இது
என்றோ வரைந்தது
2007 என்பது
மூன்று வருடங்களுக்கு முன் தானா ?
அவள் இல்லாமல் அவன் இல்லை
அவன் நான் அவள் என்றெல்லாம் வேறில்லை
அவளை எழுத முடியவில்லை.
அவள் அப்படி ஓர் அழகு
அப்படியா என்று கேட்போர்க்கு
என் கண் இல்லை.
என் பார்வையைநான் பதியாமல்உங்கள் பார்வைக்காகப் பொய் பதிந்தால்
அவளும் நானும்
என்னுள் காணாமல் போய் விடுவோம்.
a recent interview
6 years ago
27 comments:
அற்புதம் சார்!
ஓவியம் கவிதையா,கவிதை ஓவியமா என இருக்கு.
சில நேரங்களில் வர்ணங்களுடனான யுத்தத்தில் வார்த்தைகள் சிறைப்பட்டுவிடுகின்றன!
வருகைப்பட்டியல் மட்டும்!
Dear Ruthran,
Its really simple and super,
i dont know ur a painter,
if u hav any other links of painting please let me know
Thanks
Kavinsandron
கவிதையான ஓவியம்.... ஓவியமான கவிதை.. நீயா நானா என ருத்ரம் செய்வது இன்னும் அழகு...
வார்த்தைகளும் எண்ணங்களும் கலந்த கை வண்ணங்களாய் "மா".
ம்ம்ம்ம் உணர்ந்த பார்த்தாலே உண்டு! இதற்கு எது போன்ற வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது.
a beautiful piece, compliments each other!!
கதை சொல்லும் ஓவியம்
அவள்
கவிதையாய்....
அருமை!
அவள் அப்படி ஓர் அழகு
அப்படியா என்று கேட்போர்க்கு
என் கண் இல்லை.
..... Very nice. The paintings are superb!
(p.s.) is it "போய்" or "பொய்" ?
//அவள் இல்லாமல் அவன் இல்லை
அவன் நான் அவள் என்றெல்லாம் வேறில்லை
அவளை எழுத முடியவில்லை.//
உயரிய சித்தாந்தம் மூன்றே வரிகளில்....உங்களால் மட்டுமே முடியும் அற்புதம் சார்!
நன்றி சித்ரா, மாற்றி விட்டேன்.
பொய் வேறு இடத்தில் போய் உட்கார்ந்திருந்தது.
அம்மாவை நினைவு படுத்த நாள் வேண்டுமா என்ற
எண்ணத்திலிருந்தேன்..
இப்படி ஒரு நல்ல கவிதை கிடக்குமென்றால் அது
கட்டாயத்தேவை தான்..!
ஓவியங்கள் அழகு...
கவிதை ”தனனையுணர்தல்” என எடுத்துக்கொள்கிறேன்.. :)
சிறப்பு . நல்லா இருக்கிறது நண்பரே , வாழ்த்துக்கள்
//அவளை எழுத முடியவில்லை//
இந்த ஓவியங்களை விட அற்புதமாகவா?
//அவளை எழுத முடியவில்லை//
அழகாய் எழுதியுள்ளீர்கள் ஓவியங்களை.
அற்புதமாய் வரைந்துள்ளீர்கள் வரிகளை.
Nice paintings sir!! :)
கவிதையும், ஓவியமும் சொல்ல முடியாததை சொல்ல துடிக்கும் முயற்சி.
சார் , ரொம்ப அருமை , நீங்க பெரிய சைகோ , சீ... சைகொவுக்கு வைத்தியம் பாக்குற டாக்டர் , சரி சார் , இப்ப பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியகார வைத்தியருக்கு பைத்தியம் புடிச்ச , அவரு எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியகார வைதியர்கிட்ட போய் வைத்தியம் பாத்துக்குவார் ??????
(சார் ரொம்ப சாரி , சும்மா தம்மாசு )
(சே , மனுஷன் எப்படியெல்லாம் பேசி கவர் பன்ன வேண்டி இருக்கு ?///)
அருமையான ஓவியங்கள்!! அவைகளுள் பொதிந்துள்ள அர்த்தமும் அருமை!!
அழகான, உணர்ந்து எழுதப்பட்ட வரிகள். மறுபடி மறுபடி வாசிக்கிறேன் கடைசி நான்கு வரிகளை.
வார்த்தைகளா?
வர்ணங்களா?
உடலா?
உயிரா?
அன்பா?
மனமா?
அற்புதமான ஒரு
வர்ணக் கவிதை!!!!
பதிவிற்கு நன்றி!!!
என் முதல் வருகையின்னு நினைக்கிறேன்.
ருத்ரன்சார் மிக அருமையான ஓவியமும் கவிதையும் அற்புதமாய் இருக்கிறது வாழ்த்துக்கள்..
sorry sir
//அவள் அப்படி ஓர் அழகு
அப்படியா என்று கேட்போர்க்கு
என் கண் இல்லை.
என் பார்வையைநான் பதியாமல்உங்கள் பார்வைக்காகப் பொய் பதிந்தால்
அவளும் நானும்
என்னுள் காணாமல் போய் விடுவோம். //
ஆஹா!
படித்துப் படித்து லயிக்கிறேன் இவ்வரிகளை.
எழுதிய அன்று எப்படி மிஸ் பண்ணினேன்? :(
ருத்ரன், முதல் ஓவியம் அபாரம்! அய்யா, நீங்கள் கலைஞர்!
Post a Comment