Thursday, March 26, 2009

தேர்தல் வரும்போதாவது தோன்றுபவை


மிகவும் சிரமத்துடனும், மிகுந்த கோபத்துடனும் எப்படியாவது எழுதித்தான் ஆக வேண்டுமென்று தீர்மானித்து, எழுதுகிறேன், அச்சுப்பிழைகள் இருக்கும், மன்னிக்க வேண்டுகிறேன்.

அப்படி என்ன தலை போகிற அவசரம்?

தலை இருந்தும் பிரயோஜனமில்லையே என்ற வெறுப்பு, வெறி,வயிற்றெரிச்சல் தான். தலை என்பதை மேலிருக்கும் மயிராக மட்டும் பார்க்காமல், உள்Liருக்கும் மூளையாகவும் கருதுவதால் தான் இப்படி ஒரு (வெற்றாக இருந்துவிட்டாலும்) முயற்சி.

வெட்டிப்பேச்சும், வசதியாக உட்காrந்து காலாட்டிக்கொண்டு பேசுவதும் எனக்கும் பிடிக்கும். ஆனால், வரப் போகிறது ஒரு தேர்தல்!

தேர்தல் என்றால் தேர்வு செய்யும் உரிமை இருக்க வேண்டும்!

இருக்கிறதா?

யார் நிற்கிறார்கள்? எதற்காக அவர்களுக்கு என் வாக்கு? போடலாமா வேண்டாமா?எல்லாம் யோசித்து விட்டு, போடாவிட்டால் என்றும் தோன்றும்‍ போடாவிட்டால்?

அன்புமணியும் கனிமொழியும் அடுத்து 'பாராளுமன்றப் பிரதிநிதிகளாக' ஆகாமல் போய் விடுவார்களா?

தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுngகளேன்‍ எனக்கும், எல்லோர்க்கும்.

7 comments:

Dr.Rudhran said...

sorry, i have not learned the nuances yet.
this was a spontaneous writing that i tried- with all the obvious errors. i shall for some time write in english in my blog.
meanwhile if there are some good tamil typists to type on the net, please let me know.

Anonymous said...

sir,
you can use the link below to type in tamil, and it can also be used offline. and the second link is the google transliteration link which is also used to type tamil...


http://ezilnila.com/tane/unicode_Writer.htm
http://www.google.co.in/transliterate/indic/Tamil

now about the election, i think it is for the party to decide who is going to vote in our names.. u think they will wait till we decide and finally go to the booth to cote...hmmm pakkalam mudhalla namma peru voters listle irrukaanu

கோவி.கண்ணன் said...

//மிகவும் சிரமத்துடனும், மிகுந்த கோபத்துடனும் எப்படியாவது எழுதித்தான் ஆக வேண்டுமென்று தீர்மானித்து, எழுதுகிறேன், அச்சுப்பிழைகள் இருக்கும், மன்னிக்க வேண்டுகிறேன்.//

தமிழில் எழுத வந்ததை வரவேற்கிறேன்

ஸ்ரீ said...

பிறகு உங்கள் ஓவியங்களையும் பார்வைக்கு வையுங்களேன்.. வினவில் பார்த்தவை மிக நன்றாக இருந்த்து

ஸ்ரீ said...

முதலில் போட்ட பின்னூட்டம் மறைந்து விட்டது எனவே மீண்டும்...

ஆங்கிலமென்றாலும் தமிழென்றாலும் உங்கள் எழுத்து வசீகரமாகத்தான் இருக்கின்றது. உங்களைப்போன்ற பிரபலங்கள் வலைபதிவுலகில் பங்கு பெருவது புதிய பதிவர்களை உற்சாகப்படுத்தும் என நம்புகிறேன். வருக! வருக!!

குமரன் said...

தேர்தல்

அடைத்து வைத்து
மூச்சு திணறி
வெளியே வந்த
காந்தி தாத்தாவின் முகத்தில்
மலர்ச்சி புன்னகை.

கரைவேட்டிகள்
விரைப்பாய்
சந்தோசமாய்
தெருக்களில் வலம் வருகின்றன

மண்டபங்களில்
மணக்க மணக்க
ஆடுகளும்
கோழிகளும்
உள்ளே தள்ளப்படுகின்றன.

தளர்ந்து கிடக்கிற
மக்களைப் பார்த்து
வெகுசீக்கிரத்தில் சிரிப்பாள்
லட்சுமி

யாருக்கும் கொள்கையுமில்லை!
வெங்காயமும் இல்லை!
வளரட்டும் ஜனநாயகம்!
வானம் தொடட்டும்
புதிய ஊழல்கள்!
பாவம் நாடு!

Dino LA said...

அருமை

Post a Comment