கேலியாகவும் கோபமாகவும் பிறரை நாய் என்று சொல்வது வழக்கில் உண்டு. ‘நான் நாய் மாதிரி நடந்துக்கிட்டேன்’ என்றும் சிலநேரங்களில் சிலர் தம்மையே நொந்து விமர்சித்துக் கொள்வதும் உண்டு. இங்கே ஒரு ஜன்மம் நாயைச் சுட்டால் தன்னைச் சுட்டதாகப் புலம்பியிருக்கிறது. இது ஒன்றும் வள்ளலார் போல வாடிய பயிருக்கெல்லாம் வாடும் ஜன்மம் இல்லை, இது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளம்பரம் தேடும் ஒரு ஜந்து.
பொதுவாகவே சாமியார்களென்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஆட்களின் மீது எனக்கு மரியாதை கிடையாது. இதில் இந்து முஸ்லிம் என்று மத பேதம் எல்லாம் கிடையாது. அது என்ன இந்து பொறுக்கிகளின் மீதே அதிக காட்டம் என்றால், இவை தான் இங்கே அதிகம் ஆடுகின்றன. இவற்றுக்குத்தான் நடுநிலை/ நடுத்தர/ ‘அறிவுஜீவி’- ஆதரவும் அதிகம். சமீபத்தில் நாறிய நித்யானந்தனையே இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கல்கி மீது அதன் பக்தர்களுக்கே இப்போதெல்லாம் உள்ளூர ஒரு கிலேசம் வந்திருக்க வேண்டும். ஆனால் ஜக்கியும் சிரிசிரியும் இன்னும் ரொம்பவே அமர்க்களமாகத்தான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ‘ஏன் அமிர்தாம்மாவை விட்டு விட்டாய் பெண் என்பதாலா?’ என்று ஏதாவது ஒரு புறம்போக்கு கேள்வி வரும். அமிர்தாவும் சாயியும் பேசித் தொலைப்பதில்லை அதனால் அங்கே மூட பக்தி மட்டுமே. ஜ-சிரி கூட்டம்தான் இன்னும் ‘அறிவார்த்தமாக, ஆன்மார்த்தமாக’ என்றெல்லாம் கதை சொல்லி, கதை கேட்டுத் திரிகின்றன.
சாயிவும் அமிர்தம்மாவும் அறிவாளிகள் என்று அவற்றின் பக்தர்கள் கூடச் சொல்வதில்லை. அவர்களது மௌனத்தில் ஞானப்புண்ணாக்கு எல்லாம் கிடையாது, அவற்றுக்குப் பேசத் தெரியாது, பேசவும் வராது. ஜக்கி, சிரிசிரி, நித்தி மூவரும் பேசக் கூடியவர்கள். “ வல்லார்கள் யாவருக்கும் வாக்கிறந்த பூரணமாய், சொல்லாமல் சொல்லி” அவர்கள் ஆடுவதில்லை. ஒன்றுக்கு கொஞ்சம் வித்தை காட்டத் தெரியும், மற்றதுக்கு அது கூடத் தெரியாது. பேசத்தெரிந்தவற்றுக்குத்தான் படிக்கத் தெரிந்தவர்கள் படைபலமும் உண்டு. இவைதான் ஆபத்தானவை. இதில் இப்போது சிரிசிரியைப் பார்ப்போம்.
இந்த ஜன்மங்களுக்கெல்லாம் வாழ்க்கை வரலாறு என்று நிறைய புனைவுகள் இணையமெங்கும் வீரவிக்கிடக்கின்றன. இப்போதெல்லாம் எது நிஜம் என்று அவற்றையே கேட்டால் அவற்றுக்கே கூடத் தெரியாத அளவு கற்பனையாகக் கதைகள் மக்களிடம் சேர்ப்பிக்கப் பட்டுவிட்டன.
ஒருமுறை ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைகக்காட்சியில் சிரிசிரி பேட்டியைப் பார்த்தேன். அது பிறக்கும்போதே வேதவித்தாகவும் தவழும்போதே கீதாச்சாரியனாகவும் இருந்ததாய்ப் பீற்றிக் கொண்டதைக் கேட்டிருக்கிறேன். ஆன்மீகத்தில் இதெல்லாம் சகஜம் என்று அப்போது விட்டுவிட்டேன். பிறகுதான் அவ்வப்போது அதன் விஷமும் விஷமமும் வெளித்தெரிய ஆரம்பித்தன.தமிழர்களுக்கு மே பதினெட்டு நினைவிருக்கும். அந்த நாள் திடீரென்று வந்த சுனாமியல்ல, அழிவின் ஆரம்பம் அதற்கு குறைந்த பட்சம் சில மாதங்களுக்கு முன்னமேயே துவங்கிவிட்டதன் சாட்சிதான் முத்துக்குமார் மரணம். இந்த நிலையில், மே 5, இந்தச் செய்தி நக்கீரனில்-
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் சமீபத்தில் இலங்கை சென்று ஈழத் தமிழர்களை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவருடன் விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் தலைவர் பா.நடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உணவும், மருந்தும் இன்றி தவிக்கிறார்கள். எனவே இலங்கையில் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய தேவையான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள்’என்று பா.நடேசன் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதற்கெல்லாம் விளக்கம் வியாக்கியானம் வேண்டுமா? இதன் தொடர்ச்சியாக அன்பும்-கருணையும் கொப்புளிக்க ‘குரு’ தமிழக முதல்வரைப் பார்க்காமல் எதிர்க்கட்சிதலைவியிடம் போய் படம் காட்டுகிறாராம். சிஷ்யர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள், முட்டாள்கள் மெய்சிலிர்த்தார்கள், நடுநிலையாளர்கள் நம்பிக்கை வளர்த்துக் கொண்டார்கள்.
இது ஒன்றும் உணர்ச்சிவசப்பட்டு, ஓர் இனம் அழிகிறதே என்ற அக்கறை மிகுந்த செயல்பாடு இல்லை. திட்டமிட்டுச் செய்யப்பட்ட விளம்பரம். ஆன்மீக வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்ப்பா, விளம்பரம்கூட இல்லாமல் வியாபாரம் செய்ய முடியுமா என்று கேட்பவர்களும் இருக்கக்கூடும்.
எது வியாபாரம் எதற்கு விளம்பரம் என்பதில்தான் சமூக-அரசியல். இவர்கள் டாட்டாவுக்கு பாரத்ரத்னா கொடுத்தால் பரவாயில்லை அந்த ஆள் நமக்கு ஒரு குட்டி கார் செஞ்சு கொடுத்தானே என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறவர்கள்.
அரசுக்குச் சாதகமானவர்களுக்குத்தான் தேசிய விருது என்பது நம் நாட்டின் எழுதப்படாத விதி. ஓட்டுப்போட்டு அரசியல் மாற்றம் கொண்டுவர நினைக்கும் நாம் இதை காலை செய்தித்தாள் மடிக்குமுன்னரே மறப்பதும் வாடிக்கை. இங்கேதான் இந்த ஜன்மம் இன்னும் கொஞ்சம் யோசித்தது.
இந்தியாவில் பிறந்தார்கள் என்பதற்காகவே இன்று விண்வெளி சென்ற, நோபெல் பரிசு வாங்கியவர்களைக் கொண்டாடும் நாட்டில், இங்கேயே வாழ்ந்து வியாபாரம் செய்யும் ஒருவனை எவ்வளவு கொண்டாடுவார்கள் என்று கணக்கு போட்டு, நோபெல் பரிசு பெறவும் இது திட்டம் போட்டது. டாகூர் வாங்கியதாலேயே நோபெல் மீது எனக்கு இருக்கும் கொஞ்ச அபிமானம், இர்விங் வாலஸ் படித்த பின்னரும் போய்விடவில்லை. இதற்கு கொடுத்திருந்தால்?!
நோபெல் பரிசின் இலக்கை நோக்கி நகர்த்தப்பட்ட காய்கள் தான் ஜம்முவில் தீவிரவாதிகளிடமும் , நக்சல் போராட்டக்காரர்களிடமும், அமைதிக்காகப் பேசுகிறேன் என்ற சவடால்கள். இவற்றின் அடுத்த கட்டம்தான் செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றும் நாடகம். மேடை ஏறியவன் சுலபத்தில் விலக முடியாது என்பது என் அனுபவம்.
ஒரு நல்ல நடிகன் வசனத்தை மட்டும் கவனமாகப் பேசிவிட்டுப் போய்விட மாட்டான். அரங்கின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வரும் சமிக்ஞைகளைப் பயன்படுத்திக் கொள்வான். அது போலத்தான் இப்போதைய சிரிசிரி நாடகம்.
சென்ற 2009 ஆண்டு நடந்த ஈழநாடகம் வெற்றி பெறவில்லை. அதே மே மாதம் 2010 இன்னொரு நாடகம்! ஸத்ஸங்கத்தில் எவனோ சுட்டானாம்.இந்த ஸத்ஸங்கம் என்பதே பக்த-சிஷ்யர்களுக்கு குருமார்கள் தரும் பல்லிமிட்டாய் பிரசாதம். தங்கள் மூஞ்சியையும் முகரையையும் அவ்வப்போது காட்டி பக்தியை ஊக்குவிப்பது ஒரு சராசரி ஆன்மீக-வியாபார நடவடிக்கை. இந்தக் கூட்டத்தில் எல்லாரும் போய்விட முடியாது. பக்தர்களுக்குத்தான் முதலிடம், பணக்கார பக்தர்களுக்குத்தான் சிறப்பிடம். இப்படியோர் சிரிசிரி கூட்டத்தில்தான் துப்பாக்கிச் சூடு.
இது ஒன்றும் உணர்ச்சிவசப்பட்டு, ஓர் இனம் அழிகிறதே என்ற அக்கறை மிகுந்த செயல்பாடு இல்லை. திட்டமிட்டுச் செய்யப்பட்ட விளம்பரம். ஆன்மீக வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்ப்பா, விளம்பரம்கூட இல்லாமல் வியாபாரம் செய்ய முடியுமா என்று கேட்பவர்களும் இருக்கக்கூடும்.
எது வியாபாரம் எதற்கு விளம்பரம் என்பதில்தான் சமூக-அரசியல். இவர்கள் டாட்டாவுக்கு பாரத்ரத்னா கொடுத்தால் பரவாயில்லை அந்த ஆள் நமக்கு ஒரு குட்டி கார் செஞ்சு கொடுத்தானே என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறவர்கள்.
அரசுக்குச் சாதகமானவர்களுக்குத்தான் தேசிய விருது என்பது நம் நாட்டின் எழுதப்படாத விதி. ஓட்டுப்போட்டு அரசியல் மாற்றம் கொண்டுவர நினைக்கும் நாம் இதை காலை செய்தித்தாள் மடிக்குமுன்னரே மறப்பதும் வாடிக்கை. இங்கேதான் இந்த ஜன்மம் இன்னும் கொஞ்சம் யோசித்தது.
இந்தியாவில் பிறந்தார்கள் என்பதற்காகவே இன்று விண்வெளி சென்ற, நோபெல் பரிசு வாங்கியவர்களைக் கொண்டாடும் நாட்டில், இங்கேயே வாழ்ந்து வியாபாரம் செய்யும் ஒருவனை எவ்வளவு கொண்டாடுவார்கள் என்று கணக்கு போட்டு, நோபெல் பரிசு பெறவும் இது திட்டம் போட்டது. டாகூர் வாங்கியதாலேயே நோபெல் மீது எனக்கு இருக்கும் கொஞ்ச அபிமானம், இர்விங் வாலஸ் படித்த பின்னரும் போய்விடவில்லை. இதற்கு கொடுத்திருந்தால்?!
நோபெல் பரிசின் இலக்கை நோக்கி நகர்த்தப்பட்ட காய்கள் தான் ஜம்முவில் தீவிரவாதிகளிடமும் , நக்சல் போராட்டக்காரர்களிடமும், அமைதிக்காகப் பேசுகிறேன் என்ற சவடால்கள். இவற்றின் அடுத்த கட்டம்தான் செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றும் நாடகம். மேடை ஏறியவன் சுலபத்தில் விலக முடியாது என்பது என் அனுபவம்.
ஒரு நல்ல நடிகன் வசனத்தை மட்டும் கவனமாகப் பேசிவிட்டுப் போய்விட மாட்டான். அரங்கின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வரும் சமிக்ஞைகளைப் பயன்படுத்திக் கொள்வான். அது போலத்தான் இப்போதைய சிரிசிரி நாடகம்.
சென்ற 2009 ஆண்டு நடந்த ஈழநாடகம் வெற்றி பெறவில்லை. அதே மே மாதம் 2010 இன்னொரு நாடகம்! ஸத்ஸங்கத்தில் எவனோ சுட்டானாம்.இந்த ஸத்ஸங்கம் என்பதே பக்த-சிஷ்யர்களுக்கு குருமார்கள் தரும் பல்லிமிட்டாய் பிரசாதம். தங்கள் மூஞ்சியையும் முகரையையும் அவ்வப்போது காட்டி பக்தியை ஊக்குவிப்பது ஒரு சராசரி ஆன்மீக-வியாபார நடவடிக்கை. இந்தக் கூட்டத்தில் எல்லாரும் போய்விட முடியாது. பக்தர்களுக்குத்தான் முதலிடம், பணக்கார பக்தர்களுக்குத்தான் சிறப்பிடம். இப்படியோர் சிரிசிரி கூட்டத்தில்தான் துப்பாக்கிச் சூடு.
“குருவைச் சுடப் பார்த்தார்கள், தப்பித்து விட்டார்” என்று முட்டாள் பக்தன் சொல்லலாம். குருவே அப்படிச் சொன்னால்? பொங்கிவிட்டார்கள். பாஜக தலைவர் மாநில முதல்வரை உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார்! குருவும் தன் கருணாவிலாசத்தோடு, சுட்டவனை மன்னித்து விட்டேன், அவனுக்கு மனம் அமைதிப்பட பயிற்சி தருகிறேன் என்கிறார். நாட்டின் உள்துறை அமைச்சரோ இது ஒன்றும் கொலைச் சதி இல்லை என்கிறார். குருவுக்கு கோபம் கொப்பளிக்கிறது, “சாரிசாரி, சிரிசிரி" என்று சும்மா இருக்கக்கூடாதே என்று இந்திய அரசுக்கு எங்கே குத்துமோ அங்கே குத்தப்பார்க்கிறார்- நக்சல்கள் இவனைக் கொல்லச் சதி செய்தார்களாம்! அடடா என்ன ஒரு ஞான திருஷ்டி!
இரண்டு நாட்களில் தெரிய வருகிறது, சுட்டவன் ஆசிரமத்தின் எதிர்பக்கம் இருந்த வீட்டின் சொந்தக்காரன்! அவன் நாய்கள் தொந்தரவு செய்தால் சுடும் ஒரு கேவலமான மனிதன், அவன் நக்சல் கிடையாது!!
சிலநேரங்களில் சிலநாடகங்கள் தானாய் முடிந்து விடும், சிலவற்றை மக்கள் முகம் சுளித்து முடித்து விடுவார்கள். நாடகக்காரன் சும்மாயிருக்க மாட்டான். அடுத்த ஸ்க்ரிப்ட் தயாராகும், அடுத்த நாடகம் அரங்கேறும். இதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். காத்திருங்கள். அதுவரை சுடப்பட்டது ஒரு நாய்தானே என்று பெருமூச்சு விடுவோம்.
சிலநேரங்களில் சிலநாடகங்கள் தானாய் முடிந்து விடும், சிலவற்றை மக்கள் முகம் சுளித்து முடித்து விடுவார்கள். நாடகக்காரன் சும்மாயிருக்க மாட்டான். அடுத்த ஸ்க்ரிப்ட் தயாராகும், அடுத்த நாடகம் அரங்கேறும். இதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். காத்திருங்கள். அதுவரை சுடப்பட்டது ஒரு நாய்தானே என்று பெருமூச்சு விடுவோம்.
சுட்டிகள்-
http://guruphiliac.blogspot.com/2005/10/sri-sri-peace-prize-watch.html
http://www.dnaindia.com/bangalore/report_mystery-solved-bullet-was-fired-at-stray-dog-not-sri-sri-ravi-shankar_1392151
http://www.dnaindia.com/bangalore/report_mystery-solved-bullet-was-fired-at-stray-dog-not-sri-sri-ravi-shankar_1392151
அருமை டாக்டர்.. இந்த சாமியார்களை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்... சமீபத்தில் யாரோ யாரையோ நாய் என்று எழுதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்கச்சொன்னதாய் படித்தேன்.. எங்கே என மறந்து போச்சு.பச்.
ReplyDeleteஒரு மார்க்கமா தான் எழுதிறீங்க... நடத்துங்க..
ReplyDeleteஅப்ப ’சிரி சிரி’ நல்ல சாமியார் கிடையாதுங்களா?
உங்கள் சாடலும் .. ஓஷோவை நியாபக படுத்துகிறது எனக்கு...
இப்போது வந்த ஒரு பின்னூட்டம்..இதன் பெயரை இங்கே விளமாபரப்படுத்த வேண்டாம் என்று வெட்டி ஒட்டுகிறேன்.-
ReplyDelete//இது ஒன்றும் உணர்ச்சிவசப்பட்டு, ஓர் இனம் அழிகிறதே என்ற அக்கறை மிகுந்த செயல்பாடு இல்லை. திட்டமிட்டுச் செய்யப்பட்ட விளம்பரம்.//
இந்த பதிவும் ஒரு விளம்பரம் என்று தான் பார்க்க வேண்டும்.
இது நல்ல ஆராம்பம்.
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரம் ஆகாது.
தைரியமான பதிவு தேவையான பதிவு கூட...
ReplyDeleteஆழமான வார்த்தைகள். என்றுதான் மக்களுக்கு விழிப்புனர்வு வருமோ என்று ஏங்கவைத்துவிட்டது, உங்கள் எழுத்து.
ReplyDelete/இது நல்ல ஆராம்பம்.
ReplyDeleteவிளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரம் ஆகாது///
வீழ்வது நாமகினும் வாழ்வது தர்மம் ஆகட்டும்
இதோ மருது என்ற பெயரில் இன்னொரு ஜந்து-
ReplyDeleteநீங்களும் தான் பெரிய தாடியோடு அலையறீங்க.செமத்தியா பேத்தறீங்க.உங்க பின்னாடியும் வினவு,சைக்கிள் கடை பசங்க போன்ற தறுதலைகளேல்லாம் வந்து கோஷம் போடறாங்க.உங்களை ஏன் அழு(குனி) அழு(குனி) சாமியார் என்று மரியாதையோடு கூப்பிடக்கூடாது?
நான் ஆன்மீக வியாபாரத்தில் அசூயை கொண்டவன்.
இன்னும் சில பெயர்களோடு போடுங்களேன்.
இப்படிப்பட்டவர்கள் அடையாளம் காணப் படவேண்டும் என்றே இரண்டைப் போட்டிருக்கிறேன்.
ReplyDeleteஇனி இங்கே நான் பதில் சொல்வதாயில்லை, இது போன்றவைகளுக்கு.
This comment has been removed by the author.
ReplyDeleteபிறர் மனதை காயபடுத்தாத யாவரும் நல்லவரே
ReplyDeleteதலைப்புலேயே பெரிய குத்தா வச்சிருகீங்களே டாக்டர்.
ReplyDeleteமருது என்கிற நாய் என் ப்ளாக்லயும் கொளச்சது.. simply i deleted...so dont respond this kind of filthy peoples... அப்புறம் இன்னொரு நாயும் இருக்கு... அது யாருன்னு தெரியும்ன்னு நெனைக்கறன்
ReplyDeleteதேவையான நேரத்தில் அருமையாக எழுதப்பட்ட பதிவு. மக்களுக்கு விழிப்புனர்வு வந்து திருந்துவார்கள் என்று நினைப்பது பேராசையோ?
ReplyDeleteWell said Doctor. I was having doubt on SriSriSriSri... and he confirmed when this dog shooting incident happened. Horrible fellows. These guys are more dangerous than corrupt politicions.
ReplyDeleteஎழுத்துப் பிழையொன்று நீக்கி விட்டு மீண்டும் - தொந்திரவுக்கு மன்னிக்க...
ReplyDelete*****
ஈழம் விதயத்தில் இவரின் முகம் காட்டுதல்கள் கொஞ்சம் ‘மண்டைக்குள்’சில ஸ்பார்க்குகளை தட்டிவிட்டதுதான்...
எப்படியெல்லாம் வித்துக்கிறாங்க, எல்லாமே தொழிலா போச்சு - சாயம் ரொம்பக் காலம் நிக்காதுன்னு தெரியும்தானே.
as usual a good, needed post!
அந்த maruthu நாய் வந்து திருப்பி குளைச்சது சார்... என் பிளாக்ல just now.. as usual deleted... ஏதாவ்து வழியிருந்தா சொல்லுங்க... இல்லனா அந்த நாய்கள கண்டுபிடிங்க..
ReplyDeleteஇன்றய சூழ்நிலையில் இதுபோன்ற ”ருத்திரதாண்டவங்கள்” மிகவும் தேவை.
ReplyDeleteஎவன் ஒருவன் கடவுளின்/ஆன்மீகத்தின்/பிறகலைகளின் பெயரால் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு சொகுசான வாழ்க்கை நடத்துகிறானோ, அவனை இந்த சமுதயம் போலி என தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் சமுதாயத்தின் களைகள், வேரோடு பிடுங்கி எரியபட வேண்டியவர்கள். உஙகள் பனி தொடர வெண்டுகிறேன்.
இந்த பிரிண்ட்/டீவி மீடியாக்கள் ஏன் இவர்களுக்கு முக்கியத்திவம் குடுத்து தொலைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ReplyDeleteப்ளீஸ் ரிலாக்ஸ் டாக்டர்.
ReplyDeleteஐயோ நாய்களோட தொல்லை தாங்க முடியல டாக்டர். ஏதாவது வழி சொல்லுங்களேன்.
ReplyDeleteஹ ஹ....ஸ்ரீ ஸ்ரீ யை முதலில் நான் பார்த்தது திருDr.ஜாகிர் நாயிக் அவர்களின் Peace Conference மூலமாக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்ட விவாதமேடையில்தான்.
ReplyDeleteமேடையில் அந்த விவாதம் முடிந்த மறுநாள் ஸ்ரீ ஸ்ரீ வெளியிடவிருந்த இஸ்லாமும் ஹிந்துமதமும் என comparative religions புத்தகத்தை திருDr.ஜாகிர் நாயிக் ஒவ்வொரு பக்கமாக மறுத்து விடையளித்தார்....கடைசியில் ஸ்ரீ ஸ்ரீ மேடையிலேயே தான் எழுதியது தவறு, அந்த புத்தகத்தை வெளியிட மாட்டேன் என்ற பின் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அன்று நடந்த கூத்தை நான் வாழ்க்கையில் என்றும் மறக்க மாட்டேன்...ஆனாலும் அதற்கு பின்னாலும் இப்படிப்பட்ட (ஆ)சாமிகளை நம்புபவர்களை என்னென்று சொல்வது? ஆனாலும் அதன் மறு நாள் வெளி வந்த பத்திரிக்கைகளில் ஒன்றில் கூட அந்த சுவடே தெரியவில்லை. ஸ்ரீ ஸ்ரீ எல்லோரையும் ஒன்றாக வாழ வேண்டுமெனக் கூறினார் என்றே இருந்தது. அப்பொழுதுதான் ஊடங்களும் தன்னை விலை பேசியது புரிந்தது. இன்னும் நான் படிக்கும் ஒரு வலைப்பூவில் இது போன்ற எல்லா சாமியார்களைப் பற்றியும் எழுதுவர். பெங்களூருவின் வீடியோ இணைப்பும், அந்த வலைப்பூவின் முகவரியும் கீழே..இன்னும் இது போல அதிகமாக எழுதப்பட்டு, அதிகம் பேர் படிக்க ஆரம்பித்தால்தான் இந்தமாதிரி ஓநாய்கள் மக்களின் பணத்தையும் உயிரையும் குடிப்பதை நிறுத்தும்.
http://www.youtube.com/watch?v=7M0cWy3ariU
http://guruphiliac.blogspot.com/
அன்புடன் ருத்ரனுக்கு,
ReplyDeleteஐ நா உட்பட எந்த அமைப்புக்களும் போகமுடியாத ஒரு சூழ்நிலையில், இலங்கையில் தனக்கிருந்த ஆன்மிக செல்வாக்கை கொண்டு ரவிசங்கர் இலங்கை சென்று, அங்குள்ள மக்களுக்கு ஆறுதலையும், உதவிகளை, மக்கள்படும் கஷ்டங்களை ஆதாரத்துடன் வீடியோ எடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தினர். மற்றும் இலங்கை அரசையும் காங்கிரஸ் அரசையும் விமர்சித்து டிவியில் பேட்டியும் கொடுத்தார்.அவரின் தமிழ் உணர்வினால், இலங்கையையும், கங்கிரஸையும் பகைத்துக்கொண்டார், தன்னிடம் நம்பிக்கையுள்ள மேலிட அரசியல்வாதிகளையும் சந்தித்து இந்த பிரச்சனையை புரியவைத்தார். இதில் என்ன விளம்பரம் இருக்கிற்து?.
அன்றுஈழப்படுக்கொலைக்கு எதிராக எவ்வளவோ போரட்டங்கள் நடந்தன அதை, தமிழ் தமிழினம் என்க்கூறிக்கூறியே ஆசியா கோடிஸ்வரரான கருணாநிதி, அடக்கி,தன் அரசியலுக்காக, ஈழப்படுக்கொலைக்கு துணைப்போன இந்த கருணாநிதியை ஏன் பார்க்கவேண்டும்?.
உங்கள் கட்டுரையில், ஆன்மிகத்தில் உங்களுக்கு உள்ள வெருப்பு மட்டுமே தெரிகிறது. மன்னிக்கவும், உண்மை தெரியவில்லை. நாத்திகத்தை மட்டுமே கொண்டு உண்மையை ஆராயக்கூடாது.
there seems to be some problem in approving some comments.
ReplyDeletei thank all who have commented and try to resolve this with technical help.
Renga said:
ReplyDeleteWell said Dr.
I totally agree with your article, word by word.
Thanks for bringing the true to the world.
Renga
பி.ஏ.ஷேக் தாவூத்:
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
மருத்துவர் ருத்ரன் அவர்களுக்கு,
என்னால் இதற்கு ஒரு ஸ்மைலி மட்டுமே போட முடியும் :-) நான் ஏதாவது இங்கு பின்னூட்டம் போட அதை இந்து முஸ்லிம் பிரச்சனையாக்கவென்றே சிலர் இணையத்தில் இருக்கும் போது வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. "பாண்டு" என்பவரின் வலைப்பூவில் அவருடைய பின்னூட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லபோக அதை "இந்து" மத பிரச்சனையில் மற்றவர்கள் தலையிட வேண்டாமென்று சொல்லி மிக சாதுர்யமாக பிரச்சனையை திசை திருப்பி விட்டார். சிரிசிரியை விட இவர்கள் சற்றும் குறைந்தவர்களல்ல என்பது என் கருத்து.
krubha:
ReplyDeleteஉங்கள் கருத்துடன் 100% உடன் படுகிறேன் DR. தேவையான கோபம் தேவையான் நேரத்தில். ஒரு பின்னூட்டல் சொல்லி இருந்த படி “ருத்ர” தாண்டம் போல. இந்த கோபாக்னி பல்கி பரவி தீயவற்றை தீய்த்தால் தான் நன்று.
செந்தாரப்பட்டி பெத்துசாமி:
ReplyDeleteபீதியில் பேதிகண்டு எதேதோ உளறுது சிரிசிரி. வாழும் கலையை (அப்படின்னா என்ன சார்) கற்றுக்கொடுக்கும் சிரிசிரியின் பேச்சுக்கலை சிரிப்பாய் சிரிக்கிறது.
porattamtn:
ReplyDeleteசினத்தில், சீற்றம் குறையாமல் வெடிக்கிற சொற்கள்...
ராஜன்:
ReplyDelete//அப்ப ’சிரி சிரி’ நல்ல சாமியார் கிடையாதுங்களா?
//
அசோக்கு.... உம்ம தான்யா மொதல்ல போட்டு தள்ளணும்!
//மருது என்கிற நாய் என் ப்ளாக்லயும் கொளச்சது.. simply i deleted...so dont respond this kind of filthy peoples... அப்புறம் இன்னொரு நாயும் இருக்கு... அது யாருன்னு தெரியும்ன்னு நெனைக்கறன்//
அதுக்கு என்ன போட்டா ஓடும்னு தான் அன்னைக்கே சொன்னேனே தல!
ராஜன்:
ReplyDelete//வினவு,சைக்கிள் கடை பசங்க போன்ற தறுதலைகளேல்லாம் வந்து கோஷம் போடறாங்க.//
நீ உன் விலாசத்த மட்டும் சொல்லு மவனே... நாங்க ஏன் கோஷம்லாம் போடப் போறோம்! நம்ம ஊர் மாரியாத்தா கோயில்ல ஒரு கெடா வெட்டு உங்க அத்தன பேத்தயும் விருந்துக்கு கூப்பிடலாம்னு இருக்கேன்!
//வீழ்வது நாமகினும் வாழ்வது தர்மம் ஆகட்டும்//
தர்மதேவன் கோவிலிலே மணி அடிக்குது போல!
இதெல்லாம் ஸ்மார்டா தான் இருக்கு சில நேரங்களில் சில்லறத்தனம் தான் செருப்பிலடிக்க தோணுது!
வெறித்தனம் டாக்டர். அருமை ..!
ReplyDeleteஎதிர்பக்க வீட்டுக்காரன் என்னதான் அங்க நடக்குதுன்னு தெரிஞ்சிக்க
ReplyDeleteசிரிசிரியிடம் இலவச பயிற்சி பெற நடத்திய நாடகமோ ?
another truth! in the art of living!!
ReplyDeletehttp://mullaimukaam.blogspot.com/2010/06/blog-post_4915.html
One More Flavour
ReplyDeletehttp://shockan.blogspot.com/2010/06/blog-post_7990.html
டாக்டர் ருத்ரன் அவர்களே...
ReplyDeleteநான் பதிவுலகத்திற்குப் புதிய வரவு.
தங்களது வலைப்பதிவை அண்மையில் பார்க்க நேர்ந்தது..
பல வருடங்களுக்கு முன்பு இரண்டு புத்தகங்கள் படித்தேன். பெயர் சரியாக நினைவில் இல்லை.
ஒன்றின் பெயர் 'மனமே' என்று நினைக்கின்றேன்.
அதில் ஒரு புத்தகம், வானொலியில் தொடராக வெளி வந்த ஒன்று.
சிறு வயதில் அந்தப் புத்தகங்களைப் படித்து அதில் வரும் வரிகளை மனப்பாடம் செய்து வைத்து சமயம் வரும் போது பயன்படுத்தத் துவங்கினேன்.
உ.ம் (வாழ்க்கை என்பது உடைந்து வீழ்வதற்காகவே காத்திருக்கும் ஒரு பழய கட்டிடம்)
என் மனதை மிகவும் பாதித்த, வசீகரித்த படைப்புகள் அவை.
அவைகளை எழுதியவர் நீங்கள்தானா?
கூகிளில் சென்று sri sri ravi shankar fraud என்று டைப் செய்து தேடிப் பாருங்கள்.
ReplyDeleteவண்டி வண்டியாக தகவல்கள் கிடைக்கும்.
ஒரு சின்ன திருத்தம். போலி சாமியார் என்று எழுதத் தேவை இல்லை.
ReplyDeleteசாமியார் என்று எழுதினால் போதும். எல்லா சாமியாரும் போலி தான்.
இது ஒரு "oxymoron." இதில் ஒரு "exception" -உம கிடையாது...
mr boo, i think you are referring to the book manam enum medai-1994!!
ReplyDeletecomments like these may please be addressed to my mail.
Thank you Sir.
ReplyDeleteto avoid technical difficulties use blogger's built in templates...
ReplyDeleteControversies
ReplyDeleteAccording to his various biographies, he was named "Shankar" by his parents because he shared the birth date with that of Adi Sankaracharya. However, even the birth year of Adi Sankaracharya is a matter of dispute. Sankaracharya Jayanti, the festival of his birth, is celebrated in India on the fifth day of the bright half of the month of Vaisakha. Hence, this is most probably a hagiographic detail added for marketing purposes.
In the early 1990s, Shankar added the honorific Sri Sri to his own name after the renowned sitarist Ravi Shankar objected that the guru was capitalizing on the latter's fame.
Disciples of Sri Sri claim that Sri Sri is a physics graduate from St Joseph College Bangalore. However, there is no record in the college files of his degree.
His disciples claim he has earned a doctorate from a university. However, all he has are honorary, not reseach, doctorates from various Indian institutions due to his spiritual influence.
Extremely marketing-oriented, his organization floods Indian cities with posters and advertisements of any upcoming event.
இதையும் படித்து பார்க்கலாம்.
http://churumuri.wordpress.com/2008/02/01/the-the-great-great-sri-sri-ngo-ngo-scam-scam/
http://www.yunusnews.com/node/486
"‘ஏன் அமிர்தாம்மாவை விட்டு விட்டாய் பெண் என்பதாலா?’ என்று ஏதாவது ஒரு புறம்போக்கு கேள்வி வரும். அமிர்தாவும் சாயியும் பேசித் தொலைப்பதில்லை "
ReplyDeleteடாகடர்.. ஒருவர் பேசுவதை விமர்சிப்பது வேறு.. ஆனால், பேசாததை விமர்சிப்பது உங்கள் தரத்திற்கு சரியாக இல்லையே.. அவர்கள் செயலை ஏற்பது எதிர்ப்பது என ஏதாவது ஒன்றை செய்து இருக்கலாம் என தோன்றுகிறது
Why should one go to an ashram and kill a dog? Is he telling the truth?
ReplyDeleteLooks someone try to defame him.
One incident can be presented in many ways. SuN/jaya/raj/dd channel can show the news in their own way.
One channel will broadcast what actually happened. Others can twist add some masala ... :)
So we should not go by what media says. Its going to fool us.
(Sri Sir)His teachings/kriya are helpful in coming out of stress and unwanted repeated thoughts.
It was helpful in people in Iraq in war time.
சாமியார்களிடம் கோபம் இருக்கலாம்.. நல்லது என நினைக்கும் நடுத்தர அறிவு ஜீவி மக்களிடம் கோபம் ஏன்.. உணர்ந்து மாற்றிக் கொள்பவர்கள் இல்லையா..
ReplyDeleteஅனுபவம் என்பதுதானே வாழ்க்கை.. யாருமே வேண்டாமா உங்களுக்கு..
பாவம் நாய் செத்து விட்டதா? ஒருவேளை இந்த நாயை சுடுவதற்கு ப்தில் அந்த நாய் அந்த நாயை சுட்டுவிட்டதோ
ReplyDeleteகலகம்
kalagam.wordpress.com
சிரிச்சுட்டோம்....
ReplyDeleteஒரு சந்தேகம். ரொம்ப நாளாய். என்ன காரணத்தினால் ஆண்கள் சபரி மலைக்கு செல்ல இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர். சபரி மலை பயணம் ஏன் ஆண்களை இவ்வளவு அதிகம் ஈர்க்கிறது? எனக்கு பதில் சொல்லவும்.
ReplyDeleteDr,
ReplyDeleteVery nice. I happened to study in Adhiparasakthi engineering college and have closely watched Bangaru adigalar and his sons activities. Am happy now their things are also coming into light.
http://thatstamil.oneindia.in/news/2010/07/02/it-raid-melmaruvathur-bangaru-college-home.html
Many more to come. Hope that happens soon.
Cheers,
Bharathi Periyardasan
இப்படி எல்லமா மக்களை எமாத்தறாங்க.
ReplyDeleteI've been to all these 'classes' in my eternal quest to partake of instant yoga :-) as they say, 'naatakame ulakam'.I completely agree with the last paragraph,as long as the stage holds newer scripts will unfold.
ReplyDelete