்ன? எப்போது? வேலை வந்தது அவரின் வீட்டிற்கா கேட்டார் ???

Jeyachandran said...

ராம் ஸ்ரீதர் சார்,
கொஞ்சம் நினைவு கூருங்க, இன்றைய அரசியல் சூழ்நிலைல, ஆதாயம் ஏதும் இல்லாமல் நிகழ்வதில்லை.
அதனால்?????????
(மன நிலை மாரிடுச்சோனு நீங்க கேட்டது கொஞ்சம் (இல்ல) ரொம்பவும் காரம் கூடுதலாகவே இருக்கு)
அதே நேரத்தில், முஷரப் முத்துனபீன் சார் சொல்றதும் கொஞ்சம் யோசனை செய்ய தூண்டுது.

ருத்ரன் சார், நீங்க அனைத்தும் உண்மை என்றாலும் மரண நேரத்துல, மரணம் அடைந்தவரை பற்றி அந்த அளவிற்கு சொல்லி இருக்கிறது கொஞ்சம் நெருடலாவே படுது.
(எனது சின்ன அனுபவத்திற்கு தோன்றியதை சொல்லி இருக்கேன், தப்பிருந்து குட்டு வச்சி சொல்லுங்க தப்பில்லை.)

மு.சரவணக்குமார் said...

ஒரே சமயத்தில் நம் இரண்டு கண்களினால் நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்க முடியாது. தலையைப் பார்ப்பவனுக்கு பூ தெரிவதில்லை, பூவை பார்க்கிறவனுக்கு தலை ஒரு போதும் தெரிவதில்லை.

seethag said...

நாம் தாடி வைத்துக்கொள்ளலாம், அதை கருமை படித்திக்கொள்ளலாம்...பரவாயில்லை..அது நம்முடய தைரியமின்மையை காட்டுகிறது என்பதை நமக்கு சந்திக்க துணிவு இல்லை என்றால் கூட அடுத்தவரை குறை சொல்லி மேதாவி ஆகலாம்...

மக்களுக்கு புத்தி சொல்வதற்க்கு முன் நம்முடய தைரியமின்மைய கண்ணாடியில் பார்த்தால் நல்லது..

நான் சாய் பாபா பக்தர் இல்லை.என்ன கருமம இது இப்படி எல்லாம் டிஸ்க்லைமர் எழுத வேண்டி உள்ளதே?

Muszhaaraff Muthunabeen உங்கலிடம் உள்ள அன்பு அதிகம் படித்த மேதாவிகளின் ,நான்., நில் அழிந்துபோனதுதால் உண்மை.

நாம் ஏன் ப்லாக் எழுதுகொர்ரொம் என்றோ ,ஏன் வினவு போன்றவர்களின் துணை நாடுகிறோம் என்றோ பார்த்தாஅல் எவ்வளவு தெளிவு வரும்..சாய்பாபாவின் மந்திர தந்திரங்களுக்கு மேல் எத்தனையோ பபேருக்கு ஏதோ ஒரு ஆறுதல் இருந்திருக்கும். அண்ணா,எம்ஜிஆர், போன்றோர் மறையும்ப்பொதும் மனிதர்கள அழுததைப்பார்த்தால் psychology புரியும். யேசு சொன்னது தான் ஞாபகம் வருது, உன்கண்ணில் உள்ள உத்தரத்தை பார், நீ பிறரை குறை சொல்லும்போது.. என்று.

கவிமதி said...

"நம்மிடம் வாங்கிய காசை நமக்கே கொடுப்ப
தை எப்படி சேவை என்று சொல்லிட முடியும்...திருடன் போனா போகுதுன்னு வீட்ல கொஞ்சம் நகையை விட்டுட்டு போனா அவன் கடவுளா?" உங்கள் வலைபூவில தோழர். hemikrish சொல்லியிருந்த இந்த கருத்து நச்சென்றிருந்தது.

இதற்கெல்லாம் அன்றே பெரியார் அடித்துவிட்டார் ஆப்பு... இருந்தும் கருணாநிதியே திருந்தலையே.. பாமரன் எம்மாத்திரம்...

தொடருங்கள் ருத்ரன் அய்யா.

Aarthy said...

ஒருவர் இறந்தாலும் , ஒருவர் பிறந்தாலும் அதிலும் தன அதிமேதாவி கருத்தை சொல்ல வேண்டும் என்று நினைப்பது கூட ஒரு விதமான மன நோய் தான் !! அதாவது எங்கே நம்மை எல்லோரும் முட்டாளாக நினைத்து விடுவார்களோ என்ற தீராத பயம் தான் ஒருவரின் இறப்பில் கூட அவரை கேலி செய்ய சொல்கிறது , அதாவது இதன் மூலமாக நம்மை அறிவாளியாக காட்டி கொள்ளலாமே ! நிற்க !!
ருத்ரன் அவர்களே நீங்கள் எழுதிய கட்டுரையில் , பாபாவை எடுத்து விட்டு அந்த இடத்தில இயேசு என்று எழுதுங்கள் , அல்லது முகமத் என்று எழுதுங்கள் , இரண்டுக்கும் இது பொருந்தும் !! ஒரே விதய்சம் அது மிகவும் முற்காலம் , இது நிழற்காலம் !! ஹிந்து மதம் குரு பாரம்பரியம் கொண்டது , ஒருவரை தவிர மற்றது யாரும் கடவுள் இல்லை என்று சொல்லுவது கூட ஆபிரகாமிக் மதங்களின் தாக்கம் தான் . இங்கு பெரியண்ணன் , பேச்சி , மதுரை வீரன் எல்லோரும் கடவுளே, ஹிந்து மதத்தை ஹிந்து மதமாக , ஹிந்து மதம் கொண்டே பாருங்கள் , உலகின் ஆதி கலாச்சாரம் , இதில் தான் எங்கள் பெருமையே !! எல்லோரயும் குறை சொல்லி வெத்து நியாயம் பேசுவதை விட , வித்தை செய்தாலும் , மக்களின் நம்பிக்கையை வளர்த்து , ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய உலக தரத்தில் இலவச கல்வி , இலவச மருத்துவம் , பாதுகாப்பான தண்ணீர் , பசித்தவனுக்கு உணவு அளித்த பாபா எவளவோ மேல். ( நான் பாபா பக்தன் அல்ல). ஹிந்து மதம் இந்த நம்பிக்கைகளினால் தான் இஸ்லாமியர்களின் கத்தி முனை மதமாற்றத்தையும் , கிறித்துவர்களின் காசு கொடுத்து மதம் மாற்றுதளையும் தாண்டி ஹிந்து மதம் நிலைத்தது , கண்டிப்பாக இந்த பகுத்தறிவு அறிவு ஜீவிகளின் தொல்லையும் இது தாங்கும் !!

Watrap Venkat said...

ஏதாவது வியாதி வந்தால் டாக்டரைத் தேடி ஓடுகிறோம். அதற்க்காக எல்லா டாக்டர்களும் நோயற்றவர்களா? சரியான சமயத்தில் காப்பாற்றியவரை கடவுள் என்பதில்லையா. மனம் என்ற சக்திக்கு டாக்டர்கள் தான் சாய் பாபா போனறவர்கள்.

Watrap Venkat said...

Doctors cure health problems. Public who is in desperate need of medicine see the doctor as god, even though doctors are as vulnerable as a non doctors . For our soul, sometimes, we need such gods. Saibaba is one among them. He has a great influence and he used that influence for charitable activity. We need lot of such god man for the welfare of poor in mind, wealth as the other people are busy looting the resources, thought process etc etc.

Anonymous said...

மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை --- சேம் பின்ச்

Anonymous said...

மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்... இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக...
//

Nice..

சீனு said...

//நான் சாய் பாபா பக்தர் இல்லை.என்ன கருமம இது இப்படி எல்லாம் டிஸ்க்லைமர் எழுத வேண்டி உள்ளதே?//

இது தான் முற்போக்காளர்கள் என்று 'சொல்லிக் கொள்ளும்' வியாதியஸ்தர்கள் கொடுத்த கொடை. இதுக்கு பேரு கருத்து சுதந்திரமாம். ஒருத்தன் ஒரு கருத்தை சொன்னால் உடனே அவனை முத்திரை குத்தி அப்புறப்படுத்துவது. கேட்டால் 'நாங்க முற்போக்குவியாதி' என்பது. கருத்து பிடிக்கவில்லையென்றால் 'என் பதிவில் இப்படியெல்லாம் ஓலமிடாதே' என்பார்கள் இல்லையென்றால் நையாண்டி செய்வார்கள்.

சீனு said...

//தம்பி ராம் நீங்க சொல்வது படி பார்த்தால் நிழல் உலக தாத்தா இப்ராகிம் கூட நிறைய தோண்டு நிறுவனங்களையும் கல்லூரிகளையும் பினாமிக பெயரில் நடத்துகிறான் . அப்ப அவரும் மோசடிக்காரன் சாய் பாபா மாதிரி பெரிய மனிதன் .........ச்சாரி கடவுள் தானா .//

விதண்டாவாதம். இப்ராகிம் தொண்டு நிறுவனங்களை யாருக்கு செய்தான் என்பதை பொருத்தது. பாகிஸ்தானியர்களுக்கு செய்தான் என்றால் அவர்கள் அவனை கொண்டாடுவார்கள்.

மற்றும், சாய்பாபா என்ன குண்டு வைத்து 400 பேரை கொன்றானா? இல்லையே...ஆன்மீகம் என்ற பெயரில் அடித்த கூத்துக்கள். ஆனாலும், அவரால் நன்மை அடைந்தவர்கள் அவரை போற்றக்கூட கூடாது என்று பொருமுபவர்களை என்னவென்று சொல்வது. (எழவு எடுத்த டிஸ்கி: நான் சாய்பாபா பக்தனும் அல்ல, அவரின் அனுதாபியும் அல்ல)

Bobby shankar said...

சாய் பாபா மக்கள் பணத்திலேயே மக்களுக்கு சேவை செஞ்சார்னு சொல்றது கரெக்ட் தான். எனக்கு ஒன்னு மட்டும் புரியல - அரசு மரியாதையுடன் எதுக்கு அடக்கம் பண்றாங்க ?
Regards to Rudhran sir & all the comments writers

ரெட்மேன் said...

எல்லாம் சரிதான் சாய்பாபா மூடர்களே... sorry சீடர்களே ! 85 வயதிலும் உங்க பாபாவுக்கு முடியை டை அடிச்சிதான் ஆகனுமா? உங்க செத்துப்போன கடவுளும் வாய் வழியாக தின்று ______ வழியாகதானே போயிருப்பார். அப்புறம் என்ன வெங்காய கடவுள்?
உன் அறிவை உனக்கு பயன்படுத்த சொல்லித்தந்த பெரியாரே, மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் 95 வயது வரை வாழ்ந்துவிட்டு சென்றார்.
உங்க பாபா நவீன மருத்துவ வசதிகளினால் 20 ஆண்டுகள் கூடுதலாக உயிரோடு இருந்துவிட்டு, பாபா முக்தியாம், மூடர்கள் பக்தியாம், தெய்வீக சக்தியாம்.
உங்களுக்கு பாபா போனால் என்ன? நீங்கள் மடையர்களாக இருக்கும்வரை, இன்னும் நித்தியானந்தா, சித்தியானந்தா, குட்டியானந்தா என்று நிறைய ஜந்துக்கள் வந்துக்கொண்டேதான் இருக்கும். கவலை வேண்டாம். கண்ணீர் வேண்டாம்.

சௌந்தர் வேணுகோபால் said...

சாய் பாபா எனும் கடவுளாலயே கிட்னி, நுரையீரல் பிரச்சனைய சரி பண்ணிக்க முடியல? இதுல இவரு இத்தனை நாளா மக்களோட பிரச்சனைய தீர்த்து வச்சாராமாம். ஆந்திரால சாய் பாபா போல இங்க பங்காரு னு ஒரு பரதேசி, அம்மா அம்மானு அந்த வார்தையினயே கொச்ச படுத்திகிட்டு அலையுது. அது பின்னாடி வேற ஒரு கூட்டம் அலையுது. ஒரு மாநிலத்துக்கு ஒரு பரதேசி இருக்கும் போல!

dr aruldas said...

DR RC ARULDAS
DR YOU DONE A GREAT THING THAN BABA, SOCIETY NEEDS YOU LIKE PEOPLE,YOU ARE REAL DOCTOR.

dr aruldas said...

DR RC ARULDAS
DR YOU DONE A GREAT THING THAN BABA,SOCIETY NEEDS YOU LIKE PEOPLE,YOU ARE REAL DOCTOR

Unknown said...

nooru periyar vanthalum ungalai ellam thiruthavae mudiyathu....

Anonymous said...

well said doctor!
என்னதான் பாபா மந்திரங்கள் செய்து பணம் சேர்த்திருந்தாலும், அவர் செய்த நல்ல காரியங்களை மதிக்கிறேன்.
அவை கூட, தான் மந்திரம் செய்து ஏமாற்றியமைக்கு வேறொரு(!!!) கடவுளிடம் இவர் கோரிய பாவமன்னிப்புகளோ?

தன் இயலாமைக்கும், செய்த பாவத்திற்கும் பயந்து இவரைப் போன்றோரிடம் சரணடைகின்றனர் மக்கள்.
எப்போது ஒவ்வொரு மனிதனும், கடவுளை மறந்து தன் மனசாட்சிக்கு உண்மையுள்ளவனாய் மாறுகிறானோ, அப்போது தான் "மனித" கடவுளர்களின் எண்ணிக்கை குறையும்.

Mohammed Ismath basha said...

சாயிபாபா ட்ரஸ்ட்டின் மொத்த சொத்து 40.000 கோடி ரூபாயிலிருந்து 1,45,000 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் கூட சரியான கணக்கை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. போகட்டும். நாம் குத்து மதிப்பாக ஒரு இலட்சம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். இதில் சாயிபாபா செலவழித்தது எவ்வளவு? தண்ணி டேங்க் கட்ட 100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு கொஞ்சம் கருணை உள்ளத்தோடு கணக்குபோட்டாலும் மொத்தம் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை. எனில் மிச்சம் 99, 000 கோடி எங்கே யாரிடம் இருக்கிறது?

அது பிரச்சினையே இல்லை. தற்போது சாய்பாபா ட்ரஸ்ட்டை நிர்வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஆதினத்தை கைப்பற்றும் போட்டி ஆரம்பித்து விட்டது. சூடு பிடிக்கும் போது இந்த ஆன்மீகக் கொள்ளையர்களின் கொள்ளையை புரிந்து கொள்ளலாம்.

அடுத்து சாய்பாபவின் பக்தராக இருப்பவருக்கு எதாவது தகுதி வைத்திருக்கிறார்களா? இல்லை. நன்கொடை கொடுக்கப்படும் பணத்தின் ரிஷிமூலத்தை ஆய்வு செய்து தணிக்கை செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை.

அதாவது தொழிலில் மோசடி செய்து அபகரிக்கப்படும் பணம், கருப்புப்பணம், இலஞ்சம் பணம், ஊழல் பணம், இன்னபிற கொள்ளைப் பணங்களும், அதன் உரிமையாளர்களான ஃபிராடு பேர்வழிகளும் தாராளமாக சாயிபாபாவை சந்தித்தார்கள். நன்கொடையும் கொடுத்தார்கள். சாயிபாபாவும் அவர்களை பரந்த உள்ளத்தோடு ஏற்று, ஒரு இலட்சம் கோடியில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையும் கட்டிக் கொண்டார். இடையில் செக்ஸ் மோசடி, கொலை என்று எல்லா மர்மங்களும் கொண்ட திரில்லரில் மறைந்து விட்டு இன்று ஒரே அடியாக போய்ச் சேர்ந்தார். ஆக இந்த வள்ளலின் பின்னணி இதுதான் என்று தெரிந்தால் கைகூப்பி தொழுவீர்களா, காறித் துப்புவீர்களா?

எஸ் சக்திவேல் said...

எனக்கு மக்களில் நம்பிக்கையில்லை. ஒரு பகுதியினர் "பாபா" விலிருந்து "கல்கிக்கு" மதம் மாறுவர், இன்னுமொரு பகுதியினர், "ஜக்கிக்கு". மிச்சப் பேர், வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பார்கள், அடுத்த புதிய பாபாவிற்கு

tamil said...

பின் லேடன் கொல்லப்பட்டதில் கண்கள் கலங்கினவா அல்லது மனது கலங்கியதா.அனுதாபங்கள் உண்டா இல்லையா, உண்டென்றால் யாருக்கு.

tamil said...

பாபா யார் மீதும் வெறுப்பை வளர்க்க போதிக்கவில்லை.நீ இந்த சாதியைச் சேர்ந்தவன் நீ என் பக்தனாக இருக்க முடியாது என்றோ,இந்த மதம்தான் உயர்ந்தது என்றோ சொல்லவில்லை.
உங்களை விட பாபாக்கள்தான் நாட்டிற்கு தேவை.நீங்களும், வினவு கும்பலும் வெறுப்பை பரப்புகிறீர்கள்.பாபா ஒரு நாளும் அதைச் செய்தத்தில்லை.அதற்காகவே அவரை மதிக்கிறேன்.

mohamedali jinnah said...

"தீர்க்க முடியாத நோய்களைக் குணப்படுத்தும் உங்களைப் போன்ற மருத்துவர்களும் கடவுள்தான்!"
இது நல்லாயிருக்கு. ஆக உலகமே கடவுளால் நிரம்பப்பட்டது - தன்னைத்தவிர . உதவி செய்தால் கடவுள் அதனால் அனைவரையும் அடிபணிந்து காலில் விழுந்து காலத்தினை ஓட்டுவோம் . இறைவன் (கடவுள்) இல்லை என்று சொல்பவர்கள் சொல்லட்டும் . ஒன்றே குலம் ஒருவனே தேவன் ( இறைவன்)என்று சொல்பவர்கள் சொல்லட்டும் .

SURYAJEEVA said...

for ram sridhar: உங்க பாக்கெட்டில நூறு ரூபாய் திருடிக் கொண்டு உங்கள் பயணத்துக்கே பத்து ரூபாய் திருப்பிக் கொடுக்கிறவன் நல்லவன் தான் சாமியோ...

நட்சத்திரன் said...

கட்டு​ரை அரு​மை!!! மக்கள் விழிப்புனர்வு அ​டையும் வ​ரை மனித சாமிகள் இருந்து​கொண்​டை இருப்பார்கள். அரசாங்கம் ​செய்யாத பல ​​சே​வைகள் பாபா ​செய்துள்ளார்.
பயன​டைந்தவர்கள் கடவுளாக பார்க்கின்றனர். தவறாக ​​தெரியவில்​லை.

கண்முடிதனமாக நம்பி ​நேரத்​தை வீணடிப்பவர்கள் நி​லைதான் மிகவும் ​மோசமான வி​​ளைவுக​ளை ஏற்படுத்துகிறது.

நம்பிக்​​கைதான் வாழ்க்​கை!!! எதன்மிது, எதற்காக, ஏன் என்று சிந்தித்து ​நம்பினால் நன்​மை!!!!

2009 Tamil said...

ha ha...மனிநிலை சரியில்லாதவர்களுடன் பழகிப்பழகி அவருக்கும் மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா?



இத்தனை சத்யா சாய் அமைப்புக்கள் நடத்தி வருபவர்கள் மூலயற்றவர்களா ? இல்ல நீங்கதான் புத்தி சாலிய ?

வெட்டி பயலுகள் .. உங்களால் முடிஞ்சா இப்படியான செவிய செய்யுங்கட ... ஜோக்கியன் போல கதைக்கிறேல் ?

அவரின் பெசுகளை கேட்பவர்கள் உங்களை போன்ற மக்கனுகள் இல்ல .. அனைத்தும் புத்தி ஜீவிகள் விஷயம் தெரிஞ்சவந்தான் அப்படி செய்வன். அறைகுறைய தெரிஞ்சி கொண்டு வந்திண்டாங்க கமெண்ட் பண்ண ..

போங்கடா .. போயிட்டு உங்கட சினிமா நடிகர்களுக்கு போயிட்டு அபிசேகம் செய்ங்க ... அதுக்குதானே நீங்கள் சரியான ஆட்கள் ... முடால்களே ... இந்தியாவுக்குள் இருந்து கொண்டு கிணற்று தவளை போல் இல்லமால் வெளி உலகத்தையும் பாருங்க ... பெரிய பிளாக்கர் வச்சிருந்த எதோ கொம்பன் ஏன்டா நினைப்பு

kiran.kumar said...

Itz beeter to be n d company of psyc patients than be in u nitwit saibaba devotees... Was all the money ur soybaba spent his ancestral inherited or his hard earned...!!! It was fraudulently earned money... His social work s show off so tat dumbs lyk u can defend him. Urs s Sheer foolish low language talk. Wat else can u expect from saibab devotee.

Post a Comment