இன்று ஜெயகாந்தனின் பிறந்தநாள். 75 முடிந்து, அடுத்தது ஆரம்பமாகிறது.
அவர் எனக்கு ஆசான். என் இளமையில் அவர் எனக்கொரு ஆதர்ச நாயகன். அவருடன் பேசுவோம், பழகுவோம் என்று ஒரு கனவு எனக்கு இருந்ததில்லை.
லாசரா, அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி ஆகியோரின் எழுத்துக்களை நாடகமாக்கிக் கொண்டிருந்த காலத்திலும், ஆசையும் ஆர்வமும் இருந்தாலும் அச்சமும் இருந்தததால், அவரை நெருங்கவில்லை.
அவரே காட்சிகளை அமைத்து வசனமும் எழுதக்கூடியவர் என்பதால், கேட்கவே மிகுந்த தயக்கம் இருந்தது.
ஒரு யதேச்சையான நிகழ்வாக எனக்கொரு விருது அவர்கையால் கிடைக்கப்பெற்ற நேரம், உங்களை நேரில் சந்திக்க இயலுமா என்று கேட்டுவிட்டேன், அவரும்," வாரும் "என்று சொல்லிவிட்டார்.
அவர் வீட்டிற்கு முதன்முறை போனபோதே இன்னொரு வாய்ப்பு கிடைக்காதோ என்று அஞ்சி உங்கள் கதையை படமாக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டேன். "தாராளமாக" என்று அவரும் உடனே இசைந்துவிட
அப்போது ஆரம்பமானது ரிஷிமூலம் என்னும் கனவு.
திரைக்கதை எழுதி, அவர் ஒப்புதலோடு அதை NFDC யில் சமர்ப்பித்து, ஒப்புதலும் பெற்றுவிட்டேன். மகேந்திரன் படம் முடிந்த உடன் உன் படம் தான் என்றார்கள். படத்துக்காக நான் பேசிவைத்திருந்த ஸ்ரீவித்யாவும், எல்.வைத்யநாதனும் இறந்துவிட்டார்கள். ஒரு மழையில் என் கையெழுத்துப்பிரதி கூட நனைந்து விட்டது. எத்தனையோமுறை அலைந்து அலுத்து கனவை மனப்பரணின் மூலையில் போட்டுவிட்டேன். அனால், ரிஷிமுலம் மூலம் ஏற்பட்ட ஒரு ரிஷியின் உறவாகவே ஜெகே எனக்குவிளங்குகிறார்.
எனக்கு அவர் மார்க்சியம் மட்டுமல்ல கம்பனையும் வள்ளுவனையும் கற்பித்தார்.
உரிமையோடு என் வாழ்வின் குழ்ப்பங்களுக்கும் விடை கூறியிருக்கிறார் .
பாசமும் நேசமும் என்ன என்பதை காட்டியிருக்கிறார். நான்தான் அவ்வப்போது அவரை விட்டு ஓடியிருக்கிறேன் ஆனால் அவர் என்றும் என்னிடம் அன்பு காட்டத்தயங்கியதே இல்லை.
எட்டு மாதங்கள் அவரைப்பார்க்காமலேயே ஒட்டி விட்டேன்.
பார்க்காமல் மட்டுமே, நினைக்காமல் இல்லை.
இன்று அவரின் புது வீட்டிற்கு போகிறேன். அவர் பழைய மாதிரி தான் இருப்பார் என்று தெரியும்.
செல்லமாக, கோபமாக, நெகிழ்வுடன், நட்புடன், இலக்கிய தத்துவ பரிமாறல்களுடன் அதே ஜெயகாந்தனை இன்னும் பல வருடங்கள் பார்க்கவேண்டும் என்ற பிராத்தனையுடன்,
இதுவரை அடித்ததிலேயே நீளமான பதிவை முடித்துக்கொள்கிறேன்.
a recent interview
6 years ago
23 comments:
ஜெயகாந்தானுக்கு வாழ்த்துகள்.
பகிர்விற்கு நன்றி டாக்டர்.
மே 10 மொட்டை மாடியில் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.
ungalin petchukalai ketuirukan, unga methu nerya mariyathi undu, please visit my blog if you have time thanks suresh
வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள் சார்.
மொழிபெயர்ப்பை விட உங்கள் தமிழ் நன்றாக் இருக்கிறது
நீங்கள் தமிழில் அதிகம் எழுத வேண்டும் என்பதே எங்களின் ஆசை
மொழிநடை அருமையாக இருக்கிறது!
ஜேகேயுடனான சந்திப்பு பதிவும் தமிழில் கிடைத்தால் ஃபாரின் சரக்கடித்த சந்தோசமடைவேன்!
ரிஷியை நாங்கல்லாம் கேட்டதாக கூறுங்கள், டாக்!
அன்புடன்,
தெக்கிக்காட்டான்.
//நீங்கள் தமிழில் அதிகம் எழுத வேண்டும் என்பதே எங்களின் ஆசை
//
மருத்துவர் புருனோவின் கருத்தை வழிமொழிகின்றேன்.
//நீங்கள் தமிழில் அதிகம் எழுத வேண்டும் என்பதே எங்களின் ஆசை
//
மருத்துவர் புருனோவின் கருத்தை வழிமொழிகின்றேன்.
//நீங்கள் தமிழில் அதிகம் எழுத வேண்டும் என்பதே எங்களின் ஆசை
//
மருத்துவர் புருனோவின் கருத்தை வழிமொழிகின்றேன்.
என்னுடைய முந்தைய மறுமொழியைப் பிரசுரித்த போது bad request என காட்டியதால் மூன்று,நான்கு முறை முயற்சித்ததில் வரிசையாக அனைத்தும் வந்துவிட்டது. மன்னிக்கவும் டாக்டர். :(
மாலை அவருக்கு சொளகரியமா என்று கேட்டேன், சோவியத் மையத்தில் ஒரு நிகழ்ச்சிக்காகப் போவதாகவும், நாளை வரவும் சொன்னார். அந்த இடத்தில் ஏனோ எனக்கு ஓர் ஒவ்வாமை, அதனால் தொலைபேசியிலேயே இந்த நாளுக்கான நல்லெண்ணங்களைப் பகிர்ந்துவிட்டு, நாளை நோக்கிக் காத்திருக்கிறேன்.
அன்பர்களின் வாழ்த்துகள் அவருக்கே உரித்தாகும்; என் சார்பில் நன்றிகள்!
ஜெயகாந்தன் குறித்த பதிவிற்கு முதற்கண் நன்றி.
தமிழ் எழுத்துலகின் பீஷம் பிதாமகர் அல்லவா ஜெயகாந்தன். இன்று இந்த அளவிற்கு தமிழில் எழுதுபவர்கள் அதிகமானதற்கு (அச்சு வடிவம், வலை வடிவம்) ஜெயகாந்தனின் பங்களிப்பு மிக முக்கியமானது.
அவருக்கு எல்லா வளமும் தொடர்ந்து சிறக்க இறைவனையும் இயற்கையையும் வணங்கி வாழ்த்துகிறேன்.
குப்பன்_யாஹூ
அவருடைய எழுத்தின் வீச்சு யாரைத்தான் பாதிக்கவில்லை. கவிதைக்கு பாரதி என்றால், உரை நடைக்கு ஜெயகாந்தன். அவருடைய பழைய கட்டுரைத் தொகுப்புகளை இப்போது வாசித்தாலும், வார்த்தைகள் நேரில் வந்து கேள்வி கேட்கின்றன, உலுக்குகின்றன, கட்டளையிடுகின்றன, கேலி செய்கின்றன. இன்னும் என்னென்னவோ செய்கின்றன.
அவர் பல்லாண்டு வாழ்க!
நல்ல பகிர்வு..சந்திப்புக்கு பின் விரிவாக எழுதுங்கள் ஐயா
இலக்கிய உலகின் ஜாம்வான் ஜெயகாந்தன் அவர்களை பற்றிய பதிவிற்கு முதலில் நன்றி டாக்டர்.(நீங்கள் அடித்ததிலே) நீளமான பதிவு என்றாலும் அருமையாய் உள்ளது.
டாக்டர் எனக்கு ஒரு கேள்வி
மார்க்சிய மாணவனாக தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகமாகி உழைக்கும் மக்களின் வாழ்வை இலக்கியமாக்கி எழுத்தாளனாக உயர்ந்த ஜே கே அதன் பிறகு தற்போது
சங்கரமட பயங்கரவாதிகளின் பக்தனாக மாறியது எப்படி ?
superlinks, ரிஷிகள் தடுமாறுவதுண்டு.அப்படிப்பட்ட கேள்விகள் வரும்போதில்தான் நான் அவருடைய அன்பையும் மீறி ஓடியிருக்கிறேன். இது ஒரு ஆசான் குறித்த நினைவுகளின் பகிர்தல் மட்டுமே, விமர்சனம் அல்ல
மருத்துவர் ஐயாவுக்கு தமிழில் உரையாடலைத் துவக்கியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
உங்களுடைய படைப்புகளின் மூலம் எங்களால் அறிய முடியாத பலவற்றை இனிமேல் அறிய முடியும் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்..
ஜேகே எப்போதும் ரிஷிதான்.. சப்தரிஷிதான்.. சந்தேகமில்லை.. அவர் ஒரு ஆசான்.. தமிழின் சிறுகதை, பெருங்கதை எழுத்தாளர்கள் அனைவருக்கும்.
கடைசி வரிகளில் தமிழ்தட்டச்சினால் ஏற்படும் பெருமூச்சை போகிறபோக்கில் சொன்னவிதம் மொத்தப் பதிவின் முத்தாய்ப்பு ஸார்.
தேர்ந்த வார்த்தைகள். நன்றி.
"ரிஷிகள் தடுமாறுவதுண்டு.அப்படிப்பட்ட கேள்விகள் வரும்போதில்தான் நான் அவருடைய அன்பையும் மீறி ஓடியிருக்கிறேன். இது ஒரு ஆசான் குறித்த நினைவுகளின் பகிர்தல் மட்டுமே, விமர்சனம் அல்ல"
ஐயா,
பார்ப்பனீயத்தை ஆதரிப்பதில் உங்கள் ஆசானுக்கு தடுமாற்றம் இல்லை. அவரின் நிலைப்பாட்டை தடுமாற்றம் என வகைப்படுத்துவது சரியாகுமா? தடுமாற்றம் என்ற பலகை கொண்டு நிலைப்பாடு எனும் பெரும் பள்ளத்தை மூட முயலாதீர்கள். பள்ளம் என்று அறுதிப்படுத்தாவிட்டால் நீங்களும் கூட விழ நேரலாம்.
தோழமையுடன்
செங்கொடி
அவருடைய எல்லா கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாததால்தான் அவருக்கு நான் முழுநேர சீடனாகிவிடவில்லை. திரும்பவும் நான் வலியுறுத்துவது இதைத்தான், இப்பதிவு அவருடன் எனக்கிருக்கும் அன்பின் பிணைப்பு குறித்தது மட்டுமே, அவர் கொண்டிருக்கும், காட்டிக்கொண்டிருக்கும் கொள்கைகளைப்பற்றியது அல்ல.
தோழர் செங்கொடி, பார்ப்பனீயம் குறித்த நடத்தப்படவேண்டிய விவாதத்திற்கு இந்தப்பதிவு சரியான தளமாக அமையாது.
அய்யா வணக்கம் !!!
//மார்க்சிய மாணவனாக தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகமாகி உழைக்கும் மக்களின் வாழ்வை இலக்கியமாக்கி எழுத்தாளனாக உயர்ந்த ஜே கே அதன் பிறகு தற்போது
சங்கரமட பயங்கரவாதிகளின் பக்தனாக மாறியது எப்படி //
டாக்டர் வணக்கம். சிறுவயதில் என்னுடைய மொபெட்டில் கோடம்பாக்கம் பாலத்தில் செல்லும் போது உங்கள் கிளினிக்கின் போர்டு தெரியும் தாங்கள் அந்த டாக்டர் ருத்ரன் தானே.
இந்த கேள்விக்கு தாங்கள் அனுமதியுடன் பதில் அளிக்கலாமா?
மாற்றம் ஒன்று தான் நிரந்தரம் என்று தத்துவஞானிகள் சொல்லுவார்கள். மார்க்ஸை கடந்து மாறியவர் சங்கரமடத்திலிருந்தும் மாறுவார். மனிதன் ஒரே இடத்தில் நின்றுவிட்டால் உலகம் முன்னேறுவதில்லை. ஒரு கொள்கையை பிடித்து அதற்கு அடிமையாய் இருப்பவன் தொண்டன், குருவை கடந்து செல்பவன் ஞானி.
ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகளுக்கு சங்கர மடமும் கடந்து போகும்
அருமை
Post a Comment