எழுத்து என் தொழில் அல்ல, விருப்பம். விரும்பியவை கூட ஒரு நிர்ப்பந்தமாக
மாறினால், காதல் கல்யாணங்களைப்போல் ஒரு புரிபடாத பரிதாபமாய் மாறிவிடுகின்றன.
யாரோ அழைத்தார்கள், நெருக்கமானவர்கள் தூண்டிவிட்டார்கள், எழுதினேன். இப்போது, எழுத ஆரம்பித்த பதிவை, முடிக்குமுன்னே ஒரு சலிப்பு வருகிறது.
ஏன் எழுதுகிறேன் எனும் கேள்விக்குப்
பதில் தெரியும். எழுத எனக்குப் பிடித்திருக்கிறது. ஏன் இப்படி அடிக்கடி நேரத்தைத்திருடி
எழுதுகிறேன்? கைதட்டல்களும் கிடைப்பதால்தான்.
வலிய செய்யப்படும் எதுவும் சுகமாக அமைவதில்லை.
ஓய்வும் அல்ல, ஓயுதலும் அல்ல. இடைவெளி தேவை போல் தோன்றுகிறது.
இன்னும் இதை நீடித்தாஎல் சரியல்ல
என்று தோன்றுவதால் ... இடைவெளி விடலாமா என்று யோசிக்கிறேன். இதையும் பதிவிட்டால், சீச்சீ நீ நாளைக்காலையேஎழுத வேண்டும் என்றும்
சில பின்னூட்டங்கள் வரும், மீண்டும் மயக்கம் வரும்.
ஆரம்பித்த மனமும் இலக்கியமும் எனும் விஷயத்தை முடித்துவிடுகிறேன்.
நாளைக்காலையேஎழுத வேண்டும்
என்றும் தோன்றலாம். அப்போது மனதிலிருந்து நிஜங்கள் மட்டுமே எவ்வித (என்னிடமிருந்தே) எதிர்பார்ப்புகளுமின்றி வரும். எனக்கும் ஆறுதலாய், உங்களுக்கும் பயனுள்ளவையாய். இன்ஷா அல்லாஹ்.
5 comments:
You can take gap, we will wait for you to come back after the gap.
தாங்கள் தாராளமாக சிறிது இளைப்பாறலாம்.
இதுவரை இட்ட பதிவுகளுக்கு நன்றி.
மீண்டும் எதிர்பார்க்கும்
தங்கள் அன்பு நண்பன்
இனியன் பாலாஜி
//ஏன் இப்படி அடிக்கடி நேரத்தைத்திருடி எழுதுகிறேன்? கைதட்டல்களும் கிடைப்பதால்தான். //
உங்க நேர்மை எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு! இளைப்பாறிவிட்டு, சீக்கிரம் வாருங்கள். நீங்கள் எழுத வேண்டிய தளங்கள் நிறைய இருக்கிறது.
தொடர்ந்து எழுதி நட்சத்திர வாரத்தை வண்ணமயமாக்கினதற்கு நன்றி. :-)
"நாளைக்காலையேஎழுத வேண்டும் என்றும் தோன்றலாம்".
தோன்றும்போது எழுதுங்கள்.படிக்கக் காத்திருக்கிறேன்.
Post a Comment