Tuesday, June 1, 2010

நடுநிலை நாடகம்

நடக்கும் போது நாராசமாக ஒன்று எதிர்பட்டால் காறித்துப்பும்போது முகம் வலமோ இடமோ திரும்பித்தான் ஆக வேண்டும். நடுநிலையே என் பார்வை என்று நேராகப்பார்த்துக்கொண்டு நடக்கும்போதே துப்பினால் நம் மீதே தான் விழும்.

நடுநிலை சாத்தியமா? அப்படி இருப்பதாய் சொல்லிக்கொள்வது சௌகரியம். பிறரிடம் சொல்வதை விடவும் நம்மிடமே சொல்லிக்கொள்வது நிறைய நிஜங்களின் வீச்சுக்களிடமிருந்து ஒரு தற்காப்பு.
 
பெண்டுலம் வினாடிக்கொருமுறை மாறி ஆடுவதுபோல் மனம் நிமிடத்துக்கொருமுறை கூட மாறுவதில்லை, மனம் தன் நிலையின் மாறுபாட்டை ஏற்க வாரங்களும் ஆண்டுகளும் கூட ஆகலாம். ஆனால் நடுநிலை என்று நிற்கவிரும்பும் மனது நின்று போன பெண்டுலத்தின் குறியீடு போல உணர்வுமறுத்த சடலம் இல்லையா? நடுவில் தான் நிற்பேன் என்று அடம் பிடிக்கும் தராசு முள்ளை வைத்து எடை போட முடியாது இல்லையா? நடுவில் நிற்க முடியும், எவ்வளவு காலம்? நேர்குத்தி-நிற்கும் பார்வையால் எவ்வளவு பயன்?

பார்வை நடுநிலையாகாது,ஒன்றின் மீது மட்டுமே நுணுக்கமாக இருந்தாலும் முழுமையாகாது. எதிர்வரும் பன்றியை மட்டும் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் துரத்தி வரும் புலி கண்ணுக்குப் படுமா?

எப்போதும் எல்லா பக்கமும், எதிர்படுவதின் பின்புலமும் பார்ப்பதே நியாயநிலை. நான் எப்போதுமே எல்லாவற்றையும் சமமாகவே பார்ப்பேன் என்று ஏமாற்றுவதும் ஏமாற்றிக்கொள்வதும் நடுநிலை எனும் நாடகக்கலை.

என்ன எழுத வந்து என்ன எழுதுகிறேன்? எனக்கே வெட்கமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது!

என்னை opinionated என்று எனக்கு நெருக்கமானவர்களே சலித்துக் கொள்ளுமளவு அவர்கள் மீது விமர்சனவிவாதம் செய்யும் நான் இப்போது இங்கே ஏன் தயங்கித்தயங்கிச் சுற்றிச்சுற்றி வந்து சொல்ல வந்ததை விட்டுவிட்டு என்னென்னவோ சொல்கிறேன்? பயமா? அப்படியென்றால் என்ன பயம்? என் பிராபல்யம் பறிபோய் விடுமா? ஏன் பின்தொடர்வோர் என்னைப் புறக்கணிப்பார்களா? இல்லை எந்தக் கண்களின் கவனிப்பும் இல்லாமல் நான் சூம்பிப்போய் விடுவேனா? இதற்கெல்லாம் இதுவரை அக்கறை காட்டாமல் இருந்துவிட்ட நான் இப்போது மாறிவிட்டேனா?

இரண்டு நாட்களுக்கு முன் இதை நான் எழுத உட்கார்ந்திருந்தால் துப்பியிருப்பேன், ஆனால் என் எச்சில் கேவலத்தைத் தாக்காமல் வேறு எங்காவது விழுந்திருக்கும். இப்போது குறி பார்த்துச் சரியாகத் துப்பவேண்டும் என்பதால் நிதானமாகவே குறி வைக்கிறேன்.

என்ன நடக்கிறது இங்கே?

வெளியே நிஜ உலகில் நம் அவசரத்திலும் அலைச்சலிலும் கவனிக்க முடியாமல் கலைந்து போகும் தருணங்களின் பதிவுகள் தான் இங்கே நிதான பரிசீலனைக்குக் கிடக்கின்றன. வலையின் மெய்நிகர், நிஜம் போல நொடியில் காணாது போய், நினைவுகளாக பேதங்களை உள்ளடக்கி மனக்கண் முன் வருவதில்லை. இங்கே நிஜங்கள் பதிவுகளாக, நாம் மறைக்க நினைத்தாலும் முடியாதவைகளாகக் கிடக்கின்றன. ஆசுவாசத்திற்கப்புறமான மீள்பார்வைக்குக் காத்திருக்கின்றன.

இன்னும் ஒரு மாதம் கழித்து பலருக்கு இது ஞாபகத்தில்கூட இருக்காது. சம்பந்தப்படாத சூழல் மறதியில் புதையுண்டுதான் போகும். நாம் சம்பந்தப்படாத சூழல் என்று ஏதாவது எப்போதாவது எங்காவது இருக்கிறதா?


அவள் கத்தியை எடுத்தாள்- அவன் தன் கத்தியை எடுத்தான்- அவளை ஆழமாகக் குத்தினான்- அவளது குடல் வெளிவந்தது- அதை உள்ளே வைத்துத் தைத்துவிட்டால் அவள் சாக மாட்டாள்- அதனாலேயே அவர்கள் இருவரையும் கைக்குலுக்கச் சொல்வோம்! இதுதான் இன்றைய வலையுலகில் நான் பார்க்கும் நடுநிலைவாதம்!


ஒரு காட்சியா முழு நாடகம்?

நேரடியாகவே சொல்கிறேன். முல்லை-நரசிம் விஷயத்தில், எனக்கு முல்லையின் பாலினமோ பிறப்பினமோ முக்கியம் இல்லை. வன்மம் தான் முக்கியம். வக்கிரத்தின் வெளிப்பாடுதான் முக்கியம். எல்லார்க்குள்ளும் வக்ரம் இருக்கிறது என்று வெங்காயத்தை உரித்துக் கொண்டிருக்காமல் எனக்கு ஆத்திரம் வருவதன் காரணம்- இங்கே உள்ளிருக்கும் ‘மிருகம்’ வெளிவராமல் இருப்பதே மானுடப்பண்பு, அது இங்கே மீறப் பட்டிருக்கிறது. பண்பு மீறும்போதும் பழக்கதோஷம் நடுநிலை இருப்பதாய்ச் சொல்லச் சொன்னால்? பழகியதின் சந்தர்ப்பவாதம் அல்லவா வெளிப்படுகிறது? இதை இன்னும் சுருக்கமாகவும் சுருக்கென்றும் சொன்னதால்தானே அவள் மீது வன்மம் வெறி கொண்டு வெளிப்படுகிறது?

நடுநிலை நாடகம்தான். சில நடிகர்களுக்கு அது ஆன்மதிருப்தி, சிலருக்கு அது நேரடி பயன்!வால்பிடித்துக் கொண்டு போவது சுலப சுகம்தான், முன்னே செல்வது பாதையில் ஒழுங்காய்ப் போகும்வரை. நண்பர்களுக்காக வக்காலத்து வாங்கலாம் அவர்களுக்கு நட்பின் தகுதி இருக்கும்வரை. தகுதியற்றவர்களின் நட்புக்காக நடுநிலை நாடகம் நடித்தால், நாளை திரை விழும் போது, பார்த்துக்கொண்டிருக்கும் போலிநிஜங்களும் காறி உமிழும்.

நிஜம் நடுவில் நிற்காது. நியாயம் ஒரு பக்கம்தான் சாயும் தராசு.

48 comments:

  1. சிறப்பான இடுகை டாக்டர்... அதற்குள் ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருப்பதே இதற்கு சான்று

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  2. சரியான பார்வை.

    எதிர்வினை என்ற பெயரில் தன் வக்கிரத்தை வெளிபடுத்துவது மனநோயின் வெளிப்பாடே.

    நன்றி,
    சங்கரன்.

    ReplyDelete
  3. //அவள் கத்தியை எடுத்தாள்- அவன் தன் கத்தியை எடுத்தான்- அவளை ஆழமாகக் குத்தினான்//

    டாக்டர்,

    மேலே உள்ள வரிகள் இப்படி இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்....அதாவது!

    ”அவள் கத்தியை எடுத்தாள்- அவனை கீறினாள், கீறிக் கொண்டேயிருந்தாள்... அவன் தன் கத்தியை எடுத்தான்- அவளை ஆழமாகக் குத்தினான்”

    இவர்களின் பிரச்சினையை மறந்து விட்டு இந்த வரிகளை உளவியலாய் எவ்வாறு அணுக விரும்புவீர்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  4. குறைவான வார்த்தைகளில் தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

    புரியவேண்டியவர்களுக்கு புரிந்து, அவர்கள் தவறை அவர்கள் உணர்ந்தால் சரி.

    ReplyDelete
  5. டவுசர், கீறுவதும் குத்திக் குடலை எடுப்பது ஒன்றுதான் என்று சொல்வதுதான் நடுநிலை.

    ReplyDelete
  6. அவள் கத்தியை எடுத்தாள்- அவனை கீறினாள், கீறிக் கொண்டேயிருந்தாள்... அவன் தன் கத்தியை எடுத்தான்- அவளை ஆழமாகக் குத்தினான்.எல்லோரும் சொன்னார்கள் அவன் இவ்வளவு நாளாக ரொம்ப நல்லவன் என்று.ஆகவே அவனை மன்னித்து.அவளை மறக்குமாறு கட்டாயப்படுத்தி..நாங்களும் மறந்துபோனோம்.


    டவுசர். இப்படி எழுதலாமா ?

    ReplyDelete
  7. வெட்கம், மானம் ஏதுமில்லை இன்னும் கூட கத்தியை சுழற்றி கொண்டிருக்கிறார்கள், கழுத்தில் கத்தியை வைத்து எனக்கு ஆத்ரவு தெரிவி என்பார்கள் போலிருக்கிறது. புதியாதாக நாட்டமைகள் வேறு.இவர்களை விட ஆபத்தானவர்கள் நடுநிலமை, நட்பு பருப்பு, ஜாதி துவேஷம் என்று வேஷ்ம் போட்டுக்கொண்டு அமைதியாக இருப்பவர்கள் நினைத்தால் அருவெருப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  8. ஒட்டகங்கள் வேகமாகக் கூட ஓட முடியாத ஜந்துக்கள், ஓநாய்கள் அப்படியல்ல!

    ReplyDelete
  9. ரவி!

    இங்கே நான் நிகழ்வினை மட்டுமே விவரித்திருக்கிறேன், அதன் விளைவுகளையோ தீர்ப்புகளையோ விவாதிக்க வில்லை. சாதீயம்,ஆனாதிக்கம் மாதிரியானவைகளையும் விமர்சிக்கவும் இல்லை.

    எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா சுட்டுக் கொண்ட பிரச்சினையில், திரு.எம்.ஆர்.ராதா சொன்ன பிரபல வாசகம் “சுட்டான்...சுட்டேன்” என்பதுதான்.ஆனால் அது நீதிமன்றத்தில் எடுபடவில்லை.

    காயமடைந்த எம்.ஜி.ஆர் நல்லவராகவும், ராதா குற்றவாளியாகிப் போனார்கள்.உண்மையில் என்ன நடந்தது என்ன என்பது நமக்குத் தெரியாது.

    இங்கே அப்படியில்லை, ஆதாரங்கள் இரண்டு பக்கமும் எஞ்சியிருக்கின்றன.பகடி செய்தவர் பெண் என்பதாலும், எதிர் வினையாற்றியவன் ஆண் என்கிற அடிப்படையில் மட்டுமே பிரச்சினை எதிர் கொள்ளப் படுகிறது.

    அந்த பெண்மணி எம்.ஜி.ஆராகவே இருந்துவிட்டு போகட்டும்,நர்சிம்மை தூக்கிப் போட்டு மிதித்து விடலாம்..எல்லாம் சரியாகி விடும்.ஏனெனில் நம் கலாச்சாரம் மிக முக்கியம்.

    ReplyDelete
  10. Sir,
    It is my view Narsim, Gorky and Leena should be legally challenged for publishing some of the Blogs, which carried objectionable items..

    I would encourgage Sandan Mullai and others to get some legal help too..

    Some of the items clearly looks like breaching Indian Information Technology act 2000, chapter 11-67
    http://bit.ly/bH54iD

    (67. Publishing of information which is obscene in electronic form. - Whoever publishes or transmits or causes to be published in the electronic form, any material which is lascivious or appeal to the prurient interest or if its effect is such as to tend to deprave and corrupt persons who are likely, having regard to all relevant circumstances, to read, see or hear the matter contained or embodied in it, shall be punished on first conviction with imprisonment of either description for a term which may extend to five years and with fine which may extend to one lakh rupees and in the event of a second or subsequent conviction with imprisonment of either description for a term which may extend to ten years and also with fine which may extend to two lakh rupees)

    However in Narsim/Gorky's instance , there is also breach of criminal laws , possibly..
    Section 500 - 507
    http://bit.ly/b1vDnm

    The public good that may come out of such action is to set some standards in publishing and also highlighting the prevalence of such atrocious acts to the legal systems..

    Thanks

    ReplyDelete
  11. லீனா கூட்ட அடிதடி விசயத்தில் நடுவில்தான் வைத்துக் கொண்டிருந்த்தாக நினைவு .

    நாட்டாமை வந்துட்டாருய்யா ...

    ReplyDelete
  12. Roadla ponalum naduvila pona accident than agum,left or right la poye theeranum.

    Hi.,hi unga pathivu nadunilaiya irukku :)

    "lipstick" wins!
    (sathyameva jayathe!)

    ReplyDelete
  13. பொறுக்கித்தனத்தைப் பண்புடன் எதிர்கொள்ளும் பண்பு சந்தர்ப்பவாதமா இல்லை சாதீயமா?

    ReplyDelete
  14. @டவுசர் பாண்டி,
    இருவரும் ஆண் என்றோ இருவரும் பெண் என்றோ வைத்துக் கொள்வோம். பின்னூட்டத்தில் செய்த கேலிபேச்சும், புனைவில் இருந்த வக்கிரமும் ஒன்றுக்கு ஒன்று சரியாகி விட்டது என்கிறீர்களா? அது எப்படி ஒரு வருடத்திற்கு முன் ஃபோனில் நண்பருடம் பகிர்ந்து கொண்ட புனைவு "last straw on the camel's back"காக இந்த வருடம் ஆனது என்றும் யாராவது சொல்லிவிட்டுப் போங்களேன்...

    ReplyDelete
  15. //there is this link which says these creatures had planned a similar post a year back, when there was 'allegedly' no alleged provocation//

    Which creatures are you talking about?Camel or Wolf or both?

    ReplyDelete
  16. @உமா அவர்களே!

    கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்பதுதான் சரியான எதிர்வினை என்பதாகவே நாம் பழகி போய்விட்டோம்.இங்கே கண்ணுக்காக உயிரை எப்படி எடுக்கலாம் என்பதுதான் இப்போதைய தர்க்கம்.

    அப்படி செய்தது அநியாயம் அதில் மாற்றுக் கருத்தெல்லாம் இல்லை.
    ஆனால்,இதை ஆரம்பித்தவர்களையும், தொடர்ச்சியாக அதை ஊதி ஊதி பெரிதாக்கியவர்களையும் வசதியாக இன்றைக்கு மறந்து போய் விட்டோம்.

    குற்றம் செய்தவனை விட அவனை தூண்டியவன்...கீழானவன்,இதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

    தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும், அது யாராக இருந்தாலும் சரி!,ஒருவர் அடைந்திருக்கிறார், இன்னொருவர் தண்டனைக்காக காத்திருக்கிறார்.

    கடந்த வருடம் சொல்லிய புனைவு இன்றைக்கு பதிவேறுவதன் அரசியல் எனக்கும்தான் பிடிபடவில்லை.

    ReplyDelete
  17. @ maruthu,
    it is not a link and therefore i have removed my statement, but it is a fact and i shall present the same with more technical support.
    and stop your shameless anonymity when you attempt to communicate with me. i know your back.

    ReplyDelete
  18. டொக்டர் , சிறுநீர் , நாய் , மூத்திர சந்து என்று நீங்கள் போட்ட அரிவுசீவி பின்னூட்டத்தை ஏன் டாக்டர் எடுத்துட்டீங்க ?

    உங்க உள்ளொளி எல்லாருக்கும் புலப்பட்டுடும்ன்னு பயமா ?

    ReplyDelete
  19. if we give punishment (if Tamilmaanm & Tamilish will stop publishing Narsim's post), do you think Narsim and same attitude people's (male sovenist or female sovenists or future bloggers') attitude will change.

    Do you encourage changes/corrections only through punishments.

    or Do you encourage changes through love and negotiations.

    ReplyDelete
  20. //and stop your shameless anonymity when you attempt to communicate with me. i know your back.//

    Why do you use abusive words when a simple clarification was sought?you did not answer the question any way.
    By the way what is your obsession with "back"?How long you have been having that obsession?

    ReplyDelete
  21. இதை விட தெளிவாக சொல்ல முடியாது டாகடர்,சம்ப்பந்தப்பட்டவர்கள் இந்த இடுகையை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

    ReplyDelete
  22. நாய்களின் சிறுநீரைவிடவும் நரிகளின் தந்திரம் தான் விவாதப் பொருள் என்றுதான் என் பின்னூட்டத்தை நீக்கினேன், அதை நாய்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தால் எதிர்கொள்வேன்.

    ReplyDelete
  23. மருது உன் நாகரீகம் நிஜமா நாடகமா? பாவம் போல பேசும் உன் புத்தியைத் தெரிந்துதான் எழுதினேன். முகத்தோடு அல்லது முகவரியோடு வா.

    ReplyDelete
  24. puறம்போக்குகளுக்கு ஏது பட்டா?

    ReplyDelete
  25. //பெண்டுலம் வினாடிக்கொருமுறை மாறி ஆடுவதுபோல் மனம் நிமிடத்துக்கொருமுறை கூட மாறுவதில்லை, மனம் தன் நிலையின் மாறுபாட்டை ஏற்க வாரங்களும் ஆண்டுகளும் கூட ஆகலாம். ஆனால் நடுநிலை என்று நிற்கவிரும்பும் மனது நின்று போன பெண்டுலத்தின் குறியீடு போல உணர்வுமறுத்த சடலம் இல்லையா?//

    அப்படியே உண்மை! நடுநிலை - அப்படி ஒன்றே எல்லா விசயங்களிலும் இருக்கிறதா என்று தெளிவாக அறிந்து கொள்ளக் கூட மனதிற்கு பல காலம் பிடிக்கிறது. அப்படி அறிந்து கொண்டாலும் நீட்சியாக பல விசயங்கள் அங்கே மன ஆழத்தில் ஒளிந்தே கிடக்கிறது.

    ReplyDelete
  26. சிறப்பான இடுகை .....இங்கே நடுநிலை என்பது .....குற்றம் சாட்டப்படவனுக்கு .........ஆதரவாய் இருக்கிறது என்பதே உண்மை ....நன்றி டாக்டர்

    ReplyDelete
  27. நல்ல பொருத்தம்...உங்களுக்கும், முதல் பின்னூட்டமிட்டவருக்கும்

    ReplyDelete
  28. தெரிந்தே தவறுபவர்கள் திருந்துவார்களா?, நீங்கள் ஏன் இவ்வளவு கோபம் கொள்கிறீர்கள் Dr., சில காலம் முன்பே நான் சொல்லி இருந்ததை போல அடிக்கடி அதிக கோபம் கொள்கிரீர்கள். உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
  29. முகவரியும் முகமும் உள்ளதாலேயே மணிஜீயும் கிருபாவும் இங்கே!
    இதைவிட மேட்டிமைத்தனத்துடன் மேதாவிலாசம் காட்டும் பலரின் கீழ்மைகள் மட்டறுக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete
  30. //முகவரியும் முகமும் உள்ளதாலேயே மணிஜீயும் கிருபாவும் இங்கே!
    இதைவிட மேட்டிமைத்தனத்துடன் மேதாவிலாசம் காட்டும் பலரின் கீழ்மைகள் மட்டறுக்கப்பட்டுள்ளன.//

    நீங்கள் போற்றிப்பாடும் வினவில் பின்னூட்டமிடும் - அல்லது அனவரையும் ஏசும்-எவருக்கும் முகமோ , பெயரோ கூட இல்லையே டொக்டர் ?

    உங்க பதிவுக்கு ஏன் இப்படி முகம் தேவையாயிருக்கிறது ?

    ReplyDelete
  31. என் இடம் எனக்கேற்ப, எனக்குப் பிடித்த இடங்கள் எனக்கேற்ப இருக்க வேண்டியதில்லை. என் வீடு சிகரெட் புகைக்கலாம், எவர் வீட்டிலும் புகைப்பேன் என்று நான் சொல்வதை விட புகைக்க வெளியே செல்வேன் என்பதே இதற்கு பதில்.

    என் பதிவில் கூடவா இந்த வழக்கமான திடை திருப்பும் யுத்தி? உங்களிடம் எனக்கு ஏதாவது பிடிக்கிறதேன்றாள் அது இந்த விடா முயற்சிதான்.

    ReplyDelete
  32. ***நேரடியாகவே சொல்கிறேன். முல்லை-நரசிம் விஷயத்தில், எனக்கு முல்லையின் பாலினமோ பிறப்பினமோ முக்கியம் இல்லை. வன்மம் தான் முக்கியம். வக்கிரத்தின் வெளிப்பாடுதான் முக்கியம். எல்லார்க்குள்ளும் வக்ரம் இருக்கிறது என்று வெங்காயத்தை உரித்துக் கொண்டிருக்காமல் எனக்கு ஆத்திரம் வருவதன் காரணம்- இங்கே உள்ளிருக்கும் ‘மிருகம்’ வெளிவராமல் இருப்பதே மானுடப்பண்பு, அது இங்கே மீறப் பட்டிருக்கிறது. பண்பு மீறும்போதும் பழக்கதோஷம் நடுநிலை இருப்பதாய்ச் சொல்லச் சொன்னால்? பழகியதின் சந்தர்ப்பவாதம் அல்லவா வெளிப்படுகிறது? இதை இன்னும் சுருக்கமாகவும் சுருக்கென்றும் சொன்னதால்தானே அவள் மீது வன்மம் வெறி கொண்டு வெளிப்படுகிறது?

    நடுநிலை நாடகம்தான். சில நடிகர்களுக்கு அது ஆன்மதிருப்தி, சிலருக்கு அது நேரடி பயன்!வால்பிடித்துக் கொண்டு போவது சுலப சுகம்தான், ***

    So, in dead man walking, the "religious woman" tries to feel sorry for the animal who raped innocent girl.

    Is that drama too?

    There are people those who want tp be there for people who really need support without expecting anything from them or not?

    I dont think everything is just drama! But you can say that and nobody can disprove your theory!

    ReplyDelete
  33. நல்ல நடுநிலைவாதம் வருண்

    ReplyDelete
  34. .

    நண்பர்களை பொதுவில் விமர்சிப்பதில்லை என்று நீங்கள் சொல்வது ஏன் ருத்ரன்?
    http://rudhrantamil.blogspot.com/2010/01/blog-post_18.html

    நட்பு என்னும் வெங்காயத்தை உரித்துக் கொண்டு இருக்காமல் வர்ண ஆதரவு பார்ப்பனீயம் குறித்தான ஜெயகாந்தனின் கருத்துக்களை விமர்சிக்கலாமே தராசை நியாயத்தின் பக்கம் சாயவிட்டு?


    மேலே உள்ள பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியுள்ள இன்னொன்று

    //லீனா எனக்கு நேரிடயாகப் பரிச்சயமில்லாத ஒரு பெண்.
    அவருக்காக வாக்களது வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. //

    ஏன் இப்படி ?

    பாலியல் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கி வன்மம் காட்டும் யாரையும் நாம் அறியவரும் பட்சத்தில் கண்டிக்கலாம். தெரிந்தவர் தெரியாதவர் என்று ஏன் பாகுபாடு?

    கீழே உள்ளது உங்களின் வரிகளே ருத்ரன்.

    // வால்பிடித்துக் கொண்டு போவது சுலப சுகம்தான், முன்னே செல்வது பாதையில் ஒழுங்காய்ப் போகும்வரை. நண்பர்களுக்காக வக்காலத்து வாங்கலாம் அவர்களுக்கு நட்பின் தகுதி இருக்கும்வரை. தகுதியற்றவர்களின் நட்புக்காக நடுநிலை நாடகம் நடித்தால், நாளை திரை விழும் போது, பார்த்துக்கொண்டிருக்கும் போலிநிஜங்களும் காறி உமிழும்.//

    "திரை விழுந்தாலும் நேரில் பேசும் போது அவர்களிடம் கேட்பேன் , பொதுவில் விமர்சனம் செய்யமாட்டேன்.".... என்பது உங்களின் கொள்கைதானே. அதேபோல்தான் இன்றும் பலரும் இந்த விசயத்தில் இப்படி உள்ளார்கள்.

    :-((


    தகவலுக்கு:
    http://naayakan.blogspot.com/2010/06/blog-post.html?showComment=1275400391794#c940374865213932382

    ReplyDelete
  35. கேட்டேன் என்று சொல்லட்ட்டும், பொய்யானாலும் ஏற்கிறேன்.

    ReplyDelete
  36. இன்னும் ஒரு மாதம் கழித்து பலருக்கு இது ஞாபகத்தில்கூட இருக்காது. சம்பந்தப்படாத சூழல் மறதியில் புதையுண்டுதான் போகும்.

    இது தான் முற்றிலும் உண்மை. மனவிகாரத்தின் வெளிப்பாடு களைப்பற்றி இத்துணை பொறுமையாக எழுதியுள்ள துறை சார்ந்த பொருத்தமான உங்களுக்கு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  37. அண்டை ஒரு நாடார் கடையில் நான் சரக்கு வாங்கும்போது நிறுத்துப் போட்டவன் ஒரு சிறுவன். துலாமுள் நடுநிலைக்கு வரும் முன்னரரே தட்டிப் பொட்டலம் கட்டினான். அது முறைதானா என்று அவனைக் கேட்டேன். அவன், "முள்ளு ஆடத் தொடங்கிற்றுல்லா அப்பச் சரிதான்," என்றான். கணிதத்தில், tends to என்று படித்தது நினைவுக்கு வந்தது. முறைதான் என்று பொட்டலத்தைப் பெற்றுக்கொண்டேன்.

    ஆம், எதுவும் absolute-ஆக இருக்கமுடியாது; relative-ஆகத்தான் இருக்கிறது.

    சிரிக்கும்போது கூட நேருக்குநேர் சிரிக்கிறதில்லை. வெட்கச் சிரிப்புக்குக் கோணல் உண்டு.

    //காறித்துப்பும்போது முகம் வலமோ இடமோ திரும்பித்தான் ஆக வேண்டும்//

    ஆனால் உண்மையைச் சொல்லும்போது நேருக்கு நேர் நின்றா அல்லது இட வலம் சாய்வோமா? உடல்மொழி இயற்கை தெளிந்துகொள்ள ஆசை.

    ReplyDelete
  38. மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  39. உங்களின் வழக்கமான ஸ்டைலோடு சரியாக வந்திருக்கும்.. சிறந்த இடுகை டாக்டர்.

    ReplyDelete
  40. அறச்சீற்றம் என்கிற சொல்லும் - இழப்பினூடாக அதற்கான செயலும், கேலிப்பொருளாகிற இடமிது.

    இருப்பினும் சிறிதோ பெரிதோ.எல்லா இசங்களிலும்,மதங்களிலும் தர்மம் ஈடு இணையற்றது.

    நன்றி.வாழ்த்துக்கள் டாக்டர்.

    ReplyDelete
  41. சந்தனமுல்லை 'ப்ப்ப்..பூ'வை பள்ளிக்குஅனுப்பச் சென்றுவிட்டார்..நர்சிம் தன் அசிங்கப்பதிவையும் நீக்கிவிட்டு மன்னிப்பும் கோரி நிற்கிறார்.
    பெண்ணை இறக்கிவிட்ட ஜென் குருவின் சீடர்களைப் போல நாம் இன்னும் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்...எதற்கு,,,?

    ReplyDelete
  42. நர்சிம்-முல்லை விசயத்தில்... நடுநிலை நாடகத்தை நடத்தி கொண்டிருப்பவர்களுக்கு புரியும்படி எழுதியிருக்கிறீர்கள். இதற்கு பிறகும், நல்ல்வர்கள் போல... நடுநிலை பேசுகிறவர்களை என்ன செய்யலாம்?

    ReplyDelete
  43. அன்பின் மருத்துவர் ருத்ரன் அவர்களே. முதலில் நர்சிமின் புனைவுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் கொண்டாடும் தங்களை கொண்டாடும் வினவு தளத்தை சக பதிவர் சுகுணா துவைத்து காயப்போட்டு இருக்கிறார். அடுத்தவர் எழுதியதை தன்னுடைய பெயரில் வெளியிட்டு அடுத்தவர் ஜட்டிக்கு பின் ஒளிந்து இருக்கும் வினவின் உளவியல் பற்றி தாங்கள் சார்ந்துள்ள துறை ரீதியான விளக்கம் சொல்ல வேண்டும். தாங்கள் அடிக்கடி பாவிக்கும் குயூக்தி என்னும் சொல்லாடல் வினவுக்கு பொருந்துமா? அறியத்தாருங்களேன்!!!

    ReplyDelete
  44. எப்படியோ வினவை கைகாட்டி... குரூரமாக வன்மத்துடன்... பூக்காரியை விபசாரி என எழுதிய ஆதிக்க வெறி ஆதரிப்பவர்கள் எல்லாம்...

    நான் எந்த பிரச்சனைக்கு செல்ல விரும்பவில்லை...

    விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை இழிவுபடுத்திய ஆதிக்க வெறியை... ஆதரிப்பதை விட... கேடு கெட்ட செயல் எதுவும் இருக்க முடியாது...

    மருத்துவருக்கு என்ன சப்பை கட்டு பதில் சொன்னாலும்... ஆதிக்க வெறியர் குரூரம் மாற போவதில்லை...

    ReplyDelete
  45. உண்மைத்தமிழன் & அங்கே கும்மியடிப்போரின் கவனத்திற்கு

    மொக்கைமார்களே !!!

    மீண்டும் நாங்கள் சொல்லிக்கொள்கிறோம், நீங்கள் தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே வதைத்துக்கொள்ளுங்கள் யாரும் கேட்க வில்லை, மற்றவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களோடு தோள் கொடுக்காமல் எங்களால் இருக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மனிதர்கள், சொரணையுள்ளவர்கள். அப்புறம் இன்னொரு கும்மி சொல்கிறார் ” இப்படி திட்டுகிறீர்களே நர்சிம் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு? ” இந்த பூச்சாண்டியெல்லாம் சொரணையற்றவர்களின் கண்களில்தான் கண்ணீரை வரவழைக்கும்.

    நர்சீமின் யோக்கியதையை ஏன் அவரின் தெருக்களுக்கு கொண்டு செல்லக்கூடாது? இது லீனாவுக்கும் பொருந்தும். உன் கருத்து சரி என்று தானே சொல்கிறாய் மக்கள் மன்றத்தில் உரத்து முழங்கு உன் கருத்துக்களை, எமக்கும் மக்களுக்கும் இடைவெளி எப்போதும் இருந்ததில்லை, இவர்களைப்போல் அங்கு ஒரு பேச்சு இங்கு ஒரு பேச்சு என்று மொள்ளமாறித்தனம் எங்களால் செய்ய இயலாது. ஆணாதிக்கவாதிகளை தனிமைப்படுத்துவது மட்டும் போதாது, அவர்களை அடித்து விரட்டுவோம். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வினவுக்கு தோள் கொடுப்போம்.

    http://kalagam.wordpress.com/

    ReplyDelete
  46. http://www.facebook.com/l.php?u=http%253A%252F%252Fbit.ly%252F9XuTaj&h=1d099&ref=nf

    http://www.facebook.com/l.php?u=http%253A%252F%252Fwww.cbsnews.com%252Fvideo%252Fwatch%252F%253Fid%253D6146214n&h=1d099&ref=nf

    ReplyDelete
  47. //நடக்கும் போது நாராசமாக ஒன்று எதிர்பட்டால் காறித்துப்பும்போது முகம் வலமோ இடமோ திரும்பித்தான் ஆக வேண்டும். நடுநிலையே என் பார்வை என்று நேராகப்பார்த்துக்கொண்டு நடக்கும்போதே துப்பினால் நம் மீதே தான் விழும்.// அருமை. தொடர்க.

    ReplyDelete