நான் வேறு நான், தேடினால் தொலைந்து போகிறேன்...
என்று பத்தொன்பது வயதில் எழுதிய நான் இன்று,
நான் வேறு நான் ஆகி விட்டதைத் தெரிந்து கொண்டதால் வெட்குகிறேன்.
என்று பத்தொன்பது வயதில் எழுதிய நான் இன்று,
நான் வேறு நான் ஆகி விட்டதைத் தெரிந்து கொண்டதால் வெட்குகிறேன்.
வறுமையில் இருந்த
வேகம், வசதி கூடுமுன் இருந்த
வீரம், சௌகரியத்தில் சோம்பலாகிவிட்டது.
புலம்புவதற்கு இரவின் தனியான தலையணை போல கணினியின் வெளிப்பாட்டு வசதி...
தெரியாதவர்களும் சில நேரம் எழுதியதைப் புரியாதவர்களும்
சொறிந்து வளர்த்த ’ஸோஷ்யல்’ அரிப்பில் இன்னும் ஆக்ரோஷ அவதாரம் தொடர்கிறேன்.
இங்கே புலம்பி
போர்க்குரல் எழுப்பி கூடங்குளம் மூடப்படுமா இலங்கையை மன்+ஸோ கூட்டம் விட்டுக்கொடுக்குமா?
ஆனாலும் நானும் இங்கேதான் புலம்பவும் போர்க்குரல்களுக்கு ஆதரவும் தர முடிகிறது..
கையாலாகாது கை பிசைவது போல.
வெட்கத்தை சோகம் மறைப்பது போல..
நாடகமாடுவதை நடிகனே ரசிப்பது போல...



11 comments:
RkR க்குமட்டும் சொற்கள் எப்படி ஒடி வந்து பணிகின்றன பாருங்கள்...
நடை அபாரம் சார்,,,
//வறுமையில் இருந்தவேகம், வசதி கூடுமுன் இருந்தவீரம், சௌகரியத்தில் சோம்பலாகிவிட்டது.//
உண்மையான வரிகள் என் வாழ்விலும்
/கையாலாகாது கை பிசைவது போல.
வெட்கத்தை சோகம் மறைப்பது போல..
நாடகமாடுவதை நடிகனே ரசிப்பது போல.../
சாட்சி பாவத்தோட கொடுமையே இதுதானோ ...அப்பறம் 'என்ன' தேடி என்ன ஆகபோகுது.
தனக்குள்ளே தன்னை ஒருவர் இப்படி பார்த்து கவனிக்க முடிகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
புலம்புகிறவர்களை நானாக்கி புலம்பும் ருத்ரன் புலம்பல்களை போர்க்குரல் ஆக்க புனைகிறார். புனைவு வினையாகும்.
//கையாலாகாது கை பிசைவது போல.
வெட்கத்தை சோகம் மறைப்பது போல..
நாடகமாடுவதை நடிகனே ரசிப்பது போல.//
மிகச்சரியான வார்த்தைகள் சார். நாம் நம் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டிருப்பவை, முடிவில்லாதவை இவை...
நிஜமாகவே அருமை
மன் + ஸோ விட்டாலும் டெஸோ விடாது போலும்.
Dear Dr. - Your posts are fantastic. Please keep up your writing and keep us alive.
Nandri
Senthil Nathan M
Dear Dr. - Your posts are fantastic. Please keep up your writing and keep us alive.
Nandri
Senthil Nathan M
Post a Comment