“ஒரு நாள் நான் படித்த ஒரு புத்தகம் என் வாழ்க்கையையே
மாற்றி விட்டது.முதல் பக்கத்திலேயே அதன் தீவிரம் அந்த மேசை நாற்காலி ஆகியவற்றிலிருந்து
என்னைப் பிய்த்து எறிவது போலத் தோன்றியது.புத்தகம் என் உடலை மட்டுமல்ல மனதையும்
என்னென்னவோ செய்தாகத் தோன்றியது. அந்தப் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து ஒரு
நுண்ணொளி என் முகத்தில் பரவுவதாகவும் என் சிந்தையின் இருட்டுகளையெல்லாமும் நீக்கி
புத்தியைத் தெளிவடைய வைத்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது. அந்த ஒளி என் இருட்டுகளை
நீக்கும் போதே ஒரு பெருவெளியின் நிழல்களையும் எனக்குக் காட்டுவதாய்த் தோன்றியது...”
இப்படித்தான் ஆரம்பிக்கிறது ஒரம்பாமுக் (என் உச்சரிப்பு
பிழையாகக்கூட இருக்கலாம் Orham Pamuk) எழுதிய The new life எனும் நூல். இந்நூலின் ஆரம்ப சுவாரஸ்யத்தில் பல பக்கங்களைப் படித்துக் கொண்டே
இருந்த போது என் வாழ்க்கையை எந்த நூலாவது மாற்றியிருக்கிறதா என்று மனம் தேட ஆரம்பித்தது.
பல நூல்கள் அந்தப் படிக்கும் நேரத்தில் மனத்துள் சலனங்களை உருவாக்கும், இன்னும்
சில, சில நாட்களுக்கு மனத்துள் வளைய வந்து கொண்டேயிருக்கும்.
சிலவற்றின் வரிகள் வேறு எதையோ படிக்கும்/பேசும்/எழுதும் போது திடீரென்று வெளிவரும்.
சில கருத்துக்கள் காலத்துக்கும் ஒரு பாடமாக நிலைத்திருக்கும். ஆனால் ஒரு புத்தகம் என்
வாழ்க்கையை மாற்றியது என்றால்...அப்படி ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.
மணத்திலும் நினைவிலும் எப்போதும் உலவிக்கொண்டிருக்கும் நூல்களில்
சிலவற்றைப் பற்றித் தொடர்ந்து எழுதலாம் என்று இப்போதைக்கு ஒரு திட்டம் மனத்தில் உருவாகியிருக்கிறது.
அப்படி ஒரு வரிசையில் முதல் பத்து நூல்கள்- Ayn Rand எழுதிய Fountainhead,
Camus எழுதிய Outsider, Dostoevsky எழுதிய
Crime and Punishment, Herman Hesse எழுதிய Siddhartha, Kafka எழுதிய Trial, mமுதல் ஐந்தைப் பட்டியலிடும் போதே வெறும் ஆங்கிலத்தில் படித்த நாவல்களாக
வருகிறதே என்று ஒரு தயக்கமும் வருகிறது. நாவல் அல்லாத நூல்கள் என்றால் Henry
Miller எழுதிய The Rosy Crucifixion, Camus எழுதிய
Myth of Sisyphus, Campbell எழுதிய A Hero with a thousand
faces, ஓஷோவின் the
heartbeat of the absolute, விவேகானந்தரின் Practical Vedanta.. மீண்டும் தமிழில் எதுவும் தோன்றவில்லையா என்று ஒரு தயக்கம் வருகிறது.
மனத்துள் கருத்தாய் எழுத்தின் எழுச்சியாய்ப் பதிந்தவை படித்த
உடன் தங்கள் மொழிமீறி படித்தவன் மனத்துள் பேசும் மொழியாகவே மாறுவதால்.. இவை எனக்கு
அந்நிய மொழியாகப் படவில்லை.
இனி அடுத்த பதிவில் என்னைக் கவர்ந்த அதிகம் பிரபலமாகாத சில நூல்களைப்
பற்றி எழுதுகிறேன்.
இது சில நூல்களைச் சிலருக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி, அவ்வளவுதான்.
20 comments:
thanks for sharind dr.
இந்த நேர்கோட்டில் நீங்கள் பயணிப்பது பிடித்திருக்கிறது.இன்னும் அதிக எதிர்பார்ப்புக்களுடன்.
நல்ல பகிர்வுக்கு நன்றி...
Sir
My bad habit for more than 15 yrs is gone after reading this book.
"Secrets of True Wisdom Saka-Kalvi"
http://www.vallalyaar.com/books
பகிர்வுக்கு நன்றி டாக்டர்..
ஆங்கில நூல்கள் மட்டுமல்லாமல்,உங்களை கவர்ந்த தமிழ் நூல்களையும் அறிமுகபடுத்துங்கள் அய்யா.
:)
டாக்டர் ஐயா, என் வாழ்க்கையை மாற்றியமைத்த நூல் நீங்கள் எழுதிய ‘மனநோய்-சிகிச்சை முறைகள்’. இதை நான் படித்திருக்காவிடில் நான் இன்னமும் மனநிலை திரிந்து அலைந்து கொண்டிருந்திருப்பேன்.
Very good post!Thanks for sharing Doctor. Expecting more...
Have read Fountain head and Crime and Punishment in this list.
Somehow, Fountain head refused to grip me like the other one did.
வாழ்த்துக்கள் டாக்டர்,
நல்ல ஆரம்பம். இது போன்ற முயற்சிகள்தான் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கப்படுகிறது
அன்புடன்
இராமச்சந்திரன்
சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
உங்கள் இந்தப் பதிவு யூத்ஃபுல் விகடன் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் இடம் பெற்றுள்ளது. பார்த்தீர்களோ?
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
Very good article. Thank you, Dr.Rudhran.
Expecting your view abt fountain head!!
புத்தக அறிமுகம், பலருக்கு பயனாக அமையும்.
நன்றி! Viktor E Frankyl?
பகிர்வுக்கு நன்றி ஐயா!
Thanks for introducing these books.
Can some one please translate this book in english
பகிர்வுக்கு நன்றி ஐயா!
Post a Comment