Saturday, January 7, 2012

கொலையும் கொலைவெறியும்..



1.ஒரு டாக்டர் கொல்லப்பட்டார்..என்ன பெரிய விஷயம்? பலரும் கொல்லப்படுகிறார்கள், டாக்டர்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு?
2.கொல்லப்பட்டது ஒரு பெண்.. என்ன பெண்கள் கொல்லப்படுவதில்லையா? 
3.அவர் தந்த சிகிச்சை பயனளிக்காமல் நோயாளி இறந்தததால் அவர் கொல்லப்பட்டார்..   பின்னே என்ன..இந்த டாக்டர்களெலாம் திமிர் பிடிச்சி திரியறாங்க..போட்டா தான் புத்தி வரும். அவங்க ஆளை கொன்னுட்டாங்களாம் அதுக்கு ‘அடையாள’ பணிநிறுத்தம் பண்றான்களாம்..டேய், நீங்க வேலை செய்யலேன்னா ஜனங்க சாவாங்களே, அறிவில்லே, பொறுப்பில்லே, பொறுக்கிகளா! எவ்வளோ காசு சம்பாதிக்கிறீங்க....ஏழைங்க வயித்திலே அடிக்காதீங்கடா...

மேல் குறிப்பிட்ட மாதிரிதான் சென்ற வாரம் கொல்லப்பட்ட டாக்டர் சாவு பற்றி இணையத்தில் மிகுந்த தொணதொணப்பு. விஷயம் தெரிந்தவர் தெரியாதவர் என்று இணையத்தில் எதுவும் கிடையாதே  எல்லாரும் எச்சில் துப்பினார்கள், எதிர்த்தார்கள், விவாதித்தார்கள், விளக்கினார்கள் விமர்சித்தார்கள்.  சீக்கிரமே ஒரு தொலைகாட்சியில் நடந்தது என்ன என்று தெரியாமலேயே பேசிவிட்டு மாமனுக்கும் மச்சினிக்கும் ஃபோன் போட்டு ”இன்னைக்கு டிவிலெ வரேன்” என்றும் சிலாகித்துக் கொள்வார்கள். அவர்கள் பாவம், தாம் என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்று தெரியாதவர்கள் என்பதால் பரமபிதாவும் மன்னித்து விடுவார். ஆனால் அறிவாளிகளாகத் தம்மை அடையாளப் படுத்திகொண்டவர்களும் இந்த கோஷத்தில் இணைந்தார்கள், `கொலவெறி` பாட்டை ரசித்தே ஆக வேண்டும் என்பது போல.

புனைக்கப்பட்ட போலி புது காந்தி போலல்லாமல், இது வெறும் ஊடக விளையாட்டாக இருக்கவில்லை. மக்களில் ‘சாது’ என்று கருதப்பட்டவர்களும் கொதித்தார்கள். கொலைக்காக அல்ல, கொன்றது என்ன பெரிய தப்பு என்று! பேரறிவாளனுக்கு மரண தண்டனை கூடாது என்று கூக்குரலிட்டவர்கள் கூட, செத்த டாக்டர் என்ன பெரிய வெங்காயமா  என்று மட்டும் தான் கேட்கவில்லை; ”தப்பு பண்ணினா அதனாலெ கொன்னுட்டாங்க..என்னப்பா பெரிய மேட்டர்என்றும் நேரடியாகக் கேட்கவில்லை, என்ன இருந்தாலும் அறிவாளிகள் அல்லவா?

ஏன் இந்த கொலைவெறி?  மருத்துவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின் அதீத வெளிப்பாட்டினால்தான். இந்நிலை ஏன் உருவானது?
மருத்துவர்களுக்கு ஒரு போலி ஒளிவட்டம் புனையப்பட்டுள்ளது, அதை அகற்றுவது சமூகக்கடமை என்றெல்லாம் யாரும் துள்ளி வந்து கொதிக்கவில்லை. “என்னாங்கடா  காசுமேல காசு சம்பாதிச்சுட்டு, சும்மா ஸ்ட்ரைக் பண்றீங்க?” எனும் தொனியில்தான் பலரின் கோபம். மருத்துவர்களை விடவும் அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு ஏன் இந்த ஆத்திரம்? எங்கேயோ மாதம் லட்சம் ரூபாய் வாங்குபவனைவிடவும், பொது மக்கள், சில ஆயிரங்கள் மட்டுமே சம்பாதிக்கும் மருத்துவனுக்குக் கூடுதல் மரியாதை கொடுப்பதால்தான் (கொடுத்ததால்தான்). இது ஏன் நடந்தது?

ஒரு கட்டத்தில், மருத்துவர்களிடம் அக்கறை இருந்தது, தொழில் நேர்மையும் தொழில் பக்தியும் இருந்தது. வசூலித்த கட்டணத்தை விடவும் நோயாளி குணமடைந்ததில் திருப்தியும் பெருமிதமும் நிறைவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் மருத்துவம் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் அவரவர்க்கு ஒரு பெருமையும் அர்ப்பணிப்பும் இருந்தது. இன்று போல காசு தந்தால்தான் சிகிச்சை எனும் மருத்துவர்களும் அப்போதில்லை, காசு கொடுத்தால் செய்தியாக்கும் ஊடகக்காரர்களும் அப்போது இல்லை, இருந்திருக்கலாம் ஆனால் அவர்கள் வெகு சிலர். அவர்களும் வெளியில் அப்படிச் சம்பாதிப்பதை வைத்து அலட்டிக்கொள்ள முடியாத ஒரு சமூக முடக்கத்தில் இருந்தார்கள். இன்று பணமும் அதன் வழி பகட்டுமே கௌரவம் என்றும், நேர்மை பிழைக்கத் தெரியாதவனின் பிதற்றல் என்று ஆகி விட்டது, எல்லா துறைகளிலும். இதற்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு?

1980களில் தனியார் மருத்துவக்கல்லூரிகள் துவங்கின, அதே காலகட்டத்தில் தான் வணிகநிறுவனமாக்கப்பட்ட தனியார் ஆடம்பர மருத்துவமனைகளும் தோன்றின. விரைவில் இவை விளம்பரம் என்பதைத் தவறான நெறி என்று கருதிய மருத்துவத்துறையின் அணுகுமுறையை மாற்றின. படித்தால் மட்டுமே மருத்துவக்கல்வி சாத்தியம் எனும் நிலை மாறி பணமிருந்தால் போதும் மதிப்பெண்கள் இல்லாமலேயே டாக்டர் ஆகலாம் எனும் நிலை வந்தது. ஆரம்பத்தில் அப்படிப்பட்ட டாக்டர் பட்டம் வரதட்சிணைக்காகவும், விசிட்டிங் கார்டுக்காகவுமே அவசியம் என்றிருந்தது. அப்படி பட்டம் வாங்கியவர்கள் சிகிச்சை செய்து சம்பாதிக்கும் அவசியம் இல்லாதவர்கள் மட்டுமல்ல, அவர்கள் ‘அல்ப-பரதேசி-பன்னாடைகளை’ எல்லாம் தொட்டுப் பார்த்துப் பேசிப்பழகவும் விருப்பம் இல்லாதவர்கள். காலப்போக்கில் மிட்டா மிராசு போதாது, பரம்பரை சொத்தும் தலைமுறை தாண்டி நிலைக்காது என்றவுடன், வாங்கிய பட்டமும் வைத்திருக்கும் சொத்தும் முதலீடாக  வியாபார மருத்துவ மையங்கள் உருவாயின. தான் படிக்காவிட்டாலும் படித்தவர்களைப் பணியில் அமர்த்திக்கொண்டு வியாபாரம் செய்பவர்களும் உருவானார்கள். 

20 வருடங்களில் ஆடம்பரமும் அதை வெளிப்படுத்திய விளம்பரங்களும் இவர்களிடம் செல்வதே ஒரு கௌரவம் என்று ஆனது, இவர்களால் தான் சரியான சிகிச்சை தர முடியும் எனும் மாயையும் மக்களிடம் பரப்பப்பட்டது.
அரசு மருத்துவமனைகள் சரியில்லை எனும் எண்ணம் விதைத்து வளர்க்கப்பட்டது. கழுத்தில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்று பிகு பெருவெற்றியும் பெற்ற எம்ஜியார் கூட கடைசியில் அங்கே சிகிச்சைக்குப் போகவில்லை, தனியார் வர்த்தக மருத்துவமனைக்கே கொண்டு செல்லப்பட்டார். முன்பு அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தந்த நிபுணர்கள் பணி ஓய்வு பெற்றதும் இதே தனியார் மருத்துவ நிறுவனங்கள் அவர்களை அதிக சம்பளத்திற்கு தங்கள் மருத்துவமனையில் நியமித்துக்கொண்டன. மக்களும் இங்கே போனால் தான் சிறந்த சிகிச்சை என்று நினைக்க ஆரம்பித்தார்கள். சிகிச்சைக்கு பத்து ரூபாய் வாங்குபவனைவிடவும் நூறு ரூபாய் வாங்குபவன் விஷயம் தெரிந்தவன் எனும் மடமை பரவ ஆரம்பித்தது.  மெல்ல `குடும்ப டாக்டர்` என்று சுக-துக்கங்கள் அனைத்திலும் அங்கமாய் இருந்த ஒரு சமூகப் பிரஜை ஒதுக்கப்பட, அடுத்த தலைமுறை மருத்துவர்கள் அனைவரும் மனத்தளவில் மாற ஆரம்பித்தார்கள்.

மாற்றம் தவிர்க்கவியலாததுதான்,  இயல்பாய் அமைந்தால் மட்டுமே நிர்ப்பந்தமாய் திணிக்கப்பட்டால் அல்ல. விளம்பர வியாபாரமாய் மருத்துவம் மாறியது இயல்பாய் அல்ல,  வணிக நோக்கம் மட்டுமே கொண்ட சில தந்திர வியாபாரிகளால், அதற்கு இந்தியாவின் அரசியல் நிலைப்பாடும் மெல்ல உலகமயமாகி, வர்த்தகமயமாகி உதவியது. தொலைகாட்சி வீட்டுள் ஆக்ரமித்தது.

இதற்கும் இன்று மருத்துவர்கள் மீது மக்கள் கோபமாய் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?  மக்களுக்கு லேசில் கோபம் வராது. ஏமாற்றப்பட்டாலும் அதை விதி எனும் கலாச்சார மூடநம்பிக்கையில் ஒதுக்கி அடுத்த காரியம் பார்ப்பவர்கள் நம் மக்கள். இவர்கள் மருத்துவர்கள் மீது இவ்வளவு கோபம் ஏன் கொண்டார்கள்? எளிதாய் நிறைய `அறிவாளிகள்` சொல்லும் பதில், “மருத்துவர்கள் காசு சம்பாதிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள், மக்கள் மீது அன்பும் கருணையும் அக்கறையும் இல்லாதவர்களாகி விட்டார்கள்” என்பதே. இது கொஞ்சம் உண்மை. (உண்மை கொஞ்சமாய் இருக்காது, முழுதாய் இருக்கும் அல்லது பொய்யாகிவிடும் எனும் தர்க்கம் மீறி பார்ப்போம்). சிலர் அப்படி என்று பலர் சொல்கிறார்கள், பலர் இப்படித்தான் என்று சிலர் சொல்கிறார்கள், எல்லா மருத்துவர்களும் இப்படித்தான் என்று எல்லாரும் சொல்வதில்லை. அந்தச் சில (அவர்களே ஒப்புக்கொள்ளும்) “நல்ல, நேர்மையான, நெறிவழி நடக்கும்” மருத்துவர்களை விடவும், பணமே பிரதானமாக தொழில் செய்யும் சில மருத்துவ வியாபாரிகளை மனத்தில் முன்னிறுத்தியே மக்கள் கொதிக்கிறார்கள்.  இந்த வியாபாரிகள் முன்னிலை வகிக்க யார் காரணம்? அவர்களிடம் பலர் ஏமாந்தார்கள் எனில் அது யார் தவறு?

ஒரு நோயுற்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவருக்குத் தெரியப்போவது (சுயநினைவு இருந்தால்) டாக்டர் நர்ஸ் எல்லாம் தன்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்களா என்பது மட்டுமே. ஆனால் அவருடன் அங்கே தங்கியிருக்கும் உறவினர்க்கும், விசாரித்துப்போக ஆப்பிளும் ஹார்லிக்ஸும் வாங்கி வரும் உற்றாருக்கும் தெரிவது, அந்த மருத்துவமனை அவர்களுக்கு செய்து வைத்திருக்கும் வசதிகள் தான். ”கவர்மெண்ட் ஆஸ்பத்ரியா..சீச்சி  டர்ட்டி” என்பதும் இவர்களது முகச்சுளிப்புதான். ஆமாம். அரசு மருத்துவமனைகள் பளிச்சென்று இருப்பதில்லை, அங்கே ‘காண்டீன்’ கூடச் சரியாக இருக்காது..ஏன்? யாரால்?  நோயாளி குப்பை போடும் நிலையில் இல்லை, டாக்டர்களும் நர்ஸ்களும் தங்கள் இடத்திலேயே குப்பை போடுவதில்லை,  வருபவர்கள் தான் ப்ளாஸ்டிக் பாட்டில்களையும், ஆப்பிள் சுற்றிய பைகளையும், பையில் வைத்திருக்கும் குப்பைகளையும் அங்கே வீசி விட்டுச் செல்கிறார்கள்.

சரி சமூகப் ப்ரக்ஞையுள்ள சம்பாதிக்க முடிந்த அறிவுஜீவிகள் ஏன் இதை ஒரு கடமையாக, பணியாக எடுத்து சுத்தம் செய்ய முன்வரவில்லை? இதை ஒரு சமூகக்கடமை என்று இது வரை எந்த சாமியாரும் சொல்லவில்லை, எந்த செய்தியாளரும் முன்னிறுத்தவில்லை என்பதாலா, அல்லது இப்படி ஒரு வேலை செய்தால் அதற்கு விளம்பரமும் ஊடக கவன ஈர்ப்பும் கிடைக்காது என்பதாலா? இன்று அந்த மருத்துவர் கொலையை வைத்துக் கொண்டு மருத்துவத்துறை மீது சேற்றை பூசும் எத்தனை பேர் அங்கே சென்றிருப்பார்கள். குப்பைகளுக்கப்பால் அங்கே பணியாற்றும் மருத்துவர்களின் சிரமங்களைப் பார்த்திருப்பார்கள்
 
இது மட்டுமல்ல,கொலை செய்யப்பட்ட டாக்டர் சிகிச்சை அளிக்கும்போது இறந்த பெண்ணுக்கு என்ன பாதிப்பு என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ‘ரமணா’ படம் மாதிரி என்று உளறுவோரில் எத்தனை பேருக்கு, அப்படிப்பட்ட பாதிப்புக்கு பல பாட்டில்கள் ரத்தம் தேவை என்று தெரியும்? அப்படி தேவைப்படும் பாட்டில்களில் ஒரு பாதியாவது இந்த திடீர் சமூகவிமர்சகர்களில் ரத்த தானம் செய்திருப்பார்கள்?  என்னவோ பழிக்குப் பழி கொலைக்குக் கொலை என்பது போல ஒதுக்கும் எத்தனை பேருக்கு அது என்னதான் பாதிப்பு என்று தெரிந்து கொள்ள அக்கறை? அன்று அறுவை சிகிச்சை முயன்றிருக்காவிட்டாலும் அந்தப் பெண் அடுத்த சில மணி நேரங்களில் இறந்திருப்பார் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? எவ்வளவு பேருக்குத் தெரிந்து கொள்ள அக்கறை? பொதுமக்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை எனில் எதற்கு இந்த மருத்துவர்கள் மீதான கோபம்? சில ஊடகங்கள் இதை மருத்துவரின் குற்றமாகத் திரித்து செய்தி வெளியிட்டதால்தான்.

அப்படி வெளியான செய்தி குறித்து உண்மை நிலையை விளக்க மருத்துவர்கள் முயலும் போது வந்த எதிர்ப்பு தான் வினோதமானது. ”நீங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்றது தப்பு.” என்றார்கள். நடந்தது ஒன்றும் பெரிய போராட்டமோ மக்களை (சிலர் உளறுவது போல) சாகடிக்கும் வகையான வேலை நிறுத்தமோ அல்ல. பேருந்து, ஆட்டோ ஸ்ட்ரைக் என்பதில் பாதிக்கப்பட்ட அளவு கூட பொது மக்கள் இதில் பாதிப்படையவில்லை. அவசர சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைகளும் பிரசவங்களும் தடையின்றி நடந்தன. காய்ச்சல் வயிற்றுவலி... என்று வருபவர்கள் அன்றைக்கு அவதிக்குள்ளானார்கள், உயிர் எதுவும் போகவில்லை, உயிருக்குப் போராடும் எவரும் திருப்பி அனுப்பப் படவில்லை. இது திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டாலும் ..என்ன இருந்தாலும் நீங்க ஸ்ட்ரைக் பண்ணக்கூடாது என்றார்கள். ஏன்? அநீதி அநியாயம் தமக்கு நடக்கிறது என்று நினைப்பவர் அதைக் கண்டித்து அடையாள அளவில் கூட எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாதா? “உயிர் காப்பவர் நீங்கள்...நீங்கள் பணி நிறுத்தம் செய்யக்கூடாது” என்பவர்களும், ஓர் உயிர் அநியாயமாய் பறிக்கப்பட்டதற்கு எவ்வித வருத்தமும் கண்டனமும் தெரிவிக்காமல் மருத்துவர்கள் இப்போதெல்லாம் சரியில்லை என்றே முழங்கியது ஏன்?

கோபப்பட்ட மக்களும் யார்? மருத்துவர் வேலை நிறுத்தம் நடைபெற முயன்ற அன்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்னிடம், “பாவங்க அந்தம்மா ஆபரேஷன் பண்ணுச்சாம்பொம்பள செத்துடுச்சாம்... அதுக்கு டாக்டரை வெட்டிட்டானாம்” என்று வருத்தப்பட்டார். நான் டாக்டர் என்பதால் அதை அவர் என்னிடம் சொல்லவில்லை.  ஆனால் இணையத்தில்.... மெத்தப் படித்தவர்கள் எப்படி எழுதினார்கள்?
புரிகிறது. இப்படிக் கோபப்பட்ட அனைவரும் ஆடம்பர வர்த்தக மருத்துவ மனைகளில் பணத்தையும் இழந்து பலனும் காணாதவர்கள். இது அவர்களின் நியாயமான கோபம் எனில், எது நியாயம்?

சுமார் பத்தாண்டுகளாக பணப் புழக்கம் அதிகரித்ததாம்...
அண்ணாச்சி கடையில் அக்கவுண்டு வைத்து அடுத்த மாதம், பத்து நாள்ல தந்துடறேன் என்று மேலும் பொருள் வாங்கியவர்கள் பணம் சேர்ந்ததும் எங்கே போனார்கள்? பளபளக்கும் அங்காடிகளுக்கு, அண்ணாச்சி கடை க்ஷீணித்தது.. “இட்ஸ் ஈசி ஹியர்டா” என்று கடனட்டை தேய்த்து வாங்கியவர்களால் அண்ணாச்சி கடைகள் மட்டுமல்ல அக்கறையோடு சமூகத்தில் அங்கமான பல்வேறு துறையினரும்... மெகானிக் முதல் மருத்துவன் வரை... ஒதுக்கப்பட்டார்கள். அந்நியமான ஒருவனிடம் சம்பளம் வாங்குவதாலோ என்னவோ அருகாமையில் உள்ளவர்களைக் கூட அந்நியமாக்கிக் கொண்டார்கள். அப்புறம்... டீக்கடையில் வாட் ஷிட் என்று கோபித்துவிட்டு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் ஆறிய காஃபியை குடித்து நடித்தார்கள். காஃபி ஆறினாலும், கொடுத்த காசுக்கு வைத்தியம் நடக்காவிட்டாலும், ஆடம்பரமான வியாபாரிகளிடம் இவர்கள் கோபித்ததே இல்லை. இவர்களுக்குத்தான் இப்போது “டார்மீக ஆங்கர்”

மருத்துவத்துறை மட்டும் ரொம்ப யோக்கியம் என்று சொல்லவில்லை.  கமிஷன் வாங்க பரிசோதனை செய்வது, தேவையில்லாமல் மருந்து எழுதி அதையும் தன் சொந்தக் கடையிலேயே விற்பது, நடந்து வருபவனை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மூன்று நாளாவது படுக்க வைத்து பணம் சம்பாதிப்பது, என்று தம்மைத் தாமே கொச்சைப்படுத்திக்கொண்டனர் சிலர். படிப்புக்கு மட்டுமல்லாமல் ‘பாஸ்’ ஆவதற்கும் பணம் போதும் எனும் திமிரில் சிலர். இவர்கள் சம்பாதித்தார்கள், பணத்தை மட்டுமல்ல, மக்களின் வெறுப்பையும்.

இன்று காந்தீய வழியில் மெழுகுவத்தி கொளுத்தும் பகுதி நேரப் புரட்சியார்களெல்லாம் திமிருடன் பேசும் அவு மருத்துவத்துறை தாழ்ந்து விட்டது என்றால்... மருத்துவர்களும் காரணம். தம்மிடையே ஒற்றுமை இல்லாத கூட்டம் இது தான். இதனால் தான் “ஸ்ட்ரைக்” எனும் சுண்ணாம்பெல்லாம் மருத்துவர்களால் வேகவைக்க முடியவில்லை. அப்படி ஒப்புக்கு பண்ணிய வெத்து போராட்டத்தினால் தான் வெட்டிகளெல்லாம் எகிறி குதிக்கும் நிலை.  ஹ்ம்ம்ம்..இனி?

நாளையே நாடு திருந்தும் எனும் ஹஸாரேத்தனம் என்னிடம் இல்லாததால்… வெதும்பி, விம்மி என் பராசக்தியிடம் கேட்கிறேன். என் மக்களுக்கு புத்தி கொடு, அல்லது அவர்களது கீழ்மையையாவது என் கண்களில் படாது மறைத்திடு!

34 comments:

மணி said...
This comment has been removed by the author.
மணி said...

போராட்டம் நடத்த அனைவருக்கும் கருத்துரிமை உள்ளது. அதனை எதிர்த்து பேசியவர்களது பார்வை தவறானதே ! ஆனால் வயிற்றுவலியோ காய்ச்சலோதானே யாரும் சாகவில்லையே என்ற மருத்துவரின் பார்வையும் ஹெரோடெட்டசுடனான ஒப்பீட்டுச் சமாதானம்தானே !
குப்பைதான் பிரச்சினை என்றால் தாலுகா ஆபீசில் குப்பை கூளம் ஏதுமில்லையே. மக்களது பொருமல் அங்கும்தானே உள்ளது. ஹசரே வின் சமூகத்தின் மீதான விமர்சனத்தைத்தான் தாங்களும் வைத்துள்ளீர்கள். அதனால்தான் குப்பை பேசு பொருளாகிறது. ஜவ்வாது வைப்பதே ஏமாற்று வேலை என்பதை உணரும்போது மருத்துவர்கள் ஒன்றிணைவதோ அல்லது ஆறு இலக்கங்கள் ஏமாந்த கதையோ முக்கியமல்ல என்பதும் தெரிய வரும்.

Unknown said...

பெங்களூரில் டாக்டர் குடும்பம் தற்கொலை....ஏன் என்று யாரும் கேட்கவில்லை ?
விஷயம் இதுதான்...கடன் தொல்லை காரணமாக ! ஏன் கடன் வாங்கினார் ? விலை உயர்ந்த மருந்துகளை வாங்கினார், மக்களுக்கு இலவச சேவை செய்தார்... ! எப்படி கடன் கட்ட முடியும் ? இது கௌரவ தற்கொலை ! யாருக்காக ? மக்களுக்காக !!! இப்படியும் இருக்கின்றார்கள் டாக்டர்கள் !

karthik balajee/ஊசிப்பட்டாசு said...

dear sir,iam Karthik Balajee,i posted in f.b the following... (sad that iam not ur fb friend)

dr killed in T.N...

to all those writers/cartoonists/timepassers in F.B /twitter, who criticised drs very badly (i recieved200+such harsh comments/posts in last 24hrs):-

-myself n my fellow drs worked48hrs continuously many a times (without sleep...48hrs..)
-many times i hav not taken food for 12-15hrs continuously doing work,but patients will eat infront of us...
-my dad travelled 4hrs2meet me.i was only duty dr,so could spend just5min with him...my friends arranged him food n dropped him in bus stand.
-once i fainted in ward,i was given water,n i continued work after 30 min...
-many wards dont have toilets,many times i controlled my bladder for 3,4hrs till another dr comes2relieve me..(condition of female dr is so pathetic )

-cartoonist/writer cant giv anesthesia/do caessarian or atleast give I.V injection.they hav never saved any life in their lifetime...their only strength is their pen/pencil...let them scribble...n as usual part time n full time time passers will come n make their intelligent comments n go off...their only weapon is their keyboard...
-i know a 'brave' writer who fainted on seeing blood coming out of his nearby patient
-funny people giving 'ramana film' as reference against drs..


-todays dinamani editorial,cartoonist bala's cartoon n following abuse against drs-just a sample hw media utilising this situation..

Dr.Rudhran said...

//தாலுகா ஆபீசில் குப்பை கூளம் ஏதுமில்லையே. மக்களது பொருமல் அங்கும்தானே உள்ளது// பொருமல் ஒரு வேளை ஃபைவ் ஸ்டார் டாலுக் ஆஃபிஸ் இல்லையே என்றும் இருக்கலாம்.

தணல் said...

செம சூடு! Well written!

தணல் said...

மருத்துவர் என்றால் சேவை செய்ய வேண்டும் என்று துள்ளிக் குதிக்கும் இந்தக் குதிர்கள், மருத்துவருக்கு ஒரு இலவச மருத்துவமனையை, மருத்துவச் சாதனங்களை அல்லது ஒரு அங்கு சிகிச்சை பெற வரும் மக்களுக்கான ஒரு ஸாஃப்ட்வேரைத் தான் சேவை மனப்பான்மையுடன் வழங்க முன் வருவார்களா? ஒரு ஸாஃப்ட்வேரை வாங்க எவ்வளவு செலவாகும் என்று இவர்களுக்குத் தெரியாதா என்ன?

தணல் said...

அவசரச் சிகிச்சைகளை நிறுத்தாமல் தானே போராட்டம் நடத்தினார்கள்? பிறகு எதற்கு இவர்களுக்கு இந்த வெற்றுப் பொங்கல்?

தணல் said...

நியாயமாக தமக்கு பணியில் பாதுகாப்பு வேண்டும் என்று போராடுவோரையும் போராட்டத்தையும் ஊதிப் பெரிதாக்கி தமக்கு சமூகப் பொறுப்புணர்வு இருப்பது போலக் காட்டி குளிர் காய்ந்து கொள்கின்றன இந்தப் பத்திரிகைகள்.

தணல் said...

இனியாவது நடப்பு வணிக வாழ்வுக்கேற்ப மருத்துவருக்கும் சிகிச்சை பெற வருபவருக்குமான கடமைகள் உரிமைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு புதியவை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சதீஷ் செல்லதுரை said...

sir, borderil duty paarkira enakkum strike pannenna alamnu thonuthu...nellai il minister munnal sethu pona police jaathikkum strike panna thonuum..kolai seithavarhal seithathu thavaruthan atharku doctors strike private hospitalil seithirukkalam...rajasthanil doctors strike panranga..enna reason sir?naan star hotel poravan illai..oru constable mattume..metha paditha doctorsku oru pathivu pottal nalla irunthirukkum..politicianai kollalamnu thonuthu..maoist seiranga appadina maoist thappa?doctors i theivamaha paarka vendam endral teachers politicians govt servant yaaridamun theivathanmaiyai ethirparka vendam..satharana makkalidam enna ethiparkiringa?theivam?

சின்னப்பயல் said...

மருத்துவத்துறை மட்டும் ரொம்ப யோக்கியம் என்று சொல்லவில்லை. கமிஷன் வாங்க பரிசோதனை செய்வது, தேவையில்லாமல் மருந்து எழுதி அதையும் தன் சொந்தக் கடையிலேயே விற்பது, நடந்து வருபவனை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மூன்று நாளாவது படுக்க வைத்து பணம் சம்பாதிப்பது, என்று தம்மைத் தாமே கொச்சைப்படுத்திக்கொண்டனர் சிலர். படிப்புக்கு மட்டுமல்லாமல் ‘பாஸ்’ ஆவதற்கும் பணம் போதும் எனும் திமிரில் சிலர். இவர்கள் சம்பாதித்தார்கள், பணத்தை மட்டுமல்ல, மக்களின் வெறுப்பையும்./////

Kumar said...

Super. Wonderful analysis of the problems in the medical world.

Please do write frequently.

விஜய் said...

நல்ல பதிவு, தவறு எல்லார் மீதும் உள்ளது. அது ஒரு Degenerative Cycle. உன்னால் நான், என்னால் நீ என்று சீரழிகிறோம், சுற்றிச் சுற்றிக் கீழே விழுகிறோம்.

தீர்வு காண வேண்டியவர்கள் தாம்தான் தீர்வு என்பதை உணர்ந்துகொள்ளும்வரை எல்லா அறிவாளிகளும் பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான், பொழுதேனும் போகும்!

Dr..ஜெயபிரகாஷ் said...

my view is - people dont need to give us unnecessary love or unnecessary hate... we doctors are also people not god... we try our best to save a patient... it may or may not succeed...but v r doing our best... i think so the problem arises bcos the communication between dr. and patient side is not very good... my opinion is before v do something v should try to explain to the patient side the risk and benfits of the procedure clearly without ambiguity... that would clear many problems.. now a days pts. are very intelligent in the sense that if we explain something they understand...

Anonymous said...

அன்பின் அய்யா -
இணையத்தில் உள்ளவர்கள் அறிவு ஜீவிகள் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். கிட்ட இருந்து பார்க்கும்போதுதான் அவர்களின் தரம் (இதை நான் பெரிதாகவே உச்சரிக்கிறேன்) என்ன என்று தெரியும்.

படித்த படிப்பு என்பது புத்தகப்படிப்பான பிறகு சொன்னதை எல்லாம் நம்பும் கைப்பிடிப் பிள்ளையாராக மாறிவிட்டனர். சன் டிவி சொல்றதை அப்படியே இவன் நம்பினால் எங்கே நோவது. அதிலும் விந்தை நாளைக்கு இன்னொரு டிவி வேற எதையாவது சொன்னால் முன்னர் நம்பிய சன்டிவியையே தூற்றுவான்.

படித்த பலருக்கும் அதற்குரிய பண்போ பொறுமையோ ஆறாயும் குணமோ பலரிடத்திலும் இல்லாதது கொடுமை.

கிட்டத்தட்ட டிவி சீரியல்களில் வரும் வசனங்களைப் போல தம் எதிராளியின் மனதை முடிந்த மட்டிலும் கீறி காயப்படுத்துவதே எந்த மெத்தப்படித்த மேதாவிகளின் குணம். இவர்களின் குணம் என்பதை அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு எதிர் மாறல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இந்தப் பிரச்சினை மட்டுமல்ல - கூடங்குளம் முல்லைப்பெரியாறு என்று இந்த மேதாவிகள் அடிக்கும் கொட்டத்திற்கு அளவே இல்லை.

நன்றி.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

அய்யா,
தவறுதல் இயல்பானது... ஆனால் அந்த தவறுதல் மற்றவர்களுக்கு மிக பெரிய இழப்பாக அமையும் பொழுது... விளைவுகள் மோசமானதாக இருக்கிறது.

2009... ல் மருத்துவதுறையில் குறிப்பாக மகப்பேறு மருத்துவதில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சேவை ஆற்றி வரும்... பட்டுக்கோட்டை மருத்துவர் ரத்தினம்பிள்ளை, ஒரு சிறிய தவறால் எனக்கு மிகபெரிய இழப்பை ஏற்படுத்த இருந்தார்.

2 வாரங்கள் காய்ச்சலால் என் துணைவி அவதிபட்டபொழுதும்... என் துணைவி நீங்கள் கொடுத்த மருந்து வேலை செய்யவில்லை என்று முறையிட்ட பொழுதும்... அலட்சியமாக உடனே சரியாவதற்கு எந்த மருத்தும் கண்டுபிடிக்கபடவில்லை என்று விடை பகரன்றுள்ளார்.

7 மாத கருவை சுமந்துக்கொண்டு.. இன்னும் ஒரு நாள் தாமத்திருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும் என்கிற நிலையில் இன்னொரு மருத்துவரை என் துணைவியின் அப்பா காண்பித்தபொழுது தான் Typhoid fever என்று கண்டறிப்பட்டது.

மருத்துவர் ரத்தினம்பிள்ளை சேவையாளர்.. நான் மதிப்பவர். பணத்திற்காக மருத்துவம் பார்ப்பவர் அல்ல. என்னுடைய குடும்பத்தில் எத்தனை பேருக்கு மிக சிறப்பான மகப்பேறு மருத்துவம் பார்த்துள்ளார்.

ஆனால் என் துணைவிக்கு ஏன் தவறான சிகிச்சை அளித்து... உயிராபத்து என்கிற நிலைக்கு கொண்டு சென்றார்?

என் துணைவி Typhoid fever க்கு சிகிச்சை அளிக்கபட்டதால் பலகீனமடைந்த காரணத்தால்... குழந்தையை 2 வாரங்களுக்கு முன்பே அறுவை சிகிச்சை மூலம் எடுக்க நேரிட்டது எதனால்?

இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல...
MIOT

Prof.Dr.P.V.A.Mohandas

அவர்கள் கிட்டதட்ட ரூ 40,000 ஆயிரம் செலவு செய்த பிறகும் என்னுடைய முதுகுவலிக்கான காரணத்தை சொல்லாமல் ஒரு வாரம் அலையவிட்டதன் மர்மமென்ன?

அதே முதுகுவலிக்கான காரணத்தை ஒரிரு நாட்களில் ஆயிஷா மருத்துவமனையில் டாக்டர் பால் அய்யா குட்டி அவர்கள்... சிகிச்சை அளிக்க முடிந்தது.

பின்னிமோசஸ் said...

ஐயா நான் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன் . சமூகத்தின் மீதான உங்கள் தார்மீக கோபம் முற்றிலும் உண்மையானது .மருத்துவரோ, நோயாளியோ , பிச்சைகாரனோ ,கொலை என்பது கொலை தான் . அதற்காக துறை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை.போலிகளின் மீதான மக்களின் மயக்கமே மருத்துவ துறையில் நோயை பரப்பியிருக்கிறது என்பது உண்மையே. ஆனாலும் , மருத்துவ துறையின் மீதான மக்களின் கோபமும் அதிகப்பட்டிருக்கிறது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியிருக்கிறது என்பதே எனது கருத்து . 'ஒரு உயிருக்காக பல நூறு உயிர்களை நாங்களும் வதைப்போம் ' , "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" தான் என்று மருத்துவர்கள் கீழிறங்கி விட்டார்களே என்பதே ஆதங்கம் .

அனுஷ்யா said...

ஐயா,
அறியாமையில் இருப்பவர்களுக்கு விளக்கினால் புரியலாம்..
ஆனால் அறிந்து கொண்டு வேண்டுமென்றே (காழ்புனற்சியாலோ/பொறாமையாலோ/இயலாமையாலோ ) வசைபாடுவர்களுக்கு நீங்கள் உங்கள் நேரங்களை செலவிட வேண்டாம் என்பது என் கருத்து..
உங்களின் சேவையை எதிர்பார்த்து காத்திருக்கும் அப்பாவிகளை மட்டும் கண்ணில் கொள்ளுங்கள்..இவர்கள் மல்லாக்க படுத்துக்கொண்டு துப்பிகொள்ளட்டும்..

ஊடகங்களினால் மக்களின் பார்வை சிதைக்கப் பட்டிருப்பதைதான் என்னுடைய தளத்தில் மூன்று நாட்களாக சொல்ல முயற்சிக்கிறேன்..
நண்பர்கள் இதனையும் வாசிக்கவும் எழுதக்கூடாத பதிவு....

மரு.அன்சாரி said...

வீட்டில் உள்ள குப்பைகளை தெருவில் தள்ளி விட்டு பின் அதை கடக்கும்போது மூக்கை பொத்திக்கொள்ளும் சமுதாயத்தில் வாழ்கிறோம்.மருத்துவர்களும் தண்டுவடம் உள்ளவர்கள்தான் என்பதை நிரூபிக்கத்தான் இந்த போராட்டம் உதவியதே தவிர,பொதுமக்களுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை குறைக்க அல்ல.மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது என்று எண்ணுவோமாயின்,.நாம் தான் திருந்தவேண்டும்.பொதுமக்கள் திருந்துவார்கள் என எதிர்பார்க்கக்கூடாது.

Indirajith marimuthuraja said...

மருத்துவர்கள் மனிதர்கள் தான் சாதாரண வேலையில். ஓர் உயிரை காக்கும் வேலையில் அவர்கள் கடவுளாக தோன்றும் உணர்வையும் மறுக்க முடியாது. தன் ஆசை மனைவி ஆறுமாத கர்ப்பிணி. சிகிச்சை செய்த மருத்துவரின் கவணக்குறைவினால் வயிற்றிலேயே குழந்தை இறந்து விட சிகிச்...சை அழிக்க மறுத்து அனுப்பும் போது வெளியே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவனின் ஆதரவு, பலம், பாசம், நேசம், உயிர், உண்ணத உறவு கண்முன்னால் தனி ஒரு மருத்துவரின் கவணக்குறைவால் இறக்கநேரிட்ட போது சாமானியனால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் போது ஒரு கொலைக்குற்றவாளியான அவனுக்கு இந்த கொலை வேறி தோன்றியதை மறுக்க முடியாது. லாரி டிரைவர் வேண்டும் என்று யார்மீதும் மோதுவது இல்லை. ஆனால் விபத்து நடந்த உடன் அந்த வாகன டிரைவரை பொதுமக்கள் தாக்குவதில்லையா. அதில் எத்தனை பேர் செத்துஇருக்கிறார்கள் தெரியுமா? அந்த செய்தி வெளியில் தெரிவதில்லை காரணம் அவன் ஏழ்மையான படிக்காதவன், இவர்கள் படித்த, பணக்காரர்கள். கோப உணர்வு நாம் இழப்பை சந்திக்கும் போது மட்டுமே உணர முடிகிற ஓர் உணர்வு சார் அது. படித்தவன், படிக்காதவன், ஏழை பணக்காரன் என அந்த நேரத்தில் பார்ப்பதில்லை.

m.thatchinamurthy said...

before i read this message
iam also having angry . after read this it will change my view in thiis matter

தணல் said...

My other comments have not been released! What happened?

தணல் said...

One reply for Mr. Pari Arasu.

Medicine is not mathematics. It does not have fixed rules to follow as well. To some extent it is education driven, and to some extent, it is based on the experience and judgement of the doctor.

The judgement can go wrong at times even if the doctor is very intelligent and well experienced as in your case. They follow certain protocols to avoid such mishappening, but it would still happen. In such cases, a team of experts with knowledge in the field and concern for the common man should analyze the situation and decide rather than the common man himself.

Siva's said...

மருத்துவர்களின் கோபம் "மென் பொறியாளர்களின்" மீதே அதிகம் தெரிகிறது .....
நோயுடன் வரும் நோயாளிக்கும் அவருடன் வரும் அவரின் அட்டேண்டரிடமும் நோயின் தன்மை பற்றி விளக்க வேண்டிய பொறுப்பு மருத்துவருக்கு இல்லையா ? அதை பெரும்பான்மையான மருத்துவர்கள் செய்வதில்லையே ? நோயின் தன்மை அல்லது அதை பற்றி எதாவது சந்தேகம் கேட்டால் ....."நான் டாக்டரா, நீ டாக்டரா ?" என கேட்க்கிறார் . படித்தவர்கள் ஏதேனும் கேட்டால் கூட அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுகிறார்கள் என மருத்துவர் கூறுகிறார் ,முழுமையாக தெரிந்து கொண்டிருந்தால் நாங்களும் மருத்துவர் ஆகியிருப்போமே ......ஏன் நோயாளிக்கு புரியும் படி நோயின் தன்மை , அதை சரி செய்வதற்கான வழிகள் ,போன்ற விஷயங்களை சொல்லலாமே .....?

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் பொறுமையாக நோயாளியிடம் பேசி நோயின் தன்மை பற்றி தெரிந்து கொள்வார் .....ஆனால் இப்போது மருத்துவர் பேசும் நேரமே குறைவு .....cctv camera வில் வெளியில் அமர்ந்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை பார்த்து விரைவில் அனுப்பிவிடுகிறார் . சில மருத்துவர்கள் சில படி மேலே சென்று , நோயாளிகளிடம் சிடு சிடு என விழுகின்றனர் ....இதனாலேயே பலர் சொல்லவேண்டிய நோயின் தன்மையே மறந்து விடுகின்றனர் .

ஜோதிஜி said...

உங்களுக்கு இந்த சிவப்பு நிறம் ஏதோவொரு காரணத்திற்காக பிடித்து இருக்கும் போல. ஆனால் தரவிறக்கம் ஆக மிகுந்த நேரம் பிடிக்கின்றது.

ஒரு மருத்துவராக இருந்து கொண்டு நீங்கள் எழுதிய விசயங்கள் பொறுமையின் இலக்கணமாக இருக்கிறது.

ஆனால் இது பற்றி எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது.

என்னைச்சுற்றிலும் உள்ள அனுப்வங்களை மட்டும் பேச விரும்புகின்றேன்.

குழந்தைகள் பிறந்து இங்கு வந்தது முதல் அவர்களுக்காக உருப்படியான மருத்துவரை அடையாளம் காண்பது என்பது ஏறக்குறைய ஒரு போராட்டம் போலத்தான் இருந்தது. நான் இங்கு சந்தித்த பத்து பேர்களில் இரண்டு மருத்துவர்கள் தான் மருத்துவ தொழிலில் கடைபிடிக்க வேண்டிய தார்மீக கடமைகளை செய்து கொண்டு இருக்காங்க. ஆனால் அவர்களுக்கு கூட்டம் அதிகம் இல்லை. மற்ற எட்டு பேர்களும் முடிந்தவரைக்கும் அடிச்சுக்கோ, புடுங்கிக்கோ என்கிற ரீதியில் ஒரு கேவலமாகத்தான் இந்த மருத்துவ சேவை ஒரு தொழில் போலத்தான் செய்து கொண்டு இருக்காங்க. ஆனால் அவர்களிடம் வந்து வந்து போய்க் கொண்டு இருக்கும் கூட்டம்.

அதுவும் எப்போதும் நிரந்தரம் இல்லை. நிசசயம் அவர்களிடம் தரமும் இல்லை.

பத்துக்கு பத்து அறையில் இருந்த எனக்குத் தெரிந்த மூன்று மருத்துவர்கள் அவர்கள் இன்று கட்டியுள்ள மருத்துவமனையின் மதிப்பு ஏற்ககுறைய பத்து கோடி. ஏறக்குறைய பத்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி. குறிப்பிட்ட சிலருக்கு அவர்களின் ஒத்துழைப்பு எப்போதும் போலவே இருக்கிறது.

ஆனால் புதிததாக வந்து கொண்டு இருப்பவர்களிடம் அவர்களின் நடவடிக்கை ரொம்பவே வித்தியாசம். இன்று சராசரியாக 30 ரூபாய் வசூலித்தவர்கள் 100 ரூபாய்க்கு குறைந்து வாங்குவது இல்லை. பணம் பராவயில்லை. ஆனால் எழுதிக் கொணடுக்கும் அந்த மாத்திரைக்ள் அவர்கள் மருத்துமனையில் மட்டும் தான் கிடைக்கிறது.

பெரிய கடைகளில் போய்க் கேட்டால் அதன் டூபாக்கூர் விசயங்கள் போய் உடைத்து பதறடித்து விடுகிறார்கள்.

படிப்படியாக குழந்தைகளுக்கான மருத்துவர்களை பத்தாண்டுகளில் மாற்றி மாற்றி உருப்படியான ஆட்களை கண்டு பிடிக்க முடியாமல், அவர்கள் கொடுக்கும் ஓவர் டோஸ் மாத்திரைகள் அடுத்தடுத்த புதுப் பிரச்சனைகள் உருவாவதைக் கண்டு மனம் பேதலித்தது தான் மிச்சம். ஒன்றுக்கு மற்றொன்று. அதுக்கு இன்னோன்று. நிசசயம். சர்வ நிச்சயமாக சொல்ல முடியும். கல்வியைப் போல இன்று மருத்துவம் ஒரு தொழில் மட்டுமே.

அது சேவையாக பார்க்கக்கூடியவர்கள் வெகு வெகு சொற்பமே.

கல்வி வியாபாரம் ஆகும் போது சமூகத்தில் அதிக மனப்பிறழ்வுகள் கொண்டு மனித சமூகத்தை உருவாக்குகிறது.

மருத்துவம் வியாபாரமாக மாற இங்கே மின் மயானம் நிரம்பி வழிகின்றது. இந்த இடத்தில் மற்றொன்றையும் சொல்லி விடுகின்றேன். மற்ற துறைகளில் இந்த அதிக ஆசைகள் இல்லையா என்று கேட்கலாம். ஆனால் மருத்துவம் என்பது ஒரு மாதிரி அடைக்கலம் கேட்டு வருதல் போல. அங்கேயே இத்தனை அக்கிரமம் என்றதும் பலரும் பொங்க முடியாமல் இந்த மருத்துவர் இற்ந்ததில் ரொம்பவே பொங்கி விட்டார்கள்.

சிறு வயது முதல் நான் கவனித்துக் கொண்டு இருக்கும் அரசாங்க பொது மருத்துவமனையில் கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் நான் பார்த்த பல மருத்துவர்கள் என்ன நிலையில் கடைசி காலத்தில் வாழ்வார்கள் என்பதை ஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு வருகின்றேன். நான் பார்த்த வரைக்கும் பலரின் சொந்த வாழ்க்கை அத்தனை மோசமாக இருக்கிறது.

ஆனால் எவரும் எதைப்பார்த்தும் திருந்த தயாராக இல்லை என்பதோடு திருந்த விடவும் நுகர்வ கலாச்சாரம் விடாது போலிருக்கு.

மணி said...

கீழ்மையை காண விரும்பாமலிருப்பது அவரவர் விருப்பம். சகோதரனின் கண் தூசியை விட நம் கண்ணில் உள்ள உத்திரம் சிறியதாவது அறிவியல்தானோ ? அடுத்து, மாற்றத்தை திணிக்க முடியாது எனும்போது இல்லாத கீழ்மையையும் திணித்து பார்க்க முடியாதுதானே

eniasang said...

நல்ல நேர்மையான மருத்துவர்களை இனம் காட்ட வேண்டும்.பகட்டையும் தந்திரங்களையும் நம்பும் ந்ம் மனோபாவம் மாறனும்.நல்லவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதிற்கு மேல் முத்லில் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

Jagan Gajendran said...

Hi Sir..
Here you are saying.. During the doctors strike also operations and pregnancy cases are handled(In Tamilnadu). And How do you see the doctors strike that happened in Rajasthan recently, where several people have died because of their strike?

And i would also like to clarify on the candle light protests to support Anna Hazare..
People gather in large groups for such protests to show that they are tired and frustrated by giving bribes. 'Anna Hazare' is just a representative of the people's anger. He can or cannot change the country is apart. But he has pressurized the government to make them focus on this even more.
Jagan

srinivasan said...

dear doctor,
well said. all the profession has lost its dignity and they are not duty bound. yarum kadamaiai seivathilai kadamayennu ( kadanennu) seikirarkal.
nandriyudan,
srinivasan,
pudukkottai

SeiouslySportive said...

There is always a demand for honest, kind and responsible experts in all fields. But we, the parents always teach our children how to earn more and forget to tell them how it is important to be good to the society if we want to receive the good from the society. Some teachers dont teach the regular syllabus and they teach nothing. They are engaged in the real estate business. Other teachers see teaching as a light work profession and they have already paid the principal for which they receive the interest as salary. Only 20 percent care the syllabus but they take too much time for making the students score high. They take the time allotted for value education classes. I dont hear from my young friends that their teachers speak of morality, social responsibility, kindness, etc.

Not only teachers, the most of the society is not bothered about giving the good to the society but they demand the good from it. Funny.

elakku said...

there were many instances where patien(ce)ts died because of doctors ignorance.Has any association of doctors or a single person of that group reacted to such instance?But atlast.....when common man rebel for their right they are offended by doc.assn.Looks funny

Layman9788212602 said...

Dear Rudhran,

There is no doubt that the act of murdering a Doctor should be condemned, whatever the reasons may me. We never know what happened actually between the persons involved.

But Doctors going on strike to show the protest is not dignified. They could have worn black batches continuously for a week to show their protest and yet continue to perform their duty.

This kind of incident occurs very rarely. One murder does not mean that follow up murders will take place. It is a very unfortunate incidence.

Neglecting the duty and going on strike is least expected from the persons doing the most respected profession. Unlike other professions, this neglectfulness of duty may cost life.

This act of Doctors cannot be justified even if you try to do so

Anonymous said...

சார், தேவையான பதிவு.மருத்துவர் கொல்லப்பட்டது வருத்தற்குரியது.கொன்றவனின் அக உணர்வும்,பாதிக்க பட்டோரின் நீதிக்கான எழுச்சியும் ஒன்றல்ல.இரண்டும் வெவ்வேறானவை.

Post a Comment