Saturday, April 17, 2010

இன்று நான்..


ஒரு கிழவியைக் கூட வைத்துக்கொண்டு வைத்தியம் பார்க்கத் துப்பில்லாத அரசு, ஸ்நேகிதிக்காக மொத்த நாட்டுடன் விளையாட்டில் விளையாடும் அமைச்சர், ஒரு முழு மலையை விழுங்குவதில் ஆர்வம் காட்டி அதற்காக அங்கிருக்கும் மக்களை விரட்ட அவர்களது ஆதரவாளர்களை வேட்டையாடும் ஒரு புத்திசாலி...

பட்டியல் எவ்வளவு நீளம்?

இங்கே இணையத்தில் இதை எழுதும் சௌகரியம் சிலருக்கு இருட்டு கொடுக்கும் சுதந்திரம், சிலருக்கு வடிகால், சிலருக்கு சிலர் மீதிருக்கும் தனிப்பட்ட வெறுப்பை உமிழ ஒரு வாய்ப்பு...

விளம்பரப்பிரியர்கள் ஒரு காலத்தில் நிறைய செய்ய வேண்டியிருந்தது; இப்போதெல்லாம் 15 நிமிடப்புகழ் போல ‘இன்றைய முன்னணி இடுகை’ ஆக்கிவிட்டால் போதும் என்று ஆகிறது!

இதில் ஹூஸைன்/லீனா இரண்டையும் புரிந்து கொள்ளாமலேயே அவர்களுக்கு விளம்பரம் தரவும் ஒரு கூட்டம்- தன்னையே விளம்பரப்படுத்திக்கொள்ள, அறிந்தே சிலர் அனிச்சையாகச் சிலர். பார்ப்பனீயம் எப்படி ஒரு குறிப்பிட்ட கூட்டத்தில் பிறந்தவர்களைக் குறிக்கவில்லையோ அப்படித்தான் தாலிபானீயமும் (இசம் தான் தமிழனுக்குப் பிடிக்காதே).

எனக்கு கூட்டமாய் எதிரியை அடிக்கப் பிடிக்காது. நான் அர்ஜூனாக இருந்தால் கிருஷ்ணனை கூட அழைத்துச் சென்றிருக்கமாட்டேன். என் வலியை என் கொள்கையை உரக்கச் சொல்லும் தைரியமும் அதை எதிர்ப்பவர்களை எதிர்க்கும் துணிவும் எனக்கு இல்லாவிட்டால் என் வாய் திறக்காது.

நிகழ்வுகளைப் பார்த்தால் வருத்தமாய் இருக்கிறது. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாகவும் இருக்கிறது. இது வரை கூட்டம் கூட்டிக்கொண்டதில்லை என்றாலும் கூடிய எவரையும் விட்டுக்கொடுத்ததும் இல்லை; இன்று விலகி நிற்கவும் முடியவில்லை, வேடிக்கை பார்க்கவும் முடியவில்ல, வேதனையை வெளிப்படுத்தவும் முடியவில்லை.

இணையத்தில் நண்பர்கள் சிலர் கிடைத்தது சந்தோஷம். அதைவிட எதிரிகளை அடையாளம் கண்டு கொண்டதில்தான் மகிழ்ச்சி. ஆனால், நண்பர்களைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பது அவர்களை, அவர்களின் செயல்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதாய் ஆகாது எனும் அடிப்படை புரியாத விடலைகள், முட்டாள்கள், முரண்படவே வாதிடுபவர்களைப் பார்த்தால் எதற்கு எழுத வேண்டும் என்று தோன்றுவதைப்போலவே இன்னும் எழுதவேண்டும் என்றும் தோன்றுகிறது.

எது நடந்தாலும் இன்ஷா அல்லாஹ், நடந்தபின் மாஷா அல்லாஹ்.



நான் இந்தியன், தமிழன், கணினியின் விசைப்பலகையுடன் பரிச்சயமானவன். என் மொழியைக் கூட இன்னொரு மொழி மூலமே தட்டச்சுபவன். கூகிலுடுவதே ஆராய்ச்சி என்று நினைத்துக் கொள்பவன்...

ஆனால் என் வலியைக் கூட மௌனமாக வெளிப்படுத்துபவன். என் முதுகைச் சொரிந்து கொள்ளுமளவுக்கு மட்டும்  என் நகங்களை வளர்த்துக்கொண்டவன். நான் உங்களின் பலரைப் போலத்தான், ஒளிவட்டத்தைக் கூச்சத்துடன் நிராகரிப்பவன்; ஒளிவட்டம் மேலிருந்து வரும்போது அதில் மூக்கையும் நுழைப்பவன்!

33 comments:

வாவணன் said...

Great! We need you to write more! I smell Khalil Gibran.

Chitra said...

நான் இந்தியன், தமிழன், கணினியின் விசைப்பலகையுடன் பரிச்சயமானவன். என் மொழியைக் கூட இன்னொரு மொழி மூலமே தட்டச்சுபவன். கூகிலுடுவதே ஆராய்ச்சி என்று நினைத்துக் கொள்பவன்...

ஆனால் என் வலியைக் கூட மௌனமாக வெளிப்படுத்துபவன். என் முதுகைச் சொரிந்து கொள்ளுமளவுக்கு மட்டும் என் நகங்களை வளர்த்துக்கொண்டவன்

........ I could identify myself in these lines.

Dr.Rudhran said...

whether sarcastic or humourous, i have published the previous comment, despite the fact that this comment can't be traced.
only decent (even if critical) comments shall be published here.

விஸ்வா said...

:-)

சிவப்ரியன் said...

"நான் அர்ஜூனாக இருந்தால் கிருஷ்ணனை கூட அழைத்துச் சென்றிருக்கமாட்டேன்"

கரெக்ட்.

"நண்பர்களைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பது அவர்களை, அவர்களின் செயல்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதாய் ஆகாது"


எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா?
ஆமோதிக்கிறேன்.

Unknown said...

டாக்டர், எந்த நண்பர்களை இங்கே விமர்சனம் செய்கிறீர்கள் என்று எனக்குப் புரியாவிட்டாலும்..உங்கள் கோபம் நியாயம்

AkashSankar said...

என்ன கொடுமை... ஒரு எண்பது வயது மூதாட்டியை மனிதாபிமானம் இல்லாமல் திரும்ப அனுப்பிய அரசாங்கத்திற்கும், தீவிரவாதி(ஆயுதத்தை எந்த வகையில் தொட்டலும் தீவிரவாதமே... தற்காப்புகாக அரசாங்கங்கள் கொன்று குவிக்கும் அப்பாவி மனித உயிர்கள் எத்தனனை...) என்று குற்றம் சாட்டபட்டவருகும் என்ன வித்தியாசம்....

uthamanarayanan said...

That Arjuna needed Lord Krishna,may be you have the guts to stand alone and fight; but are you not happy , if not Lord Krishna .at least people lime me are with you here?

Sundararajan P said...

//ஒரு கிழவியைக் கூட வைத்துக்கொண்டு வைத்தியம் பார்க்கத் துப்பில்லாத அரசு, ஸ்நேகிதிக்காக மொத்த நாட்டுடன் விளையாட்டில் விளையாடும் அமைச்சர், ஒரு முழு மலையை விழுங்குவதில் ஆர்வம் காட்டி அதற்காக அங்கிருக்கும் மக்களை விரட்ட அவர்களது ஆதரவாளர்களை வேட்டையாடும் ஒரு புத்திசாலி...//

அதிகார பீடத்தில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல், சமூகத்தில் தனக்கான இடத்தை பாதுகாத்துக் கொள்வதே புரொஃபஷனலிஸம் என்ற கருத்து நிலவும் இன்றைய காலத்தில், சமூகப் பொறுப்புள்ள புரொஃபஷனலிஸ்ட்-ஆக தங்கள் கருத்துகளை முன் வந்ததற்கு பாராட்டுகளும், நன்றிகளும்..!

Sarathguru Vijayananda said...

கோபம், விருப்பு, வெறுப்பு,தைரியம், கையாலாகத்தனம், சுருங்கி போய்விட்ட நம் வாழ்க்கைத் தரம் மற்றும் முறை அனைத்தையும் ஒரே பதிவில் அதுவும் இவ்வளவு சிறிய பதிவில் இட நிச்சயமாக திரு ருத்ரனாகவோ அல்லது அவர் போல் திறமையானவனாகவோ இருக்கவேண்டும்.

நான் அவ்வப்போது வந்து படிக்கும் உங்களது வாசகன். நன்றி டாக்டர் ருத்ரன். தொடர்ந்து எழுதுங்கள்.

http://www.manalkayiru.com

மோனி said...

..//நான் உங்களின் பலரைப் போலத்தான், ஒளிவட்டத்தைக் கூச்சத்துடன் நிராகரிப்பவன்; ஒளிவட்டம் மேலிருந்து வரும்போது அதில் மூக்கையும் நுழைப்பவன்!//..

Yes Doctor.

Ahamed irshad said...

//ஸ்நேகிதிக்காக மொத்த நாட்டுடன் விளையாட்டில் விளையாடும் அமைச்சர்//

சரியாக சொல்லியிருக்கிறீர்கள் டாக்டர்.

நல்ல வேளை இவர் ஐ.நா. சபை தேர்தலில் ஜெயிக்கவில்லை. இவர் பண்ற உட்டாலக்கடி வேலைக்கு இந்தியாவின் மானம் எவரெஸ்ட்லேயே போய் உட்கார்ந்து இருக்கும்..

Santhappanசாந்தப்பன் said...

அருமை. இன்றைய கணினிப் பயன்பாட்டை விளக்கிய விதம் அற்புதம்

Amudhavan said...

சுருக்கமான வார்த்தைகளில் நினைத்ததைச் சொல்லிவிடும் கலை உங்களுக்கு அனாயாசமாய்க் கைவருகிறது. ஒரு கவிதைக்கேயுரிய அர்த்தத்தையும் அழகையும் உங்கள் வரிகள் தருகின்றன.ஒவ்வொரு வாக்கியமும் நிறைய சிந்திக்க வைக்கின்றன.
http://amudhavan.blogspot.com

Ashok D said...

//நான் அர்ஜூனாக இருந்தால் கிருஷ்ணனை கூட அழைத்துச் சென்றிருக்கமாட்டேன்//

:)

சிலேட் said...

இதில் ஹூஸைன்/லீனா இரண்டையும் புரிந்து கொள்ளாமலேயே அவர்களுக்கு விளம்பரம் தரவும் ஒரு கூட்டம்- தன்னையே விளம்பரப்படுத்திக்கொள்ள, அறிந்தே சிலர் அனிச்சையாகச் சிலர்.

நானும் அஙகு தானிருந்தேன் இவர்களின் ஜனநாயகத்தையும் வரம்பையும் பார்த்தபடி,,,

பனித்துளி சங்கர் said...

இனி நாம் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கே வெக்கமாக இருக்கிறது .

dheva said...

//ஆனால் என் வலியைக் கூட மௌனமாக வெளிப்படுத்துபவன். என் முதுகைச் சொரிந்து கொள்ளுமளவுக்கு மட்டும் என் நகங்களை வளர்த்துக்கொண்டவன். நான் உங்களின் பலரைப் போலத்தான், ஒளிவட்டத்தைக் கூச்சத்துடன் நிராகரிப்பவன்; ஒளிவட்டம் மேலிருந்து வரும்போது அதில் மூக்கையும் நுழைப்பவன்!
//


You are so correct sir!

Thekkikattan|தெகா said...

வருத்தங்களை பதிவு செய்வதே எனக்கும் வாடிக்கையாகிப் போனது...

ஜோதிஜி said...

நிறைவாக உணர்ந்தேன்.

நிஜம் என்பது எவரும் விரும்பாதது.
நிழல் அணைவருக்கும் பிடித்தமானது.

அதனால் என்ன ஏதோவொரு சமயத்தில் நிஜம் வெளியே வந்து தொலைத்து விடுவதை எவராலும் தடுத்துவிட முடியவில்லை. நிழலை தனிமைப்படுத்தவும் தெரியாமல் அதற்கே பலியாகி விடுவதும் சோகமாக இருந்தாலும் சமூகம் அதைத் தானே விரும்புகிறது.

மாற வேண்டும். இல்லாவிட்டால் மாற்றி விடும்.

உணர்கிறார்களா பார்க்கலாம்?

சாமக்கோடங்கி said...

//
நான் இந்தியன், தமிழன், கணினியின் விசைப்பலகையுடன் பரிச்சயமானவன். என் மொழியைக் கூட இன்னொரு மொழி மூலமே தட்டச்சுபவன். கூகிலுடுவதே ஆராய்ச்சி என்று நினைத்துக் கொள்பவன்...

ஆனால் என் வலியைக் கூட மௌனமாக வெளிப்படுத்துபவன். என் முதுகைச் சொரிந்து கொள்ளுமளவுக்கு மட்டும் என் நகங்களை வளர்த்துக்கொண்டவன். நான் உங்களின் பலரைப் போலத்தான், ஒளிவட்டத்தைக் கூச்சத்துடன் நிராகரிப்பவன்; ஒளிவட்டம் மேலிருந்து வரும்போது அதில் மூக்கையும் நுழைப்பவன்!//

சத்தியமான வார்த்தைகள்.. நல்ல சிந்தனைகள்.. நன்றி..

சாமக்கோடங்கி said...

ருத்ரனின் பார்வை கூர்மையானது...

Murali said...

சமூக வளர்ச்சி என்பது அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டது என்றே தோன்றுகிறது.

மயூ மனோ (Mayoo Mano) said...

Very true...I found myself in your article!

sakthi said...

Nice Dr

sasikumar said...

உங்கள் கோபம் உண்மையானது .நீங்கள் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் . பலரின் முகதிரைகளை கிழிக்க வேண்டும்

Dr.Rudhran said...
This comment has been removed by the author.
Anonymous said...

Good one Dr. !

dr.srinivasan said...

the pain in the soul will exhibit itself in a very brutal form doctor.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//இன்று விலகி நிற்கவும் முடியவில்லை, வேடிக்கை பார்க்கவும் முடியவில்ல, வேதனையை வெளிப்படுத்தவும் முடியவில்லை. //

புரியுது :) ம்ம்..

கண்ணகி said...

//இன்று விலகி நிற்கவும் முடியவில்லை, வேடிக்கை பார்க்கவும் முடியவில்ல, வேதனையை வெளிப்படுத்தவும் முடியவில்லை. //

என்ன செய்ய..வேதனைதான் பலவிசயங்களில்..

காஞ்சி பிலிம்ஸ் said...

//நான் அர்ஜூனாக இருந்தால் கிருஷ்ணனை கூட அழைத்துச் சென்றிருக்கமாட்டேன்//

//எது நடந்தாலும் இன்ஷா அல்லாஹ்// - ஆனால் சிகண்டியை மட்டும் விடுவதாகயில்லை!!!

VELU.G said...

//
ஆனால் என் வலியைக் கூட மௌனமாக வெளிப்படுத்துபவன். என் முதுகைச் சொரிந்து கொள்ளுமளவுக்கு மட்டும் என் நகங்களை வளர்த்துக்கொண்டவன். நான் உங்களின் பலரைப் போலத்தான், ஒளிவட்டத்தைக் கூச்சத்துடன் நிராகரிப்பவன்; ஒளிவட்டம் மேலிருந்து வரும்போது அதில் மூக்கையும் நுழைப்பவன்!
//

தெளிவான வரிகள்

Post a Comment