Thursday, October 6, 2011

சும்மா நூறு வார்த்தைகள்..



ஏதுமிலா வெறுமையின் பின், வெறுமையின் வெற்றிடங்கள் அறிமுகமானபின், கோர்த்த வார்த்தைகள் சிதறியபின், படித்தவையும் அனுபவித்தவையும் முரண்மீறி ஒன்றானபின்..முன்னிகழ்வுக்கும் பின்விளைவுக்கும் இடையே ZEN என்று எதை வேண்டுமானாலும் எழுத (தானே தனக்குத் தந்துகொண்ட சலுகையில்) தோன்றியது- zen என்பது, என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்பதல்ல, எழுதுவதில் எல்லாமும் அடங்க ஆரம்பித்து, எழுதுவதும் அடங்குவதே.

சூன்யத்தின் ப்ரம்மாண்டத்தில் தொலைவதல்ல சூட்சுமம், ஐக்கியமாவதே சூட்சுமம். இதற்கென சூத்திரங்களோ சாத்திரங்களோ இல்லை, இருக்காது..இது கண நேர வாழ்வு.

இது குறித்து வாதம் வீம்பு, விவாதம் கல்வி, மௌனம் புரிதல். இதன் மௌனம் நிர்ப்பந்தம் அல்ல, இயல்பான நிகழ்வு. இது மொழிகளுக்கப்பால் என்றாலும் வார்த்தைகள் மொழி சார்ந்தவை என்பதால்-
No leaves swerve
No dust rises
Looking through the glass doors of the closed windows
The still warmth of succinct existence
Switches on its own breeze to
Sustain existence


12 comments:

SURYAJEEVA said...

நீங்கள் கூறுவதின் அர்த்தம் புரியும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை... ஆனா எழுதுவதில் தான் வாழ்க்கை இருக்கிறது என்று சொல்வதாக படுகிறது

M. Md. Hushain said...

உன்னதமான அற்புத மனநிலையில் தற்போது இருப்பது மட்டும் புரிகிறது. இதற்கு மேல் புரிவது (உணர்வது) என்பது, அந்த நிலையை அடைந்தால் மட்டும் சாத்தியம். சாத்தியப்படும் என்பது நம்பிக்கை, வாழ்க்கை.

TVN said...

Wonderful writings Sir..Very learning for the learned too. Your every word by word tells story of a human being should be and surpass your intention to mold the society with determination and committed thinking in the right path. thank you, Sir.

TVN said...

Wonderful Sir.. your every letter form a word that tells about stories from a very learning to a learned population. It should reach millions to know about the values of human being and the self analysis are much important than anything to imagine, or write. Very useful content for the universe. Thanks and regards.

சித்திரவீதிக்காரன் said...

மதுரை புத்தகத்திருவிழாவில் தான் தாங்கள் எழுதிய ஜென் குறித்த 'தேடாதே' எனும் நூலும், 'உயிர்' எனும் நூலும் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். உயிர் நூலில் தாங்கள் வரைந்துள்ள பாரதி படங்கள் அருமை. தியானம் கொள்கிற பாரதி, ரௌத்திரம் கொள்கிற பாரதி என ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. நன்றி.

Anandi said...

உங்க பேரு எழுதி இருக்கிற விதம் அழகாயிருக்கு டாக்டர். :)

Anonymous said...

plz add a search bar...i want to search essay titles quickly...

விஜி செந்தில் said...

அந்த ஓவியத்தில் இருந்த உருவத்தை முதலில் ரசித்த நான், அதில் தங்கள் பெயர் (Beautiful Typography) இருப்பதை (இவற்றில் இருப்பது எது? ஒளிந்திருப்பது எது?) உணர்ந்த பின், அந்த உருவங்களை மீண்டும் கண்ணுற இயல்வது சிரமமாய் இருந்தது.

விஜி செந்தில் said...

நூறு என்று விட்டு நூற்றிமூன்று வார்த்தைகள் இருக்கிறதே!! :)

lakshmi said...

excellent collection thanks for posting...


Hindi, English, Telugu, Tamil Sex Stories googlika

kevin said...

நான் தங்களை பாராட்ட போவதில்லை,முகத்தில் தெரியும் முதுமை வயதை காட்டாது அனுபவத்தைமட்டும் காட்டும்.ஆனால் தங்களிடம் அதையும் மீறி வேறு ஏதோ தெரிகிறது.

Unknown said...

R Dr உங்கள் பெயர் போலவே உங்கள் எழுத்தும் ருத்ர தாண்டவம் ஆடுகிறது.

Post a Comment