Thursday, February 25, 2010

வருத்தம் தரும் கேள்வி


தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் ஒன்றா?
மனிதன் சமுதாயத்தின் ஒரு பகுதியா விகுதியா? ஒழுக்கம் என்பது சத்தியமா சம்பிரதாயமா? நியாயம் என்பதற்கு வெவ்வேறு அளவுகோல்கள் சாத்தியமா?
பல கேள்விகள் என்னுள் எழுகின்றன, காரணத்தோடு.
வரதராஜன் இறந்ததைவிடவும், அவருக்கு மரணம் நிகழ்ந்த விதம்தான் வருத்தம் தருகிறது. சமுதாய நோக்கில் உயர்நிலை வகித்த தோழமை உணர்வுள்ள ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்வு விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளாவது எப்படி? இதன் நியாயம் என்ன?
தனிமனிதனின் உணர்வுகளும் வாழ்க்கைமுறைகளும், சமுதாயத்தின் வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்றால் தனித்தன்மை என்பது என்ன?
திருமணம் என்பது சமுதாய அங்கீகாரம் பெற்ற ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தில் இருவர், வாழ்வின் இன்பதுன்பங்களைப் பகிர்ந்து, பொறுப்புணர்வோடும் நேர்மையோடும் தங்கள் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பொறுப்பணர்வுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பல நேரங்களில் நேர்மைக்குக் கொடுக்கப்படுவதில்லை. இதனால்தான், பொறுப்பாய்த் தம் குடும்பத்தாருக்குச் சௌகரியங்களைச் செய்துவிட்டு, சுயசுகத்திற்காகப் பிற வழிகளில் மனத்தை அலைய விடுவது நடக்கிறது. இது சரியா, தர்மமா, நியாயமா என்பதெல்லாம் பாதிக்கப்படாதவரை எழும்பாத கேள்விகள். இது தனிமனிதனின் உரிமையா? இதில் சமூகம் தலையிடலாமா?
சமுதாயம் என்பது என்ன? யார் அந்த நாலு பேர்? உறவினரா, உற்றாரா, ஊரில் பழக்கமானவர்களா, உழைக்கும் தளத்தில் உடன் இருப்பவர்களா? காணாதும் வாழ்வில் அறியாதும் சுற்றி இருக்கும் அநாமதேயங்களா? யார்தான் அந்த முக்கியமான நாலு பேர்? அவர்கள் சொல்படித்தான் நடக்கிறோமா அல்லது அவர்கள் ஏதும் சொல்லிவிடக்கூடாதே என்று நடந்துகொள்கிறோமா?
வரதராஜனுக்கு வேறு உறவு இருந்ததா என்பதைவிடவும் முக்கியம் வேறு குறைகள் இருந்தனவா என்பதே. குற்றம் சாட்டியவர்களே கூட அப்படி குறை சொல்லாதபோதுதான் என்னுள் கேள்வி எழுகிறது. மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் மனைவியை மட்டும் ஏமாற்றக்கூடாது என்பது தான் முக்கியமோ?

23 comments:

Anandi said...

present dr.

Deepa said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதுவும் ஒரு கம்யூனிஸ்டாகத் தனக்குத் தற்கொலையில் நம்பிக்கை இல்லையென்றாலும், மயிர் நீப்பின் வாழாக் கவரிமானை உவமை கொண்டு அவர் எழுதியிருக்கும் கடைசிவரிகள் மிகவும் பாதிக்கின்றன.அநியாய‌மான‌ சோக‌ம்.

//மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் மனைவியை மட்டும் ஏமாற்றக்கூடாது என்பது தான் முக்கியமோ? //
இந்த வரிகளில் சற்றே உடன்பாடில்லை எனக்கு. இவ்விரண்டையும் ஒப்பீடு செய்வது நியாயமாகப் படவில்லை. எந்த விஷய்த்தில் யார் தலையிடலாம், எவ்வளவு தூரம்நடவடிக்கை எடுக்கலாம் என்பது தான் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.
மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஒருவரின் த‌னிம‌னித‌ வாழ்க்கையில் சமூகம் அத்துமீறிக் கை வைக்கும் போது இழப்பு சமூகத்துக்குத் தான் என்பது இங்கே நிதர்சனமாகி விட்டது. ஆம், அவரது முடிவின் இழுக்கு அவருடையது அல்ல.

ஆர்வா said...

யோசிக்க வைத்த பதிவு

ஈரோடு கதிர் said...

//அவர்கள் ஏதும் சொல்லிவிடக்கூடாதே என்று நடந்துகொள்கிறோமா?//

அவர்கள் ஏதும் சொல்லிவிடக்கூடாதே என்று நடிக்கிறோமா? என்றும் கூட எடுத்துக்கொள்ளலாம்

Anonymous said...

Dr

Why dont you attempt answers to the questions yourself? And then, ask the readers their opinions on your answers?

சந்தனமுல்லை said...

மிகுந்த வருத்தமாயிருக்கிறது.

/அவர்கள் சொல்படித்தான் நடக்கிறோமா அல்லது அவர்கள் ஏதும் சொல்லிவிடக்கூடாதே என்று நடந்துகொள்கிறோமா/

இந்தக் கேள்வி மிக முக்கியமானதாக படுகிறது.

கடைசி கேள்வி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

Dr.Rudhran said...

யாருடன் சேர்வது என்று அவ்வப்போது மாற்றிப்பேசுவதும், யாருடன் வாழ்வது என்பதும் வேறா?

Radhakrishnan said...

தனிமனித ஒழுக்க மீறல்கள், சமுதாயத்தினைப் பாதிக்காதவரை பிரச்சினை இல்லை. ஒவ்வொரு தனிமனித ஒழுக்கமும் சமுதாயத்தின் அந்த தனிமனிதருக்கு இருக்கும் மரியாதையைப் பொருத்தும், அதே வேளையில் அந்த தனிமனிதரிடம் அன்பு பாராட்டும் மக்களைப் பொருத்தும் அமைகிறது. தவறு செய்து கொண்டிருப்பவரிடம், இது தவறு என பலர் விமர்சிக்காதவரை அந்த தனிமனித ஒழுக்கம் பெரிய விசயமில்லை. மனைவியை ஏமாற்றுவது என்பதோ, பிறரை ஏமாற்றுவது என்பதோ பெரிய பிழை இல்லை, தன்னைத் தானே ஏமாற்றி வாழும் மனிதர்களின் செயல்களே மிகவும் கொடுமையானவை, இங்கே தோழர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டார். அவ்வளவே!

Radhakrishnan said...

//யாருடன் சேர்வது என்று அவ்வப்போது மாற்றிப்பேசுவதும், யாருடன் வாழ்வது என்பதும் வேறா?//

ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப மனிதர்களின் மனம் ஒரு நிலையற்ற முடிவை எடுக்கும் தன்மையுடையது எனபதை தாங்கள் அறிந்ததுதான் மருத்துவரே.

எனவே இரண்டுமே வெவ்வேறாகத்தான் இருக்கிறது, சேர்வது என்பது எப்பொழுது வேண்டுமெனினும் பிரிந்து கொள்வது என பொருள் படும், வாழ்வது என்பதைக் கொண்டால் சாவது என்றுதான் முடியும். இங்கே பிரிந்தவர் மீண்டும் இணையலாம், ஆனால் இறந்தவர் மீண்டும் வாழ்வது சாத்தியமாகாது.

புருனோ Bruno said...

இந்த சம்பவம் குறித்த வரும் தகவல்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன

Dr.Rudhran said...

http://mediapaarvai.wordpress.com/
இதையும் படித்துப் பார்க்க வேண்டும்.

Anonymous said...

தனிமனித ஒழுக்கம் என்பது நிலவும் சமூகத்தின் ஒழுக்கத்தை சார்ந்துதான் தன்னை நிர்ணயித்துக் கொள்கிறது. அச்சமூகத்தில் தனது பாத்திரமும் தனிப்பட்ட நபருக்கு அதன் தன்மை ம்ற்றும் அளவை தீர்மானிக்கிறது. மனிதர்களில் பெரும்பான்மையினர் பகுதிகளாகவும் சிலர் விகுதிகளாகவும் உள்ளனர். சிலரோ தாம் ஏற்ற பாத்திரத்திற்காக அதன் முன்னணி பாத்திரத்தை ஆற்ற வேண்டியும் இருக்கிறது. ஒழுக்கம் என்பது தனித்து இயங்குவது அல்ல• சார்புநிலைப் பண்பு அது எனக் கருதுகிறேன். நியாயத்திற்கான அளவுகோல்கள் ஒவ்வோரு சமூகத்திற்கும், ஒவ்வொரு காலத்திற்கும், ஒவ்வொரு சபைக்கும் தன்னை மாற்றிக் கொண்டுதான் தன்னை சார்புடையவனாக மாற்றிக் கொள்கிறது.

தற்கொலை முடிவு பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். நானும் அவரது தனிப்பட்ட வாழ்வை விமர்சனத்திற்கு உட்படுத்துவது தவறு இல்லை என்றுதான் நினைக்கிறேன். விமர்சனம் செய்தவர்களின் சரி மற்றும் தவறான அணுகுமுறை பற்றி இப்போது பேசுதற்கு எதுவும் இல்லை ஆதலால் சரி என வைத்து மட்டும் பேசுவதானால் தனிப்பட்ட மனிதர்கள் சமூக மாற்றம் குறித்த பொது மனித வரையறைக்குள் வரும் அனைவரும் இப்படி சுயவிமர்சனம் செய்யத்தான் வேண்டும். மாறாக தற்கொலை என்பது உண்மையில் கோழைத்தனம்தான். மாறாக தனித்தன்மையை இதில் தேடுவது எப்படி சரியானது எனத் தெரியவில்லை. ஒருவேளை தனித்தன்மை என்பது தனிப்பட்ட தவறுகள் காணப்படக்கூடாது என அர்த்தப்படுத்தப்படுகிறதோ எனத் தெரியவில்லை. தனிமனித உணர்வுகளும், வாழ்க்கைமுறையும் மற்றவர்களை அல்லது சமூகத்தை துன்புறுத்தாத வரையில் அவற்றை நியாயப்படுத்தலாம். ஆனால் நியாயப்படுத்தல் கூட சரி எனச் சொல்ல முடியாத ஒன்றைத்தானே அப்படி செய்வோம்.

விதிகளின் மீது எனக்கு நம்பிக்கை அவ்வளவு இல்லை. ஆனால் நேர்மை, பொறுப்புணர்ச்சி பற்றி சொல்ல முடியும். நேர்மை மாத்திரம் முக்கியம் என்று சொல்பவர்கள் அறிவுஜீவிகளாகவோ, தரமான வேலைக்கார்ர்களாகவோ மாறுவது நடக்கிறது. பொறுப்புணர்ச்சி மாத்திரம் இருப்பவர்கள் அதிகார வர்க்கமாக மாறுகின்றனர், மேனேஷராக மாறுகின்ற்னர். இரண்டும் சேர்ந்து இருப்பவர்கள் தவிர்க்க இயலாமால் கம்யூனிசத்தை நோக்கி வருகின்றனர். இதில் ஒரு கம்யூனிஸ்டு ஒன்றில் தவறினால் கூட அதனை வெறுமனே தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுக்கி விட முடியாது. தலையிடாத சமுதாயம் விளங்குவதற்கு வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன். பாதிப்பு இருந்தால் மாத்திரமே தவறுகளை பரிசீலிக்க வேண்டும் என்பது நேர்மையானவர்களால் சிந்திக்க முடியாத ஒன்று.

நாலு பேர்தான் சமுதாயம் என்றும் அவர்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றார்கள் என்பதும் பேசுவதற்காக பேசியது போல தெரிகின்றது. மற்றபடி பொருளற்றது என நினைக்கிறேன்.

-mani

rfrost said...

this is Tiring.

Thenammai Lakshmanan said...

//வரதராஜனுக்கு வேறு உறவு இருந்ததா என்பதைவிடவும் முக்கியம் வேறு குறைகள் இருந்தனவா //

என்ன சொல்வது என்று தெரியவில்லை டாக்டர்... அவருடைய செருப்புக்களில் நின்று பார்த்தால்தான் உண்மை தெரியும்

யாசவி said...

//வரதராஜனுக்கு வேறு உறவு இருந்ததா என்பதைவிடவும் முக்கியம் வேறு குறைகள் இருந்தனவா என்பதே. குற்றம் சாட்டியவர்களே கூட அப்படி குறை சொல்லாதபோதுதான் என்னுள் கேள்வி எழுகிறது. மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் மனைவியை மட்டும் ஏமாற்றக்கூடாது என்பது தான் முக்கியமோ?//

these words are for what?
Would like to do character postmortem?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கடைசிக் கேள்விக்கான பதில் - ஐடியல்லி.. இருவரையுமே ஏமாற்றக்கூடாது :) மனைவியை ஏமாற்றினவர் மக்களையும் ஏமாற்றியிருப்பார் என்கிற மாதிரியான extended impression அப்படிப்பட்டவர்களின் மீது உருவாகும்..

மீதிக்கட்டுரை.. அந்தச் செய்தியைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்த பின்பு மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.

Murali said...

சமுதாய ஒழுக்கம் என்பது சாதாரண மக்களுக்கே. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றே என்ன தோன்றுகிறது. இவர் விஷயத்தில் குடும்பத்திலும் அரசியல் நுழைந்திருந்தது. அந்த நாலு பேர் அங்கீகரித்தால், எதுவும் தவறில்லை, சட்டத்தின் பார்வைக்கு கூட வருவதில்லை. இவர் விசயத்தில், அந்த நாலு பேர் இணக்கமாக இல்லை என்றே தெரிகிறது.

விழிப்புணர்வின் உச்சத்தை தொட்ட கிருஷ்ணமுர்த்தி மீது வைக்கப்பட்ட குற்றசாட்டு, அவர் தனது நண்பனின் மனைவியுடன் உறவு வைத்திருந்தார் என்பது.

"ஒழுக்கம் என்பது சத்தியமா சம்பிரதாயமா? நியாயம் என்பதற்கு வெவ்வேறு அளவுகோல்கள் சாத்தியமா?" டாக்டர், இந்த கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

சவுக்கு said...

உங்களில் எவன் பாவஞ்செய்யாதவனோ அவன் இவள் மீது முதல் கல்லெறியட்டும் என்ற பைபிள் வாசகத்தை, மார்க்சிஸ்ட்டுகள் வசதியாக ஒதுக்கி விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

Just happened to read an article about him. Feeling very bad abt his death :(

Anonymous said...

மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் மனைவியை மட்டும் ஏமாற்றக்கூடாது என்பது தான் முக்கியமோ.

Integrity cannot be divided into integrity in public and integrity in private.In his case there was a complaint against him - sexual harassment.The party might have handled this in a better way.But
how can anyone argue that whatever does in private relationships should not be questioned. According to Supreme Court guidelines all organizations have to have a committee to inquire into sexual harassment.Gnani had written that he had weakness that led to his downfall even as he found fault with the party.I think the punishment might have been less severe but to treat him above law is not acceptable.

KarthigaVasudevan said...

தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கம் இப்படி எல்லாம் ஆராயும் முன்பாகவே செய்தி அறிந்ததும் மிக்க வருத்தம் தந்த விடயம் வரதராஜனின் தற்கொலை,அவர் தற்கொலை செய்து கொண்டது எந்த விதத்திலும் ஜீரணித்துக் கொள்ளக் கூடியதல்ல,எதற்கிப்படி ஒரு முடிவெடுக்க வேண்டும்? தனி மனித ஒழுக்கம் சார்ந்த சர்ச்சைகள் மரணத்தில் முற்றுப் பெரும் என நம்புவோமாயின் தற்கொலை செய்து கொள்ளாவிடினும் அவ்விசயம் சில காலத்தில் நீர்த்துப் போகும் எனவும் நம்பியிருக்க வேண்டும்,தற்கொலைக்கு அவரது மனப்போராட்டமே காரணம்.ரொம்பவும் சில விசயங்களை குழப்பிக் கொள்ளக் கூடாதோ!

ஸ்டாலின் குரு said...

யோசிக்க வைத்த பதிவு

Anonymous said...

Dr Rudhran did not put in his reply to his own questions as I asked for.

My comments:

According to religion, a moral life is both individual and societal. When there is a conflict between the two, the former overrides the latter; but the individual generally prefers to override the former with the latter. Only saints never care for the latter at all.

Someone wrote here that politicians have dual personalities safely kept apart from each other, thereby their private lives, if immoral, are taken for granted; and do not interefere with their public lives. Thus, we grant polygamy, or concubinage, to our politicians: MuKa has/had three wives; MGR had mistresses; Jeyalalitha lived with and left men before attaching herself to her mentor MGR. They win elections, become CMs and we dont bother about their private sexual conduct.

WRV should have taken to such a political party where he could have enjoyed himself with such dual personalities, unquestioned and unscathed.

Instead, he joined a party which, as I see it, does not allow such a personality.

Still, he stuck to it; as he was fired by public-spirited enthusiasm to serve the meek and week of society, thorough communist political philosphy.

So inextricably stuck he was that his life with the party became paramount importance to him; at the same time, he could not let go his private amors.

When divested of everything in the party, or shunted out of it, he thought he was reduced to a zero; a persona non grata; and life for him was not worth living for.

To compare him to politicians of other parties is inappropriate. He hadm't died as his infidelity came to be revealed but as he was sent out of the party and he couldn't think of a life without that party.

Karath said he was given ample hearing before any action; but the deceased could not prove his innoncence.

A very interesting black tragedy for a Shakespearean play.

Jo Amalan Rayen Fernando

Post a Comment