Tuesday, November 17, 2009

ஏதோ ஒரு காரணத்திற்காக‌

சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌.....
உங்கள் அன்பிற்கும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி என்னும் சாதாரண வார்த்தையைமட்டுமே கற்றுவைத்திருக்கிறேன்.

மீண்டும் எழுத மட்டுமல்ல மீண்டுமீண்டும் எழுதவே ஆவல்;
எழுதுகோல் இருந்தாலென்ன, எழுத்தல்லவா வேண்டும்!
எழுத என்ன தடை? படிக்க, படைத்த கண்களையுமீறி இன்னும் அன்புடன் சிலகண்கள் இருந்தும், எழுத என்ன தடை?

கர்வத்தை கூட தக்கவைத்துக்கொள்ள காரியங்கள் தேவை. பின்னால் எழுதலாம், அப்போதும் படிக்க எல்லாரும் காத்திருப்பார்கள் என்ற நிலை அன்று கம்பனுக்கோ இன்று ஜெயகாந்தனுக்கோ கூட இல்லை எனும்போது நிச்சயம் எழுதாமல் இருந்தது திமிரினால் இல்லை. எழுதவேண்டிய எல்லாவற்றையும் எழுதிமுடித்துவிட்டதாக ஓர் இறுமாப்பும் இல்லை.

மொழியற்ற மெளனம் சாத்தியமா என்று தெரியவில்லை; அதன் அருகே வரக்கூடியது மனச்சோர்வின் வெறுமை.
கடவுள் என்னும் கம்பீரக்குரல் செவிடர்களுக்கு மட்டுமே கேட்கட்டும்,(Anne Sexton எழுதியது போல‌) எனக்கு என்னவோ மானுட மொழியின் சப்தம் தேவைப்படுகிறது- எந்தமொழியாக இருந்தாலும்...சப்தமாக மட்டுமே இருந்தாலும்.

இருத்தலின் இயலாமை ஒரு தத்துவ விசாரணையாக இருந்தாலும், அது எல்லோர்க்கும் அவ்வப்போது அனுபவமாகவும் இருந்துவந்திருக்கிறது. அது மெளனத்தின் இடைவெளிகளை உற்றுப்பார்க்க வைக்கும் ஒரு மனநிலை. அதில் மெளனம், ஒரு பிரத்யேக பிரக்ஞை.
ஒரு அசாத்தியமான அசதி மெதுவாக மேலே படரும்போது, வலியும் சுகமாவதுபோல் மெத்தனமும் இயக்கமாகிவிடுகிறது.

சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌

14 comments:

வால்பையன் said...

//மொழியற்ற மெளனம் சாத்தியமா என்று தெரியவில்லை//

குழப்பமில்லாத மனம் சாத்தியமான்னு எனக்கு நானே கேள்வி கேட்டுகிட்டு உட்கார்ந்திருக்கிறேன்!

வால்பையன் said...

நீங்க எழுதி பழுகுறிங்க!

நாங்க வாசிச்சு பழகுறோம்!

அப்ப நாங்களும் மன்னிப்பு கேக்கனுமா சார்!?

Dr.Rudhran said...

ஓர் அவசியம் கருதியே மீன்டும் எழுதவும், கணிணியில் தட்டவும் பழகுகிறேன்.
குழப்புவதல்ல என் நோக்கம்..குழப்பத்தின் தேக்கத்திலிருந்து மீள்வதே

Dr.Rudhran said...

vaalpaiyan, sorry if i sound odd

வால்பையன் said...

//vaalpaiyan, sorry if i sound odd //


வம்பு பின்னூட்டங்களாலே பிரபலமான வால்பையன்னு எழுதாளர் பா.ரா பட்டம் கொடுத்துருக்காரு!

அதை மறக்காம ரெண்டு பின்னூட்டம் போட்டா சீரியஸ் ஆகிட்டிங்களே சார்!

நான் என்றுமே உங்களுக்கு ரசிகன் தான்!

kalagam said...

மருத்துவர்,
உங்களுடைய எழுத்துக்கள் எப்போதும் மிக சிறப்பானவை

கலகம்

அன்புடன் அருணா said...

/ஒரு அசாத்தியமான அசதி மெதுவாக மேலே படரும்போது, வலியும் சுகமாவதுபோல் மெத்தனமும் இயக்கமாகிவிடுகிறது./
100% உண்மை....அநேக நேரஙகளில் உணர்ந்திருக்கிறேன்!

Dr.Rudhran said...
This comment has been removed by the author.
Dr.Rudhran said...

dear kalagam, it is better that i am called rudhran than doctor!...further explanations of this redundancy are there in vinavu.com

eniasang said...

எனக்கும் மானுட மொழி ,குழப்பாமல் சமூக ப்ரக்ஞையுடன் உண்மையான அக்கறையுடன் உங்களை போல் பொட்டிலடித்து மனதில் பட்டதை சொல்ல கேட்கதான் ஆசை. கடவுள் எனக்கு எட்டாக்கனியாகவே உள்ளார்.அவரிடம் நெருங்கி விட்டதாக நினைப்பு வேறு.ஆனாலும் பிரச்சனை எனின் அவரை ஒதுக்கி விடுவதே உத்தமம் என வாழ்க்கை கற்றுக் கொடுத்துள்ளது.

Deepa said...

//ஒரு அசாத்தியமான அசதி மெதுவாக மேலே படரும்போது, வலியும் சுகமாவதுபோல் மெத்தனமும் இயக்கமாகிவிடுகிறது.//

:-)

ருத்ரன் ஸார், தயவு செய்து இயன்ற போதெல்லாம் எழுதுங்கள். இது எங்கள் அன்பு கோரிக்கை.

Rajeswari said...

நல்ல வார்த்தை பிரயோகங்கள். ரசித்தேன்..

மனிதன் said...

Last week your appearence on Vijay T.V.is good.I am happy when you warn a Dream seller!!for cheating public by his Cable T.V.Show.We expect lot more from you.You can do microblogging through twitter.com.So your message &views can spread very fastly.

Sai Ram said...

இருத்தலின் இயலாமை மறக்க, ச்சும்மா எதாவது செய்து அந்த சும்மாவையே சீரியஸாய் பிடித்தலையும் உலகில், ச்ச்ம்மா எழுத பழகுவது எவ்வளவோ தேவலை.

Post a Comment