Wednesday, June 24, 2009

இன்று கவிஞரின் நாளாம்

ஒரு நாள்
1989 புத்தகச்சந்தையில்.. இவனுகளையெல்லாம் எவன்டா கூப்பிட்டுப்பேசச்சொல்றான்? ... என்று என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்..அங்கே யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
1997..அதே சந்தையில், நான் பேசிக்கொண்டிருந்தேன்..எவனாவது என்னைப்பற்றியும் அப்படிச்சொல்லியிருப்பான்..
அன்று நான் பேசியதில் ஒரு விஷயம்‍:
" என் புத்தகம் என்றாவது வெளியிடப்படும் என்று நினைத்தேன், அது ஜெயகாந்தனால் அல்லது கண்ணதாசனால் தான் வெளியிடப்படவேண்டும் என்றும் விரும்பியிருந்தேன்.." அந்த நூல் இராம கண்ணப்பனால் (கவிஞரின் கையானவர்) வெளியிடப்பட்டது. அப்போது ஜெகே எனக்கு அறிமுகம் இல்லை.
2009, ஜெகே நான் கேவலமாக உளறியதையும் வெளியிட வருவார்..
நல்ல வேளை கண்ணதாசனோடு நான் நெருங்கவில்லை.

என்ன சொல்ல வருகிறேன்?
செத்து வாழ்வதைவிட வாழ்ந்து சாவதைப்பற்றித்தான்..
ந‌ட்பும் நேசமும் நெறி மீறியா?
நான் அவ்வளவு பரந்த மனத்துடையவன் அல்லவே,
எனக்கு இன்னும் பொய் போர்த்திய மெய்க்ளைவிட
மெய் போர்த்திய பொய்களே விருப்பம்..'
யாருக்காகவும்
அல்ல, எனக்காகவே அழுகிறேன்.

அழுவது சுகமென்பதால் அழுகிறேன்,
அழுவது சோகமென்று கற்றுக்கொண்டதால் வருந்துகிறேன்.
இது யாருக்கான அஞ்சலி?

3 comments:

Deepa said...

//எனக்கு இன்னும் பொய் போர்த்திய மெய்க்ளைவிட
மெய் போர்த்திய பொய்களே விருப்பம்..'//

இவ்வரிகளை யோசித்துக் கொண்டே இருக்கிறேன். என் அறிவுக்குச்ச் சரியாக எதுவும் எட்டவில்லை

//அழுவது சுகமென்பதால் அழுகிறேன்,
அழுவது சோகமென்று கற்றுக்கொண்டதால் வருந்துகிறேன்.//

அற்புதம்! அப்படி என்றால் நான் அநியாயச் சுகவாசி என்பது நீங்கள் அறிந்ததே! :-)

//2009, ஜெகே நான் கேவலமாக உளறியதையும் வெளியிட வருவார்..//

:-) ஏன் டாக்டர் தன்னடக்கம் என்ற பெயரில் உங்களை நீங்களே இப்படிக் கேலி செய்து கொள்கிறீர்கள். உங்களை மிகவும் மதிக்கும் என் போன்றவர்களுக்கு நெருடலாக இருக்காதா?

Anonymous said...

thanks deepa

Anandi said...

//எனக்கு இன்னும் பொய் போர்த்திய மெய்க்ளைவிட
மெய் போர்த்திய பொய்களே விருப்பம்..'//
//சும்மாவும் எழுதுவது உண்டு//-அப்படித்தானே doctor?

Post a Comment