பொய்யை புரட்டை எதிர்த்தே அவள் ஆயுதம் ஏந்தி இருக்கிறாள் என்றே எனக்கு நம்பப்பிடித்திருக்கிறது..அந்த மகாசக்தியின் தரிசனத்திற்காகவே காத்துக்கொண்டும் இருந்திருக்கிறேன்.
கவிஞர்கள்,ஓவியர்கள் சிற்பிகள் பலரது கற்பனையில் உருவான பிம்பத்தையே நானும் ஏற்றுக்கொன்டிருந்திருக்கிறேன். அவ்வப்போது பக்தியை மீறும் சலிப்பில் அந்த பிம்பத்தையும் சந்தேகித்திருக்கிறேன்.
இனி அப்படி ஒரு வினா உள்ளே வராது.
சக்தி எப்படியிருப்பாள் என்று ஒரு நிஜத்தின் படம் இப்போது உள்ளது..
இவள் வெறியோடு நிற்கவில்லை, வீரத்தோடு நிற்கிறாள்.
கயமையைக் கொல்ல நிமிர்ந்தெழுந்திருக்கிறாள்.
துப்பாக்கிகள், பெரும்படை, திமிர் எல்லாம் மிகுந்த எதிரிகளை எதிர்த்து நிற்கிறாள்.
இவள் இப்போது நான் கற்பனையில் கண்டு வந்த தெய்வத்தின் நிஜ வடிவம்.
இவள் பிம்பம் அல்ல, சத்தியம்.
இவளையே இப்போது நான் வணங்குகிறேன்.
இவள் என் தெய்வம் தான்.
யாரையாவது தெய்வமாக்கிவிட்டால், அதில் ஒரு செளகரியம் உள்ளது.
"சே நானெல்லாம் சாதரண மனுஷன் தானே, இப்படி அநியாயத்தை எதிர்க்கத்தானே சாமி இருக்கு.."என்று கோழைத்தனத்திற்கு ஒப்பனை கூட்டிக்கொள்ளலாம்.
அவள் தெய்வம்- எனக்காகவும் எல்லாருக்காகவும் போரிடுவாள், நான் மனிதன்- அவளை வணங்கி வியந்து, என் வேலையைப் பார்க்கப்போய்விடுவேன். மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தன் வசதிகளுக்கு எந்த பங்கமும் வராதபோது. தெய்வம் மானுட உருவில் வெளிப்படும், நேர்மையின் வீரம் தேவைப்படும்போது.
இப்படியொரு பெண், அந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக சதி செய்ததாக நாளை கைது செய்யப்படலாம், கொல்லப்படலாம்..
அப்போதும் என் பக்தி பகிரங்கமாக இருக்குமா அல்லது போலியான பகுத்தறிவோடு இந்த தேவதையை நிராகரிக்குமா தெரியவில்லை. உள்ளே மட்டும் தெய்வமாக அவள் ஒளிர்வாள்.
13 comments:
நல்ல பதிவு.
ஓளிரட்டும்.
///அப்போதும் என் பக்தி பகிரங்கமாக இருக்குமா அல்லது போலியான பகுத்தறிவோடு இந்த தேவதையை நிராகரிக்குமா தெரியவில்லை. உள்ளே மட்டும் தெய்வமாக அவள் ஒளிர்வாள். ///
நச்
good post
அவள்தான் தெய்வம்..
அருமைங்க ருத்ரன் சர். ரொம்ப முதிர்ச்சியான பதிவு.(இப்படி சொல்லும் எனக்கு அளவிற்கு வயசு இல்லை என்றாலும்)
பிரச்சினையின் உள்ளே செல்லாமல், இயக்கத்தின் பெயரையும் சொல்லாமல், ஏன் ஊரைக்கூட சொல்லாமல், ஒரே ஒரு படம்...அதை தேவியோடு ஒப்பிட்டுவிட்டு...நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையை சொல்லும் இந்த வரிகள்.
:சே நானெல்லாம் சாதரண மனுஷன் தானே, இப்படி அநியாயத்தை எதிர்க்கத்தானே சாமி இருக்கு.."
அருமைங்க சர்.
கபிலன் said...
// பிரச்சினையின் உள்ளே செல்லாமல், இயக்கத்தின் பெயரையும் சொல்லாமல், ஏன் ஊரைக்கூட சொல்லாமல், ஒரே ஒரு படம்...அதை தேவியோடு ஒப்பிட்டுவிட்டு...நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையை சொல்லும் இந்த வரிகள்.
வழிமொழிகிறேன், இந்தப் பதிவை படித்தவுடன் எனக்கு தோன்றியது இஃதே.
thanks
வீரஞ்செறிந்த லால்கார் மக்களுக்கு செவ்வணக்கம் !
போலிகம்யூனிஸ்டுகளை தனிமைப்படுத்துவோம்!!
வெல்லட்டும் வெல்லட்டும் மக்கள் போராட்டம் வெல்லட்டும்.
மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி
ஜூன் 22, 2009 by kalagam
நக்சல்பரியில் துரோகியாய் உருமாறி நந்திகிராமில் பாசிஸ்டாய் பல்லளித்து
அதையும் தாண்டிய பரிணாம வளர்ச்சிக்கு படையெடுத்து மக்களையே இரையாய் தின்னும் போலிகளை பற்றிய சில கருத்து படங்கள்
http://kalagam.wordpress.com/
நல்ல பதிவு ருத்ரன் அய்யா. (உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை!!!).. உங்களின் பதிவுகள் அதிகம் படித்ததில்லை. வினவு தளத்தில் வந்த உங்களுடைய கட்டுரை "கட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள்" மிகவும் பிடித்திருந்தது.
// இந்திய இறையாண்மைக்கு எதிராக சதி செய்ததாக நாளை கைது செய்யப்படலாம், கொல்லப்படலாம்.. //
இந்த வரிகள் மனதை பாதித்தன. ஒன்று அரசின் பக்கம் இல்லையேல் தீவிரவாதிகள் பக்கம். என்ன கொடுமை எனக்கூறி நானும் கோழைதான் என்பதை மட்டுமே இப்போதைக்குப் பதியமுடியும் போல உள்ளது.
நல்லா எழுதறீங்க.
நிறைய எழுதுங்க சார்.
Doctor, I really like the way you had compared Maa Shakthi and raising of woman, wonderful.
Eager to read a lot from you
நவீன மகாபாரதத்தில் கௌரவர்களே வெல்கிறார்கள்.வில்லும்,சொல்லும் துப்பாக்கியின் வேட்டுச்சத்தத்தில் காணாமல் போய் விடுகின்றன.
Post a Comment