ஸ்பரிஸம் மந்திரம்
சரியான உச்சரிப்பில்
சகல சக்தியும் ஜ்வாலித்தெழும்
உள் அதிரும்
இமை நடுவில் பிரிந்தலறும்
வான் வயிற்றில் விரிந்து
உடலெங்கும் மேகம் படரும்
காதுகளில் நட்சத்திர கோஷம் எழும்
அந்தக் கணச்சிலிர்ப்பில்
உயிர் உதறி வெடித்துச்சிதறி
மனதில் மனது மூழ்கியெழ
இந்தப் படகுக்கு-
கடலே தலையணையாகும்
கடலும் தளர்ந்து படரும்
விழிப்பில் உலகம்
கண்படும்
உண்மை ஒப்பனைக்குத் தயாராகும்.
இது 1986ல் எழுதியது! வார்த்தைகளில் எத்தனை வித்தியாசங்கள்!இது என் சவலைப்பதிவின் ஆரம்பக்கட்டம் என்பதால் பழையனவற்றை தட்டச்சு செய்து பழகிக்கொள்கிறேன். ஒரு (ஓர் என்றுதான் இருக்கவேண்டும், ஆனால் a /an என்பதற்கும் one என்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை நினைத்துப்பார்த்துவிட்டு ஒரு என்றே விட்டுவிட்டு) உண்மையான கவிஞன் சொன்னது போல், இது கவிதையல்ல என்றாலும் அப்படி ஆக்கிக்கொள்ளலாம்.
இங்கே வலைப்பதிவு என்று அடிக்கும் போது அது சவலைப்பதிவு என்று ஆனது யதேச்சை! சில நேரங்களில் சில வார்த்தைகள் எழுதப்படுவதில்லை!
a recent interview
6 years ago
5 comments:
அருமையான கவிதை!
//வார்தைகளில்//?!?
thanks i will correct it
எனக்கென்னவோ "சவலைப்பதிவு" எனும் வார்த்தைதான் கவித்துவமாக உள்ளது. "ஸ்பரிஸம் மந்திரம் சரியான உச்சரிப்பில்" ‘ஹப்பா....... இரண்டாவது பாரா தேவையில்லை என்பது என் கருத்து.
கவிதை அருமையாக உள்ளது.
அருமையான கவிதை!
Post a Comment