Thursday, December 17, 2009

யோகம், தியானம், மருத்துவம் பற்றி


மனநல மருத்துவம் மட்டுமல்ல, மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் இன்னும் 'எல்லா' நோய்களுக்கும் தீர்வுகள் காணப்படவில்லை. இது உண்மை. இன்னும் தீர்வுகள் வரவில்லை என்றாலும் அதை நோக்கிய பயணமே அறிவியல்.

என் பதிவில் குறைகண்டு, கோபம் கொண்டு சிலர் பின்னூட்டம் இட்டதன் பின்னணி பற்றி எனக்கு அதிகம் கவலையில்லை. யோகத்யான முறைகளைக் கற்றுக்கொடுக்கும் அரைவேக்காடுகளைப் பற்றியும் அவர்களது வணிகக்குயுக்தியால் பலர் திசைகுழம்புவது குறித்துமே என் அக்கறை, கவலை. வணிகபுத்தி, குயுக்தி என்று சொன்னாலேயே சிலருக்குத் தங்களை நான் தாக்குவதாகத் தோன்றுவது அவர்களது குற்ற உணர்வாகவும் இருக்கலாம். இப்பதிவு அவர்களைப் பற்றியல்ல, யோக, த்யானம் ஆகியவை மனநோய்களுக்கு உதவுமா என்பதே என் கேள்வி, இல்லை என்பதே என் பதில். நோய் என்பதைப் புரிந்துகொண்டால் தான் என் இந்த தீர்மானம் விளங்கும்.


சோர்வு, சோகம்,கவலை, வருத்தம் என்று நாம் எல்லாரும் வாழ்வில் அனுபவித்திருக்கக்கூடிய உணர்ச்சி நிலைகளை DEPRESSION என்னும் நோயோடு ஒன்றாக நினைத்துக்கொண்டு சிலர் குழம்புவதால் தான் இந்தச் சிக்கல் உருவாகிறது. சில அறிகுறிகளோடு ஒரு பாதிப்பு தொடர்ந்து சிலகாலம் நீடித்தால், அதன் விளைவாக வாழ்வின் இயக்கம் சீர்கெட ஆரம்பித்தால், அப்போது அது ஒரு நோய்.
நோய்க்கு சிகிச்சை அவசியம். தானாகச் சரியாகிவிடும் என்றால் அது மிதமான பாதிப்புதான். மழையில் நனைந்தபின் வரக்கூடிய லேசான இருமலைப்போல். ஆனாலும், இருமல் மிதமானதா பின்னால் தாக்கக்கூடிய ஒரு பெருநோயின் அறிகுறியா என்பதை அறிய அறிவியல் சார்ந்த அணுகுமுறை மட்டுமே உதவும். அறிவியல் அடிப்படையில் இயங்குவதே 'நவீன' எனும் அடைமொழியோடு இன்று பரவலாகப் பயனபடும் மருத்துவமுறை.
இது மேல்நாடு சிகிச்சை முறை, எனக்கு நம் நாட்டுப் பாரம்பரியமிக்க மருத்துவ முறைகளில்தான் நம்பிக்கை என்று ஜீன்ஸ் அணிந்து இணையத்தில் கருத்துத் தெரிவிக்கும் நபர்களிடம் விவாதிக்க அல்ல இப்பதிவு. நோய்க்கு ஏன் நிரூபணமான மருந்துகள் அவசியம் என்பதை விளக்கவே இம்முயற்சி.
ஒரு சின்ன உதாரணம்: வலிப்பு நோய்க்கு மிகவும் சரியான முறையில் உதவக்கூடிய ஒரு மருந்து C. இதற்கு சில எதிர்விளைவுகள் உண்டு. கல்லீரலைத்தாக்கி எனும் பாதிப்பை உர்வாக்கலாம், ஒவ்வாமையால் தோலில் தடிமன்களும் அரிப்பும் வரலாம், ரத்த அணுக்கள் அளவு மாறுபடலாம்.இந்த மருந்தைத் தரலாமா? எனும் மருந்திற்குப் பதிலாக V எனும் மருந்து உண்டு. இதன் எதிர்விளைவுகள் C அளவுக்கு மோசமானதாக இல்லை.இப்போது, எல்லாருக்கும் Cயைவிட Vதான் உகந்தது என்று தோன்றும். பள்ளியிலோ கல்லூரியிலோ முக்கியமான பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கும் மாணவருக்கு வலிப்பு நோய் இருப்பதால், மருந்து தர வேண்டும்; V  உட்கொண்டால் நினவுத்திறனில் பாதிப்பு வரலாம், C அப்படிச் செய்யாது. இப்போது இரண்டில் எது தேர்வாகும்?
இங்கே தான் அறிவியல், அனுபவம், விளைவுகளைப்பற்றிய தெளிவு, சிக்கல்களுக்கு மாற்று என்று முழுமையான சிகிச்சை முறையாக மருத்துவத்தை முன்வைக்கிறேன். "யோகா & மெடிடேஷன் டீச் பண்ணும் மாஸ்டர்ஸ்" மீது இதற்குத்தான் விமர்சனங்களை வைக்கிறேன்.
"கோபம்,  அளவுக்குமீறி சட்டென்று வருகிறது, அடக்க முடியவில்லை" என்று ஒருவர் முறையிட்டால், என்ன ஆசனம், என்ன தியான முறை சொல்லித் தரப்படும்? இன்று பிரபலமாகவும் பெரிய தத்துவார்த்த ஞானிகளாகவும் நிழலெழுத்தாளர்கள் உதவியுடன் பாவனை செய்து திரியும் 'குருமார்கள்' கூட இதற்கு ஏதாவது ஒரு "மெடிடேஷன்" வைத்திருப்பார்கள். அவர்களை நேரில் (அருகில்) சென்று பார்த்துப் பேசி கற்றுக்கொள்ள அனுமதியில்லாத நடுத்தரவர்க்கத்தினரிலிருந்து தான் நிறைய "டீச்சர்ஸ், மாஸ்டர்ஸ்" கிளம்புகிறார்கள். "கோபம்.." என்று முறையிடும் நபரிடம் ஏதாவது கேட்கப்படுமேயானால் அது "இந்த வர்க்ஷாப்புக்கு இவ்வளவு ஃபீஸ், இருக்கிறதா?" என்பது தான் பல இடங்களில்!
முறையான தீர்வு வேண்டுமானால், கேட்கப்பட வேண்டிய கேள்விகளில் ஒரு சில: 1.அந்த நபர் பிறந்தது இயல்பானமுறையிலா இல்லை Forceps பயன்படுத்தியா? 2.கண்களில் எப்போதாவது மின்னலடிப்பது போல் தோன்றுகிறதா? 3.உறக்கத்தில் பற்களை நறநற என்று கடிக்கும் பழக்கம் உள்ளதா?..  இது போல் இன்னும் பலகேள்விகளுக்குப்பின் தான் அவருக்கு மூளையில் ஏதாவது சிறிய பாதிப்பு உள்ளதா என்று புரியும். அப்படி இருந்தால், மருந்துகள் மட்டுமே உதவும். இந்த அடிப்படை அணுகுமுறை இல்லாமல் "வா, உடம்பை வளை, மூச்சை இத்தனை முறை இழுத்து விடு" என்றெல்லாம் ஆரம்பித்தால் எப்படி சரியாகும்? இதனால் தான் நோய்களுக்கு யோகத்யான முறைகள் உதவாது என்று கூறுகிறேன்.
யோகப்பயிற்சிகளும் தியான முறைகளும் உதவுமா? நிச்சயமாக உதவும், ஆனால் நோய்களுக்கு மருந்தாக அல்ல, உடலிலும் மனத்திலும் ஒரு நிதானம் வருவதற்காக. ஒரு தேர்சிபெற்ற GYM மாஸ்டர், அரைவேக்காட்டு யோகா மாஸ்டரை விட உதவுவார் என்று இதனால்தன் நான் நம்புகிறேன். மெடிடேஷன் என்று ஸ்டைலாகிவிட்ட த்யானம் ஒரு மிகப்பெரிய சாதனம். அதைப்பயன் படுத்தவே ஒரு பக்குவம் வேண்டும்.'டென்ஷன்' குறைய என்று பலர் 'மெடிடேஷன்' செய்வதாகச் சொல்வது ஏமாற்று. அவர்களின் அந்த டென்ஷன் இல்லாதபோது தான் த்யானப்பயிற்சியின் ஆரம்பமே சாத்தியம்.
மனநல மருத்துவத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளதா என்றால் இல்லைதான். மூளைவளர்ச்சியில் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு ஒன்றுமே செய்ய முடிவதில்லை, ஆளுமையின் சில கூறுகளில் கோளாறு உள்ளவர்களைச் சரிசெய்ய எந்த மருந்துமே கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக மனநல மருத்துவம் என்றால் பேசிபேசியே சரிசெய்வார்கள் என்ற தவறான கருத்து நிலவுவதால்தான் மனவியல் நிபுணர்கள் பேசுவதை விட ஒரு சாமியாரோ அவரது சிஷ்யன் என்று சொல்லிக்கொள்பவரோ பேசுவதைக் கேட்கலாமே என்று பலர் உளறிவருகிறார்கள்.

இன்னும் கேள்விகள் வரும், அப்போது விளக்க முடியுமா என்று பார்க்கிறேன். ஒருவர் குற்றம் சாட்டியதைப்போல் என்னிடம் 'ரெடிமேட்' பதில்கள் கிடையாது,ஆனால் என்னிடம் பதில்கள் 'ரெடி'யாக உள்ளன. என்பதில்களில் ஒன்று "தெரியாது" என்பதாகவும் இருக்கும் என்பதால்.

15 comments:

துளசி கோபால் said...

ரொம்பச் சரி.

கோபம் கூடாது என்று 'உபதேசிப்பவர்களின்' அருகில் இருந்து பார்த்த அனுபவம் ஒன்று எனக்கிருக்கு.

ஐயோ..... போதுமடா சாமி......

சமூகத்தில் ஆன்மீகமோ இன்னும் வேறெதுவோ..... பெரிய புள்ளிகளுக்கும் இருக்குக் கருப்புப் புள்ளிகள்(-:

வால்பையன் said...

இன்னும் அலசுவோம் சார்!

Dr.Rudhran said...

are we clear now, tamil?

Anonymous said...

இந்த பதிவை முழுதாக ஏற்று கொள்கிறேன் ,நான் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தவித்து இருக்கேன் இது போன்ற நிலைமையில் , என்னால் தியானம் எல்லாம் செய்யவே இயலாது ,முயற்சித்தும் முடியவில்லை ,தினம் சில யோகாகள் சிறு வயதில் இருந்தே செய்கிறேன் , அதனால் மனம் தெளிவடைய வில்லை ,எத்தனையோ ஸெல்ப் development புத்தகங்கள் படித்து இருக்கிறேன் ,அதனால் பெரிய நன்மை ,அந்த கணம் சந்தோசம் இருக்கும் ,அடுத்த நிமிடம் பழைய நிலைமைக்கு மனம் போய்விடும் ,நான் நெறைய உளவியல் கட்டுரைகள் படித்து கொஞ்சம் சரி செய்து கொள்ள முயற்சிதேன் ,இருந்தும் என்னுடைய சிந்தனைகள் ஒரு எல்லைக்கு மேல் நகராது ,அதுவே திரும்பா வரும் ,பிறகு நாவல்கள் படிக்கச் முயற்சித்து (ஜெயகாந்தன் ) பிரச்சனைகள் கையாள முயற்சித்தேன் ,அது ஓரளவுக்கு நன்மை செய்தது ,சிறு வயதில் இருந்து 22 ௨ வரை என்னை யாரோ பின்தொடர்வது போல் உணர்ந்து இருந்திருக்கேன் ,கதவை சாத்திய பின்பும் சாவி துவாரத்துக்குள் பார்ப்பது போல் எல்லாம் தோன்றும் ,அதற்கு போன வருடம் தான் எனக்கு ஒரு புத்தகத்தில் விடை கிடைத்தது (split of body and mind )என்று அந்த புத்தகம் சொன்னது ,நானே என்னை பின் தொடர்கிறேன் என்றது ,இன்றும் எனக்கு அப்படி sometimes தோன்றினாலும் ,அது நான் தான் என தெரிவதால் பயம் இருக்காது ,இதுவரை எவளவோ முயற்சித்தும் மற்றவர்களுக்கு அது அபத்தமாய் தெரியும் என்று நான் யாரிடமும் சொல்லியதில்லை ,நான் புத்தகங்கள் moolam theerka முயற்சித்தேன் ,கொஞ்சம் கொஞ்சம் ennangalai matra mudinthathe thavira , முழுதாக veli vara mudivathilai ,ஒரு limitation manthalavil unargiren ,சிறு வயதில் இருந்து thaniyagave இருந்து vittu ,23 வயதில் அது ellame verum apatham போல் thondrugirathu ,marathi vanthuvittathu ,அந்த limitation vittu veli varave iyalavillai,இருந்தும் innum முயற்சித்து konde இருக்கிறேன் ,enathu prachanaigal enna enbathai ennal oralavukul mel thelivaga sinthika mudiyavillai,athe ennangal thirumbha vanthu,athe nilaiyil thalli vidukirathu .

Anonymous said...

நானும் இப்பதிவை முழுமையை ஆதரிக்கிறேன். அனானி கூறியதை போல எனக்கும் சில மன நோய்கள் உள்ளது . ஆனால் யோகாவை முயற்சி செய்தது இல்லை. ஆனால் நான் அணுகிய மன நல மருத்துவர்கள்
trial and error/ hit or miss பாணியிலேயே குனபடுத்த முயல்கின்றனர் (திரு ருத்ரன் உள்பட ). எனக்கு மன நல மருத்துவர்கள் மீதிருந்த நம்பிக்கை அவர்கள் முயற்சித்த முறையிலேயே போய்விட்டது. பலரை அணுகியும் எந்த முன்னேற்றமோ மாற்றமோ ஏற்படவில்லை. மாறாக பின்வியிவுகலையே அவர்கள் மருந்து ஏற்படுத்துகிறது. தற்போது ஆயுர்வேத மருந்துகளை உள்கொல்கிறேன் மாறுதல்கள் ஏதும் தென்படவில்லை ஆனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை

Chitra said...

பொதுவாக மனநல மருத்துவம் என்றால் பேசிபேசியே சரிசெய்வார்கள் என்ற தவறான கருத்து நிலவுவதால்தான் மனவியல் நிபுணர்கள் பேசுவதை விட ஒரு சாமியாரோ அவரது சிஷ்யன் என்று சொல்லிக்கொள்பவரோ பேசுவதைக் கேட்கலாமே என்று பலர் உளறிவருகிறார்கள்...........சரியாக சொன்னீர்கள்.

athma said...
This comment has been removed by the author.
Dr.Rudhran said...

athma, no need to see me. all psychiatrists are equally trained to handle the problem. meet one who is near and convenient to you

athma said...

ok thnx sir

eniasang said...

அனானி என்ற பெயரில் கல்லெரிந்தாலும் பூ மழை பொழிந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்படாது. வாசகர்களின் புத்திசாலித்தனத்தை குறைவாக எடை போடாதீர்கள்.

mohamedali jinnah said...

மருத்துவம்

மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஷரீக் (ரலி)நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூற்கள்: முஸ்லிம், பைஹகீ

அல்லாஹ் நோயையும் அதற்குரிய மருந்தையும் உருவாக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்! ஆனால், ஹராம் (தடை செய்யப்ட்ட பொருளின்) மூலம் மருந்துவம் செய்யாதீர்கள்! என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்்: அபூதாவூத்

அல்லாஹ் எந்த நோய்க்கும் அதற்குரிய மருந்தை உருவாக்காமல் இருக்கவில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, இப்னுமாஜா, பைஹகீ
Source : http://islamthalam.wordpress.com

mohamedali jinnah said...

நபி (ஸல்) அவர்கள் மது தயார் செய்வதைத் தடுக்கவோ அல்லது வெறுக்கவோ செய்தார்கள். அப்போது இதை மருந்துக்காக தயார் செய்கிறோம் என்று கூறியபோது இது மருந்தல்ல! நோயாகும் என்று நபி அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: தாரிக் (ரலி) நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

mohamedali jinnah said...

மேஜிக், சூனியம் ஆகிய இரண்டையும் குறிக்க அரபியில் ‘ஸிஹ்ர்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
‘அழிவுக்கு இட்டுச் செல்லும் 7 பெரும்;பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்’ எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள், அவற்றில் இரண்டாவதாக ஸிஹ்ரையும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸிலிருந்து மேஜிக், சூனியம் செய்வது கூடாது என்பது தெளிவாகிறது.
நோயை அகற்றுவதற்காக அல்லது இன்ன பிற காரணங்களுக்காக கழுத்தில் அல்லது கையில் அல்லது இடுப்பில் நூல்களை, கயிறுகளை கட்டிக் கொள்வதும் தாயத்து போன்றவற்றை தொங்கவிடுவதும் கூடாது. அதைப் போலவே மந்திரித்த தகடு, கற்பூரம் போன்றவற்றை வீடுகளில் வணிக, தொழில் கூடங்களில் தொங்கவிடுவதும் கூடாது.
Source :https://www.blogger.com/

Murali said...

Since I am new to your blog, I was waiting for some free time to read the archives. One new comment to an old post made me to go through the archives. Even though, I don’t want to start a fresh discussion on the closed subjects, I thought I should share my views on this particular topic, being my favorite one. I understand you are not refusing, Herbert Bensons meditative technique used in systematic desensitization as a coping strategy is basically a yoga nidra or Milton Erickson saying “hypnosis” is very well known in Indian yoga.

Having been a yoga teacher and taught yoga to few hundreds of people, I can acknowledge that yoga as a therapy has its own limitations and it is not complete to prescribe as an alternative to medicine. In the past, yoga has been used along with ayurveda as supplement and complement but its relevance in today’s world as viewed by Osho is unanswered question. There is point in Osho refuting James Lange theory in the context of yoga.

I had the guts to tell the people whom I taught, that yoga is not curative but can be helpful as a preventive strategy, reason may be that I have not chosen it as my profession to earn my daily bread.

Yoga more philosophical than being a science and we don’t have empirical data to prove yoga cures serious mental illness. People may think yoga has cured their disorders or diseases. I can say that, most of the diseases or disorders except for acute and chronic are self made and false for which not only yoga, even nambungal narayanan, rajarajan, aavi amudha, samiyaars, gurus will also work, anything can work for that matter because it is pseudo.

The goal of yoga is the ultimate aim in the spiritual path but can also be used for some compromise like reducing the weight, stress relief, blau blau blau but it is nothing greater than GYM and Music in this context.

My view is this, for mental disorders fit to be classified in DSM seeking psychiatric advice is the appropriate solution.

Unknown said...

எல்லோரும் நித்தியை பற்றி சொல்வது ஹீலிங் தெரபி பற்றி. அவர் தொட்டால் நோய் குணமாகிறது என்று. இதைப்ப்ற்றி சாரு அடிக்கடி எழுதுகிறார். இது சாத்தியம்தானா டாக்டர்.

Post a Comment