ஏதோ ஒரு ஜால்ரா சத்தத்துக்காகவே நான் சிலரை ஆதரிப்பதாய் ஒரு கருத்து பின்னூட்டமாய் இப்பதிவில் சொல்லப்பட்டது. அப்படித்தானா என்று ஒரு சுயபரிசீலனையில் என்னுள் பார்க்கும்போதும் இல்லை என்றே எனக்கு பதில் வருகிறது.
எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்றே நான் இயங்குகிறேன்.
இணையம் ஒரு பொதுவெளி. அங்கே எழுத்தைக்காட்டுவது என்று வந்து விட்டால் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது தெரியாமல் இங்கே நான் எழுத வரவில்லை. இணையம் ஒரு சௌகரியம். வழக்கமாக காகிதங்களில் எழுதி சலிப்பு தோன்றியவுடன் நிறுத்தி விட்ட ஏராளமான பக்கங்களைப் போலல்லாமல் இணையத்தில் எழுதியவுடன் பதிப்பிட்டு விடுகிறேன். அதனால் எழுத்துப்பிழை இருக்குமே தவிர கருத்துப்பிழை எதுவும் என்னிடம் இருக்காது. என் கருத்தைப் பிழை என்று சிலர் கருதலாம், ஆனால் என்னைப்பொருத்தவரை பிழையான ஒன்றை சரியென்று நான் எப்போதுமே முன்வைத்ததில்லை.
இணையத்தின் பதிவுலகம் ஒரு சுற்றம். அன்பும் எதிர்ப்பும் சுற்றத்தாரிடையே இயல்பு. வானொலி தொலைக்காட்சி உரைகளிலோ புத்தகங்களிலோ என் பேச்சுக்கும் எழுத்துக்கும் பாராட்டுக்களை மட்டுமே கண்ட எனக்கு, இங்கே தான் எதிர்ப்பும் குற்றச்சாட்டும் நிறைந்த விமர்சனங்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்னியமாகவும் அநாமதேயமாகவும் எழுதினாலும், தங்களுக்கு என்மேலுள்ள கோபத்தை, கசப்பை, வெறுப்பை எளிதாகப் பலர் கருத்தாகவும் பின்னூட்டமாகவும் இடுவதே இதன் சிறப்பு. இதை நான் மதிக்கிறேன்.
நான் அமைதி காப்பது ஆமோதிப்பதாகிவிடாது. ஆனால் நான் ஆமோதிப்பது ரகசியமாகவும் இருக்காது. எனக்குப் பிடித்தால் பாராட்டுவது என் பழக்கம்; கண்டிப்பதும் அவ்வாறே.
என் வீட்டிற்கு வரும் நண்பர்களோடு நான் நேரத்தைச் செலவிடுவது எங்களது மனநிலையைப்பொறுத்தே இருக்கும். சண்டை வரும், சிரிப்பு வரும், அர்த்தமில்லாத அரட்டையும் இருக்கும் அக்கறையுள்ள பகிர்தலும் இருக்கும். இணையத்திலும் அப்படித்தான் செயல்படுகிறேன். நான் தீர்மானித்து ஏற்றுள்ள வாழ்முறையில் நான் எனக்குப் பிடித்த மாதிரிதான் வாழ்கிறேன். மற்றவருக்குப் பிடிக்குமே என்பதற்காக எதுவும் செய்ததில்லை, செய்வதாகவும் இல்லை. இதன் நீட்சியே பதிவுலகில் என் பங்கேற்பு.
ஜெயகாந்தன் முன்போல் இல்லையே நீ என் அவரை இன்னும் சிலாகிக்கிறாய் என்று சிலர் கேட்கிறார்கள். வினவு தளத்துடன் ஏன் அப்படியொரு ஒட்டுறவு என்று சிலர் வினவுகிறார்கள். பொதுவில் வந்து இப்படி நான் பேசும்போது, “என் இஷ்டம்” என்ற உண்மையான சுருக்கமான (நண்பர்களிடம் வழக்கமான) பதில் இங்கே போதாது என்றே நினைக்கிறேன்.ஜேகே என் ஆசான் என்றாலும் என்னை ஒரு நண்பனாக நடத்துபவர், வினவு எழுத்தாளர்களில் பலர் என் நண்பர்கள். என் நண்பர்களை நான் சந்திக்க இயலும் என்பதால் அவர்களை பொதுவில் நான் விமர்சிப்பதில்லை. அதற்காக அவர்கள் என் விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை என்பதல்ல, விமர்சித்து விட்டு விடாமல் அவர்களின் பக்கம் இருக்கும் நியாயத்தையும் நேரடி உரையாடலில் தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது. நட்பினால்தான் இது சாத்தியம். அதேபோல் நான் குறிப்பிட்ட இருவருக்கும் என்னையும் நன்றாகத்தெரியும், என்னை விமர்சிக்கவும், என் கருத்துக்களைத் திருத்துவதற்கும் அவர்களுக்கு நெருக்கமும் தகுதியும் உண்டு.அதனால்தான் அவர்களைப்பற்றி ஒரு பின்னூட்டத்திலோ ஒரு கட்டுரையிலோ நான் கருத்து தெரிவிப்பதில்லை.
இதை எழுதத்தூண்டியதே ஒரு முந்தைய பதிவின் பின் வந்த சில கருத்துகள்தான். தற்கொலை பற்றி எழுதியதை முத்துக்குமார் பற்றியே எழுதியதாக நினைத்து ஒரு விவாதமும் விமர்சனமும் தொடங்கியது. அதிலும் தற்கொலை என்பது எது என்று நான் விளக்கப்பார்த்தால், திடீரென்று நீ என் வினவுக்கு ஜால்ராவாக இருக்கிறாய் என்று ஒரு கேள்வி வருகிறது. எங்கே ஆரம்பித்த விஷயம் எங்கே போய் முடிகிறது?ஏன் இது நிகழ்கிறது? என்னைப்பற்றி ஒரு கணிப்பு இருப்பதால்! அதை நானேகூட ஒருவேளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அந்தக்கணிப்பின் அடைப்பிற்குள் என்னால் இருக்க முடியாது.
இது எவ்வளவு தூரம் பொதுவான மேடையோ அதே அளவு ஓர் அந்தரங்கமான உரத்த சிந்தனையும் கூட. பாராட்டுக்கள் எவ்வளவு சுகமானவை என்றாலும் அவை இன்னும் போதையாகிவிடவில்லை, அதே மாதிரி விமர்சனங்கள் எவ்வளவு துணுக்குற வைத்தாலும் அவை இன்னும் தவிர்க்கப்படும் அளவு வெறுப்பை உண்டாக்கவில்லை. இரண்டுமே என் எழுத்து மெருகேற உதவும் என்பதாலேயே பின்னூட்டங்களை நான் மட்டறுப்பதில்லை.
என் பதிவின் தலைப்பிலேயே உணர்த்தியிருப்பதைப்போல இது என் பார்வை. என் பார்வையில் பதிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. நான் எப்படிப் பார்க்க வேண்டும் என்று யார் சொல்லிக்கொடுக்க முயன்றாலும் என் பார்வை தானாய்த்தான் திசைதிரும்பும்.
ஓர் இசைக்கோர்ப்பில் ஜால்ரா அவசியமாகாது, ஆனால் சில நேரங்களில் அழகு சேர்க்கும். ஜால்ரா அடிப்பவன் தன்னால்தான் கச்சேரியே நடக்கிறது என்று நினைப்பதும், பிரதான வாத்தியக்காரன் ஜால்ரா இல்லாமல் தான் இசைக்கமுடியாது என்று முடங்குவதும் முட்டாள்தனம். நானும் என் நண்பர்களும் அந்த மயக்கத்திலோ மாயையிலோ இல்லை.
எத்தனையோ பேர்களின் பதிவுகளில் எனக்குப்பிடித்திருந்தால் பாராட்டு தெரிவிக்கிறேன், ஆனால் வினவு தளத்தில் ஆதரவாக ஒன்று சொல்லிவிட்டால் சிலருக்கு முகம் சுணங்குகிறது. அவர்களை நான் ஆதரிக்கக் காரணம் அங்கே நேர்மையும் உழைப்பும் பொதுநலனும் இருப்பதால் மட்டுமே. முன்னம் பல கட்சிகளையும் குழுமங்களையும் ஆதரித்து அவர்களது சாயம் வெளுத்ததால்தான் இவர்களது நிறத்தில் இப்போது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
என்னால் முடியாததை வேறொருவர் செய்யும்போது கைதட்டுவேன்.
கைதட்டல் ஜால்ராவாகிவிடாது!
இன்னும் எழுதி சலிப்பில் அழித்துவிடாமல், இப்போதைக்கு இங்கே நிறுத்துகிறேன்.
a recent interview
6 years ago
53 comments:
:-)
//முன்னம் பல கட்சிகளையும் குழுமங்களையும் ஆதரித்து அவர்களது சாயம் வெளுத்ததால்தான் இவர்களது நிறத்தில் இப்போது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.//
:)) சாயங்கள் மின்னுவதும் பின்பு பொலிவிழப்பதும் காலம் தோரும் நடந்தேறும் ஒரு வட்டத்தின் தொடக்கம்தானே...
இதுக்குத்தான் தமிழ்ல இணையத்தில எழுதணும்னு உங்கள கூட்டியாந்தது. பாருங்க, எவ்வளவு இருக்கு தெரிஞ்சிக்கணுமின்னு.
//எழுத்துக்கும் பாராட்டுக்களை மட்டுமே கண்ட எனக்கு, இங்கே தான் எதிர்ப்பும் குற்றச்சாட்டும் நிறைந்த விமர்சனங்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்னியமாகவும் அநாமதேயமாகவும் எழுதினாலும், தங்களுக்கு என்மேலுள்ள கோபத்தை, கசப்பை, வெறுப்பை எளிதாகப் பலர் கருத்தாகவும் பின்னூட்டமாகவும் இடுவதே இதன் சிறப்பு. இதை நான் மதிக்கிறேன்.//
இந்த நிலையே உங்களின் மீது எனக்கு வந்த ஈர்ப்பும், மரியாதையும் - நீங்கள் வளர்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடவில்லை...
டாக்டர் ரொம்ப அற்புதமாக, நிறுத்தி, நிதானித்து, அழகா உங்க தரப்பு பக்கத்தை சொல்லி இருக்கிங்க...இங்கே சொல்பவர்கள் சொல்லிகொண்டுதான் இருக்கின்றார்கள்...
காதிலே போட்டுக்கொள்ளாமல் செல்வதே எளிய வழி இருப்பினும்.. அந்த பின்னுட்டம் மூலம் எல்லோருக்கும் உங்கள் தரப்பை சொல்லி இருக்கின்றீர்கள் என்று எண்ணுகின்றேன்
//அதே மாதிரி விமர்சனங்கள் எவ்வளவு துணுக்குற வைத்தாலும் அவை இன்னும் தவிர்க்கப்படும் அளவு வெறுப்பை உண்டாக்கவில்லை//
...அப்பட்டமான வரிகள்
its good that you have expressed your view and t=your stand. Same way readers too should have the freedom to express their opinions.
என்ன கொடுமை இது ?
ஜெயகாந்தன்:
"ஜெயகாந்தன் கதை எழுதியதற்கு முன்" / "ஜெயகாந்தன் கதை எழுதியதற்கு பின்" என்று பார்த்தால் அவரால் எந்த சமுதாய மாற்றமும் வந்துவிடவில்லை.
"சமஸ்கிரகம்தான் நல்லது மத்தது எல்லம் நக்கிப்பிழைக்கும் நாய்கள் என்ற ரேஞ்சில்" பேசிய ஜெயகாந்தன் ஏதோ அவரால் முடிந்த கதைகளை எழுதி வாசிக்கும் மக்களை என்டெர்டெயின் பண்ணினார் அந்தக்காலத்தில். கதைப்புத்தகம் படிப்பவர்களுக்கு பொழுது போயிற்று. பாரதிராஜாவைவைப் பார்த்து பலர் படம் எடுக்க வந்ததைப்போல. அவரால் சிலர் கதை எழுத வந்திருக்கலாம்.
வினவு:
வினவு குழு எழுதுவது பேனைப் பெருமாளாக்கும் கதைகள் அல்ல. சமூக பிரதிபலிப்பின் கட்டுரைகள். இதன் நோக்கம் என்டெர்டெயின் அல்ல. ஆனால் லீனாவைப் பற்றி எழுதியது மோசமான விமர்சனப்பாதை. ஜெயகாந்தனின் நக்கிப்பிழைக்கும் நாய்கள் ரேஞ்சில் வினவு போனால் அப்புறம் அது அவர்கள்பாடு.
**
ருதரன் இவர்களுக்கு நண்பராய் இருப்பது அவர் விருப்பம். ஏதும் மாறப்போவது இல்லை. ருத்ரன் இவர்களுக்கு நண்பராய் இருப்பதால் தங்களின் கருத்து மாறுகிறது என்று சொல்பவர்கள் எத்தனைபேர்?
------------------
தற்கொலை / முத்துக்குமரன்:
கல்யாண வீட்டில் "சாப்பாடு நல்லா இருந்துச்சா " என்று பொதுவில் கேட்பதற்கும் துக்க வீட்டில் "சாப்பாடு நல்லா இருந்துச்சா " என்று கேள்வி கேட்பதற்கும் கிடைக்கும் அர்ச்சனைகள் வேறுவேறாக இருக்கும்.
"தற்கொலை தவறு" என்று சொன்ன உங்கள் கருத்து சரி. ஆனால் அதை முத்துக்குமாருடன் உதாரணம் காட்டியது சிக்கல். முத்துக்குமாரை வைத்து அரசியல் நடந்து கொண்டு இருக்கும்போது வேரைச் சாய்க்கும் கேள்விகள் வாங்கிக்கொள்ளப்படமாட்டாது.
புனிதராக ஆக்கப்பட்டவர்களைக் கேள்வி கேட்க இயலாது.
நான் அமைதி காப்பது ஆமோதிப்பதாகிவிடாது. ஆனால் நான் ஆமோதிப்பது ரகசியமாகவும் இருக்காது. எனக்குப் பிடித்தால் பாராட்டுவது என் பழக்கம்; கண்டிப்பதும் அவ்வாறே. ....................mmmmmmmmmm......sounds simple - but it has a deeper meaning.
எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கவேண்டும்...........
உங்கள் இடுகைகளிலேயே மிகப் பிடித்தது இது தான். (முழுதும் புரிந்ததனாலும் கூட!)
//நான் எப்படிப் பார்க்க வேண்டும் என்று யார் சொல்லிக்கொடுக்க முயன்றாலும் என் பார்வை தானாய்த்தான் திசைதிரும்பும்.//
:-)
//ஓர் இசைக்கோர்ப்பில் ஜால்ரா அவசியமாகாது, ஆனால் சில நேரங்களில் அழகு சேர்க்கும். ஜால்ரா அடிப்பவன் தன்னால்தான் கச்சேரியே நடக்கிறது என்று நினைப்பதும், பிரதான வாத்தியக்காரன் ஜால்ரா இல்லாமல் தான் இசைக்கமுடியாது என்று முடங்குவதும் முட்டாள்தனம். நானும் என் நண்பர்களும் அந்த மயக்கத்திலோ மாயையிலோ இல்லை.//
WELL SAID!
//எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்றே நான் இயங்குகிறேன்//
சொன்ன முதல் வார்த்தையே அசரடித்துவிடுகிறதே ருத்ரன்
//என்னைப்பற்றி ஒரு கணிப்பு இருப்பதால்! அதை நானேகூட ஒருவேளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அந்தக்கணிப்பின் அடைப்பிற்குள் என்னால் இருக்க முடியாது./
excellent.... me too....
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
நான் எப்படிப் பார்க்க வேண்டும் என்று யார் சொல்லிக்கொடுக்க முயன்றாலும் என் பார்வை தானாய்த்தான் திசைதிரும்பும்./// xlent..
****
பொதுவில் வந்து இப்படி நான் பேசும்போது, “என் இஷ்டம்” என்ற உண்மையான சுருக்கமான (நண்பர்களிடம் வழக்கமான) பதில் இங்கே போதாது என்றே நினைக்கிறேன்.
****
அது மட்டுமே சரியான பதில் என்றே தோன்றுகிறது.
எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும் யாரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக / மாற்றிக்கொள்ள அவசியம் இருப்பதாக தெரியவில்லை.
உங்களுக்கு முன்பே பழக்கம் இருக்கலாம். ஆனால் என்னைப்போன்றவர்களுக்கு தமிழ் இணையத்தில் எழுதுவது விமர்சனத்தை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று புரிய வைத்திருக்கிறது.
//ஓர் இசைக்கோர்ப்பில் ஜால்ரா அவசியமாகாது, ஆனால் சில நேரங்களில் அழகு சேர்க்கும். ஜால்ரா அடிப்பவன் தன்னால்தான் கச்சேரியே நடக்கிறது என்று நினைப்பதும், பிரதான வாத்தியக்காரன் ஜால்ரா இல்லாமல் தான் இசைக்கமுடியாது என்று முடங்குவதும் முட்டாள்தனம். நானும் என் நண்பர்களும் அந்த மயக்கத்திலோ மாயையிலோ இல்லை.
எத்தனையோ பேர்களின் பதிவுகளில் எனக்குப்பிடித்திருந்தால் பாராட்டு தெரிவிக்கிறேன், ஆனால் வினவு தளத்தில் ஆதரவாக ஒன்று சொல்லிவிட்டால் சிலருக்கு முகம் சுணங்குகிறது. அவர்களை நான் ஆதரிக்கக் காரணம் அங்கே நேர்மையும் உழைப்பும் பொதுநலனும் இருப்பதால் மட்டுமே. முன்னம் பல கட்சிகளையும் குழுமங்களையும் ஆதரித்து அவர்களது சாயம் வெளுத்ததால்தான் இவர்களது நிறத்தில் இப்போது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
என்னால் முடியாததை வேறொருவர் செய்யும்போது கைதட்டுவேன்.
கைதட்டல் ஜால்ராவாகிவிடாது!
//
well said சார்
//கல்யாண வீட்டில் "சாப்பாடு நல்லா இருந்துச்சா " என்று பொதுவில் கேட்பதற்கும் துக்க வீட்டில் "சாப்பாடு நல்லா இருந்துச்சா " என்று கேள்வி கேட்பதற்கும் கிடைக்கும் அர்ச்சனைகள் வேறுவேறாக இருக்கும்.//
அருமையான உதாரணம்
Dear Dr,
It is really good that you explained your thoughts... accepting the Positive and Negative comments..
Venkat.
மனதின் ஆட்டத்தை அழகாய் பதிவு செய்கிறீர்கள்.
போட்டோ வேறொன்றையும் உணர்த்தியது :)
மிக அழகாய் தங்கள் நிலையை விளக்கி உள்ளீர்கள்
Dr Rudran!
Whatever, you hve perfected the art of a clever merchant - to get customers from across cross sections.
The young minds (some old, too, like Bruno) have already placed their heads at your altar. Heads from both sides: the right and the left. Lucky man, you have an embarassment of riches ! Young and Old, Men and Women!!
Johnson described about Chesterfield's letters of advice to his illegiitimate son, Phillip; thus:
'Manners of a dancing master and morals of a whore!'.
Always there will be Chesterfields in our society - in blogosphere, too!!
Simply Superb. Your insights have always been thought provoking. Thanks for the article.
- Hidha
ok.. in our dravidian/indian tradition, whores ( so were they called) were indeed masters of art!
chseterfield may not subscribe to your morals, but his language is impeccable.
and, i take this as a compliment for my honesty.
Your Tamil, too.
//"எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கவேண்டும்
அதனால் எழுத்துப்பிழை இருக்குமே தவிர கருத்துப்பிழை எதுவும் என்னிடம் இருக்காது
என்னைப்பற்றி ஒரு கணிப்பு இருப்பதால்! அதை நானேகூட ஒருவேளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அந்தக்கணிப்பின் அடைப்பிற்குள் என்னால் இருக்க முடியாது"//
வசீகர வார்த்தை அமைப்புகள் டாக்டர்...
நிறுத்தி தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்
தன்னை மனிதனாக மதிக்காத யாருமே இந்த சமூகத்தை, மக்களை மதிப்பதில்லை. அவர்களுக்கு யாரும் தன்னை மனிதனாக பார்ப்பது பிடிக்காது. எனக்கு சாதி தேவை இல்லை என்று சொன்னால் எல்லோரும் சண்டைக்கு வருவார்கள். எனக்குத்தேவையானதை நீ செய்ய வேண்டும். இல்லைஎன்றால் நீ இந்த சமூகத்தை-ல் வாழத்தகுதியற்றவன். இது தான் அவர்களின் தீர்ப்பு.
பொய்யை தின்று பொய்யோடு வாழ்ந்து பொய்யோடு சிலாகிக்கும் யாருக்கும் உண்மைகள் கசக்கும். போலிகளுக்கு இயல்பு மிகவும் எரிச்சலூட்டும். அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். அவர்களின் மனது புண்பட்டதற்கெல்லாம் மருந்து போட வேண்டிய அவசியமில்லை. முடிந்தால் விச ஊசி போட்டு கொன்று விடலாம் அவர்களின் கருத்தை :-)
கலகம்
kalagam.wordpress.com
http://kalagam.wordpress.com/2009/04/17/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9/
//என்னால் முடியாததை வேறொருவர் செய்யும்போது கைதட்டுவேன்.
கைதட்டல் ஜால்ராவாகிவிடாது!///
கிட்ட தட்ட நமது வழக்கத்தில் பாராட்டுவது கூட எதையோ எதிர் பார்த்து செய்கின்ற சடங்காகி விட்டது...,
'நட்பினால்தான் இது சாத்தியம். அதேபோல் நான் குறிப்பிட்ட இருவருக்கும் என்னையும் நன்றாகத்தெரியும், என்னை உண்டு.அதனால்தான் அவர்களைப்பற்றி ஒரு பின்னூட்டத்திலோ ஒரு கட்டுரையிலோ நான் கருத்து தெரிவிப்பதில்லை.விமர்சிக்கவும், என் கருத்துக்களைத் திருத்துவதற்கும் அவர்களுக்கு நெருக்கமும் தகுதியும்
'
அப்படியானால் ஜக்கி வாசுதேவோ அல்லது ஸ்ரீஸ்ரீரவிசங்கரோ உங்களுக்கு நண்பராக இருந்து,
உங்களை விமர்சிக்கவும், கருத்துக்களைத் திருத்துவதற்கும் அவர்களுக்கு நெருக்கமும் தகுதியும் இருக்கிறது என்று முடிவு செய்துவிட்டால் அவர்களை நீங்கள் பொதுவில் விமர்சிக்கமாட்டீர்கள்.அப்படித்தானே.நீங்கள் வினவை எப்போழுதும் விமர்சிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.ஆனால் வினவு லீனாவை பற்றிய வதந்தி மற்றும் தனி நபர் தாகுதல் இடுகையில் அதை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் ஜெண்டில்மேன் மாதிரி ஏதோ எழுதினீர்களே அப்போதே தெரிந்து விட்டது உங்கள் விமர்சனத்தின் அளவுகோல் எதுவென்று. உங்களுக்கு எந்த அயோக்கியன் நண்பரானாலும் அவர்களை பொதுவில் விமர்சிக்க மாட்டேன் என்பதுதான் உங்கள் நிலைப்பாடு என்பதை சில வாக்கியங்களில்
எழுதி மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான் என்று செண்டிமென்டலாக எழுதியிருந்தாலும், இப்படி சுற்றிவளைத்து எழுதினாலும் உங்களைப் புரிந்து கொள்ள முடியும். வார்த்தைகளில் மயங்கும் கூட்டம் இருக்கும் வரை உங்களுக்கும், வினவு போன்ற போலி புரட்சியாளர்களுக்கும் கவலையில்லை. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
shall i write on this... i may dissove some images and at the same time incure some more enmity?
விவாதம் செய்ய முயனராதற்கு மகிழ்ச்சி.
லீனா எனக்கு நேரிடயாகப் பரிச்சயமில்லாத ஒரு பெண்.
அவருக்காக வாக்களது வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதை அவரே செய்திருக்கிறார், தன் பதிவில்.
மூழ்காதது எனும் பிரமை எனக்கு இல்லை. போலி புரட்சியா, போலி கம்யூனிசமா என்பதை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு, என் பார்வைக்கு, (உங்களைப் போன்றோரின்படி என் சிற்றறிவிற்கு) இப்போதைக்கு வினவு எனக்கு ஒத்து வருகிறது.
ஜாக்கி மட்டுமல்ல செத்த வேதாத்ரியையும் பிறரைப்போலல்லாமல் நான் நேரிடையாகப் பரிசோதித்தவன். ஜாக்கி, சிரிசிறி என்று எந்த ஜோதியில் வேண்டுமானாலும் அய்க்கியமாகுங்கள்... உங்கள் வீட்டாருக்கில் ஒரு மனநல நிபுணர் இருந்தால்.
sorry for the typos i presume you can read thro them.
சில இடங்களில் உங்கள் கருத்துடன் ஒத்துப் போகமுடியவில்லை என்றாலும், உங்கள் எழுத்தில் இருக்கும் தரத்தை மதிப்பவள்.. இப்போது தான் இதை எழுத முடிந்தது.. ரொம்ப லேட் என்று நினைக்கிறேன்.. இருந்தாலும் பரவாயில்ல்லை.. சொல்லிவிட்டுப் போகிறேன்..
உங்கள் பதிவு அழகாக மன முதிர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது.. வாசகர்களால் உங்களைச் சுற்றி ஒரு வட்டம் இடப்பட்டிருக்கிறது தான்.. ஒருவரை பிடிக்க ஆரம்பித்தால் அவர் செய்யும் எல்லா செயல்களும் தமக்கு ஒத்ததாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுதல் நம் மக்களின் மனப்போக்கு.. நீங்கள் அந்த வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் உங்களுடைய பார்வையிலேயே எழுதுங்கள்.. வீ லைக் தட்..
இதைப் படித்து விட்டு யாரிந்த வினவு என்று எட்டிப்பார்த்தால்.. ஹூம்.. தினத்தந்திக்கும் தினமலருக்கும் இடையேயான ஒரு லெவலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்! என் பெயரை வெளியிடக் கூட பயம் பாருங்கள்.. அப்புறம் என்னையும் அர்த்தமில்லாமல் ஏசி வைப்பார்கள்.. இவர்களை எதிர்த்து கருத்து சொல்லாவிட்டாலும் இவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தை எங்காவது யாராவது சொன்னாலே போட்டு கிழிக்கிறார்கள்.. கூடவே தவறான வார்த்தைகளுடன் எழுதப்படும் கமெண்ட்களும் பிரசுரிக்கப்படுகின்றன.. எதிர்த்தால் ஒன்றை தீவிரமாக எதிர்ப்பது இல்லை தீவிரமாக ஆதரிப்பது என்ற நடுநிலை தவறிய நிலையே இவர்கள் நிலை.. இருந்தாலும் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது..
லீனாவின் கவிதைகள் எனக்கும் பிடிக்கவில்லை.. ஆனால் அதற்காக அவருடைய வாழ்க்கையைப் பற்றி இப்படியாம் அப்படியாம் என்று மோவாய்க்கட்டையில் இரு பெண்மணிகள் கை வைத்து வம்பு பேசுவது போன்ற எதிர்ப்பை பதிவுலகில் நான் காட்ட மாட்டேன்.. அந்த வம்பை கை தட்டி ஆதரிக்கும் ஒரு கூட்டம்.. பெர்வர்டெட் கவிதைகள் என்று தோன்றினாலும் சொந்தப் பெயரில் தனியொருவரை தாக்காமல் பயங்கொள்ளாமல் எழுதிய லீனாவை பிடித்திருக்கிறது.. வினவு ராவணன் வித்தகன் என்று புனைப் பெயரில் தனியொருவரின் வாழ்க்கையை எழுதிக்கிழிக்கும் அவர்களை பிடிக்கவில்லை..
அந்தக் கூட்டத்தில் உங்களைக் கண்டதும் அந்த வாசகருக்கு ஷாக்காகி விட்டது போலும்.. விடுங்கள்..
மருத்துவர் ருத்ரன் அவர்களுக்கு அந்த ஏக இறைவனின் அமைத்து உங்கள் மீது நிலவட்டுமாக,
தங்களுடைய கட்டுரையில் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளக் கூடிய செய்தி இது தான். உங்களுடைய நண்பர்கள் தவறிழைத்தாலும் (தனிப்பட்ட தவறல்ல) , அந்த தவறான கருத்தை சரியான ஒன்று எனஅடையாளபப்டுத்தி பொதுக் கருத்தாக பொது மக்கள் முன் அவர்கள் வைத்தாலும் அதை நீங்கள் பொதுவில் கண்டிக்க மாட்டீர்கள். அவர்களை தனிமையில் சந்தித்து தவறென்று சொல்லிவிடுவேன் என்று சொல்லுகின்றீர்கள்.
தம் சுற்றத்தார்கள், நண்பர்கள் செய்யும் தவறுகளை (தனிப்பட்ட தவறுகளல்ல) பொதுவில் கண்டிக்க தவறுகின்ற நீங்கள் மற்றவர்கள் செய்யும் தவறுகளை எந்த அடிப்படையில் கண்டிக்கின்றீர்கள்? அந்த உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது? தனக்கு தெரிந்தவன் தவறு செய்தால் பொதுவில் வாய்மூடி மவுனமாக இருப்பதும் மற்றவர்கள் தவறு செய்யும் போது பொதுவில் கண்டிப்பதும் இரட்டை நிலைப்பாடு அல்லவா? இது தெளிவான அநீதி அல்லாமல் வேறென்ன? உங்களைப் பொறுத்தவரை நீதியின் அளவுகோல் வேறு வேறாக இருக்கின்றதே மருத்துவர் ருத்ரன்?
வார்த்தைகளில் வனப்பை கூட்டி விட்டால் மட்டும் போதாது . வெறுமனே வாசிப்பவர்களுக்கு வேண்டுமானால் இவை அழகாக தெரியலாம். ஆனால் செய்கின்ற செயல்கள் தான் ஒருவருடைய குணநலன்களை முழுவதுமாக வெளிப்படுத்தும். அந்த வகையில் உங்களுடைய இந்த கட்டுரை உங்களைப் பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கின்றது. மதங்களை வெறுப்பவராக தாங்கள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லும் நீதி போதனைகளை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன். "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே". தவறு யார் செய்தாலும் தவறே. தெரிந்தவருக்கு ஒரு நீதி தெரியாதவருக்கு ஒரு நீதி என்ற இரட்டை நிலைப்பாட்டை விட்டுவிடுங்கள்.
துவாவுக்கு நன்றி.
நான் நீதி சொல்லவரவில்லை. தடுமாற்றங்களை நேரில் பார்க்க முடிந்தவரிடம் சொல்வது என் வழக்கம். இரட்டை நிலையா என்றால் ஆம்! நெற்றிக்கண், நக்கீரன் போல் அவ்வப்போது நமக்குச் சாதகமாக எடுத்துக் கொள்வதும் இரட்டை நிலைதான்.
ஏக இறைவன் என்கிறீர்கள், நான் ஏக இறைவி என்று தொழுகிறேன்.
நான் என் வீட்டில் ஒரு தவறு நடந்தால் உடனே பஞ்சாயத்துக்குப் போவதில்லை, உள்ளேயே சரி செய்யவே முயல்வேன். நீங்கள் வேண்டுமானால், வீட்டில் சாதம் வேகவில்லை என்று பொதுப்பஞ்சாயத்து கூட்டிக்கொள்ளுங்கள், நான் அப்படி அல்ல.
மேலும் எனக்கு நானே வழங்கிக்கொண்ட உரிமை தான் பொதுவில் வருபவற்றை குறித்த பதிவுகள்.தனிப்பட்ட மனிதர்களைத் தாக்கி நான் எழுதுவதில்லை (தனியே மாட்டினால் அடித்து விடுவேன்). மாஷால்லாஹ் என் எழுத்து உங்களிடமிருந்தும் பாராட்டு ஒப்புதல் வரவழைத்திருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு தெளிவு பிறக்கட்டும்.
நான் மணி என்பவர்க்கு பதில் எழுதினால் அதுவே கட்டுரையாகிவிடும்; எழுதுகிறேன், இன்ஷாஅல்லாஹ்.
மருத்துவர் ருத்ரன் அவர்களுக்கு ஏக இறைவனின் அமைதி என்றென்றும் உங்கள் மீது நிலவட்டுமாக,
தங்களுடையது இரட்டை நிலைப்பாடு தான் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. நீங்கள் யாரை தொழ வேண்டும் என்று நான் முடிவெடுக்க இயலாது. அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
நீங்கள் வார்த்தைகளை கைக்கொண்டு நான் எடுத்த வைத்த கருத்திலிருந்து நழுவுகிண்றீர்கள் என்றே எண்ணுகின்றேன். சமையல் பஞ்சாயத்து என்று மிக லாவகமாக கடந்து சென்று விட்டீர்கள். நான் சொன்னது சமையல் சரியாக இல்லை என்கிற மாதிரியான தனிப்பட்ட தவறுகளல்ல. அதை தான் நான் அடைப்புக் குறிக்குள் தனிப்பட்ட தவறுகளல்ல என்று முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அதை நீங்கள் வசதியாக மறந்து (அல்லது மறைத்து) விட்டீர்கள்.
சமூகத்தில் குறிப்பிட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தவறுகளையே நான் குறிப்பிட்டேன். உங்களுடைய நண்பர் பொதுவில் ஒரு தவறான கருத்தை எடுத்து வைத்து அது சரியென்று வாதிட்டாலும் நீங்கள் இப்படித்தான் கண்டுகொள்ளாமல் இருப்பீர்களா என்ற என் கேள்விக்கு நீங்கள் விடையளிக்காமல் சாதுர்யமாக நழுவிச் சென்று விட்டீர்கள்.
உதாரணமாக முத்துக்குமார் தற்கொலையை எடுத்து கொள்வோம். அதை உங்களுடைய நண்பர்கள் தியாகம் என்கிறார்கள். அந்த தற்கொலையை தாங்கள் தியாகம் என்று ஏற்றுக் கொள்வீர்களா? என்னைப் பொறுத்தவரை தற்கொலை என்பது கடைந்தெடுத்த கோழைத்தனம். முத்துக்குமாரின் தற்கொலையை தாங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்?
//
இதைப் படித்து விட்டு யாரிந்த வினவு என்று எட்டிப்பார்த்தால்.. ஹூம்.. தினத்தந்திக்கும் தினமலருக்கும் இடையேயான ஒரு லெவலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்!//
நான் மணி
என்ன லெவல் சரின்னு சொல்றீங்களா.. ஒரு லெவல் என்பதை அதனை மொழி லாவகத்தில் வைத்து மதிப்பிடுவீர்களா அல்லது அதன் பார்வையின் தரம் பற்றி மதிப்பிடுவீர்களா... லெவல் பிரிப்பவரின் லெவலை மாத்திரம்தான் அறிய விரும்புகிறேன்..
//
என் பெயரை வெளியிடக் கூட பயம் பாருங்கள்.. அப்புறம் என்னையும் அர்த்தமில்லாமல் ஏசி வைப்பார்கள்..
இவர்களை எதிர்த்து கருத்து சொல்லாவிட்டாலும் இவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தை எங்காவது யாராவது சொன்னாலே போட்டு கிழிக்கிறார்கள்.. கூடவே தவறான வார்த்தைகளுடன் எழுதப்படும் கமெண்ட்களும் பிரசுரிக்கப்படுகின்றன.. //நீங்க பிரித்த லெவலுக்காக உங்களையும் மதித்து ஒருவர் கருத்து சொல்வார் என்ற அதீத பணிவால் புல்லரிக்கின்றது. நிற்க• அர்த்தமில்லாமல் திட்டியதையே கவிதை எனக் கொண்டாட முடிந்த பெண்ணின் சுதந்திரத்திற்காக வக்கலாத்து வாங்குகின்றீர்கள். திட்டும்போது கூட நடுநிலைமை தவறாமல் ஆளும்வர்க்கத்தையோ, பார்ப்பனீயத்தையோ சாடாமல் எழுத்த் தெரிந்த அம்மையாரை நடுநிலை தவறி விமர்சித்து அதாவது உங்கள் வார்த்தையில் போட்டு கிழித்து விட்டார்கள். என்ன கிழித்தார்கள். அந்த அம்மாவையா.. கோடானுகோடி உழைக்கும் மக்களின் விடுதலையை பேசியவர்களின் மீதான அம்மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் திமிர்த்தனம் முன்னால் அதற்கு பதிலடி தர உழைக்கும் வர்க்கம் சார்பில் பொதுவாக யாரும் வருகையல் தனிமனித சுதந்திரம் பற்றி வகுப்பெடுக்கின்றீர்கள். தவறான வார்த்தையை மடக்கி மடக்கி கவிதை எனப் பெயர் சூட்டி முதலில் வம்பிழுத்த அவளிடம் போய் யார் விமர்சனம் பண்ணுவது, நீங்கள் செய்தீர்களா... தான் கோடம்பாக்கத்தில் ஒரு ஆளாக வருவதற்கு முயற்சிக்கும் ஒரு பெண்ணின் முயற்சி என விட்டுவிட முடியுமா இதனை. அதற்கு அவள் வேறு எதாவது செய்யலாம் என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்.
//எதிர்த்தால் ஒன்றை தீவிரமாக எதிர்ப்பது இல்லை தீவிரமாக ஆதரிப்பது என்ற நடுநிலை தவறிய நிலையே இவர்கள் நிலை.. இருந்தாலும் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது..//இப்படிப்பட்ட நடுநிலைமையை தாங்கள் கடைபிடிப்பதாக அந்த அம்மையார் கருதுவதால் ருத்ரன் நீங்கள் தான் அந்த அம்மையாருக்கு தெளிவுபடுத்த வேண்டும். பொதுவில் நடுநிலைமை எப்படி மோசடியானது என மா.லெனிய வாதிகள் ஆயிரம் முறை விளக்கியதைக் காட்டிலும் ஒரு ஸோ கால்டு நடுநிலைவாதி யின் ஒப்புதல் வாக்குமூலம் எளிதாக அதனைப் புரியவைக்கிறது.//
லீனாவின் கவிதைகள் எனக்கும் பிடிக்கவில்லை.. ஆனால் அதற்காக அவருடைய வாழ்க்கையைப் பற்றி இப்படியாம் அப்படியாம் என்று மோவாய்க்கட்டையில் இரு பெண்மணிகள் கை வைத்து வம்பு பேசுவது போன்ற எதிர்ப்பை பதிவுலகில் நான் காட்ட மாட்டேன்.. அந்த வம்பை கை தட்டி ஆதரிக்கும் ஒரு கூட்டம்.. //
லீனாவுக்கும் உங்களுக்கும் கூட தொழிலாளி வர்க்கம் பற்றியும், கம்யூனிசம் பற்றியும் பிடிக்காமல் இருக்கலாம். அப்படியானால் தைரியமாக அதனை ஏன் பிடிக்கவில்லை என்பதை கருத்து ரீதியாக விளக்கிதானே எழுத வேண்டும் பேச வேண்டும், மாறாக பெரும்பான்மை மக்களின் ஆதர்ச தலைவரை இழிவுபடுத்துவதன் மூலம் பெரும்பான்மை மக்கள் மீதான தமது எள்ளல் பார்வையை வெளிப்படுத்தும் கைமைதுனம்தானே அதில் வெளிப்படுகிறது. அவள் பேசியது அதை மட்டுமா அவர்களது பொதுவான கண்டுபிடிப்புகளை தனது பாலியல் வக்கிரங்களின் குறியீடாக்கினாளே.. அதற்கு எதாவது கோனார் நோடஸ் போடப் போகிறாளா... //வம்பு பேச்சை கேட்க நாதியற்ற தொழிலாளி வர்க்கத்திடம் காட்டும் அந்தப் பெண்மணி சினிமாத்துறையில் கேவலம் தயாரிப்பாளர்களாலும் பெரிய இயக்குநர்களாலும்ப சீரழிந்த பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தி கவிதை எழுதுவாளா. அந்த சீனில் எழுதினால் அம்மாவுக்கு கோடம்பாக்க கதவுகள் திறக்காது என்ற பயத்தால் அதைக் கூடச் செய்ய துப்பில்லாமல் எளியாரை வலியார் கொல்லும் இழிந்த பண்பில்தானே பேச வருகின்றார். இதற்கு வக்கலாத்து வாங்க ஒரு கோழைக் கூட்டம்.. தைரியமிருந்தால் மெய்யப்ப செட்டியாரையும், உதயநிதி, தயாநித அழகிரி போன்ற சினிமா புரடியேசர்கள் பற்றி எழுத சொல்லுங்கள். வம்பு எப்படி இருக்குதுன்னு அவங்க சொல்லுவாங்க//
பெர்வர்டெட் கவிதைகள் என்று தோன்றினாலும் சொந்தப் பெயரில் தனியொருவரை தாக்காமல் பயங்கொள்ளாமல் எழுதிய லீனாவை பிடித்திருக்கிறது.. வினவு ராவணன் வித்தகன் என்று புனைப் பெயரில் தனியொருவரின் வாழ்க்கையை எழுதிக்கிழிக்கும் அவர்களை பிடிக்கவில்லை..//எது தைரியம்னு ஏற்கனவே சொல்லிட்டேன். புனைபெயர் அப்படின்னு நீங்க சொல்றீங்க• அந்த புனைபெயர் கூட இல்லாமல்தான் பின்னூட்டம் கூட இட்டுள்ளீர்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். புனைபெயர்தான் என்பதற்கு லீனா போலவே ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுடன் களம் இறங்கி உள்ளீர்கள். //
Dear Doctor,
please stop wasting your time replying to anonymous comments and write something new.
This is just my humble request.
களத்தில் போரிட்டு இறக்கும் வீரனின் சாவைத் தற்கொலை என்று சொல்கிறவர்களே முத்துக்குமாரின் உயிர் ஈகத்தைத் தற்கொலை எனபார்கள்!
அவன் திட்டமிட்டு தன் உயிர் ஈகத்தின் வழி ஏற்படுத்திய மாற்றத்தை தமிழ்நாட்டில் கண்ணெதிரில் உண்மையாகக் கண்டவர்கள், 'தற்கொலை' எனக் கூறத் துணியார்!
Dear Doc,
Please get rid of your beard;you look positively repulsive like a taliban terrorist or a vicious periyarist with homicidal instincts.You may not belong to either community in reality.
மதித்து கருத்து சொன்னதற்காக முதலில் நன்றி..
உங்கள் கோபம் புரிகிறது.. உங்கள் கொள்கையான கம்யூனிசத்தை நீங்கள் பெரிதும் மதிக்கும் தலைவர்களை லீனா தாக்கி எழுதியதால் வந்தது..
லெவல்.. எழுத்தின் தரத்தை வைத்து தான் சொல்லியிருந்தேன்.. //தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது// - இதில் அவர்கள் பார்வையின் வீரியத்தை தான் பாராட்டியிருக்கிறேன்..
எனக்கு கம்யூனிசம் பெரிதாகத் தெரியாது.. காய் விற்பவரிடம் பேரம் பேசாமல் காய் வாங்கிக் கொள்வது.. ரிக்ஷா தொழிலாளருக்கு அவர் கேட்காமலே அதிகம் தருவது.. இது தான் என்னால் பின்பற்றக்கூடிய ப்ராக்டிகல் கம்யூனிசம்..
நான் நடுநிலைவாதி தான்.. எனக்கு இந்த /பொதுவில் நடுநிலைமை ஏன் மோசமானது/ என்பதை விளக்கினால் அல்லது விளக்கப்பட்ட பக்கத்துக்கு லின்க் கொடுத்தீர்களானால் படித்துப் புரிந்து கொள்ள முயற்சிப்பேன்..
அவருக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு கம்யூனிசம் புரிந்ததில்லை.. அதனால் அதனை ஆதரித்தோ இல்லை எதிர்த்தோ எழுதவில்லை.. வினவுத் தளத்தில் வந்த கட்டுரைக்கும் எழுதவில்லை..
என் கோபமெல்லாம் - அவர் ஒரு தத்துவத்தை கிழித்திருந்தார்.. வினவு அவரது வாழ்க்கையைக் கிழித்திருந்தார்கள்.. அது தான்.. அந்த வேறுபாட்டைத் தான் சொல்லியிருந்தேன்..
சினிமாப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய தங்களது கருத்து நியாயமானது தான்.. ஒருவரின் திறமையை வைத்து வாய்ப்பளிக்காமல், தான் இழுத்த இழுப்பிற்க்கெல்லாம் ஈடு கொடுத்திட வேண்டும் - அப்போது தான் வாய்ப்பு என ஆதிக்கப் போக்குடன் இருக்கும் வக்கிரர்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது..
நானறிந்த பார்ப்பனர்கள் நீங்கள் எதிர்க்கும் அளவுக்கு இருப்பவர்கள் அல்ல.. உங்கள் தீவிர எதிர்ப்பால் அவர்களும் பாதிக்கப்படலாம்.. நீங்கள் அந்தக் கொள்கையை, அதனை பின்பற்றுபவர்களை எதிர்ப்பீர்களானால் உங்களுடன் இருப்பேன்.. அந்த சாதியில் பிறந்தற்காகவே மற்றபடிக்கு நல்லவர்களாக இருக்கும் தனி மனிதர்களையும் எதிர்ப்பீர்களானால் - அந்த மனிதர்களோடு தான்.. இது தான் எனது நடுனிலை.
ஆளும் வர்க்கத்தின் தவறுகள் நன்றாகவே தெரியும்.. அவர்களை எதிர்ப்பவர்கள் மட்டுமே சேவையாளர்கள் அல்ல.. எதிர்ப்பை விடுத்து மக்களுக்காக நேரடியாக தன் நேரத்தை செலவிடுபவர்களும் சேவையாளர்கள் தான்..
நான் கோழை இல்லையென்றிட மாட்டேன்.. ஆனால், வினவு வீரர்களுக்கு முகமூடியேன் தேவை?
புனைப்பெயர் என்பது நாம் வைத்துக் கொள்வது தானே.. உங்களுக்காக ஒன்றை வைத்துக் கொள்கிறேன்.. லேப்டாப்..
////Please get rid of your beard;you look positively repulsive like a taliban terrorist or a vicious periyarist with homicidal instincts.You may not belong to either community in reality.////
Dear Mr. Anonymous,
Your revulsion and agony ,at the sight of an ugly face sporting an uglier foliage in the face is understandable.
However your assesment that Dr Rudhran cannot poosibly be a typical dravidian tamil periyaarist fascist is incorrect.
Dr Rudhran is every inch a fanatical dravidian tamil periyaarist fascist.make no mistake about that.
நான் மணி
முதலில் லீனா கம்யூனிசத்தை விமர்சித்து தொங்கப் போடவெல்லாம் இல்லை, முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தான் ஆடை அவிழ்ப்பதற்கு அஞ்சுகிற ஒருபெண் மாபெரும் தலைவர்களின் ஆடையைச் சீண்ட தொடங்கினார் என்பதுதான் நிஜம்.
எழுத்துவின் தரம் இன்னது என்பதற்கு தாங்கள் வைத்திருக்கும் அளவுகோல் என்ன என்பதுதான் எனது கேள்வி. உங்களது பிராக்டிகல் கம்யூனிசம் என்பது நக்கல் கலந்த்து அல்ல எனவும் புரிந்து கொள்கிறேன். பிராக்டிகல் அல்லாத கம்யூனிசம் என்ற ஒன்றைப் பற்றி உங்களுக்கு பாடம் எடுக்க முடியும். மேதமை தாங்கியோர் அதற்கு தயாராக இருப்பரோ என்ற அச்சம் மேவுகிறது.
நடுநிலைமை ஏன் மோசம் என்பதை ஆயிரம் லிங்க கொடுப்பதை விட உங்களிடம் இருந்தே நான் குறிப்பிட்ட வரிகளில் இருந்தே துவங்குங்கள். ஒன்று தீவிர ஆதரவு அல்லது தீவிர எதிர்ப்பு என்பதை குறைசொல்ல நடுநிலை இல்லாதவர்கள் என்றீர்கள். ஒரு அநியாயம் நடக்கும் இடத்தில் தவற்றின் பக்கமும் இருக்க மாட்டேன் என்பதும் சரியின் பக்கமும் இருக்க மாட்டேன் என்பதும் இணைந்த நடுநிலை என்பது தவறிழைத்தவனை தப்பிக்க வைக்க உதவுகின்ற மாரல் வேல்யூவை தவறிழைத்தவனுக்கே வழங்கும் எளிய உண்மை உங்களுக்கு புலப்படவில்லையா..
கம்யூனிசம் உங்களுக்கு புரியவில்லை என்பதையும், வினவு கட்டுரைக்கு எழுதவில்லை என்பதையும் தாங்கள் வினவின் தரத்தை தினத்தந்திக்கும் தினமலருக்கும் இடையில் வைத்த போதே புரிந்து கொண்டேன்.
உங்கள் கோபத்தில் மயிரளவு கூட சாரமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நீங்கள் அவரது கவிதை கம்யூனிச த்த்திவத்தை விமர்சிக்குமளவு வரவில்லை என்பதையும், பல கோடி மக்களின் நாயகர்களை இழிவுபடுத்தும் வேலையை மாத்திரமே செய்த்தன் மூலம் அம்மக்களை இழிவுபடுத்தியது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ஏற்கெனவே நசுக்கப்பட்டு வாழும் அம்மக்களின் வருங்காலத்திற்கு அறிவியல் முறையில் தீர்வு சொன்ன விசயங்களின் சொற்களையும் எடுத்து தனது பாலியல் உணர்வின் குறியீடாக மாற்றியதால் அக்கோடிக்கணக்கான மக்களின் இறையாண்மை மீது ஒரு நபர் காறித் துப்பி உள்ளார். ஒரு நபரின் இறையாண்மைக்காக வருத்தப்படும் தாங்கள் அக்கோடிக்கணக்கான மக்களின் இறையாண்மைக்காக வருத்தப்பட மாட்டீர்களா. அப்படியானால் உங்களைப் போன்றவர்களின் கோபம் இருக்கிற நாட்டில் திருடன் என்ற தனிநபரின் இறையாண்மையை அவனை விரட்டிப் பிடிக்கும் மக்கள் அல்லது காவலர்களின் இறையாண்மையுடன் ஒப்பிட்டு திருடனை தப்பச் செய்யலாம். ஜெயலிலிதா வை கருணாநிதியை அவர்களது ஊழலுக்கு தண்டிக்க வேண்டியதில்லை எனக் கூறி தப்பிக்க வைக்கலாம்.
ஆக அவள் கிழித்த்து கோடிக்கணக்கான மக்களின் இறையாண்மையை. வினவு அவளை மாத்திரம்தான் கிழித்தது. இது போதாது என்பதே எனது கருத்து.
நீங்களறிந்த பார்ப்பனர்கள் தமது சொந்த சாதியின் பிற்போக்குத்தனத்தை எதிர்க்காமல் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக இருக்க முடியாது. அந்த நீங்கள் கோரும் நடுநிலைமை தவறானது. அது எக்சிJஸ்டிங் காஸ்ட் சிஸ்டம் சரி என்பதை தனது மவுனத்தின் மூலம்
அங்கீகரிப்பதாகும்.
எதிர்ப்பை விடுத்து மக்களுக்கு நேரடியாக நேரத்தை செலவழிப்பது என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். உதாரணமாக உங்களது பிள்ளை படிக்கறான் என வைத்துக் கொள்வோம். தீய பழக்கங்கள் சில அவனை கைக்கொள்கின்றன• அவனுக்கு நல்ல விசயங்களை மாத்திரம் சொல்லித் தருவீர்களா, அல்லது தீயதை விடுக்குமாறு கண்டித்து விட்டு அதன் பின் நல்லதைச் சொல்லித் தருவீர்களா.. இரண்டாவதைத்தானே செய்வீர்கள். தனது பிள்ளைக்கு என்றால் வெண்ணெயும், சமூகத்திற்கு என்றால் சுண்ணாம்பும் வைக்கச் சொல்லி உங்களை இயக்குது நீங்கள் சார்ந்த வர்க்கம் என்பதுதான் கம்யூனிசத்தின் முதற்படி.
தனிநபர்வாதம்தான் உங்களை லீனாவின் பக்கம் சாய்த்த்து என்பதைப் புரிந்து கொள்ள உங்களது வாழ்நாள் முழுவதும் நீங்கள் செலவிட்டாலும் உங்களால் அதனை அதன் உண்மையான பொருளில் புரிந்துகொள்ள முடியாது.
வீரம் கோழை என்பதற்கு சரியான பொருள் வேண்டுமென்றால் அதுதான் உங்களது விருப்பமென்றால் பன்றியை அடிக்க அதனுடைய வீட்டுக்குத்தான் போக வேண்டும். பெயரை வெளியில் சொல்வதாலே வீரம் வந்து விடுவதில்லை. ராஜீவ் காந்தி இறந்த போது தமிழகம் முழுவதும் எம்முடைய தோழர்கள் இது பழிக்குப் பழி என்று பேருந்துகள் தோறும் புதிய கலாச்சாரத்தை வைத்துக் கொண்டு பேசினோம். அடிபட்டோம். அடி விழும் எனத் தெரிந்த பின்னும் எம்முடைய தோழர்கள் தமது நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். அந்த தோழர்களின் பெயர் இன்னது எனத் தெரியாது. ஆனால் அவர்களது முகங்களை முன்னாள் ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் அறிவர். ஆம் அந்த முகம் பெயரால் அறியப்பட்டதல்ல, கொண்ட கொள்கையால் அறியப்பட்டது. அது வீரம்.
வினவு தன்னை யார் என அறிவித்துக் கொண்டுதான் செயல்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு பெயர் தேவைப்பட்டாலும், வெளியே பெயர் சொன்னால் தெரியுமளவு லீனா அளவு அவர்கள் பிரபலமானவர்களா... பிரபலமாகத் துடிக்கும் மனிதர்களாகவும் இருக்க முடியாதுதானே..
//அதுதான் உங்களது விருப்பமென்றால் பன்றியை அடிக்க அதனுடைய வீட்டுக்குத்தான் போக வேண்டும். பெயரை வெளியில் சொல்வதாலே//
You are very correct Mr Maoist pig.To get rid of maoist fascist pigs one will have to go to the dens where these creatures are hiding.
i am mani
why r u calling me FASCIST. Can u explain here. try to justify ur comment
//i am mani
why r u calling me FASCIST. Can u explain here. try to justify ur comment//
Dear Mr You only can be Mani and no one else can,
One doesnt have to exert a great deal to establish that maoists are fascist pigs.
Maoists do no believe in democracy or make allowances for dissent.Their answer to dissent is a bullet in the head.They have no qualms about killing innocent poor people.They make money by being cheap goondas and contract killers,and kidnapping for ransom.If this is not fascist behaviour then what else is ?
Coming specifically to your case a joker who calls himself "I am Mani" has to be a fascist and a maoist fascist at that, and an arrogant person; Ask your pal the loony doc Rudhran.he would also tell you that.
என் மீது உள்ள வெறுப்பினை வெளிப்படுத்த நான் அனுமதிக்கிறேன் என்பதற்காக, தொடர்பில்லா விஷயங்களை எழுதி இங்கே எதற்கு விவாதம்?
நான் மணி
அதிகார வர்க்கத்தை நக்கிப் பிழைப்பவர்களின் பொருளற்ற வாதங்களுக்கு காது கொடுப்பதே அவர்களுக்கு மரியாதை கொடுப்பதாகி விடும் என்பதால் இவருடன் தர்க்கரீதியற்ற விவாதங்களை இவர்களைப் போலவே கட்டியமைக்க முடியாத்தால் இத்துடன் முடிக்கிறேன். அரசிடம் மற்றுமதன் இயக்குசக்தியான தரகுமுதலாளிகளிடம் பெற்ற காசுக்கு குறைவில்லாமல் குரைப்பதற்கு வாழ்த்துக்கள்.. இந்த ரா பெற்றெடுத்த கள்ளக்குழந்தைக்கு தகப்பன் பெயர் என்ன தெருவா..
Dear Mr You only can be mani,
Thats OK son of a bitch;one knows that all maoists are bastards who lick the boots of Chinese swines and make a living.I did not know that your mother did that also.What a shame,
//இணையம் ஒரு பொதுவெளி. அங்கே எழுத்தைக்காட்டுவது என்று வந்து விட்டால் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது தெரியாமல் இங்கே நான் எழுத வரவில்லை. இணையம் ஒரு சௌகரியம். வழக்கமாக காகிதங்களில் எழுதி சலிப்பு தோன்றியவுடன் நிறுத்தி விட்ட ஏராளமான பக்கங்களைப் போலல்லாமல் இணையத்தில் எழுதியவுடன் பதிப்பிட்டு விடுகிறேன். அதனால் எழுத்துப்பிழை இருக்குமே தவிர கருத்துப்பிழை எதுவும் என்னிடம் இருக்காது. என் கருத்தைப் பிழை என்று சிலர் கருதலாம், ஆனால் என்னைப்பொருத்தவரை பிழையான ஒன்றை சரியென்று நான் எப்போதுமே முன்வைத்ததில்லை.// இதற்கு முன்னர் யாரென்றேத் தெரியாது உங்களை எனக்கு, ஆனால் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமாயின. பல சாதனைகளை படைத்தவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் பதிவு சொன்ன செய்தி. உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.
மணி.. இது லேப்டாப்.. நீங்கள் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதிவிட்டு போகிறேன்.. சுருக்கமாக.. தவறான வார்த்தைகள் (மயிர் போன்றவை) வேண்டாமே?
ப்ராக்டிகல் கம்யூனிசம் - கண்டிப்பாக நக்கலாக எழுதவில்லை.. நானும் உழைக்கும் வர்க்கம் தான்.. முதலாளி அல்ல.. என்னால் முடிந்தது அவ்வளவு தான்..
ஒருவரை தாக்கி பேசும் போது, தகுந்த ஆதாரங்களை முன் வைக்காமல், யாம் போட்டு முடித்ததை வேறெங்கே வைக்க? போர்ஃபோலியோ கையில் தூக்கிக் கொண்டு அலைகிறார் என்றால் - அது அவரது உரிமை.. நீங்கள் போகுமிடமெல்லாம் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதைப் போன்று.. இதனால் யாருக்கு என்ன பாதிப்பு? இதைப் பற்றியெல்லாம் எழுதினால் என்னவென்பது?
நீங்கள் மக்களை ஒரு கூட்டமாக பார்க்கிறீர்கள்.. பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதவர்கள்.. உழைக்கும் வர்க்கத்தினர், முதலாளி மக்கள்.. நான் தனி மனிதர்களாக பார்க்கிறேன்.. இது தான் நம் இருவருக்கும் அடிப்படை வித்தியாசம்.. கூட்டத்தில் நல்லவர்களும் இருப்பார்கள், தீயவர்களும் இருப்பார்கள்.. ஒரு கூலித் தொழிலாளி பார்ப்பான் மகளை கை பிடித்து இழுத்தாலும் தவறு தான்.. பார்ப்பானொருவன் சாதி காரணமாக தகுதியான ஒருவரை தேர்ந்தெடுக்காமல் விட்டாலும் தவறு தான்.. அதனை வேறுபடுத்தி பார்ப்பது தான் நடுனிலைமை.. நீங்கள் அதற்கு வேறு மாதிரி அர்த்தம் கொள்ளுகிறீர்கள்.. அப்படியல்லாமல், தயவுதாட்சன்யமின்றி எல்லா பார்ப்பனரையும் எதிர்ப்போம் என்றால் என்ன அர்த்தம்?
எதிர்ப்பைப் பத்தியும் சொல்லியிருந்தீர்கள்.. தனிப்பட்ட மனிதனுக்கு அடுத்தவரை பாதிக்காத வண்ணம் தன் விருப்பப்படி வாழ உரிமையிருப்பதாகத் தான் நான் கருதுகிறேன்.. ஒருவரால் தன்னுயிர்-நலம் கருதி தவறு செய்பவரை தட்டி கேட்க முடியாமல் போனாலும், அத்தவற்றை தானே செய்யாமல் இருந்தாலோ, இல்லை பாதிக்கப்பட்டவருக்கு தன்னாலான உதவிகள் செய்தாலோ, அவரை நல்லவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் தீயவரில்லை என்று தான் கணக்கெடுப்பேன். ஒவ்வொரு உயிரும் தன்னை பாதுகாக்கவே முதலில் விளையும். அந்தச் சுயநலம் அதனதன் உரிமை.. ஆனால் அதுவே அடுத்தவரை பாதிக்கும் போது தீமை உண்டாகிறது.. இது தான் எனது கோட்பாடு..
போராடுங்கள்..வாழ்த்துக்கள்.. ஆனால் எம்போன்றவர் நிறைய பேர்.. உங்களது வார்த்தைகளாலும் தீவிர எதிர்ப்புகளாலும் எங்களை உங்கள் பக்கம் இருந்து நீங்களே விலக்கி விடுவீர்கள்..
ருத்ரன்.. மன்னிக்கவும்.. நானும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்..
Hi all, Please try to comment on Dr.udhran's Post only. If you really want to fight by your own philosophycal belief, better try to post a separate blog. Dr.Rudhran Happy to read your words in Tamil. Thank you.
எல்லாம் அருமை. இது நாள் வரை இந்த் வலை இருப்பது தெரியவில்லை. இனி அறிவுப் பசிக்கு உணவு இங்கு கிடைக்கும்
please visit:-தொடுப்பகம் பாருங்கள்
* NIDUR SEASONS
* nidurseasons.com
* seasons nidur (wordpress)
* seasonsali
Post a Comment