Friday, May 15, 2009

காத்திருக்கிறேன், கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்

49(ஓ)..கொஞ்சம் கேவலமாகவே இருக்கிறது.
தோழர்களைப்போல், போலி ஜனநாயகத்தின் தேர்தலை விட்டுவிலகி இருந்திருக்கலாம்.. வாக்களிக்காமல் இருப்பதை விட வாக்கிட்டு வெறுப்பை வெளிப்படுத்தலாமே என்று தான் மாலை வரை யோசித்துவிட்டு சாவடிக்குப்போய்
கையெழுத்திட்டுவிட்டு, "49ஓ போடணும்" என்றேன். அந்த ஆசாமி/அதிகாரி சத்தமாகஇவர் 49 என்றார். ஓரமாய் இருந்த இரண்டு கழகத்தின் கண்மணிகளும் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்..அவசரமாய் ஒருவர் வீடியோ எடுத்தார்..அதிகாரி போல் இருந்தவர்" சரி" என்றார்..." போன தேர்தலில் ஒரு பதிவேட்டில் கையெழுத்து போட்டேனே அது போல் இப்போது எங்கே" என்றால், தேவையில்லை என்றார்கள்..என் முகத்தில் என்னவோ தொந்தரவு தெரிந்ததாலோ, அவசரமாக ஒரு காகிதத்தைக்கிழித்து இதில் கையெழுத்து போடுங்கள் என்றார்கள்..
அந்த காகிதம் நான் வெளிவந்தபின், உள்ளே சென்ற பஜ்ஜி துடைக்கப்பயன்பட்டிருக்கும்..
பக்கத்து அறையில் என் மனைவிக்கும் இப்படியே..

கொஞ்ச‌ம் அல்ல நிறையவே கேவலமாக உணர்ந்து கையாலாகாத மெளன கோபத்துடன்..தொலைகாட்சியில் அலசப்படும் அப்பட்டமான பேரங்களைப் பார்த்துவிட்டு..
கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்
காத்திருக்கிறேன், அடுத்த தேர்தலையாவது புறக்கணிக்க‌

30 comments:

Anonymous said...

"அந்த காகிதம் நான் வெளிவந்தபின், உள்ளே சென்ற பஜ்ஜி துடைக்கப்பயன்பட்டிருக்கும்.."

நிச்சயமாக. மக்களின் ஜனநாயக உரிமை என பீற்றப்படுவதெல்லாம் பஜ்ஜியில் படிந்திருக்கும் எண்ணெயைவிட அடர்த்தியானதல்ல.

தோழமையுடன்
செங்கொடி

Vishnu - விஷ்ணு said...

// கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்
காத்திருக்கிறேன், அடுத்த தேர்தலையாவது புறக்கணிக்க‌//

நச்.

அக்னி பார்வை said...

///அலசப்படும் அப்பட்டமான பேரங்களைப் பார்த்துவிட்டு..
கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்
///

வழிமொழிகிறேன்

Incredible Monkey said...

சொல்ல முடியாத அபத்தங்கள்
நிறைந்த வாழ்க்கையில் அனைத்து
வழிகளிலும் அபத்தமானது
ஒட்டுப் போட போவது.

அதிலும் 49(ஓ) போட வாக்குக்சாவடி
போவது மெகா அபத்தம்.

அடுத்த தேர்தலை புறக்கணிக்க
இப்பொழுதே... மாகா மெகா
அபத்தம்.

ஒரு வேலை எப்படி செய்தால்
இந்ந அபத்தத்தில் இருந்து
தப்பிக்களாமோ.

வால்பையன் said...

நீங்க கொஞ்சம் பிரபலம்ங்கிறதால தப்பிச்சிகலாம்!

பொதுமக்கள் 49ஓக்கு போனா ஆட்டோ வருதாம்!

ஹிப்ஸ்... said...

ஓட்டு போடுவது நம் ஒவ்வொருவரின் கடமை!

kalagam said...

செருப்பால் அடியுங்கள் இந்த மானங்கெட்ட சனநாயகத்தை
மறந்தவர்கள் பழைய செருப்புக்களை பத்திரப்படுத்திவையுங்கள்

Deepa said...

:-(( 49 o என்றால் என்னவென்றே பல வாக்குச் சாவடி அலுவலர்களுக்குத் தெரியவில்லையாம். வித்யா கூறியுள்ளார். எனக்கு voter's ID இல்லாத்தால் ஓட்டளிக்கவே போகவில்லை.

குறைந்தபட்ச ஜனநாயகமாவது இருக்கும் வரை புரட்சி சாத்தியப்படாது என்கிறார்கள். அப்படியானால் புரட்சி நடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லையோ?

sakthi said...

doctor sir ,
this is indepandenced india

butterfly Surya said...

எனக்கும் உலக நாயகனுக்கும் ஒரே நிலை. லிஸ்டிக் பெயர் இல்லை. எந்த ஒவும் போட முடியாது என்றார்கள்.

ஜன(பண) நாயகத்துக்கு ஒரு ”ஒ” போட்டு வெளியே வந்தேன்.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

எங்கள் கிராமத்தில் பஞ்சாயத்து எலெக்ஷனில் "ஓ" போட்டேன். இப்போதும் தலைவரின் ஹிட் லிஸ்டில் நான் தான் முதல்;


வாழ்க ஜனநாயகம்.

துளசி கோபால் said...

எந்த ஓட்டுப் போடுவதாக இருந்தாலும் அது ரகசியமாக வைக்கப்படவேண்டாமா?

இப்படி யாருக்கு ஓட்டுப் போடறோமுன்னு சொல்லணுமா என்ன?

சீக்ரெட் பேலட் என்பது என்ன ஆச்சு?

suvanappiriyan said...

வழிமொழிகிறேன்

geevanathy said...

///கொஞ்ச‌ம் அல்ல நிறையவே கேவலமாக உணர்ந்து கையாலாகாத மெளன கோபத்துடன்..தொலைகாட்சியில் அலசப்படும் அப்பட்டமான பேரங்களைப் பார்த்துவிட்டு..
கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்
காத்திருக்கிறேன், அடுத்த தேர்தலையாவது புறக்கணிக்க‌///

மிகமிக வேகமாக சாதாரண மக்களில் இருந்து விலகிச் செல்கிறது ஜனநாயகம் மீதான நம்பிக்கைகள்.

முரளிகண்ணன் said...

மிக வருத்தம். முயற்சி செய்து மாற்றுவோம்

எம்.எம்.அப்துல்லா said...

என்னுடைய கணிப்பின்படி எங்கள் புதுக்கோட்டையில் (திருச்சி தொகுதிக்குட்பட்டது) சுமார் 11,000 ஓட்டுகளுக்கு மேல் 49ஓ விற்கு விழுந்து இருக்கும். சரியாக எத்தனை ஓட்டு என்பது இன்னும் ஓரிரு மணித்துளிகளில் தெரிந்துவிடும்.



//காத்திருக்கிறேன், அடுத்த தேர்தலையாவது புறக்கணிக்க‌ //


டாக்டர் உங்களுக்கு கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லாபட்சத்தில் சுயேட்சையாக நிற்கும், நீங்கள் நல்லவர் என்று கருத்தும் யாரோ ஒருவருக்கு வாக்களித்து இருக்கலாமே. உங்கள் தொகுதியில் நின்றவர்களில் ஒருவர்கூட நல்ல‌வர் இல்லையா? இல்லை என்று சொன்னால் என்னால் ஏற்கமுடியாது. அவர் யார் என்று தேடாதது நம் தவறு. நம்மோடு விடுதலை அடைந்த பாக்கிஸ்தனின் கதி இன்று என்ன? ஆயிரம் பிரச்சனைகள்,மனச்சோர்வுகள் இருந்தாலும் நம்மை இன்று அமைதியாக வாழ வைத்துக் கொண்டு இருப்பது எது? ஜனநாயகத்தை ஒரேடியாக நீங்கள் புறக்கணிக்க முடிவு செய்து இருப்பது எனக்கு மிகுந்த வருத்ததைத் தருகின்றது டாக்டர். நம்மை அமைதியாக வாழ வைத்துக்கொண்டிருக்கும் ஜனநாயகம் மேலும் செம்மைப்பட உங்களால் இயன்றதை உங்கள் அளவில் இருந்து துவங்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.....புறக்கணிப்பதைத் தவிர்த்து.

N.Thirumalai Nambi said...

why are u people obsessed with 49 O..already our people dont know the value of votes ..this 49O will only bring democracy down .
Instead of spending energy on propagating 49O..why dont we spread the importance of vote+how to elect the best candidate etc
Pls dont make the literated but ignorant people look smarter !

குப்பன்.யாஹூ said...

ஒரு வகையில் நீங்கள் ஆறுதல் படலாம். நீங்கள் ஒரு தவறான வேட்பாளருக்கு வாக்கு அளிக்க வில்லை.

குப்பன்_யாஹூ

jothi said...

வருத்தம் தரக்கூடியாது இது. நல்லவர்களை தேட வேண்டிய நேரம் வந்து விட்டது.

வேடிக்கை மனிதன் said...

உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் அடுத்த தேர்தலையாவது புறக்கனிக்க

P.K.K.BABU said...

DEAR SIR, WHAT WAS HAPPENED TO YOU AT ELCTION BOOTH IS THE RESULT OF OUR DEMOCRACY IS GOVERNED,LEAD AND DOCTORED BY OUR SHAMELESS,FILTHY POWERED POLITICIANS.TO COMBAT THIS WE HAVE SEARCH A CANDIDATE WHO IS ONLY SERVICE MOTIVATED AND CORRUPTLESS BACKGROUND.AND AFTERALL,HE MUST BE A EDUCATED MAN.

மற்றும் ஒரு காதலன் said...

இதே மாதிரி, ஓட்டு போடுபவர்களின் வரிசை எண்களையும் சத்தமாக அதிகாரிகள் சொல்ல, கட்சியின் பிரதிநிதிகள் குறித்து கொள்கிறார்கள்....இது எதற்க்காக? மாலை 5 மணிக்கு மேல் யார் எல்லாம் ஓட்டு போடவில்லையோ, அவர்களின் ஓட்டை உபயோக படுத்திகொள்ளவா ?

எல்லாவற்றிலும் ஒரு ஓட்டை இருக்கதானே செய்கிறது, நம் அனைத்து system-லும் ?

அறிவில்லாதவன் said...

Loss or win, I will be participated as a candidate in next election.

Thekkikattan|தெகா said...

டாக், கொஞ்சம் நஞ்சமிருந்த நம்பிக்கையும் போயிட்டு இருக்கு... இங்க எல்லாம் எழுதி யார்கிட்ட சேர்க்க எழுதி குவிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கும் பொழுது :-(( .

Anonymous said...

சார், நீங்க தைரியமா கேட்டிங்க, நானும் உள்ள போற வரை 49 போடற எண்ணத்துடன் போனேன். ஆனால் என் மகளை தேர்தல் நடத்தும் முறை காட்ட உடன் அழைத்து சென்றதால் பேசாமல் வந்து விட்டேன். ( ஓட்டு போட்டுட்டுதான்)

ISR Selvakumar said...

49ஓ - நிச்சயம் விவாதத்துக்குரியது. அதற்க்கென ஒரு பொத்தான் வரும்வரை . . .

eniasang said...

அப்துல்லா ஸாரின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

தமிழ். சரவணன் said...

இங்கு கூலிக்கு ஆள் அடிக்கும் குண்டர் கூட்டம் தலைவனாகும் இது நம் தலையெழுத்து...

மொள்ளமாரித்தனம் செய்யம் பொறுக்கி இங்கு கட்டப்பஞ்சாயத்து நீதிபதி - இது போல் பொறுக்கிகள் அரசியலுக்கு வந்தால் பேய் நாடாலூம் பிணம் தின்னும் நாய்கள் நீதி சொல்லூம்...

ஆனால் காலத்தினால் நல்ல மாற்றம் பிறக்கும் பல மந்தை இளைஞர்களுக்கு மத்தியலூம் அக்கினி குஞ்சுகள் சில உண்டு இங்கு மாற்றுவோம் மாற்றத்தால்...

Ragztar said...

இது போன்ற நிகழ்ச்சிகள் சுயமரியாதையைக் கொன்று, கையிலாகாத் தனத்தைக் கோபமாக வெளிப்படுத்தும், சுய அவமானத்தைப் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

Dino LA said...

அருமை

Post a Comment