Monday, April 12, 2010

வடகலை ஐயங்கார் வீட்டில்..


ஐயங்கார் வீட்டுப் பெண் ஒருத்தியின் கதை இது. ஐஸ்வர்யா, தீபிகா போல அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, ஆனால் அவள் வாழ்க்கை அழகு.
தாதெகிங் கூறுவது போல பள்ளம்தான் உயரத்தை தீர்மானிக்கும். அவளது அழகை அவளது தாத்தாவின் குணமும் செயலுமே தீர்மானிக்கின்றன. இது அவள் கதை என்பது போல அவளது தாத்தாவின் கதையும்தான்.
கமலா படிப்பில் ஆர்வமுள்ள பெண். சிறு வயதில் தெருவில் சிறுவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது கில்லித் தண்டு கண்ணில் பட்டு ஒரு கண்ணில் பார்வை இழந்தாள். என்னென்னவோ வைத்தியங்கள் செய்தும் சரியாகாததால், மாற்றுக் கண் வைத்துப் பார்க்கலாம் என்று மருத்துவர்கள் முடிவெடுத்தார்கள்.
கண்ணில் இப்போதெல்லாம் நுண்ணிய கருவிகள் மூலம் உள்பார்த்து, கணினியில் படமாக நிபுணர்கள் பார்வையிடுவது போல அந்தக் காலத்தில் இல்லை. அவளது கண்ணுக்குள் எப்படி இருக்கிறது, மருந்துகள் என்னென்ன மாற்றங்களை விளைவிக்கின்றன என்பதையெல்லாம் ஒரு தேர்ந்த ஓவியன் பார்த்து வரைய வேண்டும். அந்தப் படங்களின் அடிப்படையில்தான் மருத்துவக் குறிப்புகள் விவாதிக்கப்படும்.
அப்படி கண்ணோடு கண்ணோக்கிய ஓவியனுக்கும் கமலாவிற்கும் காதல் பிறந்தது. அந்தக் காதலுக்கு வழக்கம் போல வீட்டில் எதிர்ப்பு இருந்தது. அவளது குடும்பம் அப்படி. இதைப் புரிந்து கொள்ள அவளது தாத்தாவைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த தாத்தாவின் பெயர் கிருஷ்ணமாச்சாரி.
மதராஸ் வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் தலைவர், அன்றைய (1924-1930) சட்டமன்ற உறுப்பினர், எம். கிருஷ்ணமாச்சாரி ஒரு வடகலை ஐயங்கார். அவர் ஜாதி நமக்கு இப்போது முக்கியமில்லாததாய்ப் படலாம், ஆனால் அவருக்கு அது மிகவும் முக்கியமாகப் பட்ட ஒன்று. சாதிப் பற்று மட்டுமின்றி, மதப்பற்றும் அவருக்கு அதிகம். இதை அவர் எழுதிய நூல்களில் ஒன்றான –India’s Higher Call (1934) என்பதில் பார்க்கலாம். அவர் பல விஷயங்களில் தீர்மானமாக இருந்தார். அம்பேத்கர், காந்தி ஆகியோரை எல்லாம் எதிர்த்தார்.
அவரது கொள்கைகளில் சில-
1. பெண்களுக்குத் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத்தர முடியாது. அவர்களைச் சின்ன வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும், இதுதான் அவர்களுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நல்லது. (அப்படிச் செய்யாவிட்டால் ஒரு பெண் தன் விருப்பப்படி எவனையாவது திருமணம் செய்து கொண்டு விடுவாள்!).
2.எல்லாரும் சமம் என்பது எல்லாம் சுவையான கட்டுக்கதை. காந்தி மட்டுமல்ல, பலரும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி நாட்டின் தர்மத்தைக் குலைக்கிறார்கள். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசம் குறித்து காந்தி காட்டும் அக்கறை நாட்டுக்கு நல்லதல்ல, இதனால் உயர் பண்புகளைக் கடைபிடிக்கும் ஸநாதனவாதிகள் எல்லாரும் ஒன்று திரண்டு கொதித்தெழுவார்கள்.(!)
3.எல்லாருக்கும் வாக்குரிமை என்பது சரியல்ல. படிக்காதவர்கள் சரியான முறையில் தேர்தலில் பங்கேற்கத் தகுதியில்லாதவர்கள்; வாக்களிக்க அருகதையற்றவர்கள் .
4. தாழ்த்தப்பட்டவர்கள் அழுக்கானவர்கள் மட்டுமல்ல, பாப காரியங்களில் ஈடுபடுபவர்கள். (பக்கம் 110, மேலே குறிப்பிட்ட அவரது புத்தகத்தில்). பக்தி, பிரபத்தி, கைங்கரியம் போன்ற உயர்குணங்கள் புரியாமல் காந்தி சாதுர்யமான வார்த்தைகளால் மக்களைத் திசை திருப்புகிறார்! (பக்கம் 111)
5. அம்பேத்கரிடம் அவர் வாதிட்டதை வைத்துப் பார்த்தால், மதத்தின் தலைவர்கள் சொற்படி கேட்டுத்தான் அடிப்படை உரிமைகள் குறித்த விஷயங்களில் அரசு முடிவெடுக்க வேண்டும்.
ஜகத்குரு சங்கராச்சாரியர் முன்னிலையில் கல்கத்தாவில் 1933 நடந்த சனாதன தர்ம மாநாட்டின் தலைவராக இந்த கிருஷ்ணமாச்சார்யா, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கு எதிரான சட்டத்தையும், காந்தியின் ஆலயப் பிரவேசப் போராட்டத்தையும் அசுரத்தனமானவை என்றும் குறிப்பிட்டு உரையாற்றினார்.
ஆனால் இதே கிருஷ்ணமாச்சாரிதான் இந்தியாவின் முதல் (Moral Science) நீதிநெறி போதனைக்கான பாட நூலை 1911 ஆண்டில் எழுதியவர். (The handbook of Morals).

சாதிப்பற்றும் மதப்பற்றும் மிகுந்து, இவற்றுக்காக ஓயாமல் பேசியும் எழுதியும் வந்த அவருக்கு வரதாச்சாரி என்றொரு மகன். இந்த வரதாச்சாரி கோவில் யானைக்கு நாமம் U போடுவதா Y  போடுவதா என்ற வழக்கில் ஆஜரானவர். இந்த வரதாச்சாரியின் மகள் கமலா.
அவள் சாதியை விடவும் காதலுக்கு முக்கியத்துவம் தந்தாள்.
வீட்டாரின் எதிர்ப்பை மீறி, ஜாதியை, சம்பிரதாயத்தைப் புறக்கணித்துத் தன் காதலன் வீட்டுக்கு வந்தாள். அந்தக் காதலர்கள் திருமணம் செய்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
அவளுக்கு கோவிலுக்குப் போவதில் நம்பிக்கை கிடையாது. இன-மத வேறுபாட்டுடன் யாரையும் பார்க்கவும் தெரியாது. தன் 80வது வயதில் 23 வயது பெண் ஒருத்தி, “பாட்டி, எங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டார்” என்று சொன்ன போது, சொல்லிப்பாரு, கேட்டுப்பாரு, ஒத்துவரலென்னா வீட்டை விட்டு வெளியிலே வந்துடு. இந்தப் பையனை லவ் பண்றே இல்லே, அவனை நம்பினா டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ” என்று அறிவுரை(!) வழங்கியவள்.
அவளுக்கு சாதி கிடையாது, இனம் கிடையாது, மத நம்பிக்கையும் கிடையாது, போலிச் சடங்குகளிலும் ஈடுபாடு கிடையாது. தன் காதல் கணவன் இறந்த போது கூட வெட்டியாய் காரியமெல்லாம் வேண்டாம் என்று சொன்னவள்.
அவள் தாத்தா சொன்னது போல் நடந்திருந்தால் மிகச் சிறிய வயதில் பால்ய விவாகம் நடந்திருக்கும். வசதியாகக் கூட வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவளைப் பற்றிப் பேச ஒன்றும் இருந்திருக்காது. அவளது தாத்தா சொன்னபடி நாடு கேட்டிருந்தால், இன்னும் ஜாதி பேதம் தீவிரமாக இருந்திருக்கும்.
60 ஆண்டுகளுக்கு முன்னர் இவளைப் போன்றோரும் இருந்தார்கள், இவளது தாத்தாவைப் போன்றவர்களும் இருந்தார்கள். இன்னமும் இப்படி இரண்டு வகை மக்களும் இருப்பதுதான் கேவலம். இன்னமும் ஜாதி வெறியுடன் மக்கள் இருப்பதுதான் அநாகரீகம். இதை இணையத்திலும் காட்டிக்கொள்வது தான் அதிகேவலம்.
கண்பார்வை சரியில்லாததால் அவள் படிக்கவில்லை. படித்தும் கோணலாகவே பார்ப்பவர்களைவிடவும் அவளது பார்வை கூர்மையானது, தெளிவானது.
அவளது சிறப்பு பிறந்த இனத்தால் அல்ல, வாழ்ந்த விதத்தால். 
சில குறிப்புகள்: 



31 comments:

இனியா said...

Good one Dr.Rudhran

வால்பையன் said...

அந்த கிருஷ்ணமாச்சாரு நேத்தியில இருந்து பொறந்துருப்பார் போல! இப்ப கூட நிறைய பேருக்கு அப்படி தான் ஒரு நினைப்பு!

சந்தனமுல்லை said...

Wonderful Doctor!!

Thanks for sharing.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இருவகை வித்தியாச மனிதர்களையும் அறிய வைத்தீர்கள்.

uthamanarayanan said...

Although heard about the name of this old man , the details given in your page are amazing; how people with both the views were able to sustain especially the grand daughter's grit and determination to fight is something to be kept in mind for long , long time.Thank you Dr.

தமிழநம்பி said...

///இன்னமும் இப்படி இரண்டு வகை மக்களும் இருப்பதுதான் கேவலம். இன்னமும் ஜாதி வெறியுடன் மக்கள் இருப்பதுதான் அநாகரீகம். இதை இணையத்திலும் காட்டிக்கொள்வது தான் அதிகேவலம்.///

அருமை.

/// கண்பார்வை சரியில்லாததால் அவள் படிக்கவில்லை. படித்தும் கோணலாகவே பார்ப்பவர்களை விடவும் அவளது பார்வை கூர்மையானது, தெளிவானது.///

மிகச் சிறப்பு.

Thenammai Lakshmanan said...

அவளது சிறப்பு பிறந்த இனத்தால் அல்ல, வாழ்ந்த விதத்தால். //

அருமை ருத்ரன்...விசையுறு மனம் வேண்டும்

Unknown said...

Paaratta vendiya manadhayiriyam andha ammaiyaarukku!!!

Vanangughiraen

Sabarinathan Arthanari said...

http://www.ambedkar.org/ambcd/16A.%20Evidence%20Taken%20Before%20The%20Joint%20Committee%20PART%20I.htm#a14

:)

SPGR. said...

Wonderful Article Dr.

ரவி said...

அருமை !

ஆரூரன் விசுவநாதன் said...

//ஆனால் இதே கிருஷ்ணமாச்சாரிதான் இந்தியாவின் முதல் (Moral Science) நீதிநெறி போதனைக்கான பாட நூலை 1911 ஆண்டில் எழுதியவர். (The handbook of Moral)//

1947 வரை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இருந்திராத சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக, சோசலிஸ்டாக அறியப்பட்ட நேருவாலே ஏற்றுக் கொள்ளப் பட்டாரே அதுபோலத்தான்.

காலத்தின் கட்டாயக் கொடுமைகள்.......

ஜோ/Joe said...

அருமை

யாசவி said...

there are people :):(

tamil said...

நீங்கள் குறிப்பிடும் கிருஷ்ணமாச்சார்யா வாழ்ந்த
அந்தக் காலத்தில் எல்லா மதங்களிலும் பழமைவாதிகளும்,
மிதவாதிகளும், நவீன சிந்தனை ஆதரவாளர்களும் இருந்தார்கள்.
இன்றும் இருக்கிறார்கள்.இன்றும்
பழைமைவாத அமைப்புகள் உள்ளன.
உதாரணம்:2002ல் ஒரு அமைப்பு தங்கள் மதத்தவருக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டத்திலிருந்து விலக்கு வேண்டும் என்றது.அந்த சட்டம் தங்கள் மத நம்பிக்கைக்கு விரோதம் என்றது. அதன் பெயர் All India Muslim Personal Law Board.

பித்தனின் வாக்கு said...

இன்னமும் கற்காலக் கதைகளேயே எழுதுகின்றீர்களே. 1947ல் எவன் என்ன பேசினா என்ன புண்ணியம், அதுக்கு முன்னால வைத்தியம், புராதானமான,உன்னதமான தொழில் என்றும் பிரதிபலன் பார்க்காமல் செய்யனும் கூடத்தான் சொல்லியிருக்காங்க. இதுபோலத்தான் எழுத்தறிவித்தலும், ஆனா யாரு செய்யறா?. இப்படி கடந்து போன சம்பங்களை வைத்து கும்மி கட்டுவதால் என்ன பயன். நிகழ் கால கொடுமைகளை சொன்னால் ஆவது? இப்படியும் இருக்கா என்று பரிகாரம் தேடலாம். பொழுது போக எழுதுன மாதிரி இருக்கு. கிருஷ்ன மாச்சாரின்னு நீங்க எழுதுனா கிரிக்கெட் பிளேயர் அப்பான்னு கேக்க வேண்டியிருக்கும்.

Dr.Rudhran said...

காலம் மாறவில்லையே என்றுதான் எழுதினேன்! இனி கற்காலம் மீறி தற்காலம் குறித்தும் பேசுவோம்!

பித்தனின் வாக்கு said...

உதாரணம்:2002ல் ஒரு அமைப்பு தங்கள் மதத்தவருக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டத்திலிருந்து விலக்கு வேண்டும் என்றது.அந்த சட்டம் தங்கள் மத நம்பிக்கைக்கு விரோதம் என்றது. அதன் பெயர் All India Muslim Personal Law Board.

என்னங்க தமிழ் நீங்க தமிழ் நாட்டுக்குப் புதுசா? இதை எல்லாம் பேசக் கூடாது. பார்ப்பனியம், பார்ப்பன எதிர்ப்பு, இந்து மதத்தை விமர்சித்து அரிப்பைத் தீர்த்து கொள்வது, இது எல்லாம் தான் பகுத்தறிவு, நாகரீகம்.

இந்த உண்மை புரியவில்லை என்றால் நீங்க பிரபல பதிவர் கிடையாது என்று அர்த்தம். தமிழ் என்று பெயர் வைத்து இப்படி எல்லாம் செய்யக் கூடாது. வேணுமின்னா நம்ம டாக்டர் அய்யா கிட்ட ஒரு தனி வகுப்பு எடுத்து கத்துக்குங்க.

பித்தனின் வாக்கு said...

காலம் மாறவில்லையே என்றுதான் எழுதினேன்! இனி கற்காலம் மீறி தற்காலம் குறித்தும் பேசுவோம்!


நன்றி அய்யா, ஆனாலும் மக்களின் வேற்றுமை குறைய மிக நீண்ட பயணம் போக வேண்டும். அது குறிப்பிட்ட இன தாக்குதலாக இல்லாமல் பொதுவாக தவறு செய்யும் எல்லார் மீதும் இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. ஆனா நான் தெரியாம அய்யங்காரு(இது ஒரு மோட்டார் காருன்னு நினைத்து) சொல்லிவிட்டதால் எல்லா பதிவர்களும் என்னை சாதிய அபிமானியகத்தான் பார்க்க்கின்றார்கள்)

Dr.Rudhran said...

பித்தனின் வாக்கு என்பதை பரமனின் வாக்கு என்றே எடுத்துக் கொள்வோம்!
என் வீடு நாறுகிறதே என்றால் அடுத்த தெரு மட்டும் என்னவாம் என்றால்? குப்பைகள் சேர்ந்து கொண்டேதான் இருக்கும்!
ஒரு நல்ல விஷயம், இப்போதெல்லாம் முகத்தோடும் முகவரியோடும் விமர்சனங்கள் வருகின்றன. ஆரோக்கியம் வரும் என்ற நம்பிக்கை வருகிறது!

வால்பையன் said...

@ பித்தனின் வாக்கு!

டோண்டு அவர்களின் வர்ணாசிரம ஆதரவு பதிவிற்கு எதிர்வினை தான், ஆல் இன் ஆலில் ராஜன் பதிவு, அதன் பின் அதற்கான விளக்க உரையும், அன்றிலிருந்து இன்று வரை பார்பனீயம் எதோ ஒரு வகையில் புகைந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்காக இந்த பதிவு!

உங்கள் பார்பனீய பற்றை சொறிந்து கொள்ள நிச்சயமாக அல்ல!, பார்பனீயத்தின் பல வடிவங்கலீல் ஒன்று பர்தா என பலமுறை சொல்லியாயிற்று!

பித்தனின் வாக்கு said...

அய்யா நான் பொதுவாக பேசுவதால் என் முகத்தை மறைக்கும் அவசியம் இல்லை. நரி இடம் போனால் என்ன,வலம் போனால் என்ன என்பது போல நான் என் கருத்தைச் சொல்கின்றேன். இதில் என்ன மறைவு.

நீங்கள் வால்பையனின் பதிவில் சாதி முறையை கடைப்பிடிக்கும் எல்லா சாதிவெறியர்களும் பார்ப்பனியம் என்று சொன்னது எனக்குப் பிடித்து இருந்தது. என் வீடு நாறுகின்றது என்ற உதறல் இருக்கு. நான் அடுத்த வீட்டைப் பற்றிப் பேசவில்லை. அது அவர்கள் தனிப்பட்ட விடயம். அலுவலக நேரம் முடிந்து விட்டது. நாளை வருகின்றேன் நன்றி. இதன் தொடர்ச்சி நாளை அடிக்கின்றேன்.

Kaargi Pages said...

இப்ப கவனிங்க... நம்ம பார்ப்பன பெருச்சாளிகள் சுத்தமா பதுங்கிக்கிடும். ஏன்னா நீங்க தரவுகளோடு எழுதி இருக்கிறீர்கள். இந்த மாதிரி
இடத்துல தலைய காட்ட மாட்டார்கள். முடிந்தால் முக்காடு போட்டுக் கொண்டு சாணி அடிக்க முடியுமா என்று முயற்சி செய்வார்கள்..

ஆனால் சம்பந்தமே இல்லாத இடத்தில் குலைப்பார்கள்.

இந்த தெரு நாய்கள் இருக்கிறதே.. ஒன்றுக்கு ஒன்று குத்துபிடிக்கும்.. நாம் இதென்னடா தொல்லையா போச்சேன்னு ஒரு கல்லை
விட்டெறிந்தோம் என்றால் எல்லாம் பயந்து ஓடிவிடும்.. அதில் ஒன்றிரண்டு என்ன செய்யும் தெரியுமா.. ஓடிப் போய் தெரு முக்கில் நின்று திரும்பிப்
பார்த்து குரைத்துக் கொண்டிருக்கும். கிட்டே வர பயம். இணையத்தில் கூட சாதிவெறியர்கள் இதே ஸ்ட்ராடஜியைத் தான் பயன்படுத்துகிறார்கள்..
என்ன பொருத்தம் பாருங்கள் - ஐந்தறிவு பிராணியின் பாணி!

அமுதா கிருஷ்ணா said...

அருமையான பதிவு....

Dr.Rudhran said...

Tamil என்பவரின் கருத்துக்கள் நாகரீக வார்த்தைகளால் தெரிவிக்கப்பட்டிருப்பதால் இப்போது இங்கே பதிவிடுகிறேன். ஆனாலும் முகவரி எதுவும் இல்லாமல் தொடர்புக்கு வழிவிடாதவர்கள் மறுமொழிகள் அனுமதிப்பதில்லை எனும் முடிவில் மாற்றமில்லை. இதை வெளியிடுவதும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டத்தான். அவை இறுதியில்.. இப்போது அவரது கருத்து:
tamil has left a new comment on your post "வடகலை ஐயங்கார் வீட்டில்..":

காலம மாறியதோ,மாறவில்லையோ, மாற்றங்கள் வரத்தானே செய்கின்றன.அன்று பால்ய விவாகத்தை காஞ்சி சங்கராச்சாரியர் ஆதரித்தார்.இன்று காஞ்சி மடம் அதை ஆதரிப்பதில்லை.அவரும் கூட அப்போதும் சட்டம் வந்த பின் சட்டத்தை பின்பற்றுங்கள்,மீற வேண்டாம் என்றுதான் சொன்னார். இன்றைக்கு
ஐயர்/ஐயங்கார்களிடையே பால்ய விவாகம் இல்லவே இல்லை,பெண்கள் வேலைக்குச் செல்வது மிகவும் சாதாரணமான
ஒன்று,பெண்கள் அயல்நாட்டிற்கு செல்வதும், தங்கள் துணையை தேர்ந்தெடுப்பதும் தினம் தினம் நடக்கின்றன. இதெல்லாம் புரியாமல்
பழைய கதைகளை பேசி பயனில்லை.
எல்லாச் சாதிகளிலும் சாதி வெறியும்,திமிரும் பிடித்தவர்கள் இருக்கிறார்கள்.அவர்களையும் மீறித்தான் மாற்றங்கள் வரும்.
நவீனமயமாதலை பிராமணர்கள்
முதலில் அதிக அளவில் ஏற்றனர்.
அதனால் அவர்களிடையே மாற்றங்கள் விரைவாக வந்தன.
1930களில் சுயமரியாதை இயக்க தலைவர்களுக்கு பிராமணப் பெண்கள் கார் ஒட்டிகளாக செயல்பட்டுள்ளதை பெரியாரே குறிப்பிட்டுள்ளார்.அப்போதே பல பிராமணப் பெண்கள் காந்தியத்தை ஏற்று சுதந்திரப் போரில் ஈடுபட்டனர்.
அடுத்த தலைமுறைகளில் இன்னும் அதிக மாற்றங்கள்.
அதன் விளைவுதான் இன்றைய உஷா தோரட்களும், இந்திரா நூயிககளும்.
டிவிஎஸ் வேணு சீனிவாசன மகள் லஷ்மி இப்போது தந்தையின் நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பிற்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.அவர் அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றவர். இப்படி அடுதத்டுத்த தலைமுறைகள் தொடர்கின்றன.

இறந்த காலத்தில் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் புரியுமா.

Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by tamil to ருத்ரனின் பார்வை at 13 April 2010 6:27 PM

இறந்த காலம் என்பது ராமன் பிறந்ததா, பாலம் கட்டியதா, இல்லை கீழ்மை எண்ணங்களை இன்னும் சிலர் கொண்டிருப்பதா? அப்புறம், இந்திரா உஷா லக்ஷ்மி போல முனியம்மாவும் வள்ளியும் உயர் பதவிக்கு வரட்டும் அப்புறம் பெண்கள் எல்லாரும் வளர்ந்துவிட்டதாக ஒப்புக்கொள்ளலாம். 1930 கார் ஒட்டுவது என்ன வெண்காயம், ருக்மிணி தேர் ஒட்டியிருக்கிறாள்- இது புராணமா சரித்திரமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

பித்தனின் வாக்கு said...

// இந்த தெரு நாய்கள் இருக்கிறதே.. ஒன்றுக்கு ஒன்று குத்துபிடிக்கும்.. நாம் இதென்னடா தொல்லையா போச்சேன்னு ஒரு கல்லை
விட்டெறிந்தோம் என்றால் எல்லாம் பயந்து ஓடிவிடும்.. அதில் ஒன்றிரண்டு என்ன செய்யும் தெரியுமா.. ஓடிப் போய் தெரு முக்கில் நின்று திரும்பிப்
பார்த்து குரைத்துக் கொண்டிருக்கும். //

மிக்க நன்றி கார்க்கி பக்கங்கள். அன்று மாலை ஜந்தரை ஆகிவிட்டது. எனக்கு கார் ஓட்டும் சீனப் பெண் அப்புறம் புரியாத பாசையில் முனக ஆரம்பித்து விடுவாள். ஆதலால் பாதியில் விட்டுப் போய்விட்டேன். சரி சரி ஆனாலும் தெரு முக்கில் நின்று குரைத்துக் கொண்டு தானே இருக்கும். நன்றி மறந்து ஓடிப் போகாதே. அப்புறமும் கலாச்சாரக் காவலர்கள் என்ற போர்வையில் வரும் திருடர்களைப் பார்த்துக் குரைத்தால் தானே, திருடர் வருவது அடுத்தவருக்கும் தெரியும் அல்லவா?

puduvaisiva said...

"இந்த தெரு நாய்கள் இருக்கிறதே.. ஒன்றுக்கு ஒன்று குத்துபிடிக்கும்.. நாம் இதென்னடா தொல்லையா போச்சேன்னு ஒரு கல்லை
விட்டெறிந்தோம் என்றால் எல்லாம் பயந்து ஓடிவிடும்.. அதில் ஒன்றிரண்டு என்ன செய்யும் தெரியுமா.. ஓடிப் போய் தெரு முக்கில் நின்று திரும்பிப்
பார்த்து குரைத்துக் கொண்டிருக்கும். கிட்டே வர பயம். இணையத்தில் கூட சாதிவெறியர்கள் இதே ஸ்ட்ராடஜியைத் தான் பயன்படுத்துகிறார்கள்..
என்ன பொருத்தம் பாருங்கள் - ஐந்தறிவு பிராணியின் பாணி!"

Really very nice Example Kaargi

Jackiesekar said...

அவளது சிறப்பு பிறந்த இனத்தால் அல்ல, வாழ்ந்த விதத்தால். //

அருமை ருத்ரன்...விசையுறு மனம் வேண்டும்//

தேனம்மை அவர்களின் கருத்தே என்னுடையதும்

நன்றி டாக்டர்

G.Ragavan said...

ருத்ரன் சார், நல்ல பதிவு.

நாமெல்லாம் வளர்ந்து விட்டோம். முன்னேறி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இந்தத் தொந்தரவுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகின்றவன் நான். அங்கும் இந்தக் கொட்டம் ஆட்டம் போடுகிறது. மேலாளர்கள் எல்லாம் உணவருந்தப் போகையில் நானும் ஒரு கிருத்துவ நண்பரும் அசைவ உணவு சொன்னதற்குப் பேசிய பேச்சும் ... எடுத்த வகுப்பும்...

இதே ஆள்தான் வெள்ளி வந்தால் மொடாக் குடியன்.

சீச்சீ என்று இருக்கிறது. இன்றைக்கே இப்படியென்றால்... அன்றைக்கு!

இன்னொருவர் வேறுவிதம். "ராகவன் நீங்க ஐயங்காரா? ஐயரா?"

இதுதான் அவர் என்னிடம் தமிழில் பேசியது. இரண்டும் இல்லை என்று தெரிந்ததில் இருந்து ஒரே ஆங்கிலம்தான்.

Lingesh said...

இது குழந்தைகளுக்கு காலம் காலமாக ஊட்டப்படுவந்துள்ளது என்பதும் உண்மை. நான் கிராமத்தில் வளர்ந்தவன். அங்கு இந்த கொடுமைகள் மிக அதிகம். நான் சிறுவனாக இருந்ததை விட இப்போது பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் இல்லை என்று உறுதி கூறமுடியாது.

meens said...

அருமையான பதிவு ருத்ரன் .// அவளின் சிறப்பு அவள் பிறந்த இனத்தால் அல்ல வாழ்ந்த வாழ்கையில் //--- உங்கள் இந்த பதிவை படித்துதான் நான் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை ருத்திரன் . இதை படிக்காமலேயே இருந்தாலும் இந்த பார்ப்பனீயம் எனும் விசயத்தில் உங்களை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது .

Post a Comment