Friday, March 26, 2010

துஷ்டனை என்ன செய்ய?

என்னைப் பண்புடன் இரு, பொறுமையுடன் இரு என்று சொல்லும் அன்பர்களுக்காக இந்த அநாகரீகம் பதிவிடப்படுகிறது. இது என் மனைவிக்கு வந்த கடிதம்! அவளுக்கு சென்னைத்தமிழ் அவ்வளவு தெரியாது, ஆனால் நான் பிறந்து இன்னும் வளர்ந்த சென்னையின் மட்ராஸ் பாஷையை இதுகள் தாங்குமா? நீங்களே படித்து முடிவு செய்யுங்கள்.. இதோ அந்தக் கடிதம்:
Feed: " ALL IN ALL " ???????? ???" Posted on: Friday, March 26, 2010 11:37 AM Author: chinnappenn2000 Subject: //expect pleasantries from me. Save your "Et, Tu B... //expect pleasantries from me. Save your "Et, Tu Brute" game for someone more naive.// Madam, I did not expect pleasantries from you.I did not expect obscenities from you either and was therefore rudely surprised.I know, you have many fine qualities but being civil,dignified and humble are not among those. Your superfine qualities are in full display of course, during your part time occupation as a cheer leader for the gang of thugs,twits, half wits and vagabonds who infest the cycle shop. Allah, in one of his nastiest moods must have created specimens like Rajan,Gummi,pattapatti etc and let them loose to ravage and subtract value from society.That you should choose to exhort these riffraffs to indulge in such activities is strange. //சிந்தாதிரிபேட்டை கருவாடு மாதிரிதான் இருக்கும்.// Are your super-fine qualities responsible for driving comrade Rudhran to sneak out in the evenings and seek a part time occupation as a dried fish seller in Chintadripet? I cant blame him though,for this rather odd choice of occupation. //how more memory related symptoms are surfacing other than chaetophobia, erotomania, lack of insight and attention deficit that already existed. I can only sympathise with this living thing and so I give up// What is the point of this statement? It may impress the motley crowd of thugs and lunatics in the cycle shop.This merely is symptomatic of your pedantic affectation. Will it difficult for me to ask: "Tell me madam,apart from mumps,dyspepsia,dementia,bi polar disorder,OCD,IBS and hansens that you are afflicted with,what are the physical and mental menopausal disorders you suffer from?
துஷ்டனைக் கண்டால் எல்லாரும் தூரப்போய் விட்டால் யார் தான் துரத்துவது, அல்லது சம்ஹாரம் செய்வது?

48 comments:

வால்பையன் said...

பதிவில் சொல்லபட்ட விசயங்களை தவிர்த்து தனிமனித தாக்குதலில் ஈடுபடும் போதே அவர்களது நோக்கம் புரிந்து விடுகிறது!

நாம் மக்களிடையே ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி பிரச்சாரம் அவர்களது புவாவுக்கு வேட்டு வைத்தும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் உளரி கொட்டுகிறார்கள்! அதுவே அவர்களை அடையாளப்படுத்தி விட்டது!

Dr.Rudhran said...

ப்ரோமேதெயூஸ் பற்றி எழுத ஆரம்பித்தேன்.. அதற்குள் இது!
உமாவின் ஒரு பின்னூட்டம்தான் இதுகளை இப்படிக் கிளப்பி விட்டது. அவளது இப்போதைய பதிவை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று ஆவலாக இருக்கிறது!
அந்த ஜன்மங்களுக்காக சுட்டி-
http://umarudhran.blogspot.com/2010/03/blog-post_25.html

சரவணன் said...

அது சரி, குறைக்கிற நாய்களுக்கெல்லாம் பதிலுக்குக் குறைத்துக்கொண்டிருந்தால் நம் பிழைப்பு என்னாவது?!

Robin said...

அநாகரீகமான தனி நபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கபடவேண்டியவர்களே!

Athisha said...

என்ன செய்ய?

மர்மயோகி said...

சென்னைத் தமிழ் என்று சொல்லாதீர்கள்..அது மனித பாஷையே அல்ல..நாய்களின் பாஷைதான்...பிளாட்பாரத்தில் வசிக்கும் பொறுக்கிகள்தான் சென்னையில் மெஜாரிட்டியா? அந்த நாய்கள் பேசும் பாசை எப்படி சென்னை பாஷை ஆகும்..?

Dr.Rudhran said...

இதோ இன்னொன்று வந்துவிட்டது!
எண்கள் சென்னையில் நாங்கள் பேசுவது உனக்கு நாயின் பாஷை என்றால், உன் பாஷை என்ன? உன் பாரம்பரியம் என்ன? நீ எங்கிருந்து என் நகருக்கு வந்தாய்? வந்தவன் என்ன தொழில் செய்தாய்? மானம் கேட்டு மறைந்து நின்று கூக்குரலிடும் நீ என் மண்ணுக்கு அன்னியமா என்பதே எனக்கு ஆறுதல்.

நண்பர்களே இது முழுதான சந்தை. நான் என் பெயர், முகவரியுடன் நிற்கிறேன், எதிர்கொல்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இந்தப் பதிவில் மட்டுமல்ல, இணையத்தின் எல்லா பதிவுகளிலும்.

Dr.Rudhran said...

தட்டச்சுப் பிழைக்காகத் திரும்பவும்-

இதோ இன்னொன்று வந்துவிட்டது!
எங்கள்ள் சென்னையில் நாங்கள் பேசுவது உனக்கு நாயின் பாஷை என்றால், உன் பாஷை என்ன? உன் பாரம்பரியம் என்ன? நீ எங்கிருந்து என் நகருக்கு வந்தாய்? வந்தவன் என்ன தொழில் செய்தாய்? மானம் கெட்டு மறைந்து நின்று கூக்குரலிடும் நீ என் மண்ணுக்கு அன்னியமானவன் என்பதே எனக்கு ஆறுதல்.

நண்பர்களே இது முழுதான சண்டை. நான் என் பெயர், முகவரியுடன் நிற்கிறேன், எதிர்நிற்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இந்தப் பதிவில் மட்டுமல்ல, இணையத்தின் எல்லா பதிவுகளிலும்.

இந்தப் போய் வீரம், புரட்டு, பொறுக்கித்தனம் இவற்றைத்தான் நான் பார்ப்பனீயம் என்கிறேன். பிராமானக் குடும்பத்தில் பிறந்துவிட்டவர்களை அல்ல நான் சொல்வது, திருட்டுத்த்னத்தின் அற்பத்தை அறிவுத்திரநாய்ப் பாவிக்கும் குணத்தைச் சொல்கிறேன்.

வால்பையன் said...

அடையாளங்கள் இல்லாமல் போய் விட்டனர் பார்பணியவாதிகள், எங்கிட்ட எவனும் சிக்க மாட்டிங்கிறான்! என் பக்கம் டைவர்ட் பண்ணி விடுங்க சார், அவனுக்கு சுழுக்கெடுத்து விடுறேன்!

ரவி said...

எனக்கு பாதி புரியவே மாட்டேங்குது. என்ன செய்ய. நம்ம ஆங்கில அறிவு அப்படி ?

மற்றபடி நீங்கள் பொறுமை இழப்பதே அவர்களின் வெற்றியாகும். !!

நர்சிம் said...

வருத்தமாயிருக்கிறது.

Rajan said...

ஒண்டவந்த பிடாரிகள் !

Rajan said...

அவர்களுக்கு மானங்கெட சாணியடித்தாகிவிட்டது டாக்டர் அந்த பதிவின் பின்னூட்டத்திலேயே !

Anonymous said...

They lost Doctor.. They lost completely. they are defeated and demoralized.

You have won and standing Tall..

Kudos to you..!! Please continue the way you wish.. Thats the one and only fitting reply to those cowards.

My salutes to the courage of Uma madam. Convey my regards.. Keep going and Enlighten us with you vast knowledge and wisdom and rich experiences.

With Regards

Raj.

பொன் மாலை பொழுது said...

தன் பெயரையும், இடத்தையும் வெளியில் சொல்ல இயலாத திராணி அற்ற "கையால் "ஆகாதவர்களின் கேவலமான எழுத்துக்களுக்கு நீங்கள் இடம் தர வேண்டியதில்லை. அவைகள் மலம் துடைத்த Clean-ex Papers தான்.

Radhakrishnan said...

மிகவும் வருத்தம் தரக்கூடிய நிகழ்வு, தொடராமல் இருக்க வேண்டுகிறேன்.

இதுக்காகத்தான் பொதுவாழ்விற்கேப் போகாதே என என்னை வீட்டில் எச்சரித்து வைத்தார்கள். ஆனால் நானோ எனக்கு எழுத விருப்பம் என எழுதிக் கொண்டே இருக்கிறேன். எவருடனும் பகைத்துக்கொள்ளும் விருப்பம் இல்லை எனினும், நமது கருத்துகளுக்கு பகைவர்கள் உருவாகிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே உங்கள் பதிவுகளிலிருந்து காண முடிகிறது. பல முறை மனதில் ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும் எவரேனும் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என.

உங்களின் வளர்ச்சியின் பொறாமையில் நடந்து கொள்கிறார்களா அல்லது உங்களின் எண்ணங்கள் பிறரை இவ்வாறு நடந்து கொள்ள தூண்டுகிறனவா என்பதை ஆராய்ந்து பார்த்தல் நலமே. துஷ்டன் எனப்படுபவன் எவ்வாறு உருவாகிறான் என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தோமெனில் அந்த துஷ்டனை உருவாக்குவதில் நமது பங்கும் ஏதேனும் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்வது நலமே.

பொதுவான விசயங்களை சொல்லப்போய் தனிமனித காழ்ப்புணர்ச்சிகள் எழுவது என்பது சமூகத்தில் மிகவும் கொடுமையான நிகழ்வாகும், இவர்கள் இதுபோன்று எழுதுவதால் நமக்கு ஏற்படட்டும் மன உளைச்சல் என்பதே அவர்கள் திட்டம். இப்படி எழுதுவதால் அவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள், ஒன்றே ஒன்றுதான் இருக்க இயலும், அது நீங்கள் எழுதாமல் இருக்க வேண்டும் என்பதாகவே முடியும்.

மனநிலை மருத்துவரான உங்களுக்கு இதுபோன்ற மனிதர்களை நிச்சயம் உங்கள் எண்ணங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட இயலும். மேலும் இவர்கள் எழுதுவதன் மூலம் உங்களின் தரமோ, மதிப்போ, மரியாதையோ குறைந்து விடப் போவதில்லை. இதுபோன்ற விசயங்களை நீங்கள் அனுமதிப்பதன் மூலம் அவர்களின் எண்ணம் ஈடேற வழி செய்து விடுகிறீர்கள். துஷ்டனை துரத்துவது என்பது அவன் இருப்பதையே ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பதாகும். எப்பொழுது நாம் முன்னுரிமை தருகிறோமோ அங்கே அவர்களின் செயல்பாடு அதிகமாகும் என்பது எனது கருத்து. ஒருவேளை அளவுக்கு அதிகமானால் காவல்துறையை அணுகுவதில் தவறேதும் இல்லை. ஒரு கட்டம் தாண்டும்போது சம்ஹாரமே சிறந்த வழி என்பதுதான் எனக்குள் நான் வைத்துக் கொண்ட கோட்பாடு கூட.

Murali said...

பொது வாழ்கைன்னு வந்துட்டா இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமா என்ன?.
பழுத்த மரம் காலடி படும் என்ற சமாதனம் இங்கு உதவாது.

blog படித்து கருத்து கூற தொடங்கியவுடன் எனக்கு தெளிவாக புரிந்தது, எழுத அறிவு மட்டும் போதாது வீரமும் வேண்டும், இது போன்ற கயவர்களை கழுவிலேற்ற.

கருத்து மாறுதல்களை கருத்து மோதல்கள் என்று கருதிவிட கூடாது என்பது உங்கள் பதிவை படிப்பவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். (வீணர்களை பற்றி நான் குறிப்பிடவில்லை)

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், தொடரட்டும் உங்கள் பணி.

குறிப்பு: புழுதியை கிளப்பும் பின்னோட்டங்களை மட்டருப்பது நல்லது என்றே படுகிறது, அது மேலும் பிறரை தூண்டாமல் இருக்க. இது சிறுமை போல் தொண்டறலாம் ஆனால் உற்று நோக்கினால், இவர்களது நோக்கம் தர்க்கமல்ல குதர்க்கம், சிந்தனையின் போக்கை திசை திருப்பும் செயல், இதற்கு உங்கள் பதிவுகள் ஏன் பலிகடா ஆகா வேண்டும்? இது ஒரு "chronic disease " ஆகாமல் இருக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அந்த பதிவில் எழுதியதை பற்றி பேசாமல் , தனி மனிதர்களை சீண்டிவிடும் மிருகங்கள், இப்போது எனது ப்ளாக்கிலும் தலை காட்ட ஆரம்பித்துவிட்டனர்..

ரைட்..வாங்க சின்ன பெண்ணே..
பார்த்துவிடுவோம்...

மர்மயோகி said...

மன்னிக்கவும், நான் தங்களையோ மற்ற நண்பர்களையோ குறைகூறவில்லை...பிளாட்பாரத்தில் வசிக்கும் பொறுக்கிகள் பேசும் பாசையை சென்னை பாசை என்று கூறாதீர்கள் என்றுதான் சொன்னேன்..அவர்கள்தான் தெருவில் சண்டை இட்டுக்கொண்டும், ஹோய் ஹோய் என்று கத்திக்கொண்டும், குடித்துக்கொண்டும், பொறுக்கித்தனம் செய்துகொண்டும் சென்னையின் அழகை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்..
இவர்களை குறைகூறியது தங்களுக்கு வருத்தம் எனில் மன்னிக்கவும்

நான், பயந்துகொண்டு என்னை மறைத்து கொண்டிருக்கவில்லை..என்னை பிரபலப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை..உங்களது பதிலை தெரியப்படுத்தவும்..பெரியவர்களை மரியாதைக்குறைவாக பேசுவது என் பழக்கமில்லை..

அரங்கப்பெருமாள் said...

"துஷ்டனைக் கண்டால் தூர விலகு" இது ஔவை சொன்னது கொஞ்சகாலத்திற்கு முன். பாரதி சொன்னத கேளுங்க... `பாதகம் செய்வோரை கண்டால் காறி உமிழ்ந்து விடு பாப்பா'

எம்.எம்.அப்துல்லா said...

டாக்டர், இந்த இடுகையைப் படித்தீர்களா??

http://pethusamy.blogspot.com/2010/03/blog-post_26.html

எம்.எம்.அப்துல்லா said...

//அவர்கள்தான் தெருவில் சண்டை இட்டுக்கொண்டும், ஹோய் ஹோய் என்று கத்திக்கொண்டும், குடித்துக்கொண்டும், பொறுக்கித்தனம் செய்துகொண்டும் சென்னையின் அழகை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்..


//


திரு.மர்மயோகி,

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வளத்தையும் சேர்த்து நாம் உறுஞ்சி வைத்திருப்பதால்தான் அவர்கள் தெருவில் வாழ்ந்து கொண்டும் நீங்கள் சொல்வதைப்போல கத்திக்கொண்டும் இருக்கின்றனர். குற்றவாளி நாம்தான்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வளத்தையும் சேர்த்து நாம் உறுஞ்சி வைத்திருப்பதால்தான் அவர்கள் தெருவில் வாழ்ந்து கொண்டும் நீங்கள் சொல்வதைப்போல கத்திக்கொண்டும் இருக்கின்றனர். குற்றவாளி நாம்தான்.
//

உண்மையான வார்த்தைகள்..
அவர்களும் மனிதர்கள்தான்..

Anonymous said...

இது ஒரு வேலையா மெனக்கெட்டு செய்ரானுகளே என்னத்த சொல்றது?

Thekkikattan|தெகா said...

இந்த உதறல்களுக்குப் பின்னணியில் இருக்கும் ஆசை கீழே கூறியதாகத்தான் இருக்க முடியும்....

//சிந்தனையின் போக்கை திசை திருப்பும் செயல், இதற்கு உங்கள் பதிவுகள் ஏன் பலிகடா ஆகா வேண்டும்?//

கிடைக்கும் சொற்ப நேரத்தில் நீங்க கொடுக்க வேண்டிய விசயம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். இது போன்ற 'உதறல்கள்' உங்கள் சிந்தனை ஓட்டத்தை உடைக்காமல், மென்மேலும் உத் வேகம் கொள்ளச் செய்யுமென்று அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றே நம்புகிறேன்...

தொடர்ந்து கொடுங்க...

வாக்காளன் said...

height of parpaneeyam.. stupid guys

நிகழ்காலத்தில்... said...

\அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வளத்தையும் சேர்த்து நாம் உறுஞ்சி வைத்திருப்பதால்தான் அவர்கள் தெருவில் வாழ்ந்து கொண்டும் நீங்கள் சொல்வதைப்போல
கத்திக்கொண்டும் இருக்கின்றனர். குற்றவாளி நாம்தான்.\\

:))
திரு.அப்துல்லா உங்களிடமிருந்து இப்படி ஒர் பதிலா என ஆச்சரியப்படுகிறேன்.

பிளாட்பாரம் வாசிகளை அப்படியே இருங்கள், நல்லவிதமாக வேலைக்குபோய் நாலுகாசு சம்பாதிக்க வேண்டாம் எனச் சொல்ல நாம் ஒன்றும் அரசியல்வாதிகள் இல்லையே..:)))

ஒருவனது முன்னேற்றத்திற்கு காரணம் முதலில் அவன் தான்..

பின்னர்தான் சூழ்நிலைகள்...

உங்களது இன்றைய பொருளாதாரசூழ்நிலை பிளாட்பாரம் வாசிகளை நடந்து கொண்டதால் வந்ததா?

இல்லை முயற்சியால், உங்கள் தனித்தன்மையினால் வந்ததா....)))))

Anonymous said...

It is indeed unfortunate that the person meant to hurt through offensive language.

In the event that your wife did not use offensive language this is indeed unacceptable.

Anonymous said...

//இந்தப் போய் வீரம், புரட்டு, பொறுக்கித்தனம் இவற்றைத்தான் நான் பார்ப்பனீயம் என்கிறேன். //

தி மு க தலைவர்கள் செய்வது பார்ப்பனீயமா?என்ன சொல்கிறீர்கள் மருத்துவரே?

உமர் | Umar said...

பாதகம் செய்பவரைக் கண்டால்
பயம் கொள்ளலாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
- பாரதி

டாக்டர்! அந்த அனாமதேயத்திற்கு தங்கள் மீதும், உமா மேடம் மீதும், நீங்கள் எங்கள் கருத்துகளுக்கு ஆதரவளித்து வருகின்றீர்கள் என்பதுதான், தன்னுடைய அடிப்படை குணத்தைக் காட்டும் அளவிற்கு வந்திருக்கின்றது. அவர்களை ராஜனும், வாலும், பட்டாப்பட்டியும், நானும் பார்த்துக்கொள்கின்றோம். நீங்கள் எச்சிலைத் துடைத்தெறிவதுபோல், துடைத்து விடுங்கள்.

Dr.Rudhran said...

பார்ப்பனீயம் என்பது ஜாதி அல்ல, கீழ்மை குணம். திமுக என்ன எத்தனையோ பொய்முகங்கள் உள்ளன, எல்லா மதங்களிலும்.
அநாமதேயங்களுக்கு இனி பதில் வராது, இங்கே பதிப்பும் கிடையாது.

Anonymous said...

Dr.Rudhran,
You are simply amazing.
Cheers,
Kumar.

KANNAA NALAMAA said...

"நீங்கள் பொறுமை இழப்பதே அவர்களின் வெற்றியாகும்."

"தன் பெயரையும், இடத்தையும் வெளியில் சொல்ல இயலாத திராணி அற்ற "கையால் "ஆகாதவர்களின் கேவலமான எழுத்துக்களுக்கு நீங்கள் இடம் தர வேண்டியதில்லை. அவைகள் மலம் துடைத்த Clean-ex Papers தான்."

"மனநிலை மருத்துவரான உங்களுக்கு இதுபோன்ற மனிதர்களை நிச்சயம் உங்கள் எண்ணங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட இயலும். மேலும் இவர்கள் எழுதுவதன் மூலம் உங்களின் தரமோ, மதிப்போ, மரியாதையோ குறைந்து விடப் போவதில்லை".

"பாதகம் செய்வோரை கண்டால் காறி உமிழ்ந்து விடு பாப்பா"

Er.T.K.Ganesan/Ganapathy/Coimbatore

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணன் நிகழ்காலத்தில்,

வாய்ப்புகளை அனைவருக்கும் சமமாக்கித் தருவது ஒரு அரசனின் அல்லது தலைவனின் அல்லது அரசின் கடமை. நம் தேசத்தில் காலம்காலமாக வாய்ப்புகள் அனைவரும் சமமாக்கித் தரப்பட்டதா??

என்னுடைய இன்றைய பொருளாதாரம் என் உழைப்பில் வந்ததுதான். ஆனால் அந்த வாய்ப்பை எனக்குத் தந்தது என் பிறப்பு(ஜாதி), விலை கொடுத்து நல்ல கல்வியை எனக்குத் தர முடிந்த என் தந்தை என பலகாரணிகள் இருக்கின்றது. அனைவருக்கும் ஒரே தரத்திலான கல்வி கிடைக்கும் சம வாய்ப்பு இங்கு இருக்கின்றதா??

உழைப்புச் சுரண்டல், ஒரு பகுதியினர் மட்டுமே வளத்தை உறுஞ்சுதல் என்ற விஷயத்தையெல்லாம் நீங்களும்,நானும் ஓரிரு பதில் பின்னூட்டங்களில் பேசி விளக்க முடியாது :)

விரைவில் உங்கள் திருப்பூர் வரும் வேலை இருக்கின்றது. ஆரஅமற உட்கார்ந்து பேசுவோம் :)

டிராகன் said...

//அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வளத்தையும் சேர்த்து நாம் உறுஞ்சி வைத்திருப்பதால்தான் அவர்கள் தெருவில் வாழ்ந்து கொண்டும் நீங்கள் சொல்வதைப்போல கத்திக்கொண்டும் இருக்கின்றனர். குற்றவாளி நாம்தான்.///

abdulla sir ,

Excellent wellsaid sir

சிநேகிதன் அக்பர் said...

வருத்தப்பட வேண்டிய விசயம்.

பொதுவாழ்க்கையில் இது போன்ற உளவியல் பாதிப்புக்கு உள்ளாவது உங்களுக்கு தெரியாததில்லை டாக்டர்.

ராஜ நடராஜன் said...

இதன் துவக்கம் எங்கே என்று கொஞ்சம் மெனக் கெட்டு கிட்டத்தட்ட 3 மணி நேர உங்கள் எழுத்துக்களின் வாசிப்புக்கு பின் வந்து விழுந்த தேதி நவம்பர் 27ம் தேதி 2009.இதனையெல்லாம் கடந்து போவதும்,அலட்சியப் படுத்துவதும்,முகமூடி போட்டுக்கொள்ளும் முகமிலிகளின் முகம் அவிழ்க்க சட்ட உதவிகளை அணுகுவதும் என வழிகளை தேடலாம்.இங்கும் சில புலான்ய்வு பதிவர்கள் சுற்றிக் கொண்டிருக்கலாம்.உதவுவார்கள் என நம்புகிறேன்.

எம்.ஜி.ஆர் உயிரோட இருந்திருந்தா வாத்யாரே!உங்க படத்தோட பெயரை இங்கே ஒருத்தர் கொச்சைப்படுத்துகிறார் என்றாவது புகார் விண்ணப்பம் அனுப்பி பார்க்கலாம்.இல்லாத குறையை அண்ணே அப்துல்லா நிறைவு செய்கிறார்.

Anonymous said...

Dr.Rudhran,
You are simply x simply amazing.
Regards,
Paul Pandian.

Unknown said...

dear rudran,
wishes!
there is a word
" the best is the enemy of the good, as soon you realize best is enemy of good,
always people intends to practice good only,
then one day the goods become BEST".
ignore this
"non sense virtual idiots"
my endeared nanbare
neenkal eluthuvathu midway between good and bad
theriyatha elluthu kurudarkalukku ellam pathil sollathe.(nirakari- use appropriate virtual worlds' tools to these non sense)

mana puravi virtual worldl thodarattum!
payanankal nichayam nammakku enderenrtum oundu!
thodarka !
meenakshisundaram,chennai

Unknown said...

dear rudran,
wishes!
there is a word
" the best is the enemy of the good, as soon you realize best is enemy of good,
always people intends to practice good only,
then one day the goods become BEST".
ignore this
"non sense virtual idiots"
my endeared nanbare
neenkal eluthuvathu midway between good and bad
theriyatha elluthu kurudarkalukku ellam pathil sollathe.(nirakari- use appropriate virtual worlds' tools to these non sense)

mana puravi virtual worldl thodarattum!
payanankal nichayam nammakku enderenrtum oundu!
thodarka !
meenakshisundaram,chennai

Anonymous said...

I am confused like Ravi. I could not understand the letter written by Chinnappen. It was in English: Where is the question of Madras dialect there?

What is the context? What is the provocation?

We hear one side of the story here.

There is no second opinion about the obscenity of writing such anonymous, even though the nick chinnappen is used, letters in vituperative language. Still, may we know what the provocation is?

I have been writing responding comments on various blogposts of Dr Rudran. They were all, mostly, in dignified English. Yet, Dr Rudran labelled me as a person biased against him. Anyone who differs with him, is biased against him, isn’t he?

Chinnappen also wrote some comments in my blog. They were abusive and intended to hurt. But I sympathised with that.

Why?

Chinnappen represents the Hindu zealot group (now popularly called Hindutva group). They don’t often enter into decent arguments. They just write provocative personal comments which give them some release of pent-up tension.

I said to Chinnappen; “I understand your sentiments. Yet, we differ, as it is impossible to have unanimity on such sensitive issues like religion or culture.You may develop your negative comments into a fine cogently argued blogpost, which I will read and comment”

Dr Rudhran's post on Hussein drawing is itself laced with vituperative language. He exhibitis no patience with critics. Perhaps he is putting that like a rejoinder in that blog. But here, in this very blogpost, look at his comments on Madras dialect put in by Marmayogi. On reading Marmayogi, I got his point, which are not self-centred. But Dr Rudran pounced on him, mistaking him for an enemy. Yogi clarified his point humbly. Also, look at the use or abuse of the word Parppaneeyam. He is well aware such ‘abuse’ hurts paarppanar. One Anonymous commentator here responded like that. But Dr Rudran pleads innocence saying the word is common. It is not common to use the name of a caste people to refer to evil characteristics.

It is my considered view that Dr can mellow down.

Since I don’t know what is the provocation Chinnappen got to send that missive, I have no comments except that she or he could have made her or his points to Mrs Rudran using a dignified language.

My personal advice to all those who are hurt by blogposts written by anyone, is:

'Kill with kindness. Pour out your anguish in a decent manner, which will definitely go and inflict a deeper wound on those writers, than your ‘indecent language’'

I say this because Dr’s hussain post will hurt many, many Hindus. What should they do?

Dr may please not take this as a ‘bias’ against you. That is indirectly shutting up our mouths.

My words are common to all. If Dr were in place of those who are hurt, then the above para applies to his ilk also.

aravindan neelakandan said...

Dear Rudran,

Just returned from a tour and saw these new developments. The best way to deal with such perverts is to ignore them. These anonymous characters feed on the importance they gain by your reactions. Further they help to sidetrack the issues. Or if possible silently watch them and track them and take action through cyber-police.

While i reject your views and may differ from you - I stand with you and condemn these sub-human creatures.

s.aravindan neelakandan

Murali said...

//பார்ப்பனீயம் என்பது ஜாதி அல்ல, கீழ்மை குணம். திமுக என்ன எத்தனையோ பொய்முகங்கள் உள்ளன, எல்லா மதங்களிலும்.//

பார்ப்பான் சாதி என்றால், பார்ப்பனீயம் கீழ்மை குணம் தான்.

டாக்டர், பார்ப்பான் என்பதை சாதி பெயராகவும், பார்ப்பனீயம் என்பதை கீழ்மை குணமாகவும் மாற்றியது மொழியின் தவறான பயன்பாடாகவே கருதுகிறேன்.

"பார்ப்பான்" என்பது எதிர்கால இடைநிலை ஏற்கும், தன்னளவில் பொருள் முடிவு உணர்த்தி நிற்கும் வினைமுற்று. நாம் தான் அதை பெயர் சொல்லாக பயன்படுத்துகிறோம். பார்ப்பான் சரம் பார்ப்பான், பரம் பார்ப்பான்.

//அநாமதேயங்களுக்கு இனி பதில் வராது, இங்கே பதிப்பும் கிடையாது.//

இந்த முடிவு, ஒரு புதிய தொடக்கம்.....
எல்லாம் நன்மைக்கே என்று உணர்த்த.

srikanth said...

முட்டுச்சந்தில் அகப்பட்டால் பூனை மேலே தான் விழுந்து பிடுங்கும். அடித்து விரட்டிவிட்டு விரைந்து வாருங்கள். ப்ரோமேதெயூஸ்க்கு காத்திருக்கிறோம்.

Prasanna said...

I feel very bad when I read this letter. No comments.

Ahamed irshad said...

தனிநபர் தாக்குதல் கண்டிக்கப்படவேண்டியவைகளே...

எஸ் சக்திவேல் said...

Dr, Why do you have to spend even 5 seconds on such a post? DOes it deserve the attention?

Rathna said...

முகமூடி அணிந்து கொண்டு எழுதியவரின் ஆங்கிலம் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. அதனால் தான் இதற்க்கு பின்னூட்டம் எழுதுவதற்கு யோசித்து வந்தேன், இந்த பிரச்சினை எனக்கு மட்டுமில்லை என்பது இங்கு பின்னூட்டம் எழுதிய சிலருக்கும் ஏற்ப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். Dr. நீங்கள் தாடி வளர்த்து நெற்றியில் குங்குமம் வைத்திருப்பதால் உங்களை பக்தர் அல்லது தீவிர மதவாதி என்று தவறாக புரிந்து கொண்டவர் யாரோ ஒருவர் தனது தவறான கணிப்பின் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக முகமூடி அணிந்துகொண்டு எதைஎதையோ எழுதி வருகிறார் என்று நான் நினைக்கிறன், உங்களுக்கு தெரியாததா, சட்டை செய்யாதீர்கள்.

Post a Comment