Monday, April 12, 2010

பார்ப்பனீயப் பிள்ளை


மதராசப்பட்டின காலம். ராயபுரம் பகுதியில் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர். அவரது மகனுக்கு தமிழார்வம் உண்டு. தமிழ் படித்தான். தமிழை மட்டுமல்ல, வாழ்வின் தெளிவையும் தேர்ந்தான். இலக்கியமும் வாழ்வும் வேறல்ல என்று காதலும் கொண்டான். பொதுவாகவே அவனது காலத்தில் காதல் மறுக்கப்படும். ஆனால் அவன் காதலித்ததோ அவர்களது வீட்டில் வேலை செய்து வந்த தாழ்த்தப்பட்ட இனம் சார்ந்த முருகம்மை என்ற பெண்ணை. அவனுக்கு முருகு என்றால் அழகு. அவனுக்கு முருகன் தான் தெய்வம். வீட்டில் கண்டித்தார்கள். மிரட்டினார்கள். ஒருநாள், முருகம்மையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
இனம் அவனை ஒதுக்கியது. பணம் அவனிடம் இல்லை. கற்ற தமிழ் உற்ற துணையாய் இருந்தது. சம காலத்துப் பண்டிதர்களோடு தேர்ச்சி பெற்ற தமிழ் வித்துவான் ரத்தினம் பிள்ளை என்று தான் பெயரை ஆக்கிக் கொண்டான். ஏழு குழந்தைகள் பிறந்தன. அதில் ந்து பெண்கள். திருமணம் செய்து வைத்தான், படிக்க வைத்தான். அவன் மகனுக்கும் காதல் பிறந்தது. மாமியாரைப் போலவே அவளும் வீட்டை விட்டு வெளியே வந்தாள். அந்தத் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்தான். இந்தக் குடும்பத்தின் ஒரே விசேஷம் ரத்தினம் பிள்ளையின் குழந்தைகளைத் தவிர வேறு எந்த உறவினரையும் தெரியாது -கிடையாது என்பதனால் அல்ல!.
அவனை பற்றிய விவரங்கள் எல்லாம் என்னுடைய ஆசிரியர், அவனுடைய மாணாக்கர் பண்டித நடேசனார் சொல்லக் கேட்டிருக்கிறேன். திரு.வி.க. போன்றோர் கூட அவனிடம் சில தமிழ் விளக்கங்கள் கேட்ப்பார்களாம். தமிழை மட்டுமே நம்பித் தன் வாழ்வை ட்டிக் கொண்டவனுக்கு, காதலுக்கு சாதியில்லை என்று கூறத் துணிந்தவனுக்கு தன்னோடு மட்டுமல்லாமல், வள்ளலாரையும் கூட ராமலிங்கம் பிள்ளை என்றே சொல்ல முடிந்தது. அவனுக்கும் ஒரு குடுமி இருந்தது.
முந்தைய பதிவில் வடகலை ஐயங்காரின் பார்ப்பனீயத்தை எழுதும் போதே இந்தப் பிள்ளைவாளின் பார்ப்பனீயத்தையும் எழுத வேண்டுமென்றுதான் முடிவு செய்தேன். ஏனென்றால் பார்ப்பனீயம் பிறப்பல்ல. அது ஓரூ கீழ்மை குணம். பிள்ளையோ,ள்ளரோ, ஐயரோ, பறையரோ ஆதிக்க மனப்பான்மை உடைய அனைவரும் பார்ப்பானீயவாதிகள்தான். பார்ப்பனீயம் என்பது பிறப்பால் வருவது அல்ல. அது வாழ்வின் கீழ்மையான திமிர், திருட்டுத்தனம், தன்மானமற்ற தன்னலம் ஆகியவற்றின் வெளிப்பாடு. சிலருக்கு எதிலும் எப்போதும், சிலருக்கு எதிலாவது எப்போதாவது! ரத்தினத்திற்குப் பெயரளவில், பலருக்கு மனத்தளவில்!
அடையாளப் படுத்திக் கொள்ள ஒரு ஜாதி. அதை வைத்து இயங்க ஒரு சமூக வசதி. அவன்–நான் வேறு-வேறு என்று எப்போதும் உள்ளே ஒரு பிரிவினை - இவை இருப்பவன் தன் பெயரின் பின்னால் எதையும் குறிப்பிடாமலேயே அவன் பார்ப்பனீயவாதி, அற்பவாதி!

23 comments:

வால்பையன் said...

எங்க ஒத்துகிறா!


மாத்தி மாத்தி திட்ட மட்டும் தான் தெரியும் அவாளுக்கு!

குடுகுடுப்பை said...

உடன்படுகிறேன். ஆனால் எதார்த்த நிலையில் பார்ப்பானியம் என்ற சொல் பிறப்பால் பார்ப்பனர்களையே குறிக்கிறதுதானே, முற்றிலும் சாதியை மறுக்கும் பார்ப்பனரை- இந்த சின்னசாதி பாப்பான் பறையன் வீட்ல சாப்பிடுவான் என்ற இழிக்கும் தேவனின் செயலை பார்ப்பானியம் என்று சொன்னாலும் இயல்பில் புரிதல் ஒரு சாதியை பிறந்தவனை நோக்கியதே என்பது என் கருத்து.

uthamanarayanan said...

" ஏனென்றால் பார்ப்பனீயம் பிறப்பல்ல. அது ஓரூ கீழ்மை குணம்"

Well said Dr.Anyone who feels and creates a niche to exploit in any caste belongs to this group .Exploitation is the ultimate aim of the one who either exploits his own caste or dominates other csstes to take advantage of.
Thank you Dr.

ஆரூரன் விசுவநாதன் said...

//பார்ப்பனீயம் பிறப்பல்ல. அது ஓரூ கீழ்மை குணம்.//

//பார்ப்பனீயம் என்பது பிறப்பால் வருவது அல்ல. அது வாழ்வின் கீழ்மையான திமிர், திருட்டுத்தனம், தன்மானமற்ற தன்னலம் ஆகியவற்றின் வெளிப்பாடு. சிலருக்கு எதிலும் எப்போதும், சிலருக்கு எதிலாவது எப்போதாவது! ரத்தினத்திற்குப் பெயரளவில், பலருக்கு மனத்தளவில்!//

திராவிடம் என்ற வார்த்தையைப் போலத்தான் இந்த பார்ப்பணீயம் என்பதும். காலப் போக்கில் பொருள் மாறிப்போன பதங்களில் இதுவும் ஒன்று. திராவிடம் என்பது எப்படி முட்டாள்த்தனமான வாதமோ, அதுபோலத்தான் இந்த பார்ப்பணீயமும். பெரியார் முன்னெடுத்த காலகாட்டத்தில் பிறப்பால் நான் உயர்ந்தவன் ஒரு குறிப்பிட்ட சாதியினர் சொல்லி வந்ததால் இது அவசியமாயிற்று.


"செந்தழல் பொறை திருமேனியும் காட்டி,
திருப்பெருந்துரை கோவிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டிவந்தாண்டாய்
ஆரமுதே பள்ளியெழுந்தருளாயே"...திருவாசகம்

//அடையாளப் படுத்திக் கொள்ள ஒரு ஜாதி. அதை வைத்து இயங்க ஒரு சமூக வசதி. அவன்–நான் வேறு-வேறு என்று எப்போதும் உள்ளே ஒரு பிரிவினை - இவை இருப்பவன் தன் பெயரின் பின்னால் எதையும் குறிப்பிடாமலேயே அவன் பார்ப்பனீயவாதி, அற்பவாதி!//

அப்படி எடுத்துக் கொண்டால், இன்றைய அனைத்து அரசியல் கட்சிகளும் அதைத்தானே செய்கின்றன. மருத்துவர் ராமதாஸ் பார்ப்பணர் என்று சொல்வதைல்லையே.

பொருள் மாறிப்போன பதத்தை திரும்ப திரும்ப பயன் படுத்துவதில் அர்த்தமில்லை டாக்டர்......


அன்புடன்
ஆரூரன்

K.MURALI said...

தொடர்வதர்க்காக

Unknown said...

யாரைவிடவும் நான் தாழ்ந்தவனில்லை,யாரை விடவும் நான் உயர்ந்தவிந்தவனில்லை என்பதை உணரும் வரை இப் போராட்டம் தொடரும்

Anandi said...

thanks dr.

Murali said...

மனிதனை பிரிவினைக்குளாக்கும் எதுவும் ஒதுக்கப்பட வேண்டியதே, பரிதாப நிலை நாம் மாந்தர்களை ஒதுக்குகிறோம். இதை அவாளும் புரிஞ்சுக்கணும், இவாளும் புரிஞ்சுக்கணும். எவா எந்த பெயரில் வேற்றுமை பாராட்டினாலும், அது மனித குல வளர்ச்சியை பின்னடைய செய்யும்.

Rajan said...

திராவிடன் என்ற வாதம் கேனத்தனமோ என்னவோ அத விடுங்க, திராவிடன்னு சொன்னா தலித்துகள் மட்டுமா வர்றாங்க தன்ன அப்பிடி நம்பிட்டு இருக்க பல தரப்பட்டவங்க அதுல அடக்கம். பார்பநீயம்னா மட்டும் பிராமணர்கள் மட்டும் தலை எடுப்பது ஏன்?

Rajan said...

தவறே கிடையாது ! பிராமணம் தூக்கிப் பிடிக்கும் பார்பநீயம்னே சொல்லலாம் இனி ...

tamil said...

ஆதிக்க மனப்பான்மைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
பணம்,செல்வாக்கு,கல்வி,அழகு என பல காரணங்களால் தான் உயர்ந்தவர் என கருதி ஆதிக்கம் செலுத்த ஒருவர் முயலக்கூடுமே.சாதி இல்லாத சமூகங்களில்/மதங்களில் ஆதிக்கவாதிகளே இல்லையா.தன் மதம் உயர்ந்தது,ஆகவே தான் உயர்ந்தவர் என நினைப்பது என்ன ஈயம்?.

கீழ்மைக் குணங்கள் பல உண்டு.உங்களுக்கு அதில் ஒன்று பிடிக்கவில்லை.அதைப் பார்பனியம் என்கிறீர்கள். பொறாமை,புறங்கூறல் போன்றவையும் கீழ்மைக்குணங்களே

பார்பனியம் என்று சொல்வதை விட சாதீயம் என்றால் புரிந்து கொள்தல் எளிதுதானே.முதலாளித்துவம்,இனவாதம் என்றுதானே எழுதுகிறோம்.
கம்யுனிசம் நடைமுறையில் இருந்ததாகச் சொல்லப்படும் நாடுகளிலும் முழுமையான சமத்துவம் நிலவியதில்லை.
ஆதிக்கம் செலுத்துவோர் அங்கும் இருந்தனர்,அவர்களால அடக்கப்பட்டோர் அங்கும் இருந்தனர்.

எனவே திரும்ப திரும்ப பார்பனியம் என்ற சொல்லை பயன்படுத்துவதை நியாயப்படுத்தாதீர்கள்.சாதி திமிரைக் குறிக்க சாதியம் என்பதை பொருத்தமான ஒன்றாக ஏற்பதில் என்ன தயக்கம்.

கண்ணா.. said...

ஓரு வார்த்தைக்கு புது விளக்கம் கூற முயற்சிக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

:)

Dr.Rudhran said...

the term is not about casteism but many more characteristics.
and, tamil, if you chose to hide in anonymity your comments will not be published hereafter, thereby preventing your views from reaching those who read this page/ post.

புருனோ Bruno said...

//அவனுக்கு முருகு என்றால் அழகு. அவனுக்கு முருகன் தான் தெய்வம்.//

அருமை அருமை !!

:)

அய்யனார் said...

எங்க தலைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னீங்களா..?!

வழிப்போக்கன் said...

இரண்டு வகை பார்ப்பனீயங்கள் இருக்கின்றன.
ஒன்று பழைய பார்ப்பனீயம் - பிறப்பால் வந்தது.
இரண்டாவது - புதுப்பார்ப்பனீயம் - ருத்ரன்போன்ற திராவிடப் புதுப்பார்ப்பனர்களால் ஏற்பட்டது.

Dr.Rudhran said...

this is not about aryan-dravidian, in fact this brahminism can be seen in people all over the world.
the comment by vazhipokkan is admitted since he has the honesty in revealing his identity while commenting.
i have not published a comment by tamil as the person does not have an identity to which i can respond if needed.
mere publishing a comment does not mean that i subscribe to that view.
however if anyone uses this blog to spit venom and hate on individuals that shall not be published.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மணிகண்டன் said...

***
this is not about aryan-dravidian, in fact this brahminism can be seen in people all over the world.
the comment by vazhipokkan is admitted since he has the honesty in revealing his identity while commenting.
i have not published a comment by tamil as the person does not have an identity to which i can respond if needed.
mere publishing a comment does not mean that i subscribe to that view.
however if anyone uses this blog to spit venom and hate on individuals that shall not be published.
****

I am surprised that it took you several months to come to this conclusion. Either you had overwhelming confidence on readers or you were too naive.

Anyways, it is better late than never.

Looking forward to read your new posts - hopefully not the reactionary ones based on provocations.

malarvizhi said...

நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Ashok D said...

Well said sir

டிராகன் said...

///ஏனென்றால் பார்ப்பனீயம் பிறப்பல்ல. அது ஓரூ கீழ்மை குணம். ///

அதைதான இத்தனை நாளா சொல்லி வருகுறீங்க ....,ஒத்துக்கமட்டங்க சார் ..,well said

baskar said...

கடந்த இரு பதிவுகளும் மிக சிறப்பானது. தொடர்ந்து இது போன்ற பல படைப்புக்களை அதன் காரணங்களை சற்று விளக்கமாக எழுத வேண்டுகிறேன்.

Post a Comment